Friday, November 6, 2009

கனவு தொழிற்சாலை

"ஆனந்தா..இந்த உதவிகள் போதுமா..தேவை எதுவும் இருந்தால் கேள்..செய்ய காத்திருக்கிறேன்.."

"வேண்டாம் இளவரசே..தற்போது எதுவும் தேவையில்லை.."

"இளவரசர் என்பதேல்லாம் அரண்மனையில்..இங்கு அதுவும் உன் வீட்டில் நான் உன் நண்பன்.."

"சரி இளவரசே.."

"மறுபடியும் இளவரசா.."

இளவரசர் கையோடு கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரிக்க முயல..

"என்ன ஓலை..நல்ல செய்தி எதுவும் உண்டா இளவரசே.."

"நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருக்கிறது..அவள் அங்கத நாட்டின் இளவரசி குந்தவை.."

"பயிற்சி செய்து கை அழுக்காக இருக்கிறது..அங்கே வையுங்கள் பார்க்கிறேன்.."

"ஆனந்தா மறக்காமல் பார்..அவளை பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் போல உள்ளது.."

நான் இளவரசரை துரத்துவதிலே குறியாக இருந்தேன்.என் காதலி சேடிப்பெண் வரும் நேரம்.இளவரசரை அனுப்பி விட்டு அவளுக்காக காத்திருந்தேன்.அரை நாள் ஊடலையும் அரை நிமிடத்தில் கரைத்து விடுவதில் நிபுணி.வரும் போதே கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.

"என்ன இவ்வளவு நேரம்.." ஆரம்பமே கோபம் தான்.

"நாம் இந்த ஊரை விட்டே சென்று விடலாம்..எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.."

"பிச்சி மாதிரி பேசாதே..நாம் எதுக்கு ஓட வேண்டும்..அதுவும் ஊரை விட்டு.."

"எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.."

"அதனால் என்ன நான் உன் வீட்டில் பேசுகிறேன் நாச்சியார்.."

"நான் யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.."

நான் அவளுடைய பதற்றதை ரசித்து கொண்டிருந்தேன்.மேல் மூச்சு வாங்கும் போது அவள் அழகாக தெரிந்தாள் அல்லது தெரிந்தது.

"நீங்கள் யார் இளவரசி..சொல்லுங்கள்.."

"நேரம் காலம் தெரியாமல் விளையாடாதீர்கள்..கந்தர்வ மணமாவது புரிந்து கொள்வோம்..புரிந்து கொள்ளுங்கள்.."

"மனங்கள் கலந்த பின் என்ன கந்தர்வ மணம் வேண்டி கிடக்கிறது..இனி ஏகாந்த வாழ்வு தான்.." என் கை அவள் மார்புக் கச்சையின் மூடிச்சில் இருந்தது.

"தற்போது இது வேண்டாம்.." அவள் குரல் எனக்கு தூரத்தில் ஒலிப்பது போல் இருந்தது.அவள் மூச்சின் வெப்பத்தால் எனக்கு வேர்வை வழிந்தது.

மார்புக்கச்சை முழுதாக என் கையில் வரவும் குடிலின் முன் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.வந்தது இளவரசர்.நாங்கள் இருந்த கோலமோ அலங்கோலம்.

"குந்தவை..என்ன செய்கிறாய் இங்கு..துரோகி ஓலையைப் பார்க்க கொடுத்தால் அவளையே முழுதாக ரசிக்கிறாயா.."

"இளவரசே இது நாச்சியார்.."

"ஆம் குந்தவை நாச்சியார்..அங்கத நாட்டின் இளவரசி.." என்று இளவரசர் பேசுவது எனக்கு உறுமுவது போல் இருந்தது.

"இளவரசே..நான் சொல்வதை தயவு செய்து.."

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் தொரோகி..என் முகத்தில் இனி இருவரும் விழிக்க வேண்டாம்.." என்று தெற்கு நோக்கி ஓட ஆரம்பித்தார் இளவரசர்.

"இளவரசே..அங்கு போகாதீர்கள்..அங்கு பள்ளம் இருக்கிறது.." என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி ஓடவும்..அவர் பள்ளத்தில் விழவும் சரியாக இருந்தது.

பின்னால் வந்த காவலாளிகள் நிலைமையை ஒருவாராக ஊகித்து மன்னரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் சாராம்சம் இதுதான் - "நான் இளவரசி குந்தவை நாச்சியாரை கெடுக்க முயன்றதாகவும்..தடுக்க வந்த இளவரசரை பள்ளத்தில் தள்ளி கொலை செய்த்தாகவும்..அதனால் எனக்கு தண்டனை சிரச்சேதம்.."

சாட்சி - குந்தவை நாச்சியார்.

எனக்கு தண்டனை தர கத்தியோடு கொலையாளிகள் வர..அலறி கொண்டே விழித்து விட்டேன்.தலையைத் தொட்டு பார்த்து கொண்டேன்.பயங்கர காய்ச்சல்.வாந்தி வருவது போல் உணர்வு.ஆனால் வரவில்லை.இதுவரை எடுத்த மாதிரி நினைவும் இல்லை.

ஆபிஸ் மீட்டிங்க்.போய் தான் தீர வேண்டும்.அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி மனமும்,உடலும் சோர்ந்து கிடந்தது.

பக்கத்தில் இருந்த அந்த பெண் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்பது மாதிரி இருந்தது.

அவளை பார்க்க முயற்சி செய்தேன்.முடியவில்லை.கிளிவேஜ் வழியாக வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

"குந்தவை..ஆடையை சரியாக அணிந்து கொள்.." என்று உளரத் தொடங்கினேன்.

"ஐம் வீணா..ஹூ இஸ் குந்தவை..அரவிந்த் ஆர் யூ ஒ.கே.." என்னை தொட்டு பார்த்து விட்டு அதிர்ந்து போனாள்.

ஆபிஸ் காரில் ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு போனார்கள்.

அங்கு இருந்து நடக்க முயற்சித்தேன்.

"அரவிந்த்..எப்படிடா இருக்க.." என்று ஒரு குரல் கேட்டது.

"நீங்க..யாலு.." குரல் கம்ம தொடங்கியது.

"நான் வினோத்..பத்து வருசம் முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா பத்தாவது படிச்சோமே..நீ கூட பிட் கொடுத்தியே.."

"வினோத்..வீடு தெரியும் இல்ல வா பேசலாம்..உடம்புக்கு முடியவில்லை.." சொல்லி விட்டு அவனை விட்டு விலகி நடந்தேன்.

அவன் ஏமாற்றமாக எதையும் கவனிக்காமல் நடப்பது தெரிந்தது.அவனை நோக்கி ஒரு லாரி..

"இளவரசே..போக வேண்டாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.." மயங்கி விழுந்து விட்டேன்.

பின் குறிப்பு :

வினோத் தான் என்னை வீட்டில் சேர்த்தது.நல்ல வேளை அவன் சாகவில்லை.குந்தவையும் இல்லை,காய்ச்சலும் இல்லை.அந்த சம்பவத்தால் அடுமை நண்பன் வினோத்தும் இல்லை.யோசித்து பார்த்தால் அவன் எனக்கு ஏதோ ஒரு கட்டத்தில் பண உதவி செய்து இருக்கிறான்.

டிஸ்கி :

கனவில் கூட இந்த பொண்ணுங்க இப்படி தானா..குத்துங்க எசமான் குத்துங்க..நான் சொன்னது தமிலிஷ் தமிழ்மணம் ஓட்டு குத்த சொன்னேன்..

12 comments:

Raju said...

பெண்ணியத்தை எதிர்த்த ஆண்பித்தளை அரவிந்த் ஒழிக...!

லோகு said...

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண நினைச்ச இளவரசனும் செத்தான், காதலிச்சவனுக்கு சிரச்சேதம்..
பெண்ணை நினைச்சாலே சங்கு தான்னு சொன்ன உங்க நுண்ணரசியலை வெகுவாக ரசித்தேன்...

இப்படிக்கு,
கொலை வெறியுடன் குறீயீடு தேடும் சங்கத்தின் ஆயுட்கால மெம்பர்.
எத்தியோப்பியா.

வெண்ணிற இரவுகள்....! said...

அருமையான கதை நண்பா ....................அற்புதம் .........................எல்லா இடத்திலும்
பெண்கள் அப்படிதான்

Unknown said...

விடுங்க பாஸ் ........ figurenale problem than......

Beski said...

வாங்க வாங்க... நம்ம ஏரியாவுக்கு வந்துட்டீங்க.

//நீ கூட பிட் கொடுத்தியே..//
ஒத்துக்கறேன்... உண்மையிலேயே இது கனவுதான்னு ஒத்துக்கறேன்.

இரும்புத்திரை said...

நன்றி ராஜூ - நடத்துங்க

நன்றி லோகு - நீங்க உறுப்பினரா இல்ல செயலாளரா

நன்றி வெண்ணிற இரவுகள் - கனவுல கூடவா

நன்றி பேநா மூடி

நன்றி எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் கனவு தொழிற்சாலை அனுப்பட்டுமா

மணிஜி said...

யாரங்கே...இரும்புதிரைக்குப்பின் இந்த பொடியனை பூட்டுங்கள்

Beski said...

//கனவு தொழிற்சாலை அனுப்பட்டுமா//
இருங்க, எங்க தலைய கேட்டு சொல்றேன்.

Cable சங்கர் said...

நலல் கற்பனை ... இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..

அகல்விளக்கு said...

தல வர வர நல்ல முன்னேற்றம் தெரியுதே...

கதை சூப்பர்...

லேடீஸ் மேட்டர் அருமை..

ஆனா மித் படத்தை பார்த்த மாதிரி இருக்கு.

நீங்கதான் அந்த ஜாக்கிஜானா??...

இல்ல ஜாக்கி மேல எதுனா காண்டா???

எப்படியோ நானும் என் பங்குக்கு குத்திட்டேன் எசமான் குத்திட்டேன்.

துபாய் ராஜா said...

நல்லாத்தான் யோசிக்கறீங்க...

மிக்சிங் சரியா இருக்குது...

அருமை அரவிந்த்...

Unknown said...

கதை அருமை.. ஒரு நல்ல நண்பனை மிஸ் பண்ணது தான் சோகத்தின் உச்சம்..