ஒரு தொடர்பதிவுக்கு யாருமே என்னை கூப்பிடலை என்று வெளிப்படையாகவே புலம்பி இருக்கிறேன்.இப்போ இப்படி ஒரு வாய்ப்பு..இக்கட சூடுங்க எப்படி சலம்புறேன்னு பாருங்க..
தண்டோரா அண்ணன் என்னை ஒரு அருமையான தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. சுவாரசியம்தானே!!
இதன் விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.
................
இதோ ஆரம்பிப்போமா!!
1. A – Avatar (Blogger) Name / Original Name : /இரும்புத்திரை/அரவிந்த்.
2. B – Best friend? : முகத்தைப் பார்த்தே அறிந்து சட்டைப்பையில் காசு வைப்பவன்
3. C – Cake or Pie? : Cake (கேக்குதா.. கேக்கு தா..)
4. D – Drink of choice? காபி என்ற விஷம்.
5. E – Essential item you use every day? கண் (அலை பாயுதே கண்ணா..)
6. F – Favorite color? கறுப்பு! (கார்,உடை,பணம் உட்பட எல்லாவற்றிலும்..) ஒன்றைத் தவிர என்ன கொடும சார் இது..இதில் நான் விதிவிலக்காக இருப்பேனா பார்ப்போம்
7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->யாராவது நிரப்புங்க..
8. H – Hometown? -திருநெல்வேலி..
9. I – Indulgence? - கொஞ்சி கொஞ்சம்.. கெஞ்சி கொஞ்சம்..
10. J – January or February? - ஜனவரி மாதம் -- பிறந்த மாதம்..
11. K – Kids & their names? 'அ' வில் தொடங்கும் பெயர்தான் வைப்பேன்.. இரண்டாவது பெயர் ஆயிரா என்று முடியும்..
12. L – Life is incomplete without? புல்ஸ்டாப்..இந்த வரிக்கும் சேர்த்து..
13. M – Marriage date? - மருந்து சும்மாத்தான் இருக்கு மும்பையில்.. காலாவதி தேதி இன்னும் வரல..
14. N – Number of siblings? ஒன்று ஆறு மாதத்திற்கு முன்வரை..இன்றோ வலையுலகத்தில் கிடைத்தவர்களின் எண்ணிக்கை நிறைய..
15. O – Oranges or Apples?ஒரு ஆறஞ்சி (ஐந்தாறு) ஆப்பிள்..
16. P – Phobias/Fears? நாயை கண்டால்..(பேயை கண்டு இல்லை..)
17. Q – Quote for today? என்னுடைய வாய்ப்பை நானே கெடுத்துக்கிட்டா தான் உண்டு..
18. R – Reason to smile? மர்மங்களின் தொடக்கம்..மழுப்பலான ஆயுதம்..
19. S – Season? வசந்த காலம்..
20. T – Tag 4 People?- நாடோடி இலக்கியன்..லோகு..துபாய் ராஜா..நாஞ்சில் நாதம் (இப்போ பதிவு எழுதுங்க..)
21. U – Unknown fact about me? தெரிஞ்சா சொல்லுங்க..(அட சொல்லிட்டு போங்க..)
22. V – Vegetable you don't like? இப்போ வாழையிலையைக் கொடுத்தால் கூட சாப்பிடுவேன்..(மும்பை சாப்பாடு என்னை மாத்தி விட்டது..)
23. W – Worst habit? இருக்கு..ஆனா இல்ல..
24. X – X-rays you've had? எலும்புகளை எண்ண எடுத்தது..
25. Y – Your favorite food? எது கிடைச்சாலும்..கருவாட்டு குழம்பு + குழம்பில் உடைச்சு ஊத்தின முட்டை..(செய்யத் தெரியலையா..சரி ஒரு பதிவா எழுதுறேன்..)
26. Z – Zodiac sign? ரிஷப ராசி..ரோசினி நட்சத்திரம்..கோத்திரம் தெரியல.. ஒரு அர்ச்சனை பண்ணிருங்க..(ஹலோ நான் சொன்னது கோயில்ல..)
Friday, September 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
பதிவு எழுத ஒரு விஷயமும் இல்லாம இருந்தேன்.. ரொம்ப சந்தோசம்.. ஆனா கேள்வி எல்லாமே உருதுல இருக்கும் போல.. எனக்கு உருது தெரியாதே..
//R – Reason to smile? மர்மங்களின் தொடக்கம்..மழுப்பலான ஆயுதம்..//
இது சூப்பர்..
//Z – Zodiac sign? ரிஷப ராசி..ரோசினி நட்சத்திரம்..கோத்திரம் தெரியல.. ஒரு அர்ச்சனை பண்ணிருங்க..(ஹலோ நான் சொன்னது கோயில்ல..)//
விட்டா ஜாதகமே கொடுத்து பொண்ணு பாக்க சொல்வீங்க போல..
நல்ல புள்ளையாட்டம் நடிக்கிறா மாதிரி இருக்கு!
ஆங்கில எழுத்து அலம்பல் அட்டகாசம்.இந்தா நாங்களும் வந்துட்டம்.....
பாஸ்ட் பதிலகள்..சில பெஸ்ட்டும் கூட..கீப் இட் அப்..
சலம்பல்.. அதுவும் உங்ககிட்டயா? கரும்பு ஜூஸ் குடிக்க கூலியா?
\\இக்கட சூடுங்க எப்படி சலம்புறேன்னு பாருங்க..\\
இதுக்கு என்ன அர்த்தமுங்க..!
சூடுங்கன்னு முன்னாடி போட்டுட்டு அப்பறமெதுக்கு பாருங்கன்னு பின்னாடி.
இததான் பொருட்பிழைன்னு எங்க ஆதி அங்கிள் வந்து சொல்லுவாப்ல...!
:-)
//ஒரு ஆறஞ்சி (ஐந்தாறு) ஆப்பிள்//
இது ஸ்மார்ட்
அர்ச்சனைதானே...ஜிமெயில் சாட்ல பண்ணிடுவோம்
ஆக மொத்தம்.. நாட்டுல நிறைய பேர் வேலை வெட்டி இல்லாம இருக்காங்க போலிருக்கு..!
எல்லா பதில்களும் சூப்பர்! உங்களுக்கு புடிச்ச கலர்லேயே 'எல்லாம்' அமைய.. ரிஷப ராசி..ரோசினி நட்சத்திரம்..கோத்திரம் தெரியல..க்கு - மனதார அர்ச்சனை பண்ணிறேன்.
//24. X – X-rays you've had? எலும்புகளை எண்ண எடுத்தது..//
எல்லா பதில்களும் அருமை நண்பா
\\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆக மொத்தம்.. நாட்டுல நிறைய பேர் வேலை வெட்டி இல்லாம இருக்காங்க போலிருக்கு..!\\
அண்ணே, உங்களையும் சேர்த்துத்தானே...?
:-)
நல்லாயிருக்கு தல
Post a Comment