Monday, September 14, 2009

அழகு + காதல் + பணம் = கடவுள்.

இந்த தொடர்பதிவை எழுத அழைத்த நண்பர் நையாண்டி நைனாவிற்கு என் நன்றிகள்.

முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் தருவது ப்ளாக்கர் இரும்புத்திரை அரவிந்த்.

அழகு :

காதல் தானே தேடி வரும்.பணம் முயற்சி செய்தால் ஓடி வரும்.விருப்பம் இருந்தால் கடவுள் என்பவரைத் தேடலாம்.

காதல் :

அழகைப் பார்த்தே வருவது.பணம் இருந்தால் இன்னும் வசதி,கடைசி வரை இருக்கும்.கை கூடாத நேரத்தில் கடவுளைத் திட்டலாம்.

பணம் :

அழகைப் புத்தகம் போல புரட்டலாம்.அடுத்தவன் மனைவியையும் காதலிக்கலாம்.கடவுளைக் காண முன்னுரிமை உண்டு.

கடவுள் :

நம் வீட்டு படங்களில் அழகாக இருப்பவர்.காதல் அனுபவம் இருக்கும் என்றே நினைகிறேன்.பணம் என்ற கோட்டால் மக்களைப் பிரிப்பவர்.

இனிமேல் பதில் சொல்ல இருப்பது வாசகன் அரவிந்த்..

அழகு :

சொற்பக் காலமே நீடிக்கும் அற்பம்.

காதல் :

கருமாந்திரம்,குடிக்க உதவும் ஒரு கா"ரணம்",தொட்டுக் கொள்ள இருக்கும் கருவாடை விட மவுசு குறைவாக இருக்கும் ஒரு உணர்வு.

பணம் :

அழகு,பந்தம்,பாசம்,உறவு,நட்பு,காதல்,தோல்வி,வெற்றி,வேஷம் என்று பாரபட்சமில்லாமல் அளவிடும் தராசு.பிச்சைப்பாத்திரத்தில் விழும் காசு எழுப்பும் கன நேர அதிர்வு.

கடவுள் :

காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட வேண்டிய முதல் நபர்.

உலகம் முழுவதும் ஒரு சர்வே நடத்தப்படுகிறது.நடத்தியது ஐக்கிய நாடுகள்.

கேள்வி - "நீங்கல் தயவு செய்து உங்கள் நேர்மையான கருத்தை சொல்லுங்கள்.மற்ற நாடுகளில் நிலவி வரும் உணவு பற்றாகுறையைப் போக்க தீர்வு என்ன ?"

சர்வே படுதொல்வி அடைகிறது.ஏன் என்றால்

ஆப்பிரிக்காவில் உணவு என்றால் தெரியவில்லை.

இந்தியாவில் நேர்மை என்றால் தெரியவில்லை.

ஐரோப்பாவில் பற்றாகுறை என்றால் தெரியவில்லை.

கீனாவில் கருத்து என்றால் தெரியவில்லை.

மத்திய கிழக்கில் தீர்வு என்றால் தெரியவில்லை.

தென் அமெரிக்காவில் தயவு செய்து என்றால் தெரியவில்லை.

அமெரிக்காவில் மற்றா நாடுகள் என்றால் தெரியவில்லை.

அது மாதிரி தான் எனக்கும்.

அழகை அலட்சியம் செய்யத் தெரியவில்லை.காதலில் ஜெயிக்க தெரியவில்லை.பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை.கடவுளைக் கண்டுப்பிடிக்க தெரியவில்லை.

கடவுளே என்னை ஏன் அழகாக படைச்ச,பணத்தோடு படைச்ச,காதலோடு படைச்ச இப்படி கத்தி அவங்க வீட்டு நிலைக்கண்ணாடிய உடைக்க நான் கூப்பிடும் ஐவர்.

லோகு.

துபாய் ராஜா.

க.பாலாஜி.

ஈரோடு கதிர்.

ஜெகநாதன்.

10 comments:

லோகு said...

அட்டகாசமா எழுதியிருக்கீங்க.. இரும்புத்திரை அரவிந்த் ன் பதில்கள் எனக்கு ரொம்ப பிடித்தது..

என்னையும் கோர்த்து விட்டுடீங்க.. முயற்சி பண்றேன்..

இரும்புத்திரை said...

நன்றி லோகு

க.பாலாசி said...

//பணம் :
அழகு,பந்தம்,பாசம்,உறவு,நட்பு,காதல்,தோல்வி,வெற்றி,வேஷம் என்று பாரபட்சமில்லாமல் அளவிடும் தராசு.பிச்சைப்பாத்திரத்தில் விழும் காசு எழுப்பும் கன நேர அதிர்வு.//

அருமையான பதில் நண்பா...பதிவன் அரவிந்த்தை விட வாசகன் அரவிந்த்தின் பதிலில் ஒரு நல்ல அனுபவம் தெரிகிறது...

//அழகை அலட்சியம் செய்யத் தெரியவில்லை.காதலில் ஜெயிக்க தெரியவில்லை.பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை.//

உங்களின் ஆதங்கம் புரிகிறது...இவையெதுவுமே நிலையானதல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்...

என்னையும் அழைத்தமைக்கு நன்றி....

நையாண்டி நைனா said...

இவ்வளவு வேகமா...??? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆனா... நண்பரே... அசத்தலா இருக்கு....

இரும்புத்திரை said...

நன்றி பாலாஜி

நன்றி நைனா உங்க அளவுக்கு வரல

kathir said...

அசத்தல் இடுகை தம்பி...

கடவுள் பற்றிய கோபம் நியாயமானது

அது ஏன் கடைசியா என்னை சிக்கவிட்டீங்க...

எனக்குதான் உங்கள் மாதிரி எழுத வராதே

துபாய் ராஜா said...

//அழகை அலட்சியம் செய்யத் தெரியவில்லை.காதலில் ஜெயிக்க தெரியவில்லை.பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை.கடவுளைக் கண்டுப்பிடிக்க தெரியவில்லை.//

பராசக்தி கோர்ட் வசனம் போல படித்தேன்.. :))

துபாய் ராஜா said...

//கடவுளே என்னை ஏன் அழகாக படைச்ச,பணத்தோடு படைச்ச,காதலோடு படைச்ச இப்படி கத்தி அவங்க வீட்டு நிலைக்கண்ணாடிய உடைக்க நான் கூப்பிடும் ஐவர்.... //

எவ்வளவோ தாங்குறோம். இதை தாங்க மாட்டோமா.....

தாக்கு தாக்குன்னு தாக்கிடுவோம் தம்பி அரவிந்த்.... :))

Nathanjagk said...

mmmm.. interesting!!! வாசகன் அரவிந்த் பதில்களில் லயித்தேன்!!

இரும்புத்திரை said...

நன்றி கதிர்

நன்றி துபாய் ராஜா

நன்றி ஜெகநாதன்