Saturday, September 12, 2009

பிரபலங்கள் சொன்னது,மனதில் நினைத்ததும்

விஜய் : அரசியல் என்பது ஒரு பெரிய கடல்.நீச்சல் பயிற்சி எடுத்தப் பிறகே வருவேன்..

(நீச்சல் பயிற்சி எடுக்கும் போது ஏதாவது வலையில சிக்கி மூங்காம இருக்கணும்)

அஜித் : அசல் படத்தைப் பற்றி நான் பேச மாட்டேன்..

(படம் வந்த பிறகு யார் கேட்க போறா..கும்மி அடிக்கவே நேரம் போதாது..)

சிம்பு : நான் இயகுன முதல் படம் மன்மதன்..

(நாம என்ன சொன்னாலும் இந்த விகடன் மாதிரி கேனையனுங்க கேக்குறாங்க..அந்த பய ஏ.ஜே.முருகன் எங்கே இருக்கானோ..)

எஸ்.ஜே.சூர்யா : தமிழ்,இந்தி,தெலுங்கு இந்த மூணு மொழியிலயும் நான் பெரிய ஹீரோவா வரணும்..

(நல்ல வேலை இதை சொல்லும் போது நான் சிரிக்கல)

பிரமிட் சாய்மீரா : கமல் எங்களுக்கு தர வேண்டிய 10 கோடிய திருப்பி தரனும்..

(அடுத்த நோட்டீஸ் ரெடி பண்ணுங்க..எந்திரன் வரும் போது ரஜினிக்கு அனுப்பனும்)

ஒ.பன்னீர் செல்வம் : தி.மு.க கட்சியில் இருந்து யாரும் என்னை கூப்பிடவில்லை..

(நானும் கூப்பிடுவாங்கன்னு பாக்குறேன்.. ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை..)

பா.ம.க : நாங்கள் இன்ன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் இருக்கிறோம்...

(இப்படி சொல்லிதான் அவங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு..எப்படி) இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்..)

இராமதாஸ் : ஓட்டுப் போட்ட பிறகு எந்த கட்சிக்கு போட்டாங்கன்னு தெரிய ரசீது கொடுக்கணும்..

(அந்த ரசீதப் பார்த்துதான் ஓட்டுப் போடாதவங்க வீட்ல உள்ள சட்டி போட்டி எல்லாம் குருவ விட்டு தூக்க சொல்லணும்)

ராகுல் காந்தி : மாநிலத்தில் உள்ள நதிகளை தான் இணைக்க முடியும்..இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க முடியாது..

(நாம தமிழ்நாட்டுக்கு வெளியில தானே இருக்கோம்)

வை.கோ : ராகுல் காந்தி சொன்னது அசட்டுத்தனமான கருத்து..

(ராகுல் புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சி டிவில வந்தாச்சு..)

சுப்ரமணியசாமி : விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்கள்..

(எனக்கு தரல..அதான் இப்படி..)

ப.சிதம்பரம் : பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புகிறார்கள்..

(அடிக்கடி அனுப்பாதீங்க.. எங்களால பிடிக்க முடியாது..அப்புறம் எனக்கு பதவி போயிரும்..)

ஜெயம் ராஜா : இதுவரைக்கும் நான் ஹீரோ பில்டப் கொடுத்தது இல்ல..ஆனா அது தில்லாலங்கடி படத்துல இருக்கு..

(தெலுங்கு படம் கிக்ல கூட ஹீரோ பத்தின பில்டப் உண்டு..)

விஜயகாந்த் : விஜய் என் தம்பி மாதிரி..அரசியலுக்கு வரலாம்..

(விஜய் கூட ஒரு கல்யாண மண்டபம் வச்சு இருக்காரு..)

7 comments:

லோகு said...

அட்டகாசமான இடுகை அண்ணா
(எப்படி இவர் மட்டும் வித விதமா இடுகை போட்டு கலக்குறாரு... )

அகல்விளக்கு said...

எப்படி இப்படியெல்லாம்...

ஜோ/Joe said...

// மாநிலத்தில் உள்ள நதிகளை தான் இணைக்க முடியும்..இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க முடியாது//

அப்போ மாநிலங்கள்லாம் இந்தியாவில இல்லையா :)

துபாய் ராஜா said...

சுவையான பதிவு.
(எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..)

http://urupudaathathu.blogspot.com/ said...

///விஜயகாந்த் : விஜய் என் தம்பி மாதிரி..அரசியலுக்கு வரலாம்..

(விஜய் கூட ஒரு கல்யாண மண்டபம் வச்சு இருக்காரு..)////


ஹையோ ஹையோ!!!! விவிசி :-)

Unknown said...

//விஜய் : அரசியல் என்பது ஒரு பெரிய கடல்.நீச்சல் பயிற்சி எடுத்தப் பிறகே வருவேன்..

(நீச்சல் பயிற்சி எடுக்கும் போது ஏதாவது வலையில சிக்கி மூங்காம இருக்கணும்)
//

அதான் புள்ளி வக்கும்போதே அடப்ப போடுறாய்ங்களே

Ashok D said...

nice comedy man