Wednesday, November 4, 2009

கவுண்டமணி,செந்தில்,சினிமா பாடம்

கவுண்டமணி வீட்டில் நேரம் போகாமல் சினிமாவை கற்று கொடுக்க பாலு மகேந்திரா பாணியில் பள்ளி ஆரம்பிக்கிறார்.செந்திலும் வீட்டில் சும்மா இருப்பதால் அவரும் வந்து சேர்கிறார்.வேறு வழியில்லாமல் கவுண்டமணி அவரை சேர்த்து கொள்கிறார்..

அவர் பள்ளியின் பெயர் "கிராமத்து கொட்டாயி".உள்ளே வரும் போதே கோபத்தில் வருகிறார் கவுண்டமணி.காரணம் எவனோ பள்ளியின் பெயரை மாற்றி வைத்து விடுகிறான்.புதுப் பெயர் "கிராமத்து கொட்டாவி".

கவுண்டமணி - "மக்களே இத செஞ்சது யாருன்னு எனக்கும் தெரியும்..உங்களுக்கும் தெரியும்..முத நாளே சண்டை போட வேணாம்னு நினைக்கிறேன்..எவன் தெரிஞ்சது அவன் பல்ல எல்லாம் ஒண்ணு விடாம புடுங்காம விட மாட்டேன்.."

செந்தில் - "சரி..சரி.. என்ன வெட்டி பேச்சி..பாடத்த எடுங்க.."

கவுண்டமணி - (மனதுக்குள்) "உம் மேல தாண்டா எனக்கு சந்தேகம்..நீ தான்னு தெரியட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு.."

செந்தில் - "என்ன என்னை அடிக்கணும் தோணுதா..நீங்க பாக்குறதே ஒரு தினுசா இருக்கே.."

கவுண்டமணி - (மனதுக்குள்) "இந்த மண்டையன் எப்படி கண்டுப் பிடிக்கிறானே தெரியலையே.." (சத்தமாக) "இன்னைக்கு சினிமா எடுக்கிறதுல இருக்கிற நுட்பங்களைப் பத்தி பாக்க போறோம்.."

செந்தில் - "இதுல என்ன நுட்பம் இருக்கு..படப் பொட்டியில இருந்து ரீல எடுக்கிறதுல என்ன நுட்பம்.."

கவுண்டமணி - (மனதுக்குள்) "காலையிலே இந்த நாய்க்கு இனிமா குடுத்தேனே அப்ப கூட ஒண்ணும் ஆகலயே.." சத்தமாக "நீ பொண்டாட்டியோட தம்பி அதனால சும்மா விடுறேன்..கோவம் வர்றதுகுள்ள ஓடியிரு.."

செந்தில் - "அக்கா கிட்ட சொல்லிருவேன்..நீங்க அந்த ரிஷப்சன் பொண்ணு கிட்ட வழிஞ்சத.."

கவுண்டமணி - "அங்க என்ன சத்தம்..பாடத்த கவனி..படம் பாக்குறவங்களுக்கு இடைவேள தான் முக்கியம்.."

செந்தில் - "ஆமா அப்பதானே தட்டுமுறுக்கு,சோடா,பாப்கார்ன் எல்லாம் அழுத்தலாம்.."

கவுண்டமணி - "இவ்வளவும் போதுமா பன்ரொட்டி தலையா..நீ சாப்பிட்டுட்டு முக்குறதுக்கு நான் வழி சொல்லலை..என்ன நான் சொல்றது புரிஞ்சுதா..அதுல வைக்கிற மூடிச்ச சொன்னேன்..பார்வையாளன் கழுத்துல போட்ட மாதிரி இருக்கனும்.."

செந்தில் - "மூணு மூடிச்சி போடணுமா..இல்ல ஓண்ணு போதுமா.."

கவுண்டமணி - "இங்க என்ன உனக்கு கல்யாணமா நடக்கு..மூணு,ரெண்டு,ஒண்ணு அப்படி கணக்கு பண்ணிட்டு திரியிற பரக்காவெட்டி பயல.."

செந்தில் - "ஒரு சந்தேகம் கேட்டா சொல்ல துப்புயில்ல..இந்தாளு எல்லாம் ஒரு வாத்தி..அப்ப எப்பதாம் மூடிச்ச அவுப்பீங்க.."

கவுண்டமணி - "ரொம்ப பேசாத மூடிச்சவுக்கி..உனக்கு ஒரு மூடிச்சி போட்டு மேல அனுப்புனா தான் எனக்கு நிம்மதி.."

செந்தில் - "இந்த ஸ்கூல் இன்னும் அக்கா பேர்ல தான் இருக்கு..மறந்துடாதீங்க.."

இன்னும் சில எடுத்துகாட்டுகளை கவுண்டமணி எடுத்து காட்டுகிறார்.செந்தில் வழக்கம் போல நக்கல் அடித்து கொண்டு சிரிக்கிறார்.

கவுண்டமணி - "படத்துல காமெடி ரொம்ப முக்கியம்..இன்னும் சொல்ல போனா அது இருந்தா எல்லா படமும் நல்லா ஓடும்.."

செந்தில் - "ஹி..ஹி..ஆமாம் ஆமா இவர் காமெடி இருந்தா நல்லா ஓடும்.."

கவுண்டமணி - "டேய் சினப்பன்னி வம்பு இழுக்கணும் முடிவோட தான் வந்து இருக்கியா.."

செந்தில் - "லெஸ் டென்ஷன் மோர் வோர்க்.."

கவுண்டமணி - "இதுல இங்கீலிஸ் வேற..இரு உனக்கு சூன்யம் வைக்குறேன்.."

வகுப்பு இடைவேளைக்கு பிறகு..

கவுண்டமணி - "ஸ்டூடன்ஸ் இது பிராக்டிகல் க்ளாஸ்..உங்களுக்கு காதல் காட்சியில நடிக்கிறது எப்படி இதுதான் முதல் பாடம்.."

கவுண்டமணி அந்த பெண்ணை அணைத்துக் கொள்ளும் நேரத்தில் செந்தில் வருகிறார்.

செந்தில் - "நிறுத்துங்க..நிறுத்துங்க.."

கவுண்டமணி - "அதுக்குள்ள பன்னி அண்டாவ காலி பண்ணிரிச்சே..இனிமே நம்மள தொட விடாது..டேய் நீ வா.." என்று ஒரு மாணவனை அழைக்கிறார்.

செந்தில் - "நான் தான் நடிப்பேன்.."

கவுண்டமணி - "நீ நடிச்சா அது லவ் சீன் இல்ல..ரேப் சீன்.."

செந்தில் - "நாந்தான் நடிப்பேன்..இல்ல அக்காகிட்ட.."

கவுண்டமணி - "ஏண்டா அவள இழுக்கிற..நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்..நடிச்சி தொல.."

அப்படியே கவுண்டமணி அசந்து இருக்கும் நேரத்தில் அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓடி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வரும் செந்திலிடம்..

கவுண்டமணி - "லவ் மட்டும் தானே பண்ணினே..வேற ஏதாவது நடக்கலையே.."

செந்தில் - "ஹி..ஹி..நடந்து போச்சி..எப்படியாவது அக்காகிட்ட சொல்லி நீங்க தான் அவள எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.."

கவுண்டமணி - "நான் சொல்ல மறந்துட்டேன்..அவளுக்கு எய்ட்ஸ்டா.."

செந்தில் - "என்னது எய்ட்ஸா.." மயங்கி விழுகிறார்.

கவுண்டமணி - "ஒழிஞ்சான்..இனிமே நிம்மதியா க்ளாஸ் எடுக்கலாம்..என்ன நோய் வந்தாலும் திடமா இருக்கலாம்னு காட்ட ஒரு பாடி தேவை..இத தூக்கி அங்க போடுங்க.."

கவுண்டமணி அந்த சந்தோஷத்தைக் கொண்டாட ரிஷப்சனிஸ்ட் இருக்கும் அறைக்கு ஓடுகிறார். அங்கு....வேற யார் இருப்பா நம்ம செந்தில் தான்.

7 comments:

Unknown said...

ஹா.. ஹா..

Unknown said...

அட..! நான்தான் முதல்ல.. :-)

புலவன் புலிகேசி said...

//"நீ நடிச்சா அது லவ் சீன் இல்ல..ரேப் சீன்.."
//
செந்திலுக்கு இப்படி ஒரு சீனா???

நாடோடி இலக்கியன் said...

ஆரம்பம் நல்லாயிருந்தது போக போக சுமார்தான்.உன்னுடைய பழைய கவுண்டர்-செந்தில் பதிவு அளவிற்கு இல்லை.

அகல்விளக்கு said...

கரகாட்டக்காரன் ரீமிக்ஸ் போல சரியான ரகள....

ஹி..ஹி...

பிரபாகர் said...

நல்லாருக்கு தம்பி... காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகுது...

பிரபாகர்.

துபாய் ராஜா said...

நல்லாருக்கு அரவிந்த்.

காட்சி வர்ணனையில் கவுண்டரும், செந்திலும் அப்படியே கண்முன் வந்து போனாங்க....

வசனங்கள் அனைத்தும் அருமை.