சுவைப்பதில் தொடங்கி
சுகிப்பது வரை
எல்லாம் அவசரம் தான்.
திருப்தி அடையாமல்
கள்ளச்சந்தையில் புழங்கும்
இயந்திரங்களுடன் தொடர்பு
"ஆண்டு அனுபவித்து விட்டேன்"
சொல்லி மரிக்கும் போது
வயது முப்பது
வருடம் 3010
சந்ததியைப் பெருக்க
பால்ய விவாகம்
பிளாக் எழுதும் புரட்சிக்கவி
பாரதிக்கும் வயது முப்பது.
அவனைக் கொல்ல
யானையும் இல்லை
இறைப்பதற்கு
அரிசியும் இல்லை
இருந்தாலும் அதை உண்பதற்கும்
அவன் கொஞ்சுவதற்கும்
குருவிகள் இல்லை
இணையத்திலும்..
செய்யும் பாவங்களைத்
தொலைத்து புண்ணியத்தைச்
சேர்க்க சனிக்கிழமை தோறும்
திருப்பதி பயணம்
முதல் வகுப்பு தரிசனம்
ஜருகண்டி இல்லை
என்றோ வரும் பக்தனுக்கு
பத்து மணிநேர காத்திருப்பு
ஜருகண்டி,ஜருகண்டி என்று
கடமையை செய்யும் ஊழியனுக்கு
சேர்க்கிறது சாமான்யன்கள் விடும்
சாபமும்,பாவமும்
Monday, September 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஊத்துவதில் தொடங்கி
குடிப்பது வரை
எல்லாம் அவசரம் தான்.
திருப்தி அடையாமல்
கள்ளச்சந்தையில் புழங்கும்
சாராயத்துடன் தொடர்பு
"ஆண்டு அனுபவித்து விட்டேன்"
சொல்லி மரிக்கும் போது
வயது முப்பது
வருடம் 3010
போதயை ஏத்த
பட்ட சாராய
பிளாக் எழுதும் மதுக்கவி
நெப்போலியனுக்கும் வயது முப்பது.
அவனை மல்லாத்தும்
சரக்கும் இல்லை
அவன் நக்காத
ஊறுகாயும் இல்லை
இருந்தாலும் சரக்குவாங்க
பணமும் இல்லை
இருந்தாலும் சரக்கு வாங்குவதற்கும்
அவன் நக்குவதற்கும்
ஊறுகாய் இல்லை
TASMAC பாரிலும்..
செய்யும் வேலைகளை
தொலைத்து அமைதியை
சேர்க்க சனிக்கிழமை தோறும்
TASMAC பயணம்
எதிர்கவிதை ஒன்னுதான் இருக்கு இன்னொன்னு எங்கே சூரியன்
//ஜருகண்டி,ஜருகண்டி என்று
கடமையை செய்யும் ஊழியனுக்கு
சேர்க்கிறது சாமான்யன்கள் விடும்
சாபமும்,பாவமும் //
அர்த்தமுள்ள வரிகள்...கவிதை முழுதும் அருமை...
நன்றி பாலாஜி
நல்லாயிருக்கு உங்க சுழல் கவிதை!
சூரியனுக்கு ஒரு கைகுலுக்கல் + ர்ர்ரிப்பீட்டேய்!!
ஆச்சரியமான அரவிந்த்க்கு வாழ்த்துகள்
வாவ்....பெண்டாஸ்டிக்
சுழற்சிச்சக்கரத்தில் புண்ணியம் தேட சிந்திக்கும்
சிந்தனைகவிதை!
காலத்தை கடந்த பார்வையும்
சூரியனின் விமர்சன வடிவமும்
நல்லாயிருக்கு......!
நன்றி ஜெகநாதன்
நன்றி கதிர் - ஈரோடு
நன்றி தண்டோரா ......
நன்றி விரும்பி
Post a Comment