Tuesday, September 8, 2009

கமல் - நீங்களே தவறான உதாரணம் ஆகலாமா

முதலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பொன்விழா கொண்டாடுவதற்கு வாழ்த்துகள்.சின்ன வயது முதல் நான் உங்கள் ரசிகன் என்று சொன்னால் அது பொய். ஆனாலும் உங்கள் படத்தை முதல் நாள் பார்க்கும் ஒரு பார்வையாளன்.(சந்திரமுகி படத்திற்கு போகாமல் மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்த்தோம்).அந்த உரிமையில் ஒரே ஒரு கேள்வியும் சில துணை கேள்வியும்..

முதல் கேள்வி - ஒரு நடிகன் ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு படம் நடிக்கிறான்..சில காலம் நடிக்காமல் இருந்து விட்டு பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்கிறான்..நடிக்காமல் இருந்த பத்து வருடங்கள் கணக்கில் சேருமா?

எதற்கு இப்படி கேட்கிறேன் என்றால் நாளைக்கே விரலை மட்டும் அசைக்கும் ஒரு நடிகன் வெள்ளி விழா கொண்டாடுவான் கேட்டால் நான் பிறந்த உடனே நடிக்க ஆரம்பித்து விட்டேன் என்று அடித்து விடுவான்.ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அவருக்கு ஒரு நியாயம் எனாகு ஒரு நியாயமா என்று உங்களை கை காட்டுவான்.இப்படி நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகலாமா.(நான் கர்ப்பத்தில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவன் என்று கூட சொல்லுவான்)

அந்த நடிகனுடைய அப்பா ஒரு படி மேலே போய் இந்த வயதில் கமல் நடிக்கிறார்,ரஜினி நடிக்கிறார்..நான் அவர்களை விட சின்னபையன் நான் நடிக்க கூடாதா என்று கேட்பார்.இது எங்களுக்கு தேவையா?

சில துணைக்கேள்விகள்..

திருமணங்கள் தோற்று போகும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் இதே கருத்தை சொல்வீர்களா..(இதை நான் கேட்டு இருக்க மாட்டேன்). எதற்கு கேட்கிறேன் என்றால் உங்களைப் பற்றி பேசும் போது கௌதமியின் மகள் அப்பா என்றே குறிப்பிட்டார்.நடிக்கும் போது தெளிவாக பேசும் நீங்கள் பேட்டியின் போது என் இப்படி பேச வேண்டும்.. "“திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன” என்று சொன்னதால் தான் கேட்டேன்."என் திருமணம் தோல்வி அடைந்து விட்டது" என்று சொல்லி இருந்தால் கேட்டு இருக்க மாட்டேன்.அதில் வந்த குழப்பம் தான் இந்த கேள்வி.(இதுவரைக்கும் ஒரு பேட்டி கூட யாருக்கும் புரிந்தது கிடையாது)

"என் காலத்திற்குள் சினிமாவை வேறு வழியில் கொண்டு செல்வேன் என்று சொல்லும் நீங்கள் ஏன் இப்போது அறிமுக இயக்குனர்களின் படத்தில் நடிப்பது இல்லை ?" (உன்னைப் போல ஒருவன் இதில் வராது. ஏன் என்றால் இது ஒரு ரீமேக்)

ஒரு சின்ன வருத்தம்

வீட்டில் பேசும் ஒரு சாதாரண ரசிகன் நடிகர்களை(கமல் உட்பட) எல்லா நடிகர்களையும் அவன்,இவன் என்றே பேசுகிறான்..வெளியே பேசும் போது (பேட்டியின் போது) கமல் சார் என்று அழைக்கிறான்.அப்படி ஒரு சராசரி ரசிகனாக உங்கள் அண்ணனையும்(சந்திரஹாசன்) நடத்த வேண்டுமா.விஜய் டிவியில் "கமல் சார்" என்று குறிப்பிடுகிறார்.இந்த போலி மரியாதை எல்லாம் தேவையா ?.

ஒரு பேட்டியில் ஒரு நிருபர் ஏடாகூடமாக கேட்க "ஏன் சார் என்னையே பாக்குறீங்க..
எனக்கு மட்டும் என்ன இரண்டா இருக்கு.." அப்படி கேட்ட கமலை தான் விரும்புகிறேன். விரும்புகிறோம்.

நீங்கள் ஒரு வட்டத்திற்குள் நிற்காதீர்கள். போலி மரியாதை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்..நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது.
(நல்ல படங்களை சொன்னேன்).

இப்போ முளைத்த காளான் கூட அரசியலில் இறங்க ஆசைப்படும் போது அதில் இருந்து விலகி இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

33 comments:

லோகு said...

உங்கள் கருத்தில் இருந்து மாறு படுகிறேன் அண்ணா.. கமல் ரசிகனாக எனது கருத்தை இங்கே பதிக்கிறேன்.. கோபித்து கொள்ள மாட்டீர்கள் என..

கமல் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், அவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றது என்பதை மற்றவர்கள் கொண்டாடுவது தான் பொன் விழா.. அவரே அவருக்கு கொண்டாடி கொள்வது அல்ல.. அதை நடத்த சொல்லி தூண்டியிருப்பார் கமல் என நீங்கள் நினைக்கிறீர்களா..

இந்த பொன்விழாவை பாராட்டாக்க எடுத்து கொள்ளாமல், சினிமாக்கு வந்து 50 வருஷம் ஆயிடுச்சுன்னு ஒரு ஞாபக படுத்தலாவே எடுத்துக்குவேன் என கமல் கூறியுள்ளார்..

இரண்டாவது குடும்பம் குறித்த அவரது கருத்து :
கமல் மீடியாவுக்காக வேஷம் போட்டு பேச தெரியாதவர், இதனாலேயே அவர் பல பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார். அதில் சொன்னது அவர் சொந்த கருத்து.. எல்லாத்தையும் ஏத்துக்க சொல்லலை..
'நான் திருந்திட்டேன், நான் நல்லவன், அப்பாவி ' அப்படியெல்லாம் விரல் வித்தை நடிகர் எல்லா பேட்டிகளிலும் சொல்வதுண்டு.. மீடியாவில் அப்படி சொல்லி கொண்டு, நிஜ வாழ்க்கையில் மோசமாக நடப்பதை தான் விரும்புகிறீர்களா..

புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டும் தான் சினிமாவை வளர்ப்பதாக அர்த்தமா.. கமல் நினைத்திருந்தால் அன்பே சிவம் க்கு பதிலாக சகலகலா வல்லவன் எடுத்து இருக்கலாம்.. சினிமாவை வளர்த்தவே அன்பே சிவமும், உன்னை போல் ஒருவனும் எடுத்து கொண்டு திரிகிறார்.. அவரது சினிமா மீதான அக்கறையை சந்தேகப்பட முடியாது..


. சாரு ஹாசனை கமல் தான் அப்படி பேச சொன்னார் என நினைக்கிறீர்களா.. கமல் கூட தான் அவர் மகளை மேடையில் அவர் இவர் என பன்மையில் அழைக்கிறார்.

இரும்புத்திரை said...

//கமல் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், அவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றது என்பதை மற்றவர்கள் கொண்டாடுவது தான் பொன் விழா.. அவரே அவருக்கு கொண்டாடி கொள்வது அல்ல.. அதை நடத்த சொல்லி தூண்டியிருப்பார் கமல் என நீங்கள் நினைக்கிறீர்களா..
//

நான் அப்படி சொல்வவில்லை நாளை கமலை காட்டி தகுதி இல்லாதவன் எவனும் இதை செய்ய கூடாது எண்டே சொல்கிறேன்

//இரண்டாவது குடும்பம் குறித்த அவரது கருத்து :
கமல் மீடியாவுக்காக வேஷம் போட்டு பேச தெரியாதவர், இதனாலேயே அவர் பல பிரச்சனைகளில் சிக்கி கொள்கிறார். அதில் சொன்னது அவர் சொந்த கருத்து.. எல்லாத்தையும் ஏத்துக்க சொல்லலை..
//

இதுக்கு பதில் நான் பதிவிலே சொல்லி இருக்கிறேன்

ஒரு பேட்டியில் ஒரு நிருபர் ஏடாகூடமாக கேட்க "ஏன் சார் என்னையே பாக்குறீங்க..
எனக்கு மட்டும் என்ன இரண்டா இருக்கு.." அப்படி கேட்ட கமலை தான் விரும்புகிறேன். விரும்புகிறோம்.

// சாரு ஹாசனை கமல் தான் அப்படி பேச சொன்னார் என நினைக்கிறீர்களா.. கமல் கூட தான் அவர் மகளை மேடையில் அவர் இவர் என பன்மையில் அழைக்கிறார்.
//

சந்திரஹாசன் அவர் அண்ணன் என்பதால் தான் அந்த கருத்தை சொன்னேன்.ஏன் பாலசந்தர் கமலை சார் என்று அழைத்திருந்தால் நான் கேட்டே இருக்க மாட்டேன்.

ஜோ/Joe said...

//இதுவரைக்கும் ஒரு பேட்டி கூட யாருக்கும் புரிந்தது கிடையாது//

உங்களுக்கு புரிந்தது கிடையாது என்று மட்டும் சொல்லிக்கொள்ளலாமே.

MUTHU said...

\\"கமல் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், அவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றது என்பதை மற்றவர்கள் கொண்டாடுவது தான் பொன் விழா.. அவரே அவருக்கு கொண்டாடி கொள்வது அல்ல.. அதை நடத்த சொல்லி தூண்டியிருப்பார் கமல் என நீங்கள் நினைக்கிறீர்களா.." //


திரு . லோகு அவர்களே இந்த பொன்விழா கமல் ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்டது ,பிறகு விஜய் டிவியால் செய்யப்படுகிறது .

வால்பையன் said...

இன்னைக்கு கமலா?

Thamira said...

மேம்போக்கான வெற்றுக்கேள்விகள்.! பதில் சொன்னால் பதிலுக்கு பதில் என்று போய்க்கொண்டேயிருக்கும். ஜாலி பண்ணலாம், அவ்வளவுதான்.

திருமணம் குறித்து அவர் சொன்ன கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியது. இதுகுறித்த சமீபத்திய மாதவராஜின் பதிவொன்றை நீங்கள் வாசிக்கலாம். போலிக்கட்டுகளுக்குள் வாழ்பவர்கள், வாழ விரும்புபவர்கள், வாழ பழக்கப்படுத்தப்பட்டவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கலாம். சரியான மாற்று இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதாலேயே ஒரு தவறை சரியெனக்கொள்ளமுடியாது. கிணற்றுத்தவளைகள் விளிம்பிலிருந்து உலகைக்கண்டு இது என் உலகம் போலில்லை என்று சொல்வதற்கு ஒப்பாக இருக்கும்.

உங்களின் நல்ல எழுத்து நடையை பயனுள்ள/ பொழுதுபோக்கான பதிவுகளுக்கு செலவிடுவீர்கள் என நம்புகிறோம்.

Nathanjagk said...

உரி​மை​யோடு ​கேட்கி​றேன்.. உங்களுக்கு திருமணங்கள் ​மேல் முன்​பே ஏதாவது மதிப்பீடு இருந்ததுண்டா? இல்​லை கமல் ​சொன்னார் என்பதற்காக திருமணங்கள் பற்றி எழுதுகிறீர்களா? கமல் ​பேட்டி​யை விடுத்து இந்திய திருமணங்கள், அதில் நிலவும் அரசியல், அபத்தம் பற்றி ​பேச / எழுத நீங்கள் தயாரா? இந்த இடு​கையின் அடிநாதம் கமலின் திருமணங்கள் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு ​​தெரிவிப்பதா, இல்​லை திருமணங்க​ளை ஆதரிப்பதா? தயவு​செய்து விளக்கவும்.

Nathanjagk said...

ஆதிமூலகிருஷ்ணன் பின்னூட்டத்திலுள்ளவற்​றோடு சமரசம் ஆகி​றேன்!

Nathanjagk said...
This comment has been removed by the author.
பீர் | Peer said...

பின்னூட்டங்களை ரசித்தேன். ;(

துபாய் ராஜா said...

அரவிந்த்,கமல் பத்து ஆண்டுகள் தொடர்ந்து நடிக்காமல் இருந்தாரா என்பதை முதலில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அவ்வாறு இருந்த காலங்களிலும் டி.கே.எஸ் நாடக குழு, நடனம், நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக என திரைப்படத்துறை சார்ந்தே அவரது நடவடிக்கைகள் இருந்தன.

மத்தபடி ஒரு உண்மையான ரசிகனா உங்க ஃபீலிங்ஸ் எனக்கு புரியுது...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் பின்னூட்டங்களும் நல்லா இருக்கு...

Raju said...

லோகு, பதிவே போட முடியலன்னு சொல்லிக்கிட்டு இங்க இவ்ளோ பெரிய பின்னூட்டமா..?
வடைய வேஸ்ட் பண்ணீட்டயே ராசா..!

அப்பறம் , கமல்ன்னா இந்த "எக் துஜே கேலியே"னு ஒரு ஹிந்தி படத்துல நடிச்சாரே அவரா அரவிந்த அண்ணே..?

Raju said...

\\// சாரு ஹாசனை கமல் தான் அப்படி பேச சொன்னார் என நினைக்கிறீர்களா.. கமல் கூட தான் அவர் மகளை மேடையில் அவர் இவர் என பன்மையில் அழைக்கிறார்.
//

சந்திரஹாசன் அவர் அண்ணன் என்பதால் தான் அந்த கருத்தை சொன்னேன்.ஏன் பாலசந்தர் கமலை சார் என்று அழைத்திருந்தால் நான் கேட்டே இருக்க மாட்டேன்.\\

ஹலோ, சந்திரஹாசனைப் பத்தி சொன்னதுக்கு சாருஹாசனப் பத்தி கேள்விகேட்டது தப்பு..!
சாருஹாசனைப் பத்தி சொன்னதுக்கு சந்திர‌ஹாசனப் பத்தி திரும்ப பதில் சொன்னது பெரிய‌ தப்பு..!
அரவிந்த், ஏன் நீங்கள் கண்மூடித்தனமாக சாருவை எதிர்க்கின்றீர்கள்..?

Raju said...

இங்கே வந்துள்ள பின்னூட்டங்களிலேயே, மிகச் சிறந்த பின்னூட்டமாக, நான் "உலவு.காம்" மின் பின்னூட்டத்தையே கருதுகின்றேன்..!

ஈரோடு கதிர் said...

//விஜய் டிவியில் "கமல் சார்" என்று குறிப்பிடுகிறார்.இந்த போலி மரியாதை எல்லாம் தேவையா ?.//

இவர் என்ன செய்வார். சந்திரஹாசனைக் கேட்க வேண்டிய கேள்வி

இரும்புத்திரை said...

நன்றி ஜோ ஆமாம் எனக்கு புரிந்தது இல்லை நான் ஒத்துக் கொள்கிறேன்.நிறைய பேர் சொன்னதால் நான் அப்படி எழுதி விட்டேன்.

இரும்புத்திரை said...

நன்றி முத்து

இரும்புத்திரை said...

ஆமா நேத்து மட்டும் கமல். ஒரு நல்லாப் பதிவு போடலாம் என்று தான் இருந்தேன்.
இரண்டு பதிவிற்கும் உள்ள வருகைப் பார்க்கவே இந்த பதிவு.

நன்றி வால்பையன்

இரும்புத்திரை said...

நன்றி ஆதி சேர்ந்து வாழ்வது இந்த முறை வந்தப் பிறகு மனநல மருத்துவமனைகள் அதிகரித்திருப்பதாக நினைக்கிறன்.எந்த உறவையும் விட இந்த சேர்ந்து வாழும் முறையில் தான் ஆபத்து அதிகம் என்று நான் நினைக்கிறன்.

இரும்புத்திரை said...

கமல் சொல்லும் நல்ல கருத்தை விட இது போன்ற கருத்துக்கு வீரியம் அதிகம்.
கண் தானம்,உடல் தானம் பற்றி சொன்னார் 1000 ரசிகர்கள் தான் கண்தானம் செய்து இருக்கிறார்கள்.

நரசிம் சொல்லியே நூறு பேர் கண்தானம் செய்து இருப்பார்கள்.அப்போ கமல் சொன்னால் எவ்வள்ளவு இருக்க வேண்டும் என நீங்கள் சொல்லுங்கள்.

நன்றி ஜெகநாதன்

இரும்புத்திரை said...

நன்றி பீர்

நன்றி துபாய் ராஜா அவர் இந்த விழாவுக்கு தகுதி உடையவர்.தகுதி இல்லாதவர்கள் அதை செய்ய கூடாது என்பதாலே இந்த கேள்வி

இரும்புத்திரை said...

நன்றி ஆ.ஞானசேகரன்

//அப்பறம் , கமல்ன்னா இந்த "எக் துஜே கேலியே"னு ஒரு ஹிந்தி படத்துல நடிச்சாரே அவரா அரவிந்த அண்ணே..?//

இரண்டு பதிவு போட்டு பிறகு எதுக்கு இந்த கொலைவெறி

//அரவிந்த், ஏன் நீங்கள் கண்மூடித்தனமாக சாருவை எதிர்க்கின்றீர்கள்..?//

சாருவ கோர்த்து விடாம இருக்க முடியாதே

நன்றி ♠ ராஜு ♠

இரும்புத்திரை said...

நன்றி கதிர்.அருகில் இருப்பவர்கள் தான் கமலை சுற்றி போலி வட்டத்தை வரைகிறார்கள்.அதை கமல் தான் தடுக்க வேண்டும்.

க.பாலாசி said...

நண்பா....நானும் ஆஜர்...

என்னோட கருத்து என்னன்னா?

do not dwell in the past...

இரும்புத்திரை said...

நன்றி க.பாலாஜி

ஜோ/Joe said...

//நன்றி ஜோ ஆமாம் எனக்கு புரிந்தது இல்லை நான் ஒத்துக் கொள்கிறேன்//

அங்கே தான் இருக்கு பிரச்சனை ..கமல் பேசும் தமிழ் உங்களுக்கு புரியவில்லையென்றால் ,கமல் தவறாக தமிழ் பேசுகிறாரா ? அல்லது ....?

இரும்புத்திரை said...

//அங்கே தான் இருக்கு பிரச்சனை ..கமல் பேசும் தமிழ் உங்களுக்கு புரியவில்லையென்றால் ,கமல் தவறாக தமிழ் பேசுகிறாரா ? அல்லது ....?//

கமல் பேசுவது தமிழ் தான் அவர் என்றைக்குமே நேராக விஷயத்தை தொட்டதே இல்லை.சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவார்.இது நிறைய பேரின் கருத்து.இங்கே சொல்லும் போது அது என் கருத்தாக இருப்பதால் எனக்கு புரியவில்லை என்று சொன்னேன்

Thamira said...

சொன்னாமாதிரியே பதிலுக்குப்பதில்னு போகுதே..

நான் என் பின்னூட்டத்தில் எங்கும்.. //சேர்ந்து வாழும் முறையில் // என்று குறிப்பிட‌வேயில்லை. //சரியான மாற்று இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை // என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

அப்புற‌ம்.. //மனநல மருத்துவமனைகள் அதிகரித்திருப்பதாக நினைக்கிறன்..... ஆபத்து அதிகம் என்று நான் நினைக்கிறன்.// இன்னும் என்ன‌ வேண்டுமானாலும் நீங்க‌ள் நினைத்துக்கொண்டேயிருக்க‌லாம். யாரும் உங்க‌ளை த‌டுக்க‌முடியாது. ஹிஹி..

இரும்புத்திரை said...

நீங்கள் சொல்லவில்லை

ஆனால் கமல் திருமணம் தோற்கும் குடும்பம் என்ற அமைப்பு உருவாகும் இன்று சொல்லி இருக்கிறார்.

திருமணம் செய்யாமல் குழந்தை வேண்டும் என்றால் சேர்ந்து வாழும் முறை தானே அடுத்தக் கட்டம்.

//மனநல மருத்துவமனைகள் அதிகரித்திருப்பதாக நினைக்கிறன்//
இதற்கு அடுத்த கட்டம்

நையாண்டி நைனா said...

("கரகாட்டகாரன்" கோவை சரளா பாணியில் படிக்கவும்)

என்ன இங்கே சத்தம்?
என்ன இங்கே சத்தம்?
என்ன இங்கே சத்தம்?

இரும்புத்திரை said...

மாருகோ மாருகோ மாறுகையி

அந்த சத்தம் என்று நினைக்கிறேன் நைனா

நாடோடி இலக்கியன் said...

சில கருத்துக்கள்(?) வெறும் அனுமானத்திலேயே சொல்லியிருக்கீங்க.இன்னும் வயதிருக்கிறது வேறொரு கோணத்திலும் சிந்திக்க,வேறென்ன சொல்றது.

ஆதியின் பின்னூட்டத்தை சரியாக உள்வாங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறென்.