Tuesday, November 17, 2009

சுஜாதா,பிரிவோம் சந்திப்போம்,ஆனந்த தாண்டவம்

சுஜாதாவின் எழுத்துகளைப் பற்றி பேசியது ஞாபகம் வந்தது.என்னை அறியாமலே நான் சொன்னேன்."சுஜாதா இல்லாமல் போனதால் நிறைய கத்துக்குட்டிகள் எழுதுகிறேன் என்று ஒரு வழி செய்கிறார்கள்.அதில் நானும் ஒன்று.."

அவர் மட்டும் இருந்திருந்தால் நட்சத்திர கதைகளில் முதல் கதையாக அவர் கதை வந்து இருக்கும்.கற்றதும் பெற்றதும் பகுதியில் நிறைய பதிவர்களை அறிமுகம் செய்து இருப்பார்.நானும் எழுதாமல் ஆனந்த விகடன் வாங்கி படித்து கொண்டு எதையும் விமர்சனம் செய்யாமல் அதன் போக்கில் போய் இருப்பேன்.

சும்மா பொழுது போகாமல் அவருடைய சிறுகதை புத்தகத்தை திறந்து பார்த்தேன்.முதல் கதையே அப்பா அன்புள்ள அப்பா.அவருடைய அப்பா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த நாட்கள்.அவருடைய ஆப்போலோ தினங்களை ஒப்பிட்டு பார்த்தேன்.கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்தது.அவரும்,அவருடைய அப்பாவும் ஒரே வயதில் இறந்தார்களா என்று அபத்தமாக யோசித்து பார்த்தேன்.

அந்த கதையில் ஒரு வரி இப்படி வருகிறது.நர்ஸ் வந்து சுஜாதாவின் அப்பாவிடம் சொல்கிறார்."உங்க பையன் ரொம்ப புத்திசாலி..".அவருடைய அப்பாவின் பதில் - "நான் அவனை விட புத்திசாலி.." இந்த அப்பாகள் எல்லோரும் இப்படிதான் இருப்பார்களா?.சொந்த பையனிடம் கூட தோல்வியை ஒப்புக் கொள்ளாத குணம்.

மதன் வந்தார்கள்,வென்றார்கள் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார் ஹிமாயூனைப் பற்றி.அவர் பாபருக்கும்,அக்பருக்கும் இடையில் வந்த கமா தான் ஹிமாயூன்.

சுஜாதாவையும் இது மாதிரி சொல்லலாம்.அவர் இரண்டு தலைமுறைகளுக்கும் இடையில் வந்த சரித்திரம்.

எழுத்தின் சூட்சுமம் என்றால் என்ன என்று என்னை கேட்டால் நான் சொல்வது - படித்தவுடன் அது மறந்து விட வேண்டும்.மீண்டும் படித்தால் புதிதாக தெரியும்.அல்லது ஒரு வரி விடாமல் ஞாபகம் இருக்க வேண்டும்.கண்டுப் பிடித்தாலும் அசைப் போடுவது போல மேளும் ஒரு முறை படிக்கலாம்.இப்படி இரண்டு வகையிலும் வாசகர்களைக் கட்டிப் போடும் திறமை சுஜாதாவிற்கு மட்டுமே சொந்தமானது.(வாரமலர் அந்துமணியில் பார்த்தது கேட்டது படித்தது - இதில் வருவது நிறைய மீள்பதிப்பு தான் - முதல் வரியை படித்தவுடம் நான் கண்டுப் பிடித்து விடுவேன்.அப்படி சில சமயம் முதல் வரியிலே வெளியே வந்து விடுவேன்.) எனக்கு அந்த சூட்சுமம் வராமலே போய் விடும்.

நான் செய்ததிலே பெரிய பாவம் - ஆனந்த தாண்டவம் படத்தைப் பார்த்த பிறகு பிரிவோம் சந்திப்போம் கதையைப் படித்தது தான்.முதல் நாள் பார்த்தேன்.முதல் நாள் பார்க்கும் படமெல்லாம் எனக்கு பிடிக்காமலே போய் விடும்.அப்படி ஒரு ராசி இருந்தாலும் பார்த்தேன்.காரணம் சுஜாதா.எனக்கு பின் இருக்கையில் நடுத்தர வயது தம்பதிகள்.பிரிவோம் சந்திப்போம் தொடராக வந்த காலத்தில் இளம் ஜோடிகளாக இருந்திருப்பார்கள்.அவர்கள் முகத்தில் நிறையவே ஏமாற்றம்.அவர்கள் படத்தை கதையோடு ஒப்பிட்டு பார்த்தார்கள்.

நான் சமீபத்தில் பிரிவோம் சந்திப்போம் இரண்டாம் பாகம் படித்து விட்டு சில காட்சிகளை ஆனந்த தாண்டவம் படத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன். இதற்கே சுஜாதா என்னை மன்னிக்க வேண்டும்.படம் முடிந்து வரும் போது யாரோ சொல்வது எனக்கு கேட்டது - நல்ல வேளை சுஜாதா இந்த படம் பார்க்கவில்லை.

அதில் வரும் மேரி எமர்ஸன்,கல்யாணத்துக்கு முன்பே ரகுவிடம் செக்ஸ் வைத்து கொள்ள முடிவு செய்யும் ரத்னா,கால் நன்றாக இருக்கும் மோகன் ராம்,ஜெயந்தியை திருமணம் செய்த ரகுவின் அப்பா(இங்கே சார்லிக்கு திருமணம் செய்து வைப்பார்.அப்பப்பா முடியல..) அப்படியே உள்ளது உள்ளபடியே வைத்து இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்..)

டைரக்டர் சார்,உங்களுக்கு சிவாஜி படத்தில் அஸோசியேட் டைரக்டராக வேலை பார்த்தற்கு ஷங்கர் 40 லட்சம் கொடுத்தார் என்று கேள்விப்பட்டேன். பேசாமல் இனிமேல் இது மாதிரி விஷப்பரிட்சை எதுவும் செய்யாமல் எந்திரன் படத்தில் வேலை பாருங்கள்.

டிஸ்கி :

எபிக்யுரஸ் சொன்னது,அவர் அப்பா படிக்க சொன்ன வாக்கியம்

"Death is nothing to us since so long as we exist death is not all with us but when death comes.we do not exist."

அந்த கதையில் வந்த மேற்கோள் - இது எல்லோருக்கும் பொருந்தும் என்று அவர் சொல்லியிருந்தார்.அவருக்கு பொருந்தாது.இன்னும் இணையம் மூலம் அவர் நம்மிடையே உலவுவார்,உரையாடுவார்.

5 comments:

Random Thoughts said...

இந்த வலை தலத்தில் மூன்று டாலர் கட்டினால் இந்த புத்தகம் "ebook" வடிவில் கிடைக்கும் :)

http://www.writersujatha.com/catalog/product_info.php?products_id=87

Random Thoughts said...

வலை தலத்தில் => வலை தளத்தில்

நாகா said...

அய்யோ இந்தப் படத்துக்கு பயங்கர பில்டப் கொடுத்து முதல் நாள் நண்பர்களை அழைத்துச் சென்று அடி வாங்கியதுதான் மிச்சம் :)

Unknown said...

//அய்யோ இந்தப் படத்துக்கு பயங்கர பில்டப் கொடுத்து முதல் நாள் நண்பர்களை அழைத்துச் சென்று அடி வாங்கியதுதான் மிச்சம் :)
//

அதே கத தான் எனக்கும்...

வனம் said...

வணக்கம் அரவிந்த்

அட்டகாசம் தல
\\மதன் வந்தார்கள்,வென்றார்கள் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார் ஹிமாயூனைப் பற்றி.அவர் பாபருக்கும்,அக்பருக்கும் இடையில் வந்த கமா தான் ஹிமாயூன்.

சுஜாதாவையும் இது மாதிரி சொல்லலாம்.அவர் இரண்டு தலைமுறைகளுக்கும் இடையில் வந்த சரித்திரம்.\\

என்னால் முடியவில்லை, வண்ணதாசனில் நிறைய மேற்கோள் காட்ட இருந்தது என்னால்தான் முடியவில்லை.

இராஜராஜன்