Saturday, September 5, 2009

எனக்கு பிடித்த ஹீரோக்கள்

இந்த இடுகை எனக்கு பிடித்த சினிமா கதாநாயகர்களைப் பற்றியது அல்ல.வரலாற்று நாயகர்களைப் பற்றிய ஒரு பதிவு.

ஷெர்ஷா :

பாபரின் படையில் பணியாற்றிய ஒரு தளபதி.ஒருமுறை உணவு அருந்தும் போது கோழியை வெட்ட சமையல்காரனிடம் கத்தியைக் கேட்க அவனோ இவரை அலட்சியம் செய்ய,இவர் அலட்டி கொள்ளவே இல்லை.பின்னால் சாத்தி வைத்திருந்த வாளை எடுத்து கோழியை வெட்டி சாப்பிட்டுள்ளார். அதை கவனித்த பாபர் ஹிமாயூனை உஷார் படுத்தாமல் போய் சேர்ந்து விட்டார்.ஹிமாயூனை ஓட ஓட விரட்டி டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கிறார்.ஹிமாயூன் டெல்லியை வைத்து கொள்ளுங்கள் லாகூரில் நாங்கள் இருக்கிறோம் என்று கெஞ்சி கேட்டும் விடவில்லை. நீங்கள் எல்லாம் காபூலில் இருந்து வந்தவர்கள் அங்கேயே போங்கள் என்று துரத்தி அடிக்கிறார்.அக்பர் சிறப்பாக ஆட்சி புரிய காரணமான ராஜதந்தரி. ரூபாய் என்று நாம் புழங்கும் பணத்தைக் கண்டுப் பிடித்தவர்.அவர் போட்ட சாலைகளை இன்றும் பஞ்சாபில் உபயோகத்தில் இருக்கிறது.ஆட்சி செய்தது என்னவோ ஐந்து ஆண்டு தான் அதற்குள்ளே நிறைய செய்து விட்டார்.திருட்டுப்பயம் கிடையாது,சிறந்த நிர்வாகம்,போர்த்திட்டங்களை வகுப்பவர்.கலிங்ஜர் என்ற கோட்டையை முற்றுக்கை இட்ட நேரம் ஒரு வெடிவிபத்தில் சிக்கிக் கொள்கிறார். சாகும் முன் திட்டத்தைப் போட்டுக் குடுக்கிறார் தளபதிகளுக்கு.அவர் வாரிசுகள் ஒன்று கூட தேறாது.

அவுரங்கசீப் -

ஷாஜகானின் மூன்றாவது மகன்.அண்ணன் தம்பிகளை கொன்று விட்டு ஆட்சியைப் பிடித்தவர்.சிக்கனமானவர் (அப்பா ஷாஜகான் அவருக்கு ஒரு கருப்பு மஹால் கட்டிக் கொள்ள ஆசைப்பட அதை மறுத்தவர். தாஜ்மகாலின் ஒரு ஓரத்தில் தந்தையைப் புதைத்து விட்டார்). தன் இறுதி சடங்கிற்கு அவரே தன் கையால் குல்லாய் தைத்து விற்று பணம் சம்பாதித்தவர்.மகன்கள் ஒருவரும் உருப்படி கிடையாது.போர்களத்திலே இருந்தவர்.ஒருமுறை போர் நடக்கும் போது தொழுகை செய்கிறார் அதைப் பார்த்து எதிரிகளே வியந்து தொழுகை முடியும் வரை சண்டையை நிறுத்தி விட்டார்கள்.மிக முக்கியமான விஷயம் அவர் மது அருந்த மாட்டார்.ஒருமுறை உதடு வரை மதுவைக் கொண்டு சென்றவர்.(அது ஒரு பெண்ணிற்காக).முதலில் அந்த நங்கையைப் பார்த்த நொடி மயக்கம் அடைந்து விடுகிறார். (எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது.நான் அரைமயக்கத்தில் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன்).பிள்ளையைக் கூட சிறையில் தள்ளியவர்.

சிவாஜி -

மராத்தி மக்களின் எழுச்சி தான் சத்ரபதி சிவாஜி.சிவாஜி எனக்கு பிடிக்கும் என்று சொன்னதற்கே என்னிடம் நட்பு பாராட்டியவர்கள் உண்டு.நகரங்களைப் பிடிப்பதை விட கோட்டைகளை ஆக்ரமிப்பது தான் அவருக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.தமிழ்நாடு வரை வந்து செஞ்சி,வேலூர் கோட்டைகளை மராத்தியர்கள் பிடித்தார்கள்.அவுரங்கசீப்பும் இவரும் சமக்காலத்தவர்கள்.இவரின் தொல்லைப் பொறுக்க முடியாமல் அப்சல் கான் என்ற தளபதியை அவர் அனுப்ப சிவாஜியோ தந்திரமாக புலி நகத்தை கொண்டு தளபதியைக் கொன்று விடுகிறார்.டெல்லியில் சிறையில் அடைப்பட்ட போதும் கூட அலட்டி கொள்ளாமல் தந்திரமாக தப்பி வந்தவர்.கொரில்லா யுத்த முறையை கடைப் பிடித்தவர்.போர் தந்திரங்களும் உண்டு.

வாஞ்சிநாதன் -

மணியாச்சி வாஞ்சிநாதன் - அந்த ஊரை கடக்கும் போதெல்லாம் நினைத்து கொள்வேன்.கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டு ஒருவரை(ஒருத்தனை) கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்.குழந்தை இறந்தே பிறக்கிறது.(வாஞ்சியின் குழந்தைக்கு கூட தெரிகிறது சுதந்திர நாட்டில் தான் உயிர் வாழ்வேன் என்று)அந்த செய்தி கூட அவரை அசைக்கவில்லை.1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை(முதல்ல இந்த பெற மாத்துங்க துரை என்ன அந்த ஆளு படிச்சி வாங்குன பட்டமா) தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் என்ற ஆங்கிலேயரைத் (துரை என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள்) தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

11 comments:

லோகு said...

தாய் மண்ணே வணக்கம்..

நல்லதொரு தேசபக்தி பதிவு.. அருமை அண்ணா..

மஞ்சூர் ராசா said...

உங்கள் கதாநாயகர்கள் உண்மையிலேயே நாயகர்கள் தான்.

நன்றி.

எழுத்துப்பிழைகளை கவனிக்கவும்.

மணிஜி said...

/.(அது ஒரு பெண்ணிற்காக).முதலில் அந்த நங்கையைப் பார்த்த நொடி மயக்கம் அடைந்து விடுகிறார். (எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது.நான் அரைமயக்கத்தில் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன்).//


அது என்ன மட்டும் நீயும்?வன்மையாக கண்டிக்கிறேன்

sathiyabal said...

Plz read the history carefully, Aurangazeb is more of villain. He is merciless. He arrested his father and son because of power hungry.

ஈரோடு கதிர் said...

சிவாஜி காலத்திலேயே கெரில்லா போர் முறை தோன்றிவிட்டதா?

வாஞ்சி உண்மையில் அற்புதம் தான்

ஆமாம். ஔரங்கசீப் எப்படி ஹீரோ

அரவிந்த்... ஒரு டவுட்
இந்த இடுகைக்கு கூட லேபில் மொக்கைனு போடனுமா?

க.பாலாசி said...

//(எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது.நான் அரைமயக்கத்தில் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தேன்).//

உண்மையை ஒத்துக்கொண்ட அரவிந்த் வாழ்க....(அதானே ஒரு புள்ளைய பாத்துடகூடாதே...வழிஞ்சிடுவீங்களே...)

நல்லதொரு வரலாற்று பதிவு....நல்ல தகவல்கள்...வாழ்த்துக்கள் நண்பா...

Thamira said...

இது புதுசு.!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஹீரோக்கள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடருங்கள் அண்ணாச்சி..,

இரும்புத்திரை said...

நன்றி லோகு

நன்றி மஞ்சூர் ராசா

நன்றி தண்டோரா

நன்றி sathiyabal

நன்றி கதிர் - ஈரோடு

நன்றி பாலாஜி

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

துபாய் ராஜா said...

அரவிந்த் வரலாற்று விஷயங்களும், புராணங்களும் நிறைய படித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

தொடரட்டும் இதுபோன்று ஏகப்பட்ட பதிவுகள்.