Tuesday, November 10, 2009

மது கோடா(லிக் காம்பு)

மது கோடா - நிறைய பெருமைகளுக்கு சொந்தகாரர்..அதில் சில..

1. தன்னுடைய 35ம் வயதிலேயே(அதாவது சின்ன வயதில்) ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர்.இப்படி சொல்வதை விட ஏற்பாடு செய்து கொண்டவர்.

2. இந்திய வரலாற்றில் மூன்றாவது முறையாக ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனவர்.அதற்கு முன் இப்படி ஆட்சி பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் ஒரிசாவில் - பிஸ்வ நாத் தாஸ்(1971),மேகலாயாவில் - எஸ்.எஃப்.கொங்கலாம் (2002).

இப்படி இந்த வெற்றியை பெற அவர் வந்த வழியை பார்ப்போம்..

மது கோடா அரசியல் பாடம் கற்றுக் கொண்டு தீவிரமான களப்பணி ஆற்றியது - ஜார்கண்ட் மா நில மாணவர்கள் சங்கத்தில்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2000ம் ஆண்டில் ஜகனாத்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.அப்போதைய முதல்வர் - பாபுலால் முராண்டி.மது கோடா பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.

2005ம் ஆண்டு அவருக்கு கட்சி தொகுதி ஒதுக்கவில்லை.திரும்ப அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.அர்ஜூன் முண்டாவின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க இவருக்கு கிடைத்தது - சுரங்கம் மற்றும் மண்ணியல் துறை அமைச்சர்.

2006ம் ஆண்டு அர்ஜூன் முண்டாவிடம் வேலையை காட்ட,பல கட்சி ஆதரவுடன் அண்ணாத்தே காலியாக இருந்த முதல்வர் நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

ஆட்சியில் இருந்தது இரண்டு வருடம்,திரும்பவும் இவர் பாணியிலே இவரை கவிழ்த்து சிபு சோரன்(இந்த அண்ணன் கதை தனி) ஆட்சியில் அமர்ந்தார்.

இருந்த இரண்டு வருடத்தில் மது சுருட்டியது - 4000 கோடி.(ஜார்கண்டின் பட்ஜெட் பணத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு).

சேர்த்த சொத்து விபரங்கள் :

மும்பையில் - விடுதிகள் மற்றும் மூன்று நிறுவனங்கள்.

கொல்கத்தாவில் - சொத்து (அசையுமா அசையாதா)

தாய்லாந்தில் - விடுதி (சாண்ட்விச் விடுதியா..)

லிபெரியாவில் - நிலக்கரி சுரங்கம்.

இதெல்லாம் தெரிந்தது,தெரியாதது மது கோடாவுக்கு தான் வெளிச்சம்.

உகாண்டா மற்றும் இன்னும் சில ஆப்பிரிக்காவின் இருண்ட தேசங்களில் சர்வாதிகாரியாக இருப்பவர்கள் - சுருட்ட பத்து வருடங்கள் எடுத்து கொள்வார்களாம் - 600 கோடி சேர்ந்த உடன் வேறு நாடுகளுக்கு ஓடி விடுவார்களாம்.வருடத்திற்கு ஆறுபது கோடி.

ஆனால் இந்தியாவில் மது கோடா சுருட்டியது வருடத்திற்கு - ரெண்டாயிரம் கோடி.

சுவிஸ் வங்கியில் இருந்து கறுப்பு பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கத்தும் கூட்டத்தில் கூட அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இருப்பார்கள்.

மது கோடாவின் துதி பாடிய பத்திரிகைகள் இன்று எப்படி எழுதுகிறது தெரியுமா..

மது கோடாவுக்கு பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு.அவர் சின்ன வயதிலே பெண் மோகம் பிடித்தவர்.இப்படி எழுத வெட்கமாக இல்லை.அந்த ஆள் திரும்ப ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் துதி பாடுவார்கள்.ஊழல் வழக்கு எல்லாம் பெட்டி செய்தியில் உறங்கும்.பேனா முனையை வைத்து உங்கள் முதுகில் எப்போதாவது சொறிந்து கொள்ளுங்கள்.பேனா கூர்மையாக இருக்கும்.

அவர் திரும்ப முதல்வர் பதவிக்கு போட்டி போட்டால் எழுதுங்கள் - அவர் பெண் மோகம் பிடித்தவர்(சின்ன வயதை விட்டு விட்டேனே..)

நான் முதலில் படித்த கல்லூரியில் ஆண்டுதோறும் தேர்தல் நடக்கும்.தேர்தலில் போட்டி போடுபவர்களுக்கு ஸ்பான்சர் தருவார்கள்.அப்படி கிடைத்த பணத்தில் ஒருவன் கார் வாங்கி விட்டான்.(விலை ஏழு லட்சம்..).அடுத்த தேர்தலில் இருந்து கண்ணில் எண்ணெய் விட்டு பார்க்க ஆரம்பித்தார்கள். சாதாரண கல்லூரி தேர்தலில் இவ்வளவு பணம் கிடைத்தால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும்.

மது கோடாவை விட மோசமானவர்கள் "நான் வந்தால் குடிசையே இருக்காது.." என்று குடிசை வசிக்கும் குழந்தைகளைக் கட்டிப் பிடித்து பாட்டு பாடுபவர்கள். இந்த வரிசையில் கல்யாண மண்டபத்துக்கு பிரச்சனை வந்தால் மட்டும் போராடுபவர்களும் உண்டு.

டிஸ்கி :

மது கோடாவுக்கு நெஞ்சு வலியாம்..அய்யோ பாவம்..இன்னும் படித்துறையில் பாவாடை திருடிய வழக்கை எல்லாம் போடுங்கள்.எண்ணிக்கை தானே..இருந்து விட்டு போகட்டும்..

என்ன ஜார்கண்டில் இருந்து லாரி வருகிறதா ?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மது கோடா வாழ்க..

12 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அம்மாடியோவ் .. எவ்வளவு பெரிய கோடாலிக் காம்பு

ஜெட்லி... said...

தெரியாத தகவல்கள்.. எனக்கு ஒரு சந்தேகம்....
மதுகோடா,மெது பக்கோடா சாப்பிடுவாரா ??

Unknown said...

//.. அசையுமா அசையாதா ..//

எதுக்கும் அசச்சு பாருங்க பாஸு.. :-)

வனம் said...

வணக்கம் அரவிந்த்

லாரிதானே வருது வரட்டும் நாமும் லாரியில் புட்போர்ட் அடிக்களாம்.

இராஜராஜன்

தினேஷ் said...

//மதுகோடா,மெது பக்கோடா சாப்பிடுவாரா ?//

:):)

இவனல்லாம் என்ன பண்ணுறது..

இரும்புத்திரை said...

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ).இது சின்னது தான்..பெருசு எல்லாம் சிக்கவில்லை..

நன்றி ஜெட்லி..ஒரு வேளை நெஞ்சுவலிக்கு இது தான் காரணமா ?

நன்றி பட்டிக்காட்டான்..தமிழ்நாட்டில் மல்லு கட்டறது போதாதா..ஜார்கண்ட் வரைக்கும் போகனுமா..

நன்றி வனம்.. நாம எப்பவுமே படிக்கட்டு..மாட்டுனா புத்தூர் கட்டு

நன்றி சூரியன்.. எனக்கு ஒரு ஆயிரம் கோடி குடுத்து இருந்தா நான் இப்படி எல்லாம் எழுதுவேனா

ஈரோடு கதிர் said...

//நெஞ்சு வலியாம்//

இல்லப்பா... நெஞ்சுக்கும் கீழே

தமிழினியன் said...

//மது கோடாவுக்கு பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு.அவர் சின்ன வயதிலே பெண் மோகம் பிடித்தவர்.இப்படி எழுத வெட்கமாக இல்லை.அந்த ஆள் திரும்ப ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் துதி பாடுவார்கள்.ஊழல் வழக்கு எல்லாம் பெட்டி செய்தியில் உறங்கும்.பேனா முனையை வைத்து உங்கள் முதுகில் எப்போதாவது சொறிந்து கொள்ளுங்கள்.பேனா கூர்மையாக இருக்கும்.//

நாம பார்க்கத் தானே போறேம்.
அப்போது பல்லிலித்துக்கொண்டு கிறுக்கும் அரிப்பாளர்களை

அகல்விளக்கு said...

விடுங்க தல...
ஜார்கண்ட்ல இருந்து பிளைட் வந்தாக்கூட ஒரு கை பாத்துர்லாம்...

எதுக்கும் நான் மலேசியாக்கு ஒரு டிக்கட் போட்டுற்றேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பா ............இது ஊழல் தேசம்

இரும்புத்திரை said...

என்ன அதிலை டானா..அதில் வில்லன் ஷாரூக் காண சாக மாட்டார்.தமிழில் அஜித் செய்து விடுவார்

டான் டான்

பாலாஜி சங்கர் said...

என்ன ஜார்கண்டில் இருந்து லாரி வருகிறதா ?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி மது கோடா வாழ்க..


நல்ல வரிகள்