Monday, November 9, 2009

துவையல் - சினிமா ஸ்பெஷல்

நான் சும்மா இருந்தாலும் இந்த பேராண்மை படம் என்னை விடாமல் துரத்துகிறது.ஒரே ஒரு விமர்சனம் எழுதியதற்கே இரும்புத்திரையைக் கீறி ஈயம், பித்தளைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்க பார்த்தார்கள்.நல்ல வேளை போன வருடம் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை(இருப்பதே தெரியாது அது வேறு விஷயம்..சுப்ரமணியபுரம் படத்தையும் நான் அப்படிதான் ஏதாவது எழுதியிருப்பேன்..).நேற்று ஜெயாவில் ஜன நாதன் பேட்டி..மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது தான் என்று சொன்னார்.பேராண்மையில் எங்கே இருந்தது மலைவாழ் மக்களின் வாழ்வியல்..ஜெயம் ரவி அந்த மக்களோடு ஒட்டவேயில்லை.அணியும் ஆடை முதல் ஆங்கிலம் வரை அவர்களுக்கு ஆச்சரியம்.(அந்த பெண்களுக்கு ஆச்சர்யம் தான்..).எல்லாம் தெரிந்த மேதாவியாக தெரிந்தாலும் காட்டில் தனியாக அகப்படும் பொன்வண்ணனை கொல்ல தெரியவில்லையே.(இப்படி ஜாதியை வைத்து கீழ்தரமாக பேசும் ஒருவன் விருது வாங்கினால் அது முதலாளித்துவம்..அதுவே இப்படி கமல் படத்தில் காட்டி இருந்தால் இசம் ரசமாக மாறியிருக்கும்..)

*******************

கண்டேன் காதலை - தமன்னா தேனி பெண்ணாமே அடக்கடவுளே கடவுளே..சென்னையில் வசிக்கும் சேட்டு குடும்பம் என்று காட்டியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.சன் தயவு செய்து இது மாதிரி படங்களை விளம்பரம் செய்து கொடுமை படுத்தாதீர்கள்.இந்தியில் படத்தில் காதலனை பிரிந்து ஷாகித் கபூரை திருமணம் செய்வார்.அந்த சமயத்தில் நிஜத்தில் ஷாகித்தைப் பிரிந்து சயீப் அலி கானுடன் சேர்ந்து இருந்தார்.இது தான் படம் வெற்றிக்கு ஒரு பெரிய காரணம்.தமிழில் படம் முன்னா மற்றும் சந்தானத்தின் ஒட்டுமீசை போல் உள்ளது.தேனியில் படம் எடுத்தால் மட்டும் போதாது மீசையும் வளர்க்க வேண்டும்.

சந்தானம் என்னதான் சவுண்ட் விட்டாலும் கவுண்டமணியின் இடத்தை நெருங்க கூட முடியாது."டா" போட்டு பார்ப்பவர்களை எல்லாம் அழைத்து விட்டால் அது நகைச்சுவை ஆகி விடுமா.கவுண்டமணி ஆரம்பத்தில் யாரையும் மரியாதை குறைவாக பேச மாட்டார்.(செந்திலை தவிர..).போக போக தோணி மாறும்.லொள்ளு சபாவில் தான் சந்தானம் கலக்கினார்..சினிமாவில் இன்னும் இல்லை..

இறுதியில் காதலிப்பவனை விட்டு விட்டு ஹீரோ பரத்துடன் சேர்ந்து இருந்ததை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.பரத் முன்னா கேரக்டரில் நாயகனாக இருந்தால் படம் பப்படமாக இருந்திருக்கும்.உதாரணம் - இயற்கை,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது,அதே நேரம் அதே இடம், ஷாஜகான் எப்படி ஆனது என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசிக்கட்டும்.ஆக மொத்தம் எனக்கு தெரிந்த ஒரே ஒரு உள்குத்து பெண்கள் எல்லாம் புத்திசாலிகள்(அவர்கள் மொழியில் ஆண்கள் மொழியில் அது வேறு..).

இது கனடாவில் உள்ள நண்பன் சொன்னது - அவளுக்கு காதலிக்கும் போது தெரியாத அப்பா,அம்மா,ஆட்டுக்குட்டி கல்யாணத்துக்கு அமெரிக்காவில்(இப்ப எல்லாம் தொழிலதிபராம் - குண்டூசி விக்கிறவன்,புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபரா ?) இருந்து ஒரு இளிச்சவாயன் வந்த பிறகு தான் தெரியுமாம்.இவன் வாழ்க்கையில் விளையாடியது அமெரிக்காவா இல்ல உள்ளூர் தொழிலதிபரா தெரியலையே - நானும் ஒரு தொழிலதிபர் ஆக முடிவு செய்துட்டேன்.

*******************

டான்ஸ் ஆட தெரியாமல் ஆடும் நபர்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கிறது.ரெயின்போ காலனியில் ரவிகிருஷ்ணா,அழகனில் மம்மூட்டி,சென்னை - 600028 இந்த படத்தில் சிவா.அது தான் இயல்பாக இருக்கிறது.ஐ லைக் யூ..லைக் யூ..யூ..

நடனம் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் இன்னொரு காட்சி - ரெயின்போ காலனி படத்தில் முதல் பாட்டு "நாம் வயதுக்கு வந்தோம்..".பாரில் நண்பர்கள் மட்டும் இடுப்பை ஆட்டுவார்கள்,அடுத்த ஷாட்டில் எல்லோரும் அது மாதிரி செய்வார்கள்.புதுப்பேட்டை படத்திலும் அது மாதிரி வரும் பார்த்து விட்டு கடுப்பாகி விட்டது.(முதல் முத்தம் தேதியோடு நினைவு இருக்கும்..அதே நபரின் அடுத்த முத்தம்..)

இன்னொரு ஷாட்..சிந்தனை செய் படத்தில் விபச்சார விடுதிக்கு செல்வார்கள்."நான் காக்கி நாடா கட்ட.." என்று ஒரு பாட்டு.பெண்கள் வட்டமாக நின்று ஆடிக் கொண்டிருப்பார்கள்..நாயகனின் நண்பன் அந்த வளையத்திற்குள் நுழைந்தவுடன் அந்த பெண்கள் நிறுத்தி விடுவார்கள்.அவன் மட்டும் ஆடுவான்..அவனை வெளியே துரத்தியவுடன்..மீண்டும் அந்த பெண்கள்..யாருப்பா அந்த நடன இயக்குனர்.

*******************

இந்த வார வம்பு..

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்ட விதிமுறைக்கு வேட்டைகாரன் சங்கு ஊதி விட்டான் போல..பண்டிகை நாளில் தான் பெரிய நடிகர்களின் படம் வெளி வர வேண்டும் என்று ஒரு சட்டம்.டிசம்பர் 18 - எந்த பண்டிகையும் இல்லையா அல்லது விஜய் பெரிய நடிகர் இல்லையா..

உங்க கட்டுப்பாட்டில் இருந்து சினிமா உலகம் ரொம்ப நாள் முன்னாடியே இல்லாமல் போய் விட்டது.போய் டிக்கெட் விலையை குறைக்க ஏதாவது செய்தால் புண்ணியமா இருக்கும்.

*******************

இந்த வார சந்தேகம்

சாட்டில் வந்த நண்பர் கேட்டார்..இப்போ ஏன் விஜயை நக்கல் பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க..என்ன காரணம்..

வேட்டைகாரன் வந்து வெற்றி அடைந்தால் தான் மறுபடியும் நக்கல்..அப்போ தான் எதிர்ப்பு நிறைய இருக்கும்..என்ன அப்படி ஒரு நிலைமை வராதா..

விஜய் வருங்காலத்தில் முதல்வர் ஆனால் (என்ன சிரிப்பு சின்னப் புள்ளத் தனமா..) நாம் முதல்வரையோ,முன்னாள் முதல்வரையோ கேலி செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான்..காரணம் லொள்ளு சபா திடீரென நிறுத்தப்பட்டது.முதல் வாரம் ஒளிப்பரப்பானது என்ன என்று பார்த்தால் அது பேக்கரி - போக்கரி படத்தை நக்கல் அடித்து இருந்தார்கள்.அது மாதிரி நான் இதுவரைக்கும் பார்த்தது கூட கிடையாது.என்னால் அது கிண்டல் செய்ய முடியாத சோகத்தில் நான் கிண்டல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி விட்டேன்.ராம் பாலாவுக்கு பலத்த அர்ச்சனை நடந்ததாம் - செய்தது உண்ணாவிரதத்தில் பிரியாணி கொடுத்தவர் தான்.அப்பவே இப்படி - அப்ப எதிர்காலத்தில் ஏதாவது அதிசயம் நடந்து விட்டால் - என்ன கொடுமை சரவணன் இது..

மிச்ச கச்சேரியை டிசம்பர் மாதத்தில் கேட்கலாம்..அதுல ஒரு மினி கொடுமை வேறு இருக்காம்..

*******************

55 comments:

அகல்விளக்கு said...

இதுதான்னு சொல்ல முடியல தல...

எல்லாமே டாப்பு.

குறிப்பா.. விஜய் நக்கல்...

Unknown said...

பேராண்மை ஒரு நல்ல திரைபடமதான்.

Raju said...

\\..ஜெயம் ரவி அந்த மக்களோடு ஒட்டவேயில்லை.அணியும் ஆடை முதல் ஆங்கிலம் வரை அவர்களுக்கு ஆச்சரியம்.\\

என்னங்க இது..?
படிச்சாலும் அத வெளிய காட்டிக்காம‌, அவங்க சார்ந்த சமூகத்தின் அடையாளமாத்தான் கடைசி வரைக்கும் இருக்கணும்னு சொல்றீங்களா..?


\\எல்லாம் தெரிந்த மேதாவியாக தெரிந்தாலும் காட்டில் தனியாக அகப்படும் பொன்வண்ணனை கொல்ல தெரியவில்லையே\\

காரணமேயில்லாம நீங்க கொலை செய்வீங்களா..?

\\(இப்படி ஜாதியை வைத்து கீழ்தரமாக பேசும் ஒருவன் விருது வாங்கினால் அது முதலாளித்துவம்..அதுவே இப்படி கமல் படத்தில் காட்டி இருந்தால் இசம் ரசமாக மாறியிருக்கும்..)\\

கமல் அப்படி காட்ட‌வே மாட்டார். ஏன்னா ஒரு நாட்டின் பிரதமரே மேடையில் இருந்தாலும் ஐ. நா. சபை அவரை ம‌ட்டுமே அழைக்கும். எடுத்துக்காட்டுடன் சொல்லியிருந்தால், கொஞ்சம் புரிந்திருக்கும்.

Raju said...

என்னாதான் இருந்தாலும் சஞ்சய நீங்க "குட்டி கொடுமை"ன்னு சொல்லியிருக்கக் கூடாது..!

இரும்புத்திரை said...

அன்பின் ராஜூ,

நான் அப்படி சொன்னேனா..ஜெயம் ரவி ஒட்டவில்லை என்று தான் சொன்னேன்..ஜாதியை எல்லாம் என்னுடைய அப்பா காலத்திலேயே உடைத்து விட்டோம்.

உதாரணம் ஊரில் கீழ்ஜாதியாய் இருக்கும் ஒருவர் பிழைப்பிற்காக கேரளா சென்று வரும் பொது தோழராக மாறி இருப்பார்..அவரிடம் ஜாதி விளித்தால் பதிலுக்கு அவரும் விளிப்பார்.இந்த அடிப்படை கோபம் ஜெயம் ரவிக்கு இல்லையே..அவர் கம்யூனிசம் படித்து எதற்கு..

இரும்புத்திரை said...

//என்னாதான் இருந்தாலும் சஞ்சய நீங்க "குட்டி கொடுமை"ன்னு சொல்லியிருக்கக் கூடாது..!
//

நான் சொன்னேனா..யோவ் நான் சொன்னது பாட்டை..இன்று சாறு கூட பாட்டை பற்றி தான் எழுதி இருக்கிறார்

Raju said...

\\உதாரணம் ஊரில் கீழ்ஜாதியாய் இருக்கும் ஒருவர் பிழைப்பிற்காக கேரளா சென்று வரும் பொது தோழராக மாறி இருப்பார்..\\

இது படத்துல வர்ற கேரக்டரா..? யாருன்னு சொன்னா நல்லாருக்கும். நான் மறந்துட்டேன்.

Raju said...

ஜனநாதன் படத்தில் துருவன் கதாபாத்திரத்தை சாந்தமாக இருக்கும்படியே அமைத்திருப்பார்.
எந்த இடத்திலும் அநாவசியமாக கோபப் படுவதாக காட்டியிருக்கமாட்டார். பொன்வண்ணன் பெண்களின் முன்னால் ஷூவை கழட்டி கொடுத்து சுயஅவ‌மரியாதை செய்யும் போதுகூட கோபப் படாமலேயே இருப்பார். அப்படி இருக்கும் போது ஏன் அங்க மட்டும் கோபப் பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்....?!?

இரும்புத்திரை said...

அது படத்தில் வரும் கதாபாத்திரம் இல்லை..நிஜத்தில் பார்த்த உண்மை..

ராஜூ ஷூ துடை என்றால் துடைக்க மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்..மாட்டேன் என்று சீற்றம் காட்டியிருந்தால் கவிவரையை சுத்தம் செய்து இருக்க வேண்டாம்..பார்வையில் கூட காட்டலாம்..

இரும்புத்திரை said...

கவிவரை அல்ல கழிவறை

Raju said...

ஹா..ஹா... ஷூ வைத் துடைக்க மாட்டேன்ன்னு சொல்லியிருந்தால் கழிவறையைத் துடைத்திருக்க மாட்டார் என்பது உண்மைதான். ஏன்னா அவர் வேலையிலேயே இருக்க மாட்டாரே...!

துபாய் ராஜா said...

'டக்ளஸூ' ராஜூ, அப்படித்தான். விடாதே. அமுக்கிப்புடி அரவிந்தை...

அரவிந்து,இந்த கேள்வி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா...

:))))

இரும்புத்திரை said...

அரிசியை மிதித்த ஒரு காரணத்திற்கே பொன்வன்ணனை ஜெயம் ரவியின் அண்ணன் புரட்டி எடுப்பார்..அவர் என்ன கம்யூனிசமா படித்தார்..அந்த கோபம் கூட படித்தவனுக்கு இல்லையே..வேலை பொய் விடும் என்ற பயமா..

ஊயிருக்கு பயப்படாத அண்ணன் எங்கே..வேலையை காப்பாற்ற பம்மும் இவர் எங்கே சொல்லுங்க ராஜூ

Raju said...

அதுதான் அண்ணே, படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம்ன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியணும். ..? அதுவுமில்லாம துருவன் கேரக்டர் அவ்ளோ ஈஸியா உணர்ச்சி வசப் படுறவரா இருந்தா, காட்டுல அட்டை கடிச்ச பொண்ணுக்கு டிரெஸ் மாட்டி விடுறப்போ நிலைமை என்ன ஆகியிருக்கணும். காமமும் கோபம் மாதிரி ஒரு உணர்ச்சிதானே...!?!?

இரும்புத்திரை said...

படித்தவன் தான் அதிகம் தப்பு செய்கிறான்..புத்திசாலிதனம் போதும்..அடிப்படை கோபமும் காமமும் ஒன்றா..

மலைவாழ் மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று தான் இருப்பார்கள்..சும்மாவே துருவனை ஒரு வலி பண்ணும் போது அவர் காமாவயப்பட்டல் என்ன ஆகும்..

அப்பாவும் வேலை போகுமே - அதனால் அவர் உணர்ச்சி வசப்பட மாட்டார்..அவரே சொல்வார் எனக்கு நிர்வாணம் என்பது வேறு..

சுகுணாதிவாகர் said...

/ஜாதியை எல்லாம் என்னுடைய அப்பா காலத்திலேயே உடைத்து விட்டோம்./


/கீழ்ஜாதியாய் இருக்கும் ஒருவர் /

இரும்புத்திரை said...

அது உதாரணம் கேட்டதால் சொன்னது சுகுணா..வேறு எந்த அர்த்தமும் இல்லை..

முரளிகண்ணன் said...

பேராண்மை பார்ட் தவிர மற்றவை சுவை

அமுதா கிருஷ்ணா said...

சந்தானம் பற்றி கூறியது நிஜம்..கிடைக்கும் சான்ஸையெல்லாம் வேஸ்ட் செய்கிறார்...

Raju said...

அண்ணே தெளிவாகிருச்சு. இனிமேல் "டேய்..உன்ன சும்மா விட மாட்டேன்டா"ன்னு கண்ணு சிவக்க டயலாக் பேசுற அடிப்படை கோபம் உள்ள கேரக்டர்கள் கொண்ட படத்தையே ரசிப்போம்.

மணிஜி said...

சகல சுவையும் துவையலில் இருக்கு..

இரும்புத்திரை said...

ராஜூ போதும்யா..இரும்புத்திரையில் ஒரு தகரம் வெளியே வந்திரிச்சி..இருங்க ஆணி அடிச்சிட்டு வர்றேன்..

கனவுல கூட பேராண்மை தான் வருது..

இப்பவும் சொல்றேன் எனக்கு ஆரம்பம் பிடித்து இருந்தது..எந்த பக்கம் கொண்டு போவது என்று தெரியாமல் எல்லா பக்கமும் போய் விழுந்து வாரி இருக்கிறார்கள்..
அந்த கண் சிவக்கும் படங்கள் விமர்சங்களுக்கு எடுப்பதேயில்லை..பார்ப்பதேயில்லை.

இது கூட ரஷ்யன் படம்..உழைப்பை பத்தி பேசுற இயக்குனர் ஒரு திருடனா இருக்காரே

Raju said...

\\இது கூட ரஷ்யன் படம்..உழைப்பை பத்தி பேசுற இயக்குனர் ஒரு திருடனா இருக்காரே\\

அண்ணே...பட ஆரம்பத்துலயே ரஷ்யன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்ன்னு போடுவாங்கன்னு ஞாபகம்..அது போக‌
பாலிமர் தொலைக்காட்சியில் பாஸ்கியுடனான சந்திப்பில் கூட ஜனா அந்த ரஷ்யன் மேட்டரை சொன்னார்.

இரும்புத்திரை said...

இந்த படத்தில் இருந்து உழைப்பை கழித்து விட்டால் அது ரஷ்ய நாவலாகவோ அல்லது படமாகவோ இருக்காது..ரஷ்யக் கழிவாக இருக்கும்..

சாவரியா படம் பார்த்து விட்டு அந்த இயக்குனர் இயற்கை படத்தை திருடி விட்டார் என்று வழக்கு போட்டவர்..

Raju said...

அண்ணே, ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு..இவ்வளவு.. இவ்வளவு.. இவ்வளவு....காமெடி ஆகாது.
(பாட்டாளி படத்தில் வடிவேல் சொல்வது போல் படிக்க..!) அண்ணே, அந்த படத்துல கூட அந்த லேடி வேஷம் வடிவேலுக்கு அவ்வளவா ஒட்டாது ..கவனிச்சீங்களா..?
:-)

இரும்புத்திரை said...

ராஜூ நாம பேசுறது ஒண்ணு செய்றது ஒண்ணு..

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான்..பாகிஸ்தான் கைகூலிகளாக காட்டி இருந்தால் அதுவும் சராசரியாக இருந்திருக்கும்..

இது வெளிநாடுகளின் கைகூலிகள் அல்லவா சும்மா தான் இருப்போம்..

என் இப்போ சீனா கூட வாலாட்டுது..நாம என்ன பண்ணிட்டோம்..விருது பொன்வண்ணன் வாங்குவாராம்..அந்த பெண்கள் கூட சும்மா இருப்பார்களாம்..அவர்களின் அப்பாக்கள் கூட முதாளிகள் தான்

இரும்புத்திரை said...

வடிவேலுக்கு பாட்டாளியில் வேடம் தான் ஒட்டவில்லை இதில் வடிவேலுவே ஒட்டவில்லை..நீங்க என்ன மாதிரி வேணுமானாலும் படிக்கலாம்(யார் குரலில் வேண்டுமானாலும் )

Raju said...

பொன்வண்ணன் விருது வாங்குனதுதாங்க எதார்த்தம்.
ஏன் நீங்க ராப்பகலா கண்முழிச்சு, வேலை செய்யுற ப்ராஜெக்ட்டுக்கு உங்க பாஸ் ப்ரோமஷன் வாங்குறதில்ல. அந்த மாதிரிதான்..! உங்க அவுட்புட்டும் சேர்ந்துதானே அவரோட லிஸ்ட்ல சேரும். பொண்ணுகளோட அப்பாக்களுக்கு பொழைச்சு வந்த்தே பெருசு. இதுல விருது வேற்யான்ற நினைப்பு கூட இருக்கலாம்ல...?

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
அகல்விளக்கு said...

பேராண்மைல நல்லத மட்டும் பாக்காதீங்க. கெட்டவிஷயத்தையும் பாருங்க என் கண்மணிகளா....

லோகு said...

என்ன நடக்குது இங்கே...

@ ராஜு :

"இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்.."

@ அரவிந்த் :

விடுங்க பாஸ்.. உங்களுக்கு இந்த படம் பிடிக்காமல் இருக்கலாம், இந்தப்படத்தை ஆஹா, ஓஹோ என்று ரசிப்பது பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் 'தொட்ட பட்ட ரோட்டுமேல மொட்ட பரோட்டன்னோ' , 'கண்டபடி கட்டிப்புடிடா'ன்னோ படம் எடுக்காம, நாட்டுக்கு ஒரு விஷயத்தை சொல்ல வந்த தைரியத்தையாவது பாராட்டலாம்ல...

இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லையே..

இரும்புத்திரை said...

எனக்கும் ப்ரோமஷன் கிடைக்கவில்லை என் பாஸ்க்கும் ப்ரோமஷன் கிடைக்கவில்லை..எங்க டீம் தான் அதிகம் வேலை செஞ்சது..இப்பவும் செய்கிறோம்..இனியும் செய்வோம்..ரெண்டு பேருக்கும் கிடைக்காது..எனக்கு மட்டும் கிடைக்கலைனா அடுத்த கட்டம் பத்தி நிச்சயம் யோசிப்பேன்..அங்கெ இருக்க மாட்டேன்

ஜாலியோ ஜிம்கானா

அகல்விளக்கு said...

பேராண்மை நல்லா இருக்குனு சொல்றவங்க எங்க மெயில் ஐடி இல்ல போன் நம்பர் கொடுங்க...

நான் புளி போட்டு விளக்குறேன்..

அகல்விளக்கு said...

//Blogger லோகு said...

என்ன நடக்குது இங்கே...

@ ராஜு :

"இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்.."

@ அரவிந்த் :

விடுங்க பாஸ்.. உங்களுக்கு இந்த படம் பிடிக்காமல் இருக்கலாம், இந்தப்படத்தை ஆஹா, ஓஹோ என்று ரசிப்பது பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் 'தொட்ட பட்ட ரோட்டுமேல மொட்ட பரோட்டன்னோ' , 'கண்டபடி கட்டிப்புடிடா'ன்னோ படம் எடுக்காம, நாட்டுக்கு ஒரு விஷயத்தை சொல்ல வந்த தைரியத்தையாவது பாராட்டலாம்ல...

இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லையே..//

என்ன பாஸ் நீங்களும் இப்படியே சொல்றீங்க

அகல்விளக்கு said...

//Blogger ♠ ராஜு ♠ said...

ஹா..ஹா... ஷூ வைத் துடைக்க மாட்டேன்ன்னு சொல்லியிருந்தால் கழிவறையைத் துடைத்திருக்க மாட்டார் என்பது உண்மைதான். ஏன்னா அவர் வேலையிலேயே இருக்க மாட்டாரே...!//

என்னா பாஸ்...

வேலை போகக்கூடாதுன்றதுக்காக துடைப்பார், கழுவுவார்.


காட்டிக்குள்ள ஒரு அநியாயம் நடந்துன்னா கொதித்தெழுவார்...

காட்டுஇலாகா ஆபிஸ்ல நடந்தால் கண்டுக்க மாட்டார் அதுதான அர்த்தம்...

அகல்விளக்கு said...

// ராஜு ♠ said...

அண்ணே தெளிவாகிருச்சு. இனிமேல் "டேய்..உன்ன சும்மா விட மாட்டேன்டா"ன்னு கண்ணு சிவக்க டயலாக் பேசுற அடிப்படை கோபம் உள்ள கேரக்டர்கள் கொண்ட படத்தையே ரசிப்போம்.
//


இயற்கை படத்துல அப்படி யாரும் இல்லயே... ஆனாலும் அது மாதிரி படம் இன்னும் வரலன்னுதான பேசிக்கிறோம்.

அகல்விளக்கு said...

//பொண்ணுகளோட அப்பாக்களுக்கு பொழைச்சு வந்த்தே பெருசு. இதுல விருது வேற்யான்ற நினைப்பு கூட இருக்கலாம்ல...?//

செத்துப்போன பொண்ணுங்க நைனாசும் அப்படியே இருக்காங்களே அது ஏன்னா??

உயிர் தப்பிச்சு வந்த பொண்ணுங்களும் எதுவும் சொல்லம விட்டிற்றாங்களே அது ஏன்னா??

அகல்விளக்கு said...

//ஆக மொத்தத்துல நம்ம ஹீரோ நாட்டுப்பற்றோட காட்டுப்பற்றாவும் இருக்கார். உலக அரசியல், முதலாளித்துவம் பற்றியும் பேசுறார். கடைசில ஒரு சராசரி ஆளாகி, பொண்வண்ணுக்கு காலனி துடைச்ச மாதிரி, விருதையும் அவருக்கு கொடுத்துட்டு "பீச்சேமுட்" "பார்வர்ட் மார்ச்" னு சொல்லிட்டு தன் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு இருக்கார்....//

சரியா..........தவறா..........?

அகல்விளக்கு said...

இம்புட்டு பேசுறீகளே...
அந்த பொண்ணுங்க பேசுற வசனமெல்லாம் எதுக்கு சேத்துருக்காரு??

அத யாராச்சும் சொல்லுங்கப்பா......

படத்த மார்க்கெட்டிங் பண்ணவா.... இல்ல தயாரிப்பாளர் சொன்னாரா.....

ஜனநாதன் படம்னு சொல்ல முடியல பாஸ்.

ஈ-ல கூட 9தாரா இடைச்செருகல்தான்...

அகல்விளக்கு said...

ஜனநாதன் சார்.... உங்களோட தீப்பொறி வசனமெல்லாம், டபுல் மீனிங் வசனத்தால எடுபடல........

அகல்விளக்கு said...

இந்த கொடுமைல இருந்து காப்பத்தவாவது ஒரு நல்ல படம் எடுங்க ஜனநாதன் சார்..........

அகல்விளக்கு said...

திரும்ப யாராவது பேராண்மை சூப்பருன்னு விமர்சனம் போட்டா லிங்க் கொடுங்க சங்கத்தலைவருங்களா....

வந்துர்றேன்......

நன்றி... வணக்கம்....

அத்திரி said...

//அகல் விளக்கு said...
திரும்ப யாராவது பேராண்மை சூப்பருன்னு விமர்சனம் போட்டா லிங்க் கொடுங்க சங்கத்தலைவருங்களா....//


கேபிள் சங்கர் விமர்சனத்தை படிக்கலையா?
http://cablesankar.blogspot.com/2009/10/blog-post_16.html



ராஜு நான் உங்க கட்சிதான்......அரவிந்த் எந்த மாதிரியான தமிழ் படத்தை எதிரிபார்க்கிறார்னு தெரியல........ முத்ல பாதியில் சில காட்சிகள் நெளிய வைத்தாலும் ..ரெண்டாம் பாதியில்...அதை மறக்கடிக்க செய்கின்றன காட்சிகள்..........

பஞ்ச் டயலாக், டூயட் சாங்க்ஸ்க்கு வழியிருந்தும் அதை தவிர்க்கப்பட்டிருக்கிறது.......

இரும்புத்திரை said...

அத்திரி தல முதல் பத்து நிமிடங்கள் எனக்கு படம் பிடித்து இருந்தால் நான் கேள்வியே கேட்க மாட்டேன்..உதாரணம் சேது,மொழி,பசங்க,அஞ்சாதே,தேவர் மகன்,பிடிச்சிருக்கு,ஈ,இயற்கை இப்படி இருந்தா அதுல என்ன ஓட்டை உடைசல் இருந்தாலும் கேட்க மாட்டேன்

Raju said...

அரவிந்த அண்ணே, அதேதாண்ணே.. நாம பேசுறது ஒண்ணு..நாம செய்யறது ஒண்ணு...இப்பக் கூட பாருங்களேன்.
பேராண்மை பத்தி பேசாம, ஜனா சாவரியா படத்துக்கு வழக்கு போட்டார். திருடிட்டார்ன்னு அவரோட கேரக்டர் அனலைஸிங் பண்ணிட்டிருக்கோம்.

Raju said...

\\ இரும்புத்திரை அரவிந்த் said...

எனக்கும் ப்ரோமஷன் கிடைக்கவில்லை என் பாஸ்க்கும் ப்ரோமஷன் கிடைக்கவில்லை..எங்க டீம் தான் அதிகம் வேலை செஞ்சது..இப்பவும் செய்கிறோம்..இனியும் செய்வோம்..ரெண்டு பேருக்கும் கிடைக்காது..எனக்கு மட்டும் கிடைக்கலைனா அடுத்த கட்டம் பத்தி நிச்சயம் யோசிப்பேன்..அங்கெ இருக்க மாட்டேன்ஜாலியோ ஜிம்கானா\\

Here You Are Not A Typical One...!

Raju said...

\\மலைவாழ் மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று தான் இருப்பார்கள்..சும்மாவே துருவனை ஒரு வலி பண்ணும் போது அவர் காமாவயப்பட்டல் என்ன ஆகும்.\\

இதத்தான்யா நான் கேக்குறேன்.. நீங்களா ஏன் நினைக்கிறீங்க..? மலைவாழ் மக்கள் இப்பிடிதான் இருக்கனும்ன்னு. ஒருவனுக்கு ஒருத்தின்னு இருக்கணும். அநியாயத்தப் பார்த்தா பொங்கனும்ன்னு..? ஏன் அதெல்லாம் அந்த சமூகத்ஹுக்கு மட்டுமே சொல்லப் பட்ட ஒரு விதியா என்ன..?

Raju said...

\\வேலை போகக்கூடாதுன்றதுக்காக துடைப்பார், கழுவுவார்.
காட்டிக்குள்ள ஒரு அநியாயம் நடந்துன்னா கொதித்தெழுவார்...
காட்டுஇலாகா ஆபிஸ்ல நடந்தால் கண்டுக்க மாட்டார் அதுதான அர்த்தம்...\\

அகல் விளக்கு அண்ணே, இதுக்கு பதில் படத்துலயே இருக்கேண்ணே..! கெட்டதப் பார்த்த
நீங்க இதையும் கொஞ்சம் பார்த்துருக்கலாம். ஒரு சீன்ல துருவன் "வீரத்தை எதிரிகள்கிட்ட மட்டும்தான் காட்டணும்ன்னு "சொல்லுவார். அது போக படத்துல ஃபாரினர்ஸ் தவிர யார்க்கிட்டயும் துருவன் கோபப்பட மாட்டார்.
அந்த பெண்கள் ஜீப்பை தள்ளிவிடும் போது கூட...!

Raju said...

\\செத்துப்போன பொண்ணுங்க நைனாசும் அப்படியே இருக்காங்களே அது ஏன்னா??
உயிர் தப்பிச்சு வந்த பொண்ணுங்களும் எதுவும் சொல்லம விட்டிற்றாங்களே அது ஏன்னா??\\

இதுக்கு நான் "முதலாளித்துவம்"ன்னு ஒரு வரில பதில் சொல்லி முடிச்சுரலாம்.
:-)

Raju said...

\\ அகல் விளக்கு said...
இம்புட்டு பேசுறீகளே...அந்த பொண்ணுங்க பேசுற வசனமெல்லாம் எதுக்கு சேத்துருக்காரு??
அத யாராச்சும் சொல்லுங்கப்பா......
படத்த மார்க்கெட்டிங் பண்ணவா.... இல்ல தயாரிப்பாளர் சொன்னாரா.....\\

அண்ணே, அய்ங்கரன் சாபிடணுமில்ல அதுக்குத்தான். அவர் எல்லாருக்கும் ப்டம் எடுத்தாகனும். படத்துல நயன்தாரா இருந்தாத்தானே நம்ம படம் பார்க்கவே போவோம்.

இரும்புத்திரை said...

அன்பின் ராஜூ..
//ஃபாரினர்ஸ் தவிர யார்க்கிட்டயும் துருவன் கோபப்பட மாட்டார்.//

நீங்க படத்துக்கு சப்போர்ட் பண்ண மாதிரி எனக்கு தெரியல..என்னை விடவும் அதிகமா கிண்டல் செய்வது போல் உள்ளது..

அவருக்கு(என் பாஸ்) ப்ரோமஷன் கிடைச்சு இருந்தா கூட இந்த அளவுக்கு வருத்தம் இருந்திருக்காது..நான் ஏற்கனவே அடுத்த கட்டம் பத்தி யோசித்து விட்டேன்..இனி சென்னை தான்..

தமிழ்செல்வன் படம் பார்த்து இருக்கீங்களா..அந்த படத்தில் விஜயகாந்தை தண்ணி எடுத்து வர சொல்லும் மேலதிகாரியை அவர் மிரட்டுவார்..தனியாக அதை தான் நான் செய்ய சொல்கிறேன்..

என்னுடைய பதவி உயர்வும் நாட்டின் உயரிய விருதும் ஒன்று அல்ல..முதலாளித்துவம் பேசும் பெண்களின் அப்பாக்கள் அந்த விருது அவர்களுக்கு கிடைக்காமல் இருந்தால் சும்மா இருப்பார்களா..

எனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை ஏன் என்றால் நான் மண்ணின் மைந்தன் இல்லையே..நான் தான் வேலை செய்தேன் என்று எல்லோருக்கும் தெரியும்..இங்கே எப்படி படம் பார்த்தவர்களுக்கு மட்டும் தெரியுமா..

வாய் கிழிய பேசும் பெண்களின் வாய் என்ன அந்த சமயத்தில் கோணி ஊசியை வைத்து தைத்து விட்டார்களா..

Raju said...

நன்றி..வணக்கம்.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா கமல் காட்டியதும் முதலாளித்துவமே ,பேராண்மை படத்திலும் முதலாளித்துவமே ,,,,,,,,,,கமல் அதை ஆதரிக்கிறார் ........................ஜனநாதன் ஆதரிக்கவில்லை ..........கமல் மேல் மட்ட அரசியல் வாதியை எல்லாம் விட்டு விட்டு கடை நிலை தீவிரவாதியை கொல்கிறார்..........அது முதலாளித்துவ அரசியலை காட்ட வில்லையா.....ரசிகன் அதற்க்கு மெய் மறந்து கை தட்டுகிறான்...
முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்று அமெரிக்கன் சொல்கிறான் என்றால் அதற்க்கு ஜால்ரா தட்டுகிறார் கமல் ...............................விஜய் நடிகரை திட்டுகிறார் ஏன்
இவர்க்கு போட்டியாக டாக்டர் ஆகி விட்டார் என்றா ................
பொன்வண்ணன் பரிசு வாங்கும் பொழுது அது தவறு என்று எல்லாருக்குமே தெரியும் ரசிகன் உட்பட ................இங்கு முதலாளித்துவம் தப்பு என்கிறார் ....புரியவில்லையா .................யார் சொன்னது ஜாதி ஒழிந்தது என்று என் நண்பன் MCA படிக்கும் போது தேவர் என்பதால் கீழ் ஜாதி மனிதருடன் பேச மாட்டான் நண்பா

வெண்ணிற இரவுகள்....! said...

ஜாதி ஒழியவில்லை என்று சொல்கிறாய் ....................ஏன் கமல் அந்த IIT மாணவரை பார்ப்பான் போல் காண்பித்தார் ,,,,,,, காவல் நிலையத்தில் ஒரு பொறியியல் மாணவன் பார்பனாக இருந்தால் கூட 'அபிவாதயே' சொல்லி அறிமுக படுத்த மாட்டான்.........இவ்வளவு படித்தவர்கள் நாங்க தான் டா என்று சொல்லாமல் சொல்கிறார்............................அவர் பேராண்மையில் காட்டப்படும் பொன்வண்ணன் போல் ....
இவ்வளவு சிந்திக்கிற உலக நயாகனே ஜாதி வெறியில் உள்ளார்......அவர் குண்டு வைக்கிற பையிலே வெங்கடாஜலபதி படம்.........
'உன்னை போல் ஒருவன்' பாட்டில் வரும் சுலோகம் எதற்கு ....அதற்கு அர்த்தம் தெரியுமா யாருமே இல்லை என்றால் கடுவுள் தோன்றி தீயவர்களை அழிப்பார்........
கமல் நாத்திக வாதி அல்ல ............அப்படி சொன்னால் தான் அறிவாளி என்று மதிப்பார்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

அகல் விளக்கு ...........அப்படி எடுத்தால் தான் வாய்ப்பே கிடைக்கும் இது தமிழ் மக்கள் சொல்லித்தந்தது...................யதார்த்தமான படம் காதல் இல்லை என்றால் ஓடாது ............நீங்கள் சொல்லலாம் காதல் autograph இல்லையா என்று பருத்தி வீரன் கூட ஓடியது காதலால் தான்..................ஒன்று தமிழ் மக்களுக்கு காதல் வேண்டும்,இல்லை சண்டை heroism படங்கள் வேண்டும் ...................சரி அது தேவை இல்லாத காட்சி .............................வைத்துக்கொள்ளலாம் ..........எதற்கு கமல் 'அபிவாதயே' வசனம் வைத்தார் விஜய் நடிகரை ஏன் தேவை இல்லாமல் திட்டினார் ...........

"கமல் என்ற முதாலாளி செய்தால் அருமை, வணிகத்திற்காக ஒரு தொழிலாளி செய்தால் அது மாபெரும் தவறு...." நல்ல முதலாளித்துவ சிந்தனை அகல்விளக்கு....

கமல் படத்தில் சொல்லப்படுகிற அரசியலே தப்பாக இருக்கிறது ....விஷமத்தனம் விஷம் இருக்கிறது ........................

ஆயிரம் தவறு இருந்தாலும் எழுத்து பிழை இருந்தாலும்
பேராண்மை எழுச்சி மிக்க கவிதை .................