Monday, November 2, 2009

துவையல் - சின்னத்திரை ஸ்பெஷல்

கோலங்கள் - கல்லூரி படிக்கும் காலத்தில் தேர்வின் போது கூட விடாமல் பார்த்த தொடர்.அப்புறம் தான் அதில் இருந்த உள்குத்தை புரிந்து கொண்டேன்.அபியின் கணவர் பாஸ்கருக்கு - இரண்டு பொண்டாட்டி,ஆர்த்தி கணவருக்கு - இரண்டு தான்,மஞ்சரியின் கணவருக்கு - அட இதுவும் இரண்டு தான்,அபி அப்பாவுக்கு - அட சாமியே இதுவும் இரண்டா,அந்த பக்கம் போனால் தீபா வெங்கட் அம்மாவுக்கு - ரெண்டு கல்யாணம்,இன்னும் இப்படி நிறைய ரெண்டு வந்த காரணத்தால் எனக்கும் ரெண்டு வந்து விடுமோ என்று மிரண்டு அதை பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்.இதுல கொடுமையிலும் பெரும் கொடுமை - இதையும்,திருமதி செல்வத்தையும் பாலாஜி டெலிபிலிம்ஸ் இந்தியில் தயாரிப்பதாக இருந்தது.அதனால் தோழர் கொல்லப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை.நர்சிம் உதவியால் நான் அந்த காட்சியை பார்த்தேன்.

நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிக்க நான் விரும்பவில்லை.இருந்தாலும் இந்த வார்த்தையை விட்டால் வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை.

நன்றி நர்சிம்,திருசெல்வம்.ஆனால் சாதாரணமான மக்களுக்கு அது வெறும் தோழரின் மரணமாகத் தெரிவது தான் கொடுமை.

இன்னும் நிறைய நன்றிகள் சொல்வேன்..கோலங்கள் தொடரை முடித்து வைத்தால்..

***************

கலாநிதி மாறன் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சி அவர்களை டி.ஆர்.பி முந்தி வருவதால் எல்லோரையும் காய்ச்சி எடுத்து விட்டார்கள் என்று தினத்தந்தியில் படித்ததாக ஞாபகம்.அதற்கு காரணமான நிகழ்ச்சிகள் - கமல் 50,ரஜினி இமயமலை பயணம் போன்றவை தான்.டீலா நோ டீலா இப்படி மொக்கை நிகழ்ச்சிகளை நடத்தினால் யார் பார்ப்பார்கள்.அப்புறம் எப்படி டி,ஆர்.பி எகிறும்..விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி பார்த்து பி.பி தான் எகிறும்.

***************

பாட்டு பாடவா நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது.உடையை பற்றி பரிசல் எழுதி பரிசல் ஏற்றி விட்டதால் நான் எழுதவில்லை.ஏ,பி,சி,டி என்று வரிசையாக சொல்லும் குழந்தை அந்த ப்ளோவிலே இசட் வரை வந்து விடும்.அதுவே தலை கீழாக சொல்ல சொன்னால் பெரியவர்களே தடுமாடி விடுவார்கள்.நடுவில் ஏதாவது வரியை குடுத்து அந்த பாடலைப் பாட சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும். சன் தொலைக்காட்சி இதை முயற்சி செய்யலாம்.அடுத்தவர்களை பின்பற்றி ஓடுவதை விட அவர்களுக்கு எதிர் திசையில் பயணிப்பதே நல்ல பலன் தரும்.

***************

நீயா நானா இப்போது எல்லாம் பார்ப்பது இல்லை.அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை இழந்து வருவதாகவே எனக்கு தெரிகிறது.பிழிய பிழிய அழ வைப்பது அந்த நிகழ்ச்சிக்கும் சராசரி தொடருக்கும் வித்தியாசம் இல்லை.தலைப்பும் நன்றாக இருப்பதாக தெரியவில்லை.அண்ணி வெர்ஸஸ் கொழுந்தன் அண்ட் நாத்தனார்கள்..என்ன கொடுமையான டாபிக்..அதில் ஒருத்தர் வந்து கோடாரி காம்பு எண்டு சொல்கிறார்.வீட்டில் சொல்ல முடியாமல் மீடியா முன் சொல்கிறார்.அதோடு சேனல் மாற்றம்.

***************

ஒரு சந்தேகம் - செல்லமே தொடரில் ராதிகாவின் அத்தையாக நடிப்பது ஜானி படத்தில் நடித்த ஆசைய காத்துல தூது விட்டு புகழ் சுபாஷினி தானே.. எப்படி இருந்த அவங்க இப்படி ஆயிட்டாங்க..

***************

இந்த வார வம்பு - சன் மியூசிக் மற்றும் இசையருவி..ஏன் சாமி இரவு 9 மணியில் இருந்து 11 வரை மொக்கை நகைச்சுவை காட்சிகளாகப் போட்டு உயிரை வாங்குறீங்க..அப்படி மொக்கை நகைச்சுவை பாக்க வேண்டிய அவசியம் இருந்தால் தான் நாங்கள் ஆதித்யா அல்லது சிரிப்போலி பார்ப்போமே.

***************

இந்த வார பூச்செண்டு - வேற யார் சூர்யாவுக்கு தான்.

ஆதவன் படத்தில் வடிவேலுவும் ஒரு ஹீரோ தான் என்று ஒத்துக் கொண்டதால் இந்த பூச்செண்டு.ஆனால் அவர் ஒத்துக் கொள்வதற்கு முன்னரே விமர்சனத்தில் சூர்யா இரண்டாவது ஹீரோ என்று எழுதிய அருமை அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு ஒரு பூச்செண்டு.வாங்க காசு இல்லாத காரணத்தால் சூர்யாவுக்கு கொடுத்த பூச்செண்டை அவர் பறித்து கொள்ள முழு உரிமையும் உண்டு.

***************

இந்த வார குட்டு - முன்பெல்லாம் இரவு எட்டு மணிக்கு படம் ஆரம்பித்தால் அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணிக்கு படத்தை முடிக்கும் ராஜ் டி.வி சமீப காலமாக அப்படி செய்வதில்லை.அவர்களுடைய டி.ஆர்.பியை அவர்களே சரித்து கொண்டதால் இந்த குட்டு.

***************

12 comments:

பிரபாகர் said...

துவையல் மிக அருமை தம்பி... எல்லாம் ரசிக்கும்படி இருந்தது.

பிரபாகர்.

DHANA said...

இன்னும் நிறைய நன்றிகள் சொல்வேன்..கோலங்கள் தொடரை முடித்து வைத்தால்..///
வழி மொழிகிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[ஆதவன் படத்தில் வடிவேலுவும் ஒரு ஹீரோதான் என்று ஒத்துக் கொண்டதால் இந்த பூச்செண்டு. ஆனால் அவர் ஒத்துக் கொள்வதற்கு முன்னரே விமர்சனத்தில் சூர்யா இரண்டாவது ஹீரோ என்று எழுதிய அருமை அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு ஒரு பூச்செண்டு. வாங்க காசு இல்லாத காரணத்தால் சூர்யாவுக்கு கொடுத்த பூச்செண்டை அவர் பறித்து கொள்ள முழு உரிமையும் உண்டு.]]]

சூர்யா தம்பி பாவம்.. அவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிருக்கிறவருக்கு ஒரு பூச்செண்டுகூட கொடுக்கலைன்னா எப்படி..? அதைப் போய் பிடுங்கணும்னு சொல்றீங்களேண்ணே..!

எனக்குன்னு தனியா ஒரு செண்டு வாங்கி கூரியர்ல அனுப்புங்க..!

Anbu said...

\\\இன்னும் நிறைய நன்றிகள் சொல்வேன்..கோலங்கள் தொடரை முடித்து வைத்தால்..\\\\

:-))

டீலா நோடீலா நேற்று பார்த்தேன்..ரொம்ப நல்ல நிகழ்ச்சிங்க...இதே மாதிரி இன்னும் இரண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பினால் சன் குழுமம் எங்கேயோ போயிடும்..

பாட்டு பாடாவா பார்ப்பதில்லை..

சூர்யாவுக்கு பூச்செண்டா...நேற்று ஆதவன் திருவிழா பார்த்தீங்களா...படத்தின் ஹீரோ வடிவேலு வரவில்லை..

Raju said...

இந்த டி.ஆர்.பின்னா என்ன..?
நேத்து கே.டிவில போட்டாங்களே வீராச்சாமின்னு ஒரு காவியம். அதுல வரரே அவருதான..!

அகல்விளக்கு said...

செமயா துவைச்சிட்டீங்க தல.........

blogpaandi said...

துவரம்பருப்பு துவையல் சூப்பர்!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

துவையல் தூள்.. :))

அத்திரி said...

நல்லா காரமா இருக்கு துவையல்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல துவையல்....

Nathanjagk said...

அன்பு அர்விந்த்!!
பிரமாதமா துவைச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!!
சன் டிவி வரவர தீந்து போன பேஸ்ட் மாதிரி ஆயிடுச்சி!
விஜய் டாப்! நீயா-நானாவில் ஒரு சில விஷயங்களை தவிர்த்து பார்த்தால் தமிழில் கிடைக்கக் கூடிய நல்ல நிகழ்ச்சிகளில் அதுவும் ஒண்ணு!
கோலங்கள் இன்னும்... முடியலியா??? நீங்க ​சொன்ன 2 கணக்கு நல்லாயிருக்கு!

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் அந்த அழகிய கண்களுக்கு சொந்தமான அதே சுபாஷிணிதான்..அக்கா ஜெயசுதா இன்னும் அப்படியே இருக்க இவர் தான் இப்படி ஆகி விட்டார்..