Tuesday, September 1, 2009

துவையல்

சேது படத்தில் அபிதா விக்ரமிடம் காதலை வெளிப்படுத்தியப் பிறகு வரும் பாட்டு "நினைச்சி நினைச்சி தவிச்சி தவிச்சி.." என்று ஆரம்பித்து "விடிய விடிய கவிதை சொல்ல ஒரு உறவு வந்ததே.." என்று முடியும். இந்த பாட்டைக் கேட்டும் போதெல்லாம் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து வெளியே விட்டது மாதிரி றெக்கைக் கட்டி பறக்கும் மனசு.
அறிவுமதி எழுதிய பாடல்.(இப்ப எதுக்கு எழுத மறுக்கிறீங்க அண்ணே).நிமிடத்துக்கும் குறைவான பாடல் முடியும் முன் விழும் அடிகள் எனக்கு விழுவது போலவே இருந்தது. யாராவது சக மாணவர்கள் அடி வாங்கினால் இந்த பாட்டு பாடப்படும் என்று நண்பன் அடிக்கடி சொல்வான்.

நர்சிம்,அதிஷவிற்கு என்னை ஆச்சர்யப்படுத்திய அடுத்த இரண்டு பேர் கென்,பொட்டீக்கடை சத்யா. கென் - சாருவின் வாரிசு என்று சொன்னப்பிறகும்,குருஜி சொல்லியப் பிறகும் படிக்காமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்.பொட்டீக்கடை சத்யா - தற்போது எழுதி இருக்கும் சிறுகதை எனக்கு சாருவை நினைவுப்படுத்தியது.

ரொம்ப வருத்தமான செய்தி.

நான் கிளப்பி விட்ட வதந்தி பொய்யாக மாறி விட்டது.சசிகுமாரின் படத்தில் நடிப்பது சாரு நிவேதிதா அல்ல ஜெயபிரகாஷ் என்று வருத்தத்துடன் சொல்லி கொள்கிறேன்.ஆனந்த விகடனில் வந்த கோடம்பாக்கம் சிறுகதையைப் படித்து விட்டு வாய் விட்டு சிரித்தேன் ரொம்ப நாட்களுக்குப் பிறகு.

வம்பு :

வாரம் ஒருமுறை வம்பு இழுக்கலாம் என்று நினைக்கிறேன்.பதிவுலகத்தில் வம்பு இழுத்தால் நிறைய பேரிடம் திட்டு வாங்க வேண்டும்.அதற்கு மனதில் ஒரு உதறல் இருப்பதால் இந்த வாரம் - சுகாஷினி. ராஜாதி ராஜா படத்தை கிழித்து தோரணம் கட்டிய நீங்கள் கந்தசாமி படத்தை தடவி கொடுத்தது ஏன். பழைய ரஜினி படத்தில் இருப்பது போல கதை இருப்பதால் சினிமா இருபத்து வருடம் பின் சென்று விடும் சக்தி சிதம்பரத்தை எச்சரித்த நீங்கள் பழைய ஷங்கர் படம் போல இருக்கும் கந்தசாமியை நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு காரணம் என்ன.சுசி கணேஷன் உங்களுக்கு வேண்டியப்பட்டவர் என்ற காரணத்தினாலா ?. இராவணன் படத்தை நீங்கள் எப்படி விமர்சனம் செய்வீர்கள் என்று காத்து கிடக்கும் ஒரு அப்பாவி ரசிகன்.

இப்படி குவியல்,அவியல்,கொத்துப் பரோட்டா போல இதை எழுதும் போது சில ஜோக்குகள் எழுதலாம் என்று நினைத்தேன்.அதற்கு அதரவு கிடைக்குமா என்று தெரியவில்லை.நிறைய ஜோக் கைவசம் உள்ளது.வேண்டும் என்று சொல்பவர்கள் தனியாக சொல்லவும்.
அதுபோல நிறைய எழுத்துப்பிழை இருக்கிறது என்று நிறைய நலம்விரும்பிகள் சொன்னார்கள்.எந்த இடத்தில் என்று சொன்னால் திருத்திக் கொள்வேன். பின்னூட்டத்திலும் சொல்லலாம். இல்லை தனிப்பட்ட பாசம் இருந்தால் என்னுடைய ஐடிக்கு அனுப்பவும்.(பொதுவுல அசிங்கப்பட வேண்டாமே என்று நினைத்தேன். இன்னொரு காரணமும் உண்டு என் தம்பியும் படிக்கிறான்.

டக்ளஸ் வாயில் ஒரு கிண்ணம் சீனியைப் போட வேண்டும்.எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை.இன்று என் மீது மூன்று குட்டிச் சாத்தானை ஏவி விட்டார்கள். அது மூன்றும் சிஸ்டத்தைப் பிடித்துக் கொண்டு என்னை எந்த பதிவையும் படிக்க கூட விடவில்லை. இன்று வினவை வம்புக்கு இழுத்த டக்ளஸ் வாழ்க.

19 comments:

Unknown said...

//அனந்த விகடன்// - அது ஆனந்த விகடன்

நீ தொடு வானம் said...

அது "அனத்த விடுங்கள்" என்று டைப் செய்ய நினைத்திருப்பார்.விடுங்க பாஸ்

இரும்புத்திரை said...

நன்றி சிபி மாற்றி விடுகிறேன்

நன்றி கணேஷ். அனத்த விடுங்கள் தான்.அடுத்த முறை சரியாக எழுதுகிறேன்

ஈரோடு கதிர் said...

//நான் கிளப்பி விட்ட வதந்தி பொய்யாக மாறி விட்டது.//

எங்களுக்கு முதல்லியே தெரியுமே...

ஹி..ஹி..ஹி.. எது எதிர் வதந்தி

Raju said...

\\பழைய ஷங்கர் படம் போல \\

ராசா..எனக்குதெரிஞ்சு ஷங்கர் படம் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு.
அதுல என்ன பழசு..புதுசு...?

\\.எந்த இடத்தில் என்று சொன்னால் திருத்திக் கொள்வேன். \\

வாரத்துக்கு பேசிக்குவோமா இல்ல மாசச்சம்பளமா..?
இல்லைன்னா பதிவுக்கு இவ்ளோன்னு வச்சுக்குவோமா..?
சரி..வேணாம்..ஒரு மிஸ்டேக்குக்கு இவ்ளோன்னு வச்சுக்கலாம்.
என்ன நான் சொல்றது..?

ஆமா, வினவுன்னா யாருங்க ..?
அப்துல்கலாம் சொன்னாரே அந்த "கனவு"க்கு ஒன்னு (மட்டும்) விட்ட தம்பிங்க‌ளா..?
:)

நையாண்டி நைனா said...

what is "துவையல்"?

இரும்புத்திரை said...

நன்றி கதிர்.எதிர் வதந்தி என்னனு தெரியல.யாராவது சொல்லுங்க

Cable சங்கர் said...

பேரு நல்லாருக்கு அரவிந்த.. ஜோக்குகளை என் மெயிலுக்கு அனுப்பவும்..

இரும்புத்திரை said...

நன்றி டக்ளஸ். குத்துங்க ராசா குத்துங்க

இரும்புத்திரை said...

நன்றி நைனா. படிக்கிறவங்க என்னை துவை துவை துவைப்பாங்க.அதுதான் துவையல்.

இரும்புத்திரை said...

கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன் அண்ணே

தினேஷ் said...

/படிக்கிறவங்க என்னை துவை துவை துவைப்பாங்க.அதுதான் துவையல்//

பொருத்தமான பெயர்..

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்

லோகு said...

நல்ல கதம்ப பதிவு... அட்டகாசம்..

எழுத்து பிழை எதுவும் எனக்கு தெரியலை.. :)

இரும்புத்திரை said...

நன்றி லோகு

நாஞ்சில் நாதம் said...

துவையல். பெயரவிட பெயர் காரணம் நல்லாயிருக்கு

துபாய் ராஜா said...

"துவையல்" இன்னும் கொஞ்சம் காரசாரமா நல்லா பரபரன்னு அரைங்க அரவிந்த்...

அப்பதான் (படிக்கிற) நாக்குக்கு நல்லாருக்கும்.....

இரும்புத்திரை said...

நன்றி நாஞ்சில் நாதம்

நன்றி துபாய் ராஜா

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.......