Tuesday, September 29, 2009

வெள்ளச்சி - திருநெல்வேலி சம்பவம்

கிராமங்களில் பெயர் வைப்பதற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிதான் இவளுக்கும் பெயர் வைத்தார்கள்.அந்த குடும்பத்திலே மிகவும் வெள்ளையாகப் பிறந்ததால் இந்த பெயர்.நான் பழகியதில் ரொம்ப தைரியமான பெண் என்று தான் நான்கு வருடங்களுக்கு முன் வரை நினைத்து வந்தேன்.

பதினாலு வருடங்களுக்கு முன்..

ஊரில் சின்னப் பசங்களுக்குள் எந்த சண்டை(சண்டை மட்டுமே) நடந்தாலும் குற்றப்பத்திரிகையில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.சாட்சியங்களோடு அந்த இடத்தில் இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே அடுத்த பையன் மீது விசாரணை நகரும்.அப்படி ஊருக்குள் நல்லப் பெயர் எடுத்தவன்.அப்படி இருக்கும் என்னோடு விளையாட பசங்களே யோசிப்பார்கள்.இதில் கண்ணன் என்ற உறவினன் தான் எனக்கு எல்லாமே.அவனும் சேர்ந்தால் விளையாட்டுக்களம் ரணகளம் ஆகும்.
அப்போ ஊரில் பேமஸான விளையாட்டு கிரிக்கெட்டுக்கு முன்னோடி குச்சிக்கம்பு.(சென்னை மொழியில் கில்லிதாண்டா)

நாங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரே அணியில் ஆடினால் பெரியப் பசங்களே அலறுவார்கள்.(அப்படியொரு சர்ப்ரைஸ் காம்போ).அப்புறம் பெண்கள் கேட்கவே வேண்டாம் நாங்கள் இறங்கினால் ஆட்டத்தில் இருந்து விலகுவார்கள்.அதிலும் ஒரு விதிவிலக்கு தான் வெள்ளச்சி எங்களுடன் மோத விரும்புவாள்.

அப்படி ஒருநாள் எங்களை விளையாட்டுக்கு யாரும் சேர்க்காதக் கோவத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு சோகமாக நாங்கள் இருவரும் உக்கார்ந்து இருந்தோம்.

கோவத்தில் ஒருவன் - "டேய் இருங்கடா உங்க மாமா கிட்ட சொல்றேன்.."

கண்ணன் - "ஆமா நீ சொல்லி அஞ்சாறு ம....ச்சி"(அப்போ அந்த வார்த்தையைக் கூட கெட்ட வார்த்தையாக நினைத்தேன்..சென்னை வந்த ஒரே மாதத்தில் அதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையே இல்லை என்று ஆகி விட்டது.ராகத்தோடு ரைமிங்காக பேசுவேன்)

மாமா என்றாலே எனக்கு பயம்.இந்த பசங்களுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு அடி விழும்.பயத்தில் நான்.

"கண்ணா..உன்ன விட்டுருவாரு எனக்கு அடி விழும்..ரொம்ப பயமாயிருக்கு.."

அந்த சமயம் வெள்ளச்சி வந்து சேர்ந்தாள்..

"என்ன நீங்க ரெண்டு பெரும் இங்க உக்கார்ந்து இருக்கீங்க.."

"விளையாட யாருமேயில்லை.." - இது நான்

"சரி நான் வர்றேன்..விளையாடுவோமா.."

"வெள்ளச்சி விளையாடுறதிலப் பிரச்சனை இல்ல..நீ மட்டும் தான் இருக்க..நாங்க இரண்டு பேர்.." - நான் அவளைத் துரத்துவதிலே குறியாக இருந்தேன்.

"இரண்டு ஆட்டமும் நானே ஆடுறேன்.."

"வேண்டாம் வெள்ளச்சி..இன்னொரு நாள் விளையாடலாம்.."

கண்ணன் காதில் கிசுகிசுத்தான் - "கோழியே வந்து என்னை சாப்பிடுன்னு கத்துது..நீ கெடுத்துருவப் போல.."

"சரி எவ்வளவு பாயிண்ட்.." - நான் வெள்ளச்சியிடம் கேட்டேன்.

"ஐந்நூறு.."

டாஸ் போடுவதற்குக் கண்ணன் கல்லைத் தேடிக் கொண்டியிருந்தான்.(அந்த கல் ஒரு பக்கம் வெள்ளையாக இருக்கும்..இன்னொரு பக்கம் வேறு நிறத்தில் இருக்கும்)

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க முதல்ல விளையாடுங்க.." என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டேயிருந்தாள் வெள்ளச்சி

பொதுவாக பெண்கள் தான் முதலில் விளையாடுவார்கள்.அவர்கள் தோற்பது போல் இருந்தால் அசந்து இருக்கும் சமயம் வீட்டைப் பார்த்து ஓடி விடுவார்கள்.துரத்திப் பிடித்து தலையில் கொட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.(அது ஒரு தனி வழக்காக உருவாக்கப்படும்)

குச்சிக்கம்பு நேர்த்தியாக விளையாடுபவர்கள் தோற்றவர்களை முடிவில் அலைக்கழிப்பார்கள்.அது பாவம் பார்த்து விட்டால் தான் உண்டு.ஆட்டம் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.அலைக்கழிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும்.

அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.

கண்ணன் அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவள் புத்தகப்பையை வாங்கிக் கொண்டான்.

முதலில் நான் இறங்கினேன்.முதல் முறையாக டக் அவுட்.அதிர்ச்சி.கண்ணன் அடுத்து விளையாடினான்.பேரதிர்ச்சி.அவனும் டக் அவுட்.

அவளை ரொம்ப அலட்சியமாக எதிர்கொண்டது தான் காரணம்.(அக்தர் அறிமுகப் போட்டியில் டிராவிடையும்,சச்சினையும் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கினார்.)இன்னொரு காரணம் அவளுக்கு எதிராக நாங்கள் விளையாடியது அதுதான் முதல் முறை.

கண்ணன் - "டேய் என்ன அவகிட்ட வம்பு இழுத்திருவோமா..ஆட்டையக் கலச்சுருவோம்.."
"இரு பாக்கலாம்" - அவளையும் டக் அவுட் செய்து விடலாம் என்று நினைத்தேன்.இந்தியாவுக்கு எதிராக மட்டும் நன்றாக விளையாடும் வீரர்களைப் போல அவள் வெளுத்துக் கொண்டியிருந்தாள்.

"இன்னைக்கு நம்ம மானம் போகப் போவது உறுதி.."

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவள் நானூறு எடுத்து இருந்தாள்.இன்னும் நூறு தான்.அப்போது தான் அவள் விளையாடும் முறையை கவனித்தேன்.கம்பைத் தரையில் தேய்த்துக் கொண்டேயிருந்தாள்.லகான் படத்தில் வரும் பவுலரைப் போலக் குச்சியைக் கொஞ்சம் உயரமாக வீசினேன்.அவள் கம்பை அடித்தப் பிறகு குச்சி கீழே விழுந்ததால் அவள் அவுட்.இரண்டாவது நபருக்கு அவள் விளையாடினாள்.இந்த முறையும் அதே பாணியில் அவுட் செய்தேன்.

கண்ணன் அவள் பையைப் பத்திரமாக எடுத்து வைத்து கொண்டான்.நான் இறங்கி ஐநூறு பாயிண்ட் எடுத்து விட்டேன்.

கண்ணன் பையை என்னிடம் கொடுத்து விட்டு அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தான்.அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அழுது விடுவாள் போல இருந்தது.(இதற்கும் ஒரு வழக்கு வருமே என்று பயம் வேறு..)

"கண்ணா அவள விடு வீட்டுக்குப் போகலாம்..இந்தா எடுத்துக்கோ.." என்று பையை அவளிடம் கொடுத்தேன்.

"நீ அலைக்கலையா.." என்றவளிடம் "ரொம்ப நல்லா விளையாடின..அதுக்கு நான் தரும் மரியாதை" என்று சொன்னேன்.

அடுத்த இரண்டு வருடத்தில் நான் சென்னைக்கு வந்து விட்டேன்.சில வருடங்கள் கழித்து ஊருக்கு போனப் போது தாவணி எல்லாம் அணிந்து ஆளே மாறியிருந்தாள்.

அவள் வீட்டிற்கு போனேன்.பணியாரம் கொடுத்தாள்.சாப்பிடத் தொடங்கியவுடன் "இது கூட சரியா சாப்பிடத் தெரியல.." என்று கறுப்பாக இருந்ததை எல்லாம் எடுத்து விட்டு சாப்பிடத் தந்தாள்.

இரண்டு வருடம் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டேன்.காதல் தோல்வியாம்.அந்த பையன் இருக்கிறதிலே கேனை மாதிரி இருப்பான்.

அவள் இறந்தப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போனேன்.வீட்டை விட்டு வெளியே போகவில்லை.அவள் பேயாக அலைகிறாள் என்று வதந்தி வேறு.

மும்பை வந்த பிறகு ஒரு ஊர்காரனைப் பார்த்தேன்.அவள் சாவோடுப் போராடியக் கணங்களை விவரித்தான்.அன்று விளையாடிய ஆட்டம் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று எனக்கு இருந்த கருணை கூட அந்த முட்டாள் கடவுளுக்கு இல்லை.

பின்குறிப்பு :

கண்ணன் குடும்பத் தகராறில் எனக்கு எதிரியாக மாறி இருந்தான்.அவன் அப்பா ஒரு பேராசை பிடித்தவன்.அவன் யாருக்கோ வைத்த மின்சாரத்தில் கண்ணன் மாட்டிக் கொண்டு இறந்து விட்டான்.

சந்தேகம் :

ரொம்ப தைரியசாலி பெண்கள் எப்படி மிகச் சரியாக கொஞ்சம் கூடத் தப்பாமல் சாக்கடையில் விழுகிறார்கள்.நான் இன்று தைரியசாலி என்று நினைக்கும் ஒரு பெண் நயன்தாரா.சாக்கடை பிரபுதேவா இல்லை.

18 comments:

நையாண்டி நைனா said...

மக்கா... அருமையா இருக்குடா....

நையாண்டி நைனா said...

இதுவரைக்கும் நீ எழுதுனதுலையே... இது தான் டாப்பு...

நாடோடி இலக்கியன் said...

நல்ல ஃப்ளோ இருந்தது அரவிந்த்.முதன் முறையாக பொறுமையா எழுதியிருப்பாய்னு நினைக்கிறேன்.நல்லா வந்திருக்கு பதிவு.

Raju said...

நல்லா இருக்கு தல.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னா ஒரு ஸ்டைல் உங்ககிட்ட !

அந்த பொண்ணை பாத்தவுடன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

குச்சிக்கம்பு விளையாட்டுல நம்மள அடிச்சுக்க ஆளே கிடையாது என்ன

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சூப்பர்

இரும்புத்திரை said...

பின்குறிப்புல ஒன்னு மிஸ் பண்ணிட்டேன்.கண்ணன் இந்த பதிவை எழுதி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.இல்ல அந்த பொண்ணு எழுதி இருந்தா

இரும்புத்திரை said...

நன்றி நைனா

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி ராஜு

நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

அமுதா கிருஷ்ணா said...

தம்பிக்கு எந்த ஊரு திருநெல்வேலியில்???

Anonymous said...

வாவ்

//மக்கா... அருமையா இருக்குடா....//

ரிப்பீட்டு

தினேஷ் said...

கில்லி அடி மச்சி...

//அன்று எனக்கு இருந்த கருணை கூட அந்த முட்டாள் கடவுளுக்கு இல்லை.//

சில நேரத்துல இவர் யாருனு யோசிக்க வைக்குது..


நயன்தாரா-சாக்கடை,பிரபுதேவா இல்லை.(அவ்வ்வ்வ்வ்வ்)

Beski said...

தொய்வில்லாமல் அருமையா எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

இரும்புத்திரை said...

நன்றி அமுதா கிருஷ்ணா

நன்றி சின்ன அம்மிணி

நன்றி சூரியன்

நன்றி எவனோ ஒருவன்

துபாய் ராஜா said...

அருமையா தெளிவா எழுதியிருக்கீங்க அரவிந்த்.ஆனா கடைசியில கண்ணன் கதையை இழுத்து குழப்பிட்டிங்க. நயன்தாரா மேட்டரும் தேவையில்லாதது.வெள்ளச்சி முடிவோட விட்டிருந்தா கதை படிக்கிறவங்க மனசுல நின்னுருக்கும். இப்போ கண்ணனும், பிரபுதேவாவும் வெள்ளச்சியை மிஞ்சி நிக்கிறாங்க. கதை நல்ல ஃப்ளோல போய்கிட்டிருக்கும்போது நீங்களே படிக்கிறவங்க கவனத்தை திருப்பிட்டிங்க....

கீழே இருக்கிறதை மட்டும் மேஜர் சுந்தர்ராஜன் அல்லது தேங்காய் சீனிவாசன் ஸ்டைலில் ஏற்ற இரக்கத்தோடு கொஞ்சம் தழுதழுப்பான குரலில் படிக்கவும்.... :))

தப்பா நினைக்காதிங்க அரவிந்த்... உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு. அத மேலும் வளர்க்கவேண்டிய கடமை எங்களுக்கு இருக்குன்னு நினைப்பதால்தான் உரிமையோடு சொல்றோம்....

Anonymous said...

.?திருநெல் வேலி
:) :-);-):-)????

ஈரோடு கதிர் said...

மிக அருமையான வடிவம்

தெளிவான நடை

ரசித்தேன்

ஆனால்...
பின்குறிப்பு அவசியம்தானா?
சந்தேகம் இது முழுக்க முழுக்க தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு....வெள்ளச்சி இன்னும் மனசில் இருக்கிறார்!!