Thursday, September 3, 2009

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.

செந்தில் - அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?

கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?

செந்தில் - அண்ணே விளையாடாதீங்க..

கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..

செந்தில் - உங்க ப்ளாக் பேர சொல்லுங்க..

கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத் தலையா..

செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..

கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ் வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..

செந்தில் - அது என்ன இப்படி ஒரு பேரு..

கவுண்டமணி - அது பாரு மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே ஏத்துவேன்..நானே பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம் நானே..

செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..

செந்தில் - அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..

கவுண்டமணி - தெரியுதுல அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப் பாரு..பழமையப் பாரு..

கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி மிதிக்கிறார்.

செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..

கவுண்டமணி - என்ன பேரு வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..

செந்தில் - அண்ணே வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..

கவுண்டமணி - அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..

செந்தில் - புய்பம்..

கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..

செந்தில் - சரி விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..

கவுண்டமணி - அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..

கவுண்டமணி சிஸ்டத்தைப் பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.

கவுண்டமணி - டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..

கவுண்டமணியைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

கூட்டதில் ஒருவன் - நீங்கதான் ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?

கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..

கூட்டம் - எங்க பொண்ணுங்க படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா உனக்கு..அடிங்கடா இவன..

தர்மயடி அடித்து விட்டு போகும் போது (கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..

கவுண்டமணி (மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..

சிஸ்டம் இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..

செந்தில் - அண்ணே,அண்ணே..

கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..

செந்தில் - என்னை மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..

கவுண்டமணி - நீ எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே இருக்கட்டும்..

செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே வைச்சுடேன்..

சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து சிதறுகிறது.

கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம் போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..

குளத்திற்கு வந்தவுடன்..

கவுண்டமணி - உனக்கு நீச்சல் தெரியுமா..

செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர முடியுமா..

கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல் தெரியாது..காப்பாத்துங்க..

கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய் ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம் இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க முடியல..ஐயோ அம்மா..

13 comments:

துபாய் ராஜா said...

நல்லா நகைச்சுவையா எழுதியிருக்கீங்க அரவிந்த்.

மிகவும் ரசித்து படித்தேன்.

//ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்//

//ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத் தலையா..//

//செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..//

//செந்தில் - அண்ணே வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..

கவுண்டமணி - அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..

செந்தில் - புய்பம்..//

//செந்தில் - சரி விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க.. மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..//


//கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..//

//தர்மயடி அடித்து விட்டு போகும் போது (கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..//

//கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல் தெரியாது..காப்பாத்துங்க..

கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய் ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம் இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க முடியல..ஐயோ அம்மா..//

அருமை அருமை அரவிந்த்.கலக்கல் காமெடியில் காட்சிகள் கண்முன்.

ஈரோடு கதிர் said...

தமிழ்மணத்துல சேர்த்துட்டேன்

ஓட்டுப்போட்டுடேன்

சிரி சிரி-னு சிரிச்சுட்டேன்

ஒவ்வொரு வரி கத்தரிச்சு ஒட்டி கமெண்ட் போட்டு சிரிக்கனும்...ம்ம்ம் எல்லாம் மத்தவங்க பார்த்துக்குவாங்க..

சூப்பர்பா

லோகு said...

நான் கவுண்டமணி யோட தீவிர ரசிகன்.. அவர் பேசற மாதிரியே இருந்தது.. அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா.. எப்படி இப்படியெல்லாம் ஐடியா புடிக்கறீங்க..

Ashok D said...

கலக்கல அரவிந்த்.

கார்த்திக் பிரபு said...

ellathaiyum kalandhu katti eludhiteenga nice :)

http://gkpstar.googlepages.com/

மணிஜி said...

அட்ரா சக்கை..அடங்கமாட்டியா அரவிந்த் தம்பி(நம்பர் கேட்டேன்..ஞாபகமிருக்கா?)

க.பாலாசி said...

//நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம் நானே..//

நண்பா...என்ன அனுபவமா....

சரியான காமெடி பதிவு நண்பா...இது இதுன்னு இல்ல மொத்தமே அருமையான காமெடி, சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது....

தொடருங்கள் நண்பா...

Ashok D said...

லோகு ரிப்பீட்டே

//நான் கவுண்டமணி யோட தீவிர ரசிகன்.. அவர் பேசற மாதிரியே இருந்தது.. அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா.. எப்படி இப்படியெல்லாம் ஐடியா புடிக்கறீங்க..//

:)

thamizhparavai said...

நல்ல நகைச்சுவைக் கற்பனை...
ரசித்தேன்,,,

Unknown said...

நல்லா சிரிக்கவச்சுட்டிங்க..

:-D

நாஞ்சில் நாதம் said...

சரியான காமெடி பதிவு

குளத்துல விழுந்தவன் எப்படி நடுகடலுக்கு போவான் ?

நாடோடி இலக்கியன் said...

கலக்கலோ கலக்கல் அரவிந்த்.

செம்ம காமெடி.ரசித்துச் சிரித்தேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம் இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க முடியல..ஐயோ அம்மா..//

சிரிச்சி... சிரிச்சி................