Thursday, September 10, 2009

மிஸ்கின் மீது வழக்கு போடப் போகிறேன்

கல்லூரி படிக்கும் பொழுது சும்மா டைம்பாஸ் செய்ய சில(பல) சமயம் திரைக்கதைகளை யோசிப்பது உண்டு.விவாதிப்பதும் உண்டு.அண்ணன் ஒரு உதவி இயக்குனராக இருப்பதால் சமீபகாலமாக கொலைவெறியோடு யோசித்து வருகிறேன்.அப்படி யோசித்த(விவாதித்த) கதைகளும் இப்போது சினிமாவாக வந்து இருக்கிறது.நண்பர்கள் ஒரே மாதிரி யோசிப்பது போல சில முகம் தெரியாத இரண்டு நபர்களும் ஒரே சாயலில் உண்டு.

அப்படி வந்த படங்கள் சில..

கண்ட நாள் முதல்....

நாயகனுக்கும் நாயகிக்கும் ஒத்தே கருத்தே கிடையாது.சண்டை போடுவது தான் அவர்களுக்கு வேலை.கடைசியில் காதலில் விழுவார்கள்.மூன்றாவதாக ஒரு நண்பன் உண்டு. இதில் வரும் சில சம்பவங்கள் நிஜத்தில் நண்பர்கள் சிலருக்கு நடந்து இருக்கிறது.அப்படி சண்டை போடும் போது பேசிய வசனங்கள் கூட பேசி இருக்கிறோம். ராமதாஸ் வசனம் கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது.

அஞ்சாதே....

இரண்டு நண்பர்கள் கதை.இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு வழியில் போவார்கள்.ஒரு கட்டத்தில் பாதை மாறி இரண்டு துருவாங்களாக மாறி விடுவார்கள்.இந்த படத்துக்கு ஒரு விருது கூட குடுக்காமல் இருந்தது எனக்கு ரொம்ப வருத்தம்.நான் ரசித்த இரண்டு காட்சிகள். அஜ்மலின் அம்மா நரேனுக்கு சாபம் கொடுப்பார்."உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வரும் என்று.." ஆனால் லிவிங்க்ஸ்டன் நெஞ்சு வலியில் துடிப்பார்.இறுதி காட்சியில் நரேன் அஜ்மலை சுடுவார்.ஆனால் ஆரம்பத்தில் அஜ்மல் நரேனிடம் இப்படி சொல்வார்."நானே உன்னை நடுரோட்டுல நாய சுடுற மாதிரி சுடுவேண்டா.."இப்படி சொன்னது எல்லாமே எதிராகத்தான் நடக்கும்.

மகதீரா...

விரல் பட்டவுடன் உடம்புக்குள் மின்சாரம் பாய வேண்டும்.அப்படி ஒரு பெண்ணை ஒரே ஒரு ஸ்பரிசத்திற்கு பிறகு தேடி அலைகிறான்.அவள் அருகிலே இருக்கிறாள்.கதை விவாதத்தில் ஒரு கைகலப்பு வந்ததால் அப்படியே நிறுத்தப்பட்டது.விரல் பட்டவுடன் மின்சாரம் பாயணும் அதுக்கு நீ கரண்ட் கம்பியத்தான் பிடிக்கணும் - இப்படி ஒருவன் சொல்ல இன்னொரு நண்பன் மறுக்க சிறு கைகலப்பு ஏற்பட்டது.கதையும் அதோடு நிறுத்தப்பட்டது.

சேரனின் சுயசரிதையில் கூட இப்படி ஒரு இடம் வருகிறது.அவர் எழுதிய கதையும் அப்பொழுது வந்த வெற்றி அடைந்த படத்தின் கதையும் ஒரே மாதிரி இருந்ததாம்.அந்தப் படம் விக்ரமன் இயக்கிய புது வசந்தம்.

இப்பொழுது நாலாவதாக ஒரு திரைகதை எழுதியிருக்கிறேன்.யார் படத்தில் வருகிறது என்று பார்ப்போம்.

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.தலைப்புக்கும் டிஸ்கிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

டிஸ்கி :

இப்படி நினைக்கும் அல்லது விவாதிக்கும் கதைகள் படமாக வெளி வரும் போது தாங்க முடியாமல் தான் வழக்கு போடுகிறார்களோ..உதாரணம் தசாவதாரம் ஒரு உதவி இயக்குனரின் கதை என்று வழக்கு போடப்பட்டது.சிவாஜியும் இந்த சர்ச்சையில் சிக்கியது.

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு நெருங்கிய நண்பர் சொன்னது.."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்.." (ஏம்பா உனக்கு இந்த கொலைவெறி)

17 comments:

லோகு said...

அப்படினா... வருங்கால இயக்குனரா??? என்னையும் மைண்ட்ல வச்சுக்கங்க பாஸ்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்க நெருங்கிய நண்பர் ரொம்ப நல்லவரா இருக்காரு ...........

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ............

ஈரோடு கதிர் said...

//நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்//

இஃகிஃகி

வர வர உங்க டிஸ்கி சூப்பரா இருக்கு

சரி... ஏன் திரும்பவும் இப்பிடி..

Unknown said...

ரசித்தேன்..

//..கதிர் - ஈரோடு said...
சரி... ஏன் திரும்பவும் இப்பிடி.. //

ஒரே மாதிரி இருந்தா போர் அடிச்சுடும்ங்க..

துபாய் ராஜா said...

.//."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்.." (ஏம்பா உனக்கு இந்த கொலைவெறி)//

சில நேரத்துல பலபேரு டிவிடில பார்த்த ஒரே படத்தை அவங்கவங்க ஸ்டைல்ல எடுத்ததெல்லாம் என்ன சொல்ல....... :))

Unknown said...

எல்லாம் சரி அர்விந்த்...
அஞ்சாதே வெற்றிக்குப் பிறகு மிஷ்கின் எங்கேயோ ஒரு கூட்டத்தில 'நான் அப்பிடி சீன் வச்சேன், இப்பிடி சீன் வச்சேன்.. இத மாதிரி மணிரத்னம் சீன் வக்கல, பாரதிராஜா சீன் வக்கல' என்றெல்லாம் பீற்றினாராம்... அஞ்சாதேவில் Presentation தவிர ஒன்றுமே இல்லை.. படத்தின் அடிநாதமான அந்தக் பெண் கடத்தல் கும்பலைப் பிடிப்பது தொடர்பான கதையமைப்பில் மிஷ்கின் ஒரு மாபெரும் ஓட்டையை விட்டிருப்பார்.. கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.

Thamira said...

."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்//

ஹிஹி..

Cable சங்கர் said...

ஹா..ஹா..ஹா..

Raju said...

ஸாரி பாஸ், நீங்க எப்புடி பதிவு போட்டாலும், நான் சத்தியமா உங்களுக்கு கால்ஷீட் தரமாட்டேன்

மணிஜி said...

இன்றைய மொக்கை
நாளைய சரித்திரம்
நடத்துடா ராஜா

க.பாலாசி said...

//"உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வரும் என்று.." ஆனால் லிவிங்க்ஸ்டன் நெஞ்சு வலியில் துடிப்பார்.இறுதி காட்சியில் நரேன் அஜ்மலை சுடுவார்.ஆனால் ஆரம்பத்தில் அஜ்மல் நரேனிடம் இப்படி சொல்வார்."நானே உன்னை நடுரோட்டுல நாய சுடுற மாதிரி சுடுவேண்டா.."//

இந்த படத்துல நானும் இந்த காட்சிகளை ரசித்திருக்கேன் நண்பா....

//நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்//

இதுக்குத்தான் எல்லாத்துலையும் கூட்டு சேரக்கூடாதுங்கிறது....

தினேஷ் said...

/சமீபகாலமாக கொலைவெறியோடு யோசித்து வருகிறேன்//

சும்மாவே கொலைவெறியோட திரியிறீங்கனு உளவுத்துறை தகவல் வந்த வண்ணம் உள்ளது இப்போ வெளிப்படையாவே சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா தல?

பாவம் சிக்க போகும் மக்கா(நானும்தான்) பாடு..

தினேஷ் said...

/இப்பொழுது நாலாவதாக ஒரு திரைகதை எழுதியிருக்கிறேன்.யார் படத்தில் வருகிறது என்று பார்ப்போம்.//

அப்போ யாரயாச்சும் மொட்ட போட்டுற வேண்டியதுதானே...

தினேஷ் said...

/."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.//

ஆமாய இருக்கும்..

நாஞ்சில் நாதம் said...

/// இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு நெருங்கிய நண்பர் சொன்னது.."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்.." (ஏம்பா உனக்கு இந்த கொலைவெறி) //

ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா

நையாண்டி நைனா said...

அடிச்சு தூள் பண்ணுற மாமு...

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!