சில படங்களைப் பார்க்கும் போது சில நினைவுகளைக் கிளறி விடும்.அப்படி ஒரு படம் தான் ஈரம்.சின்ன வயதில் இருந்து எனக்கு ஒரு பழக்கம் உண்டு.கிராமத்தில் இருக்கும் சமயம் கற்றுக் கொண்டது.அது அழகாக இருந்தாலும் சரி,அளவாக இருந்தாலும் சரி தூரத்தில் இருந்தே கணிப்பது தான் வழக்கம்.
அக்கணிப்பு ஏறக்குறைய சரியாகவே இருக்கும்.(கண் அளக்காததையா கை அளந்து விடப் போகிரது என்று என் ஆச்சி சொல்வார்கள்).சின்ன வயதில் ஏதாவது பயணத்தின் போது ஒரு வினாடி நேரமே பார்க்கும் முகங்கள் கூட இன்று வரை என் ஞாபகத்தில் உண்டு.ஆனால் ஒரு பெண்ணின் முகம் மட்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.இதற்கும் அந்த பெண் என்னோடு நாலு வருடம் என்னுடன் படித்தவள்.அவளைப் பார்த்ததில் இருந்து கணிப்பு தவறாகவே இருந்தது.
அதனால் வந்த பலன் - சில சமயம் பின்னால் இருந்து ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு துரத்தி போய் ஏமாந்து நிற்பது வழக்கமாகி விட்டது.ஈரம் படத்தில் வரும் சிந்து மேனனைப் பார்த்த உடன் அந்த பெண்ணின் முகம் ஒளிந்திருந்த நினைவடுக்களில் இருந்து கிடைத்து விட்டது.இனிமேல் கணிப்பு வேலை நிச்சயம் செய்யும்.அனாவசிய துரத்தல்கள் இருக்காது.ஏமாற்றமும் இருக்காது.
ஈரம் பார்க்கும் போது வந்த இன்னொரு ஞாபகம் - மழைக்காலத்தில் ஒரு பெண்ணோடு நனைந்து கொண்டே அவள் வீடு வரை போனது.அவள் என் தோழி மட்டும்.(இப்படி தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.என்னைக்கும் பேச்ச மாத்த மாட்டேன்.ஆனா யாருமே நம்பல என் நண்பர்கள் உட்பட)
நான் ரசித்த இன்னொரு காட்சி.
ஆதி வீட்டிற்கு வரும் சிந்து அவருக்கு ஆம்லேட் போட்டு தருவார்.பிறகு கையை முகர்ந்து பார்த்து கொண்டேயிருப்பார்.ஒரு நாள் நாங்களும் முட்டை சாப்பிட்டு கொண்டிருந்தோம்."இதெல்லாம் எப்படி சாப்பிடுறீங்க.." என்று முகம் சுளித்தாள்.அதிலிருந்து நிறுத்தி விட்டேன்.சாப்பிடுவதை அல்ல அவளுடன் பழகுவதை.அங்கே புள்ளியாக ஆரம்பித்த விரிசல் பிறகு எப்படி ஆனது என்றால் "அவளுக்கு என்னை பிடிக்காது.எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்காது".சில விஷயங்களில் சமரசம் கிடையாது.
பதினாறு வருடங்களுக்கு முன் படித்த ஒரு நாவல் நினைவுக்கு வந்தது.
கணவனுக்கு மனைவி மேல் சந்தேகம்.காரணம் படிக்கும் காலத்தில் அவளுக்கு ஒரு காதலன் உண்டு.அவளுடன் சண்டை போடுகிறான்.அவள் ஊருக்கு புறப்படுகிறாள்.வழியிலேயே அவளை சமாதானப் படுத்தி இறக்கி ஒரு காட்டில் வைத்து அவளை கொலை செய்து புதைது விடுகிறான்.கடிதம் எழுதி வைத்து விட்டு அவள் ஓடி விட்டதாக நாடகமாடுகிறான்.
சந்தேகம் பழைய காதலனிடம் திரும்புகிறது.அவன் ஒரு டிடக்டீவ்.துப்பறியத் தொடங்கி விடுகிறான்.கொலைகாரன் மனைவியின் தங்கையை மணந்து கொல்கிறான்.அவளுக்கும் ஒரு காதலன் உண்டு.அது ஒரு சொல்லப்படாத காதல்.
அவள் வீட்டிற்கு வந்து கண்டுப்பிடித்து விடுகிறாள்.அக்கா ஓடிப் போகவில்லை,காணாமல் போயிருக்கிறாள் என்று.அக்காவின் டிடக்டீவ் காதலனும் தங்கையுடம் சேர்ந்து தேடத் தொடங்குகிறான்.
தங்கையின் காதலன் வேலை காரணமாக கென்னை வருகிறான்.எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.அதை கணவனும் பார்த்து விடுகிறான்.
அவளை கொலை செய்ய முடிவு செய்கிறான்.இந்த பெண்ணின் காதலனும்,அக்காவின் டிடக்டீவ் காதலனும் அவளை கடைகி நேரத்தில் மீட்டு விடுகிறார்கள்.
சுபம்.
இந்த கதையில் வரும் நபர்களில் இரண்டு பெயர் தான் ஞாபகத்தில் இருக்கிறது.
தங்கையின் பெயர் - லதா.
அக்காவின் காதலன் பெயர் - ஆனந்த்.
இப்படி எல்லாம் படங்கள் வந்து பழைய நினைவுகளைத் தட்டினால் நிச்சயம் அது வெற்றி தான்.
தழுவலோ இல்லை உள்வாங்குதலோ ஆனால் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி எடுத்தாலும் படம் வெற்றி தான்.கேள்விகளும்,கேலிகளும் குறைவாகவே இருக்கும்.
சேரனும் வலைப்பூ எழுதுபவர்களை "தாந்தோன்றிகள்" என்று சொல்ல மாட்டார்.
இப்படி எந்த படம் எடுத்தாலும் ஏற்கனவே படித்தது,பார்த்தது,கேட்டது என்று விமர்சனம் வரும்.தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை எல்லா கதைகளும் எடுத்தாகி விட்டது என்று சொல்வார்கள்.திரைக்கதையில் மாற்றம் செய்து விளையாடினால் ஒரு சொல்லப்படாத கோணத்தில் புது கதை ஒன்று கிடைக்கும்.அது ப்ளாகர் உலகத்தாலும் சிலாகிக்கப்படும்.
அது மாதிரி வேறு கோணத்தில் வந்த படங்கள் - நாடோடிகள்,யாவரும் நலம்.
இந்த வரிசையில் ஈரம் படமும் சேர்ந்து இருக்கிறது.
Tuesday, September 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கண்ணை எடுக்காமல் படிக்க வைக்கிறது உங்கள் அபார எழுத்து நடை.. அதற்கு முதலில் வாழ்த்துகள்..
நல்ல அலசல்.. வித்தியாசமாக எடுக்கப்பட்டால் எந்த கதையும் ரசிக்க வைக்கும்..
நல்ல அலசல் நண்பா....
லோகு சொன்னது போலவே
அருமையான நடை...
வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு.
//சாப்பிடுவதை அல்ல அவளுடன் பழகுவதை.//
ஹா ஹா.
எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனிக்கவும்.
நன்றி லோகு
நன்றி ஜெட்லி
நன்றி நாடோடி இலக்கியன்
மாம்ஸ் பிரமாதம் உங்க தோழிட்ட நேர்மையா முட்டைக்காக சண்ட போட்டது...
ஈரம் பார்க்கலே இன்னும் பார்க்கனும்..
யோவ் டயரடக்கரு,
நீங்க எப்பிடி எழுதினாலும் சத்தியமா கால்ஷீட் கிபையாது.
:-)
கிபையாது-கிடையாது
ஹிஹி..!
நன்றி சூரியன்
நன்றி ராஜு அப்படி எல்லாம் சொல்லாதீங்க
//."இதெல்லாம் எப்படி சாப்பிடுறீங்க.." என்று முகம் சுளித்தாள்.அதிலிருந்து நிறுத்தி விட்டேன்.சாப்பிடுவதை அல்ல அவளுடன் பழகுவதை.//
என் ஆபிஸ்லயும் என் எம்டி கனடா நாட்டுக்காரர் கடல் நண்ட வாங்கி முழுகட்டு கட்டி கொண்டிருந்தாப்ல, இந்த மாதிரி சாப்பிடாமக்கா(!!! or ---( மேலயும் கீழயும் கோடு எப்படி போடுறது)) எல்லாம் Stingnu சொல்லிட்டு மூக்க பொத்திட்டு போனாங்க.. விட்டாரு ஒரு டோஸூ சாப்பாட எப்படி நீ அவமானபடுத்தலாம்.. நான் எதயோ திங்கிறேன் நீ எதயோ திங்கிறே நான் அத அவமானபடுத்தினேனா நீ(ங்க bloody indians) மட்டும் ஏன் இப்படினு...
மச்சி இரும்பு,
அசத்தல்.
//ஒரு பெண்ணின் முகம் மட்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.இதற்கும் அந்த பெண் என்னோடு நாலு வருடம் என்னுடன் படித்தவள்//
பழகுற பொண்ணுங்ககிட்டல்லாம் முகத்தை பார்த்து பழகினாத்தானே....
அவங்களோட நல்ல குணத்தைப் பார்த்து பழகுற ஆளுல்லா நீங்க...
:))
//மழைக்காலத்தில் ஒரு பெண்ணோடு நனைந்து கொண்டே அவள் வீடு வரை போனது.அவள் என் தோழி மட்டும்.(இப்படி தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். என்னைக்கும் பேச்ச மாத்த மாட்டேன். ஆனா யாருமே நம்பல என் நண்பர்கள் உட்பட)//
சிறுத்தை சிக்கும்.சில்வண்டு சிக்கல்ல சிக்குமா.... :))
துபாய் ராஜா அண்ணே நீங்க சரக்கு பதிவுக்கு உடனே போங்க
//"அவளுக்கு என்னை பிடிக்காது.எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்காது".சில விஷயங்களில் சமரசம் கிடையாது.//
ஆமாமா.சாம்பார்,ரசம் கூடல்லாம் சமரசம் கூடவே கூடாது.... :))
//இந்த வரிசையில் ஈரம் படமும் சேர்ந்து இருக்கிறது.//
ஒரு வாசகம்னாலும் திருவாசகம்பா...
//சேரனும் வலைப்பூ எழுதுபவர்களை "தாந்தோன்றிகள்" என்று சொல்ல மாட்டார்//
ஆம். 'தான்தோன்றிகள்' தான். வலைபதிவர்கள்லாம் சொந்தமா யோசித்து எழுதுவதால்
'தான்தோன்றிகள்' தான்.
Post a Comment