Friday, September 4, 2009

நையாண்டி நைனா,டக்ளஸ் மற்றும் சரக்கு

தண்டோராவிடம் வந்து லொள்ளு சபாவிற்கு சில காட்சிகளை எடுத்து தர சொல்கிறார்கள்.அவர் இன்னொரு படத்தை இயக்குவதால் செல்லத்தம்பிகளிடம் ஒப்படைகிறார்.

இயக்கம் - அரவிந்த்.

நடிப்பு - நையாண்டி நைனா,டக்ளஸ்.

ஒரு படம் முழுவதும் கேலி செய்யாமல் சில காட்சிகளை மட்டும் கிண்டல் செய்ய முடிவு செய்யப்படுகிறது.டக்ளசும்,நைனாவும் சேர்ந்து நடித்தால் எப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்று யூனிட்டில் சொல்லிக் கொள்கிறார்கள்.(அவங்க சொல்றாங்களா இல்ல நீயே அடிச்சு விடுறியா)

முதல் காட்சி நாயகன் படத்தில் இருந்து..

அரவிந்த் - இந்தாங்க நாயகன் பட டிவிடி..நானும் ஒரு ஜெயம் ராஜா மாதிரி ஆகணும்..ஒழுங்கா நடிங்க..போகும் போது குச்சி மிட்டாய் வாங்கி தர்றேன்..

டக்ளஸ் - விளங்கிரும் ஜெயம் ராஜாவுக்கு ஒருத்தன் போட்டியா..இப்படி சொல்லியே நம்ம உயிர வாங்குவான்..நான் ராஜுன்னு பேர மாத்திட்டேன் இன்னும் டக்ளஸ்னு கூப்பிடுறான்..

கமலாக நைனா,ஜனகராஜாக டக்ளஸ்..

நிழல்கள் ரவி இறந்து விடுகிறார்..காலையில் பார்த்தா வீடு முழுக்க கூட்டம்..

நைனா - யாருக்கும் ஏதாவது பிரச்சனையா..என் இவ்வளவு கூட்டம்..

டக்ளஸ் - அது வந்து..

கூட்டத்தில் ஒருத்தர் வந்து அவர் மகனை நைனா கையில் ஒப்படைகிறார்.மேரா லட்கா துமாரா லட்கா..

இந்த சமயத்தில் அரவிந்த் சற்றே கண் அயர்ந்து விடுகிறார்..

டக்ளஸ் ஓடிப்போய் அப்படி சொன்னவரை வெளுத்து வாங்குகிறார்..

நைனா - ஏம்பா அவன அடிக்கிற..சூர்யா தான் செத்து போய்ட்டானே..திரும்ப வரவ போறான்..

டக்ளஸ் - சரண்யா செத்தப்போ கூட இந்த நாதாரி வந்து இருந்தான்..அப்போ சொன்னானா மேரா பீவி துமாரா பீவி..இப்படி சொல்லி சொத்த அமுக்க பாக்குறான்..

நைனா - சரி விடு..

சொல்ல சொல்ல கேட்காமல் திரும்பவும் அந்த நபரை அடித்து துவைக்கிறார் டக்ளஸ்.

நைனா - அவன போட்டு ஏன் அடிக்கிற..

டக்ளஸ் - அன்னைக்கு ரெட்டி பார்டிக்கு போனோம்..உங்க சரக்கு கீழ விழுந்திருச்சி..அப்ப சொல்ல வேண்டியது தானே மேரா சரக்கு துமாரா சரக்கு..சொல்லையே..

நைனா - ஆ..ஹ..ஆ..ஹ..

தென்பாண்டி சீமையிலே பாட்டு ஒலிக்கிறது.பாட்டு சத்தத்தில் அரவிந்துக்கு விழிப்பு வருகிறது.

அரவிந்த் தூக்கத்தில் இருந்து விழித்த எடுத்த காட்சியை ரஷ் போட்டு பார்த்தால் நடந்த கூத்து தெரிய வருகிறது.

அரவிந்த் - நாயகன் படம் மாதிரி நடிக்க சொன்னா..என்ன இதெல்லாம்..

நைனா - நீ கொடுத்தது ரீத்திஷ் நடித்த நாயகன்..

டக்ளஸ் - வாங்க ஜெயம் ராஜா..

அரவிந்த் - யோவ் என்ன நக்கலா..

டக்ளஸ் - ஏன் குருஜிய இப்படி திட்டுறீங்க..

அரவிந்த் - அதான..இன்னும் ஆப்பு ரெடி பண்ணலையேன்னு நினைச்சேன்..

தயாரிப்பாளர் வந்து கை கொடுக்கிறார்.ரொம்ப நல்ல வந்து இருக்கு..இன்னும் ஒரு மூணு படம் எடுத்து குடுங்க..

அடுத்த காட்சி கடலோர கவிதைகள் படத்தில் இருந்து சத்யராஜாக நைனா..மறுபடியும் ஜனகராஜாக ஜனகராஜாக டக்ளஸ்..

டக்ளஸ் - இதுலையும் ஜனகராஜா..சரி இந்த படம் டிவிடி எங்க..

அரவிந்த் - குடுத்துட்டாலும் அதுல இருக்கிற மாதிரியா நடிக்க போற..

ஜனகராஜின் வீட்டில் இருக்கும் சரக்கைக் காட்டி கேட்கிறார் சத்யராஜ்..(டக்ளஸ்,நைனா)

நைனா - அது என்ன பாரின் சரக்கா..

டக்ளஸ் - அது ஒரு வழித்தவறி வந்த சரக்கு..அதான் அணைச்சி கிட்டு நிக்குறேன்..

நைனா - நீங்க ஒரு நல்ல கீப்பர்..

டக்ளஸ் - அது காப்பர்..

நைனா - ஏதோ ஒன்னு..உயிரை வாங்காத..(மனதுக்குள்) ரேகா வரும்னு பாத்தா இந்த பக்கி போகவே மாட்டேங்குது..

டக்ளஸ் - இது மாதிரி ஒரு சரக்கு உன்கிட்ட கிடச்சா என்ன பண்ணுவ..

நைனா - பின்னி எடுப்பேன்ல..இப்போ உங்க பைல இருந்து விழுந்த சரக்க நாந்தான் அடிச்சேன்..

டக்ளஸ் - அதுவே நானா இருந்தா..

நைனா - தூக்கி போட்டு உடச்சிட்டு போய்கிட்ட இருப்பேன்..

டக்ளஸ் - நீங்க இதுல டீச்சர்..டீச்சர்..அப்படி ஓவரா கண் கலங்கி சொல்லணும்..

நைனா - முதல்ல உள்ள போய் உன் பொண்ண வர சொல்லு.. நான் அவங்க கிட்ட சொல்றேன்..

அடுத்த படம் காக்க காக்க

சூர்யா - நைனா,டேனியல் பாலாஜி - டக்ளஸ்

நைனாவிடம் இருந்த பாரின் சரக்கை ஜீவன் பிடுங்கி கொண்டு போகிறார்.ரெண்டு நாள் மயக்கத்தில் இருந்து விழிக்கிறார் நைனா.காட்டி கொடுத்தது டக்ளஸ் என்று தெரிந்தவுடன்..

நைனா - என்ன காரணம்..ஏன் இப்படி பண்ண..ஓல்ட் மாங்கா..

டக்ளஸ் - மன்னிச்சிரு..பத்திரமா தான் பீரோவுல வைச்சு இருந்தேன்..எப்படி எடுதாங்கன்னே தெரியல..அத வைச்சே என்ன மிரட்டுனாங்க..நான்தான் நீ சரக்கடிக்கிற இடத்த சொன்னேன்..ஒரு மணி நேரத்து ஒரு தடவை அந்த ஓல்ட் மாங்க காட்டுனாங்க..அப்போ நான் என்ன பண்றனே எனக்கே தெரியல..காலையிலே கிளம்பிட்டாங்க..என்ன சுடு..எப்படியும் அடுத்த சீன்ல மூடிய மட்டும் ஒரு பெட்டியில வைச்சு இருப்பாங்க..அதுக்கு நீயே என்ன சுடலாம்..

நைனா - நம்ம சுவாதிடா..ஸாரி

அரவிந்த் - இத மட்டும் சரியா சொல்லுங்க..ரீ டேக்..

நைனா - நம்ம ஓல்ட் மாங்குடா..

அரவிந்த் - அடுத்த காட்சி இதுதான் திரிசூலம் படத்துல இருந்து அந்த டெலிபோன் காட்சி..யாரு சிவாஜியா நடிக்க போறது..யாரு கே.ஆர்.விஜயாவா நடிக்க போறது..முடிவு பண்ணுங்க..

இருவரும் சிவாஜியாக நடிக்க சண்டை போடுகிறார்கள்.தண்டோரா அண்ணன் சூட்டிங் முடித்து விட்டு வந்து வருகிறார்.

தண்டோரா - நான் வேணா அதுல ஒரு கேரக்டர் பண்ணவா..

இப்படி ஒரு குரல் வந்ததும் எல்லோரும் சடுதியில் ஓடி மறைகிறார்கள்.

தண்டோரா - நான் நடிக்கிறேன் சொன்னா மட்டும் ஒத்துக்கவே மாட்டாங்களே..கலி காலம் முத்திப் போச்சு என்று புலம்பியபடியே படத்தை இயக்க செல்கிறார்.

9 comments:

Cable சங்கர் said...

தண்டோரா அவ்வளவு பிஸியா.?:)

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
தண்டோரா அவ்வளவு பிஸியா.?:)]]]

அதுதானே..! நியாயமான கேள்வி..

மணிஜி said...

/தண்டோரா அவ்வளவு பிஸியா.?://


ஆமாம்யா..நானும் பிசி(ன்)தான்

லோகு said...
This comment has been removed by the author.
Raju said...

ஹலோ டயரடக்கர்,
நாந்தான் கால்ஷீட் குடுக்க மாட்டென்ன்னு சொன்னேன்ல.

க.பாலாசி said...

//நைனா - நம்ம சுவாதிடா..ஸாரி
அரவிந்த் - இத மட்டும் சரியா சொல்லுங்க..ரீ டேக்..
நைனா - நம்ம ஓல்ட் மாங்குடா..//

ஆமா...யாரு அந்த சுவாதி...

டைரக்டர் மட்டும் இடையில வரலன்னா?

நல்லாருக்கு நண்பா...உங்க ரீமிக்ஸ்.......

நாஞ்சில் நாதம் said...

:))

துபாய் ராஜா said...

//டக்ளஸ் - சரண்யா செத்தப்போ கூட இந்த நாதாரி வந்து இருந்தான்.. அப்போ சொன்னானா மேரா பீவி துமாரா பீவி..இப்படி சொல்லி சொத்த அமுக்க பாக்குறான்.. //

//டக்ளஸ் - அன்னைக்கு ரெட்டி பார்டிக்கு போனோம்..உங்க சரக்கு கீழ விழுந்திருச்சி..அப்ப சொல்ல வேண்டியது தானே மேரா சரக்கு துமாரா சரக்கு..சொல்லையே..//

ஹாஹாஹாஹா......

ஒரே நகைச்சுவைதான் போங்கள்.. :))

Ashok D said...

//தண்டோரா இன்னொரு படத்தை இயக்குவதால் //

அப்டியா... இது கேபிளாருக்கு தெரியுமா?