Thursday, September 24, 2009

வெளிநாட்டு கலாச்சாரம்

அவர்களுக்கு எது ஒத்து வருகிறதோ ஆனால் நமக்கு எது ஒத்து வராதோ அதை நாம் உடனே எடுத்துக் கொள்வோம்..சரி நமக்கு ஒத்து வராத அங்கு நடைமுறையில் இருக்கும் சில சம்பிராதாயங்களைப் பார்ப்போம்..

போலி மரியாதை

செப்டம்பர் 9/11 தாக்குதலில் அமெரிக்கர்களின் தொடர்பு என்று படம் எடுத்தால் கூட ஒன்னும் சொல்ல மாட்டார்கள்.அதுவே இங்கே எடுத்தால் எப்படி இருக்கும்.(உயிரோடு இருக்க முடியுமா).ஒரு அனா காசு அளவிற்குக் கூட மதிப்பு இல்லாத இரண்டு படத்தில் நடித்த நடிகனை நாம் சார் என்று மரியாதை குடுக்கிறோம்.அங்கே ஜனாதிபதியை மிஸ்டர்... என்று தான் அழைக்கிறார்கள்.இங்கே அப்படி அழைத்தால் ஒன்னு விட்ட பொண்டாட்டியோட தம்பியோட வைப்பாட்டியோட அல்லக்கைகள் வந்து துள்ளும். நாமதான் சும்மா இருக்கிற சப்பப் பிகரையும் ஏத்தி விட்டு ஆட விடுறோம்..இங்க சும்மா இருக்கும் சங்கை எடுத்து நாம்தான் ஊதிக் கெடுக்கிறோம்.நடிகனை அரசியலுக்கு வா என்று அழைப்பது..அவன் வந்தாலே ஒரு கூட்டம் கூடி கோஷம் போடுவது..அவனை ஒரு பிரபலம் ஆக்குவது..இது நடிகன் முதல் போலி சாமியார் வரை எல்லோருக்கும் பொருந்தும்..குரங்கு வித்தைக் காட்டினால் அதை வேடிக்கை பார்க்கவும் ஒரு கூட்டம் வரும்..அப்போ அந்த குரங்கு ஒரு பிரபலமா..சினிமாவும் ஒரு தொழிலாகத் தான் அங்கே பார்க்கிறார்கள்.

கட்சி

அங்கே இரண்டே கட்சிகள் தான்.இங்கே ஜாதிக்கு ஒரு கட்சி..மதத்திற்கு ஒரு கட்சி..ஜா.மு.க (ஜாங்கிரி.முன்னேற்ற கழகம்) என்று கட்சி இருந்தாலும் ஆச்சர்யம் கிடையாது.தேர்தலுக்கு முன் கல்யாணம்.தேர்தலின் போது தேனிலவு..முடிந்தப் பிறகு விவாகரத்து(மக்களுக்கு அல்வா)..தேர்தல் நடக்கும் சமயம் இரண்டு கட்சி தலைவர்களும் அனல் பறக்க விவாதம் செய்வார்கள்.இங்கே தேர்தல் முடிந்த பிறகு தான் கூப்பாடு ஆரம்பிக்கும்.நாங்க தோற்க காரணம் வாக்குப் பெட்டியில் உள்ள கோளாறு தான்..வாக்குச் சீட்டு முறை தான் வேண்டும்..இப்படி கத்த காரணம் வெளினாடுகளில் பத்து ஆண்டுகள் சர்வாதிகாரம் செய்து 600 கோடிகள் சுருட்டி விட்டு ஓடுவார்களாம்.இங்கு அது ஆறு மாத வசூல்.வருடத்திற்கு 1200 கோடிகள்.ஐந்து வருடத்தில் 6000 கோடி..பிறகு அடுத்த தேர்தல்.சுருட்டுவதில் பத்து சர்வாதிகாரிகளுக்கு சமம்..ஆனால் எடுத்து கொண்ட காலம் ஐந்து தான்.பின்ன ஏன் கருப்புப் பணம் சேராது..

கருத்து சுதந்திரம்

அங்கு நிறைய இருக்கிறது..எப்படி என்றால் பொய் சொன்னார் என்று பில் கிளிண்டனையே சந்திக்கு இழுத்தவர்கள்.வன்முறை படங்கள் அல்லது வயது வந்தவர்களின் படமாக இருந்தால் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.இங்கு லொள்ளு சபா எடுத்தால் கூட விளக்கம் கொடுக்க வேண்டும்..கேட்பவர் வருங்கால லண்டன் மேயரின் தந்தை.(பின்ன எத்தனை நாள் தான் அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்வது).குழந்தைகள் படம் என்று சொல்லி மியாவ் மியாவ் பூனை..மிசையில்லா பூனை என்று கந்தல்சாமி படத்தை எடுத்தவர் அரிய விளக்கம் கொடுப்பார்.ஆனால் பசங்க படம் குழந்தைகள் படம் இல்லையாம்.உங்களுக்கு வாய் இருக்குன்னு என்ன வேணாலும் சொல்லக் கூடாது.(பிறகு என் கை இப்படி எல்லாம் டைப் அடிக்கும்)

அதிகார துஷ்பிரயோகம்

முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆட்சியில் இருக்கும் போது நடந்தது.அவர் மகள் போதையில் வண்டி ஓட்டியதற்கு தண்டனை பெற்றார்.இங்கு வேலையை ஒழுங்காக செய்த காவல்துறை அதிகாரியை மடக்கி கைதியை விடுவித்து செல்கிறார்.செய்தது யார் ஆட்சியில் இருப்பவருடைய உறவினர் வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலையாள்.அந்த அதிகாரத்தில் அதிகாரிக்கு ஒரு அறை வேறு விழுந்ததாம்.தீவிரவாதிகளுக்கு எல்லாமே கிடைக்கும் இப்படி இருந்தால் எல்லையில் காவல் இருப்பவனுக்கு கொஞ்சம் சம்பளம்..தீவிரவாதிக்கு சிவப்பு கம்பளம்.(ஜம்முவில் ஒரு தீவிரவாதி அந்த மானிலத்தில் சர்வீஸ் எக்ஸாமை எழுதி தேர்ச்சி அடைந்து விட்டார்.என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்(யோசனை செய்து வருகிறார்களாம் ஏன்னா அங்கு சட்டம் வேறு காஷ்மீர் நமக்கு வேண்டாம் என்று சொன்னப் போது பாய்ந்து விட்டார்கள்.பாப்பான் என்று அர்ச்சனை வேறு)..அந்த தேர்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற அறிவு கூட இல்லை.இதுவே ஒரு தவறு செய்யாத சாமானியனுக்கு நடந்து இருந்தால் விசாரனையே கிடையாது.(இரண்டு வாலிபர்கள் செய்த தவறு(காவல்துறை மேலதிகாரர்களின் பிள்ளைகள் - கர் நாடகாவைச் சேர்ந்தவர்கள்) ஒரு அப்பாவி தமிழனைப் பாதித்தது.ஆறு மாதம் சிறையில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.குற்றம் - சிவாஜியைப் பற்றி தாறுமாறாக ஆர்குட்டில் எழுதியது.ஏஎம் - பிஎம் இந்த வித்தியாசத்தால் இவரைப் பிடித்து விட்டார்கள்.அது ஏர்டெல் செய்த தவறு.வாழ்க மக்களாட்சி..வளர்க மறுமலர்ச்சி..

9 comments:

நீ தொடு வானம் said...

சுத்தம் பத்தி சுத்தமா ஒண்ணுமே சொல்லையே

இரும்புத்திரை said...

//சுத்தம் பத்தி சுத்தமா ஒண்ணுமே சொல்லையே//

அதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்

Raju said...

என்னாச்சு அரவிந்த அன்ணே,
நல்லாதான் இருக்கீங்களா..!

நாடோடி இலக்கியன் said...

ஏம்பா உனக்கு என்ன பிரச்சனை.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

நல்ல பதிவு.. :)

நையாண்டி நைனா said...

/*நாடோடி இலக்கியன் said...
ஏம்பா உனக்கு என்ன பிரச்சனை.*/

சும்மா இருந்த புள்ளைய கூப்பிட்டு உனக்கு சமுதாயா பருப்பு இருக்கு... வெந்த பருப்பு இருக்கு வேகாத பருப்பு இருக்குன்னு சொல்லி கிள்ளி உட்டுட்டு... இப்ப இது என்ன கேள்வி?

வனம் said...

வணக்கம்

அங்கு எல்லாரையும் சிந்திக்க சொல்லுவாய்ங்க ....

ஆனா இங்க யோசிக்காதே நான் சொல்வதை கேள் என்பதே முதல் வார்த்தை

இராஜராஜன்

kathir said...

நல்ல இடுகை அரவிந்த்

இரும்புத்திரை said...

நன்றி ♠ ராஜு ♠

நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி Achilles/அக்கிலீஸ்

நன்றி நையாண்டி நைனா

நன்றி வனம்

நன்றி kathir