Monday, September 21, 2009

துவையல் - சிரிப்பு + சீரியஸ் ஸ்பெஷல்

உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமலை விட மோகன்லால் நன்றாக நடிக்க வாய்ப்பு அமைந்து விட்டது.கமலே இந்த வேடத்தையும் செய்து இருக்கலாம்.(என்ன அது போல நடந்திருந்தால் அது ஒரு கைதியின் டைரி போல இருக்கும்).மும்பை அல்லது ஹைதிராபாத்தில் நடப்பது போல கதை இருந்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.(காரணம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழுக்கு புதிது).இப்படி ஒரு மாற்றத்தை வைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஒரு காரணம்..

கமல் சிகப்பு ரோஜாக்களில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிறகு பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு சைக்கோ பிடிக்கப்பட்டான்.

வேலையற்ற இளைஞனாக கமல் நடித்த படம் சத்யா. பிறகு நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனது.

தேவர் மகன் என்ற படம் வெளியான உடன் தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் நடந்தது.

நிதி நிறுவனங்கள் ஏமாற்றுவதாய் மகாநதியில் நடித்தார். நிதி நிறுவனங்கள் ஏமாற்றியது.

ஹேராம் படத்திற்கு பிறகு கோத்ரா கலவரம் நிகழ்த்தப்பட்டது. அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி பேசினார்.சுனாமி வந்தது.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு சைக்கோ தொடர் கொலையாளிகளை நொய்டாவில் பிடித்தார்கள்.

தசாவதாரத்தில் உலகத்தையே அழிக்கும் ஒரு கிருமி இருப்பது போல கதை நடக்கும், பிறகு பன்றிக்காய்ச்சல் வந்து பயமுறுத்தியது.

இந்தப் படம் வெளியான இப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

***************

ஒரு நண்பருடன் சாட் செய்யும் போது கேட்டார்."பதிவு எழுத ஆரம்பித்த பிறகு கடைப்பிடிக்கும் கொள்கைகள் எதாவது இருக்கா.."

ஆமா இருக்கு என்று சொல்ல ஆரம்பித்தேன்.(அடைப்புக்குறியில் இருப்பது அவருடைய நக்கல்கள்)

அ) மீள்பதிவு போட மாட்டேன்.(அப்போ பிரபல பதிவர் ஆக முடியாதே என்று சொன்னார்).மீள்பதிவு(மீள்பதிப்பு) ஆரம்பித்து வைத்தது வாரமலர் என்றுதான் நினைக்கிறேன். அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது மற்றும் தொடர்கதைகள் நிறைய தடவை பல முறை மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆ) அனானியாகப் பின்னூட்டம் போட மாட்டேன்.(முதல்ல பின்னூட்டம் போடு..அப்புறம் அனானியப் பத்தி யோசிக்கலாம்..)

இ)அனானிகள் எம் பதிவுலப் பின்னூட்டம் போட முடியாது.(அவங்க பின்னி எடுப்பாங்கன்னு பயம்)

ஈ) எதிர்பதிவு போட மாட்டேன்.(யாரு நீயி..அவனா நீயி..சரி நெக்ஸ்டு..)

உ) நான் கடைய அடைக்கப் போறேன் ஒருதடவை சொன்னா சொன்னதுதான் திரும்ப வரமாட்டேன்.(சரி நீ இத எப்போ சொல்ல போற..சரி பதிவுலகத்துல உன் வெற்றியா எதை நினைப்ப)

ஊ) நீங்க தான் என்னுடைய ஆதர்ஷம்..உங்களைப் பாத்துதான் நான் எழுத வந்தேன் அப்படின்னு யாராவது சொன்னா அது தான் என்னுடைய வெற்றி.(அப்போ அது வரைக்கும் அடங்க மாட்ட..நான் வேணா சொல்லட்டுமா..)

சரி இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா..(ஆமா உன்ன எவ்வளவு நக்கல் பண்ணினாலும் உனக்கு கோவம் வரவே இல்ல..நீ ரொம்ப நல்லவன்..)

நான் கோவப்பட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் அப்படி சொல்லலாம்னு நினைச்சேன்..சரி அதுக்கும் ஏதாவது சொல்வார் என்று பயந்து "இன்னைக்கு நான் தான் மாட்டிகிட்டேனா..வேற யாரும் இல்லையா.."கொஞ்சம் வேலை இருக்கு அப்படி சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.

**************

இந்த வார சர்ச்சை..

என்னது உன்னைப்போல் ஒருவன் படத்துல வர்றது அல்கொய்தா,ஹமாஸ்,ஹிஸ்புல்லா தீவிரவாதிகளா..அவங்க எப்போ இந்தியாவுக்கு வந்தாங்க..அவங்க எங்கையோ இருந்தாலும் வம்பு இழுக்காம விட மாட்டீங்களா இரா.முருகன்..

அப்போ இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ரொம்ப நல்லவங்களா(வம்பு இழுத்தாலும் எல்லை தாண்டித்தான் வம்பு இழுப்பேன்)

**************

நண்பர்களுக்கு ரம்ஜான் தின நல்வாழ்த்துகள்

**************

8 comments:

ஈரோடு கதிர் said...

//இந்தப் படம் வெளியான இப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.//

அரவிந்த் யூ டூ!

என்ன கொடுமையான, மூடத் தனமான விளையாட்டு இது

//(வம்பு இழுத்தாலும் எல்லை தாண்டித்தான் வம்பு இழுப்பேன்)//

ஆட்டோ கடல் வழியாவா வரப்போகுது

ஆனாலும்
துவையல் சுவை

நீ தொடு வானம் said...

//நான் கோவப்பட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் //

ரொம்ப கோவமா இருக்கீங்க போல இந்த வசனத்த சொல்லி இருக்கீங்க..அதை விட
சைலன்ஸ் சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் போதும் என்ன பேச்சு அப்படி கேட்டு இருந்தா பொருத்தமா இருக்கும்

thiyaa said...

நல்ல துவையல் சுவையாக இருந்தது

நீ தொடு வானம் said...
This comment has been removed by the author.
இரும்புத்திரை said...

நன்றி கதிர்

நன்றி கணேஷ்

நன்றி தியாவின் பேனா

தினேஷ் said...

/நீங்க தான் என்னுடைய ஆதர்ஷம்..உங்களைப் பாத்துதான் நான் எழுத வந்தேன் அப்படின்னு யாராவது சொன்னா அது தான் என்னுடைய வெற்றி//

ஏன் இந்த (கொல)வெறீ...
நண்பர்களுக்கு ரம்ஜான் தின நல்வாழ்த்துகள்

மீ டூ..

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்

Nathanjagk said...

கமலின் இந்தமாதிரி நிழல்-நிஜ நிகழ்வுகள் ​தொடுப்பு பற்றி ​தெலுங்கு நண்பன் முன்ன​மே பிரஸ்தாபித்தான். இங்​கே படித்தாகி விட்டது. நன்றி அரவிந்த்!
*
உங்கள் சாட்டிங்க சுவாரஸ்யம்! உங்கள் தீர்க்கமான கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்!
//நான் கடைய அடைக்கப் போறேன் ஒருதடவை சொன்னா //
அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் என் ஆ​சை.