கமலுடன் விவாதம் ஒரே நேரத்தில் விஜய் தொலைக்காட்சியிலும்,கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானது.விஜய் தொலைக்காட்சியில் கமலுடன் மக்கள் விவாதம் செய்தார்கள்.கலைஞர் தொலைக்காட்சியில் அமீர்,சேரன்,மிஸ்கின், லிங்குசாமி விவாதம் செய்தார்கள்.
அமீர் இந்துத்துவா சந்தேகத்தைக் கேட்டார்.கமல் சொன்ன பதில் எனக்கு பிடித்தது.அங்கெ நஸ்ருதீன் ஷா செய்ததால் இந்த கேள்வி வரவில்லை என்று சொன்னார்.எனக்கு ஐந்தில் பதில் மிகவும் பிடித்திருந்தது.காரணம் வெளிப்படையான பேச்சு.
ஜால்ரா சத்தம் அதிகமாக கேட்டதால் விவாதம் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சேரன் சத்தம் அதிகமாக கேட்டது.அமீர் கொஞ்சம் தான் பேசினார்.மிஸ்கின் வழக்கம் போல அறிவுஜீவி தனத்தைக் காட்டினார்.(எ வெட்நெஸ்டேவும், இதுவும் வேறு வேறு படமாம்).முடியல ஏன் எப்படி..லிங்குசாமி லாஜிக் பற்றி பேசினார்.(முதல் படத்தைத் தவிர எந்த படத்திலும் லாஜிக் இல்லை.அது வேற விஷயம்)
அந்த நால்வருக்கு பதில் இந்த நால்வரை நான் சிபாரிசு செய்கிறேன்.சாரு,ஞானி என்ற எழுத்தாளர்களும்,பதிவர்கள் சுகுணா திவாகர் மற்றும் தண்டோரா.பார்வையாளர்களாக உன்னை போல் ஒருவனுக்கு விமர்சனம் எழுதிய எல்லா பதிவர்களும் உண்டு. இது விஜய் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் சங்கமம்.
*************************
நான்,நையாண்டி நைனா,ராஜு பேசிக் கொன்றிந்தப் போது காமன் மேன் பற்றிப் பேச்சு வந்தது.
நான் சொன்னேன் - "காமன் டாய்லெட்ட யூஸ் பண்றவன் காமன்மேனா"
ராஜூ - "காம வயப்படுறவன் காமன்மேனா"
நையாண்டி நைனா - "இனிமேல் நான் சும்மா இருந்தா நல்லா இருக்காது..கமா போட்டு எழுதுறவன் காமன்மேனா"
பிறகு நண்பருடன் பேசிக் கொண்டியிருந்தேன்.அவர் சொன்னது.
"நியாமான விஷயத்திற்கு கோபம் வந்தால் அவன் காமன்மேன்.அதோடு நான் நிறுத்தி இருக்கலாம்.வாய் சும்மா இருக்காதே.
"எதற்கெடுத்தாலும் கோபம் வந்தால் அவன்.."
நண்பர் - "காமடி பீஸு.."
போனவாரம் ஒரு மணிநேர அட்வைஸ் - "அதிகம் கோவப்படாதே..என்ன கொடுமை சார் இது.."
*************************
ஒரே விதமான கருத்து.ஒரு கருத்தை சொன்னால் எனக்கு கோவம் வருகிறது. இன்னொரு கதையைப் படித்தால் அமைதியாக இருக்கிறேன்.
நீதி ஒன்று தான் : உன் கையை மீறி காரியம் நடக்கும் போது அமைதியாக இரு..
ஆங்கிலப் பழமொழி : சொன்னவர் நிச்சயம் ஒரு பிரபலம் தான்.(ஆனால் முட்டாள் என்னைப் பொறுத்தவரை)
கற்பழிக்கப்படும் பெண்ணுக்கு இந்த பழமொழி - "உன்னை கெடுப்பவனை விடாமல் தாக்கு..(பற்களால் கடி,நகத்தால் கீறு),முடியவில்லை என்றால் அவனுடன் சேர்ந்து அனுபவி.
மேலை நாட்டில் சொல்லும் பழமொழி எல்லாம் நமக்கு ஒத்து வராது.இது செல்வேந்திரன் மேற்கோள் காட்டி சொன்ன 100:1 கதை போல இருந்தது.
அந்த அறிஞன் அவன் மனைவிக்கும் சேர்த்து இதை சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.
இப்படி எனக்கு சரியாக தெரியும் கருத்து பிறருக்குத் தவறாகவே தெரிகிறது.மேலை நாடுகளில் சொல்லும் பழமொழிகள் நமக்கு ஒத்துக் கொள்வதில்லை.
நமக்கு ஒத்து வரும் ஜென் கதை..
கழுகு தன (மைனர்)குஞ்சுக்கு இரைத் தேட சொல்லித் தருகிறது.சிறிது பயிற்சி அளித்தப் பிறகு குஞ்சு தனியாக இரைப் பிடிக்க செல்கிறது.முதலில் வாத்துக் குஞ்சைப் பிடித்து வருகிறது.
கழுகு - இதைப் பிடிக்கும் போது என்ன நடந்தது..
குஞ்சு - வாத்து கடுமையாக சண்டைப் போட்டது.ஆனால் காரியம் கையை மீறிப் போனப் போது திட்டாமல் வேலையைப் பார்த்தது.
கழுகு - சரி இதைப் பிடித்த இடத்தில் விட்டு விட்டு வேறு இரைப் பிடித்து வா.
கழுகுக்குஞ்சு இந்த முறை கோழிக்குஞ்சைப் பிடித்து வருகிறது.
கழுகு - இதைப் பிடிக்கும் போது என்ன நடந்தது..
குஞ்சு - காரியம் கையை மீறிப் போனப் பிறகும் அந்த கோழி எனக்கு சாபம் கொடுத்தது..
கழுகு - இதை நீ சாப்பிடலாம்..
*************************
உன்னைப் போல் ஒருவனில் ஐ.ஐ.டி ட்ராப் அவுட்டாக நடித்த ஆனந்துக்கு வாழ்த்துகள்.லயலோ கல்லூரியில் எனக்கு சீனியர்.உன்னைப் போல் ஒருவனின் ஒலிப்பதிவு ஆனந்த் தான்.லண்டனில் சவுண்ட் எஞ்சினீரிங் படித்தவர்.அதைப் பற்றி பாடம் எடுத்தவர். கம்ப்யூட்டர் ஹாக்கராக படத்தில் நடித்தார்.
வாழ்த்துகள் ஆனந்த்.
நான் என் வாழ்கையில் செய்த தவறு லயலோவில் இருந்து வெளியேறியது தான்.
எனக்கு அதிலும் பெருமை தான்.லயலோ ட்ராப் அவுட் எண்டு பெருமையாக சொல்லிக் கொள்வேன்.பாதியில் கல்லூரியில் இருந்து விலகுபவர்கள் ஐ.டி கார்டைக் கொடுத்து விட வேண்டும்.பணம் கட்ட வேண்டும். நான் என் கேடித்தனத்தால் இது எதுவுமே செய்யாமல் என் சான்றிதழ்களை வாங்கினேன்.
நானும் ஒரு லயலோ மாணவன்,ஒரு கேடி என்பதில் பெருமை அடைகிறேன்.
*************************
ஒரு அறிய கண்டுப்பிடிப்பு
பிராபலம் என்ற வார்த்தையின் காலை உடைத்தால் பிரபலம் என்று வருகிறது.
பிரபலம் என்ற வார்த்தையை விட பிராபலம் என்ற வார்த்தை மிகவும் பிடித்துள்ளது.காரணம் முதல் இரண்டு எழுத்து என்று சொல்ல நான் என்ன சாருவா ? கடைசி மூன்று எழுத்து பிடித்துள்ளது - "பலம்"
யாரையாவது பிரபலம் என்று சொல்லும் போது பிராபலம் என்றே விழுகிறது.
அசதியாக இருக்கும் நேரத்தில் காது சரியாக வேலை செய்யவில்லை.அந்த நேரத்தில் இப்படி ஒரு வார்த்தை கேட்டால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.
பட்டர்ப்ளை ப்ளூ ப்ளேம் ரொம்ப நல்லா இருக்கும் வேறு மாதிரி விழுந்து தொலைகிறது.இதற்கு காரணம் வயதா இல்லை வேறு எதுவும் உண்டா..
*************************
Wednesday, September 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நான் எப்பங்க அப்படி சொன்னேன்..?
என்னோட இமேஜை டேமேஜ் ஆக்குறதே வேலையாப் போச்சு.
:-)
அப்பறம் நையாண்டி நைனான்னு சொன்னீங்களே..!அவரு பதிவரா..?
//ஒரு கேடி என்பதில் பெருமை அடைகிறேன்//
சொல்லித் தெரியனுமா
இஃகிஃகி
சொதிசோறுடா மாப்ள..தூள் துவையல்..உன்னைப்போல் ஒருவன் ரீமேக் பண்ணியிருக்கேன்..படிச்சு கருத்து சொல்லி ஓட்டு போட்டுட்டு போ தம்பி
ஒரு பாலோயர காணோம் யாருப்பா அது சொல்லுங்க உங்க பிளாக்கில் வந்து என் பதிவப் பின்னூட்டமா போடுறேன்
என்னை போல் ஒருவனா? ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனந்தை பற்றிய தகவல் புதிது...
//யாரையாவது பிரபலம் என்று சொல்லும் போது பிராபலம் என்றே விழுகிறது.//
அதுதானே உண்மை நண்பா....
//.. இரும்புத்திரை அரவிந்த் said...
உங்க பிளாக்கில் வந்து என் பதிவப் பின்னூட்டமா போடுறேன் ..//
அத படிக்க முடியாம தான் ஓடிட்டாங்க.. விட்டுடுங்களேன் பாவம்..( சும்மா விளையாட்டுக்கு..)
மற்றபடி துவையல் நல்லாருக்கு..
Post a Comment