Friday, September 11, 2009

வாசி..சுவாசி..நேசி..

சின்ன வயதிலே இருந்து புத்தகம் வாசிப்பது என்றாலே ஒரு அலாதி பிரியம் தான்.என்னிடம் உள்ள ஒரு பழக்கம் எட்டு மணிக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்றால் நான் அரை மணி நேரம் முன்னாடி தான் எழுந்திருப்பேன்.என் அம்மா எழுப்பினால் கூட "ஒரு அஞ்சு நிமிசம்மா.." சொல்லியே நேரத்தை கடத்துவேன். +2 படிக்கும் பொது இதையே செய்தேன்.எனக்கு பொது தேர்வு நடந்த சமயத்தில் எல்லோரும் விழித்திருப்பார்கள்.நான் மட்டும் தூங்கி மகிழ்வேன். அது இன்றும் தொடர்கிறது.தொட்டில் பழக்கம் என்றாகிவிட்டது.ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அலாரம் வைத்து வைத்து விழிப்பேன்(7.30௦ - 8.௦௦00) . இதுதான் அந்த ஐந்து நிமிட சொர்க்கமா இல்லை சுகமா..ஆனால் வெள்ளிகிழமை மட்டும் நான் தான் முதலில் விழிப்பேன் - சேவலையும் எழுப்புவேன்.காரணம் சிறுவர்மலர்.

வேகமாக வாசிக்க கற்றுக் கொண்டதே சிறுவர்மலர் இணைப்பை வைத்து தான்.ஆறு வயதில் தொடங்கிய வாசிப்பு இன்று நிறைய புதிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

அப்படி வந்த சில மாற்றங்கள்..

ஆறு வயது முதல் ஒன்பது வயது வரை - சிறுவர்மலர்,கோகுலம்,ராணி காமிக்ஸ்,வாண்டு மாமா,அம்புலிமாமா.

ஒன்பது வயது முதல் பதினெட்டு வரை - நாவல்கள்(கழிசடை முதல் நல்ல நாவல்கள் வரை),குமுதம்,ஆனந்த விகடன்,_____ (ஒரே ஒரு புத்தகம் - அதிலும் ஒரே ஒரு கதை தான்)

பதினெட்டு முதல் இருபத்தி நாலு வரை - எல்லாம் வெறுத்து போய் எது கிடைத்தாலும் படிக்கிறது.(கடலை மடிச்சு தரும் தாளை கூட விடுவது கிடையாது)

கடந்த வருடத்தில் இருந்து - பாக்குற எல்லா வலைப்பூகளையும் ஒன்னு விடாமல் மேய்வது.

புத்தகம் படிக்க மட்டும் நான் ரிஸ்க் எடுக்க தயங்கியதே இல்லை.ராணி காமிக்ஸ் வாங்க பள்ளிக் காவலாளிக்கு லஞ்சம் கொடுத்து(அந்த பணத்துல நாலு புத்தகம் வாங்கலாம்).விடுதியில் தங்கி இருந்த காலத்தில் பொறுமை இல்லாமல் பள்ளிக்கே எடுத்து சென்று படித்திருக்கிறேன்.புத்தகம் இரவல் தரும் எல்லாருமே நண்பர்கள் தான்.ஒன்பது வயதில் நான் படிக்காத அம்புலிமாமாவை இரவல் கேட்ட போது ஒரு அத்தை "இதெல்லாம் படிச்சா நீ கேட்டுப் போயிருவ.." இப்படி சொல்லி தரவேயில்லை. (இதெல்லாம் சும்மா நான் பாலகுமாரன் நாவல்கள் படிக்க தொடங்கியிருந்த காலமது.அது படிச்சே கேட்டு போகல..அம்புலிமாமா படிச்சா கேட்டுப் போயிருவேன்)

காயலான் கடையிலே தவமிருந்து அங்கு இருக்கும் நாவல்களை எல்லாம் வாங்கி வருவேன்.பாலகுமாரன்,சுபா (முதல் கதை ஒரு ஆபத்தான கதை அண்ணனும் தங்கையும் காதலிக்கும் கதை),ராஜேஷ்குமார்,பிரபாகர் - இப்படி ஒரு நாவல்கள் விடாமல் விடாமல் படித்து இருக்கிறேன்.

சாப்பிடும் நேரத்தில் கூட புத்தகம் படித்தால் தான் சாப்பாடு இறங்கும் என்ற நிலை இன்று வரை தொடர்கிறது."ஒருநாள் வரட்டிய வைக்க போறேன்..அதையும் நீ சாப்பிடத்தான் போற..முதல்ல தட்டப் பாத்து சாப்பிடு.." என்று அம்மா மிரட்டி பார்த்தும் மாறவேயில்லை இந்த பழக்கம். யார் மிரட்டினாலும் மாறவே மாறாது.

குமுதம்,ஆனந்த விகடன் வாங்கும் போது கடையை நான் போய் திறந்த காலம் எல்லாம் உண்டு.ஒருநாள் முன்னாள் வருகிறது என்று கேள்விப்பட்டு இரவு பத்து மணிக்கு மேல் அந்த புத்தக கடையில் காத்திருந்து வாங்கிப் படிக்கும் அளவுக்கு ஒரு வெறியன்.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு _____ புத்தகம் படித்து இருக்கிறேன்.(அதுவும் நாலே நாலு பக்கம் தான்).அதற்குள் பிடுங்கி விட்டார்கள்.என்னோவோ இன்று வரை வருத்தமே இல்லை. காரணம் சின்ன வயதில் படித்த பாலகுமாரன் நாவல்கள் இதை விட சுவாரஸ்மாக இருந்ததே.

சுஜாதா,மதன் தான் காலத்திற்கு ஏற்ப மாறி இருந்தார்கள்.
இன்று வரை எனக்கு வரலாற்றின் மீது தான் ஆர்வம் அதிகம். (அக்கீலிஸ் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்).காரணம் மதனின் வந்தார்கள் வென்றார்கள்,கி.மு - கி.பி (சுஜாதா சொன்னது இது மாதிரி ஆசிரியர் இருந்து இருந்தால் நானும் அந்த பாடத்தில் நிறைய மதிப்பேன் பெற்று இருப்பேன்)

இவற்றை எல்லாவற்றையும் விட ப்ளாக் தான் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது.எவ்வளவு கோணங்கள்..நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.வலைப்பூவில் படிக்க ஆரம்பித்தப் பிறகு படிக்காத நிறைய புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்,முகம் தெரியாத நண்பர்கள்,அவர்களுடைய கருத்துகள் - இதை தான் நான் விரும்பியது..என்றும் விரும்புவது..

14 comments:

லோகு said...

ம்ம்ம்.. எனக்கும் சின்ன வயசில் (குழந்தை பருவத்தில்???) படிக்கும் ஆர்வம் இருந்தது.. விகடன் குமுதம் எல்லாம் எவ்வளோ பழைய புத்தகமாய் இருந்தாலும் படித்து கொண்டிருப்பேன்.. அதற்கு முன் சிறுவர் மலர் ஆர்வமாக படித்ததுண்டு..

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் அண்ணா..

venkat said...

படித்ததை எல்லாம் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் அரவிந்த் கிட்டத்தட்ட நானும் உங்களைப்போல் தான்

நிகழ்காலத்தில்... said...

\\பதினெட்டு முதல் இருபத்தி நாலு வரை - எல்லாம் வெறுத்து போய் எது கிடைத்தாலும் படிக்கிறது.(கடலை மடிச்சு தரும் தாளை கூட விடுவது கிடையாது)\\

நானும் இப்படியேதான் :))

வாழ்த்துக்கள்

Ashok D said...

:)

துபாய் ராஜா said...

ம்ம்ம்.அரவிந்த,ஒரு கொசுவத்திய கொளுத்திட்டிங்க... :))

நாமளும் வாசிப்பனுவங்களை ஒரு பதிவா போட்டிட வேண்டியதுதான்..

Unknown said...

//.. பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் அரவிந்த் கிட்டத்தட்ட நானும் உங்களைப்போல் தான் ..//

ரிப்பீட்டு..

Nathanjagk said...

குமுதம் சுஜாதா ​பொறுப்பாசிரியராக இருந்த ​போது அதன் தர​மே ​வேறு. ஆவி 1990ல்தான் முழு​மையாக அக்ரஹாரத்​தை விட்டு ​வெளியில் வந்தது. இப்பவும், தமிழில் சிறுவர்களுக்கான காமிக்ஸ்கள் மிகக் கம்மி. எவ்வளவு நா​ளைக்குத்தான் ​மொழி​பெயர்ப்பில் வந்த ​இங்கிலீஷ்காரர்கள் சாகஸத்​தை​யே படித்துக் ​கொண்டிருப்பது?
நல்ல பதிவு! வாழ்த்துகள்!

Raju said...

\\இதெல்லாம் சும்மா நான் பாலகுமாரன் நாவல்கள் படிக்க தொடங்கியிருந்த காலமது.அது படிச்சே கேட்டு போகல..அம்புலிமாமா படிச்சா கேட்டுப் போயிருவேன்)\\

எதை சார் கேட்டுட்டு போனிங்க..?

\\மதிப்பேன் பெற்று இருப்பேன்\\

அப்போ, பொடுகு வாங்குனீங்களா..?

ஈரோடு கதிர் said...

ஆஹா அரவிந்.... அற்புதமான இடுகை

என் கல்லூரி தேர்வு நாட்களில்... மதியம் தேர்வை வைத்துக் கொண்டு காலையில் பாலகுமாரன் புத்தகம் படித்தவன் நான்..

சமீபத்தில் வாசிப்புத்தன்மை பெரிதும் குறைந்துள்ளது என்னிடம்... கவனம் தேவை

ஊர்சுற்றி said...

அருமையான பகிர்வு. அப்புறம் சீக்கிரம் உங்க வரலாற்றுப் பதிவுகளை எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

தினேஷ் said...

/சே கேட்டு போகல..அம்புலிமாமா படிச்சா கேட்டுப் போயிருவேன்//

ஏன் தல கேட்டுக்கு போறிய?

தினேஷ் said...

//சாப்பிடும் நேரத்தில் கூட புத்தகம் படித்தால் தான் சாப்பாடு இறங்கும் என்ற நிலை இன்று வரை தொடர்கிறது."ஒருநாள் வரட்டிய வைக்க போறேன்..அதையும் நீ சாப்பிடத்தான் போற..முதல்ல தட்டப் பாத்து சாப்பிடு.." என்று அம்மா மிரட்டி பார்த்தும் மாறவேயில்லை இந்த பழக்கம். யார் மிரட்டினாலும் மாறவே மாறாது. //

சேம் பிளட் , அம்மா சாப்பாடு எடுத்து வச்சுட்டு என்ன தேடிட்டு இருப்பாங்க நான் எதாச்சும் படிக்க புத்தகத்த தேடிட்டு இருப்பேன்.. ஆனா என்னனு தெரில்ல பாடம் சம்பந்தமான் புத்தகம்னா முத பக்கத்த புரட்டும் போத மல்லாந்துருவேன்

தினேஷ் said...

/இவற்றை எல்லாவற்றையும் விட ப்ளாக் தான் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது.எவ்வளவு கோணங்கள்..நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.வலைப்பூவில் படிக்க ஆரம்பித்தப் பிறகு படிக்காத நிறைய புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்,முகம் தெரியாத நண்பர்கள்,அவர்களுடைய கருத்துகள் - இதை தான் நான் விரும்பியது..என்றும் விரும்புவது.//

படிக்க மட்டும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தேவைபடுது ..