முதலில் அமெரிக்க முட்டாள்கள் நம்மை ஏமாற்றும் வழிகளைப் பார்ப்போம்..
ஆயுதங்கள்
வருடம்தோறும் நடக்கும் ஆயுத விற்பனையில் அமெரிக்கப் பூனைகளின் பங்கு 68.4 சதவீதம்.அவர்கள் எலிப்பொறியில் எப்படி நம்மை சிக்க வைக்கிறார்கள் என்றால்
1. நாமே ஓடி வந்து காலி எலிப்பொறியில் அமர்வது.(ஆந்திர முதல்வர் காணாமல் போன சமயம் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமெரிக்கர்களிடம் உதவி கேட்கிறோம். அவர்கள் தொழில் நுட்பத்தை நாடுகிறோம்.இங்கே தான் சனியனத் தூக்கி பனியன்ல போட்டுக் கொள்கிறோம்.நம்மால் அது போல் தொழில் நுட்பங்களை உருவாக்க முடியாதா?.முடியும் ஆனால் முடியாது..சந்திராயன் எப்படி காணாமல் போனது என்று கூட கண்டுப் பிடிக்க தெரியாத நாம்,காணாமல் போன ஆந்திர முதல்வரை கண்டுப்பிடிக்க ஒரு நாள் எடுத்து கொள்ளும் நாம் செய்ய முடிந்தது எல்லாம் அடுத்தவனைக் குறைக் கூறுவது தான்.(அட நானும் அதை தான் செய்கிறேன் பின்ன நான் மட்டும் என்ன விதிவிலக்கா)
2.நாம் வலியப் போய் உதவி கேட்கும் போது அவர்களுக்கு தெரிகிறது..அடித்து விட ஆரம்பிக்கிறார்கள்..பாகிஸ்தான் அனுஆயுதங்களைக் கொண்டு இந்தியாவைக் குறி வைக்கிறது - அமெரிக்க சாட்டிலைட் படம் வெளியாகிறது..உடனே ஆயுதங்கள் இரண்டு பக்கமும் விற்கப் படுகிறது.பிறகென்ன இரண்டு பூனை,ஒரு சிரங்கு வந்த குரங்கு,அப்பம் கதை தான்.
இப்படி நாம் ஆயுதங்கள் வாங்க செலவளிக்கும் காசை வைத்து உருப்படியாக கல்வி,மருத்துவம் என்று செலவளிக்கலாம்.தீவிரவாதிகளை(முஸ்ஸிமாக இருந்தாலென்ன இந்துவாக இருந்தாலென்ன) உருவாக்குவதே அமெரிக்கன் தான்.(அட அவன் மதம் வேற - இது தான் பின் நவீனத்துவமா சொல்லவே இல்ல)
உணவு
இதில் அவன் பரிதோதனை செய்ய வேண்டும்..சாப்பிடுவதற்கு பேசும் எலிகள் வேண்டும்.முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் விளையாடி வந்த நாதாறிகள்(மன்னிக்கவும் கோபம் படும் போது என்னை கட்டுப்படுத்த முடியவில்லை) இந்தியா பக்கம் பார்வைகளைத் துருப்பி இருக்கிறார்கள்.இனி வரும் ஆண்டுகளில் தக்காளி துள்ளும்.நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது.அப்படி தவளையின் ஜீனை எடுத்து தக்காளியில் சேர்த்தால் அப்படி நடக்கும் எது எல்லாம் அங்கே தெரிந்தால் செய்தவன் காலி இங்கே செய்தால் அவனுக்கு அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர் என்று பெயர்.வேம்பு,மஞ்சள் என்னமோ அவர்கள் கண்டுப்பிடித்தது மாதிரி பேடண்ட் வாங்குகிறார்கள்.இதெல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு நேரம் ஏது வாங்க கமல்னு ஒருத்தர் சிக்கி இருக்காரு அவர வெளுப்போம்.
மருந்து
அங்கு தடை செய்யப்பட்ட மருந்து இங்கு விற்பனையில் உள்ளது.சாப்பிடும் முன் தடை செய்யப்பட்டதா என்று இணையத்தில் பார்த்து கொள்ளவும்
குப்பை,கழிவுகள்
தூத்துக்குடியில் நாம் கழிவுகளைக் கொட்ட அனுமதி செய்கிறோம்.மற்ற நாடுகளின் அந்த கப்பல் துறைமுகத்தில் வரவே தடை.நமக்கு வடை.
மடிக்கணினி
பத்தாயிரம் ரூபாய் உள்ள மடிக்கணினியை நம் நாட்டின் வருங்காலத் தூண்களுக்கு தர பெறும் முயற்சி செய்தார்கள்.விலை குறைந்தப் பொருட்களால் வரும் கேடுகளைத் தெரிந்து கொள்ள இப்படி ஒரு முடிவாம்.சில எதிர்ப்புகளால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.
டிஸ்கி கொஞ்சம் பெருசு
நான் ஆட்சிக்கு வந்தால் தான் லஞ்சகங்களை ஒழிக்க வழி சொல்வேன் என்று சொல்ல விஜயகாந்தா ?
என்னுடைய வழிகள்
ஐ.ஐ.டி யில் படிப்பவர்கள் இந்தியாவில் ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்று சொல்ல சட்டம் வேண்டும்.(அங்கு இயங்கும் இந்திய மூளைகளுக்கு தான் மதிப்பும் அதிகம் விலையும் குறைவு)
அமெரிக்கன் நாடு நல்லா இருக்கும் வெளியே ரவுடித்தனம் செய்வான்.நாம வெளியிலே வாயையும் சூவையும் பொத்திக்கிட்டு நாட்டுகுள்ள ரவுடித்தனம் செய்வோம்.
வாழ்க இந்திய ஜன நாயகம்..72 லட்சம் கோடி கருப்பு பணம் ஒரு கோடி கோடியாக(ஸாரி நூறு லட்சம் கோடியாக) மாற வாழ்த்துக்கள்.
இப்படிக்கு ஒரு தெருக் கோடியில் நிற்கும் நூறு கோடி இந்தியரில் ஒருவன்.
Tuesday, September 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//ஆந்திர முதல்வர் காணாமல் போன சமயம் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல்//
தெலுங்கு சேனல்ல செத்த மாதிரியே கவுண்ட் டவுன் போடுறான்..
அவன எந்த செருப்பால அடிக்கலாம்..
செய்தி பார்த்துட்டு நூறு பேர் மரணம் ஜெகனுக்கு முடிசூட்டு விழா
நன்றி ganesh
மொத இரண்டு para நல்லாயிருந்தது அரவிந்த்
சிந்திக்கும் கருத்துக்கள் அரவிந்த்
ஒட்டு போட்டாச்சு ....
நல்ல சிந்தனைக்குரிய கருத்துக்கள்
ஓபாமா வந்துட்டாரு..உலக ரட்சகன் வந்தாச்சு..பெருசா கழட்டிருவாருன்னு
சொன்னாங்க.. அவரும் 'புஷ்'ஷாப் போய்ட்டார்.
இத..இதத்தான் அரவிந்த் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்...
கோபம் அனலாய் கொதிக்கிறது எழுத்தில்...
வாழ்த்துகள் அரவிந்த்
நல்ல வேளை ஓபாமா வெற்றி பெற்றதைக் கொண்டாட நம் அரசாங்கம் விடுமுறை அறிவிக்காததை பாராட்டுவோம்...
வெடிச்சு சிதறிட்டிங்க..??!!
//.. என்னுடைய வழிகள் ..//
நாம சொன்ன நடந்திடவா போகுது.. என்னமோ போங்க..
நன்றி D.R.Ashok
நன்றி ஜெட்லி
நன்றி தியாவின் பேனா
நன்றி ♠ ராஜு
நன்றி கதிர் - ஈரோடு
நன்றி பட்டிக்காட்டான்..
Post a Comment