பச்சை ரத்தம் வழிந்ததாக
அடிக்கும் கோழையைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறேன்
அதிகம் வழிவதாக வாயில் துணி
அதுவும் நான் அணிந்ததையே கிழித்து
பேசிய கண்களையும் கட்டினான்
அதில் ரத்தம் வழியாமலா இருந்திருக்கும்
ஆடைகள் களைந்தானே
நவ துவாரங்களிலும் வழிவதை பார்க்கவா
கோழையாய்...
பின்னால் சுடும் முன்னே கேட்டிருக்கலாமே
வழிந்த ரத்தம் உன் அப்பன் ஊற்றிய
புத்தரின் அபிஷேக ரத்தமென சொல்லியிருப்பேனே.
தமிழகத்தில் இருந்து வந்த பத்துப்பேரின்
கண்ணிலும், வாயிலும் வழிந்து இருக்குமே எச்சிலாக
பச்சை ரத்தம்
Friday, November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நியாயமான அறச்சீற்றம்...
ஈழம் எரிகிறது...
இறையாண்மை இளிக்கிறது...
அரவிந்த்
இந்த சீற்றம் தான்...
மிகத் தேவையானது
மிகத்தேவையான சீற்றம்...
இரத்தத்தை கொதிக்க வைக்கிறது.
now i felt something worthy has been done in return.
words last,spread and kill.what you drop is a everlasting weapon!
friend,you did your part!
உங்களின் கோபதிற்கு அர்த்தம் உள்ளது..
காரமான உணர்வை கவிதையாக ரசிக்கலாமா இங்கு?
ரௌத்த்ரம் பழகுன்னு சொன்னத பின்பற்றியிருக்க. கதிரை வழி மொழிகிறேன்,
டிஸ்கி
தம்பி உனது முந்தய இடுகைகள் மூன்றும் படித்தேன், ஒரு சேர. வரலாறும் சாதி கேடயமும் அருமை.
கோபத்தை கவிதையாக்கியிருக்கிறீர்கள்
என் நண்பன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.............
நண்பா எதற்கு நகைச்சுவை பதிவுகள் உன்னிடம் ஆழமாய் எதிர்பார்க்கும் நண்பன்
சிவப்பான கோபம் பச்சையாய். கதிரை வழிமொழிகிறேன்
அப்ப அந்தப் பத்தையும் ஏருப்போர்ட்டுல போய் கூட்டிக்கிட்டு சேறுல உக்கந்துக்கிட்டு ஒழுக்கிச்சே அது என்னது.
Post a Comment