Saturday, August 29, 2009

தண்டோரா கவிதையும்,மகாபாரத துரோகங்களும்

தண்டோரோ அண்ணன் கவிதையைப் படித்தப் பிறகு சின்ன வயதில் கேட்ட மகாபாரதம் வேறு கோணத்தில் என்னைப் பார்த்து சிரித்தது.

பகவத் கீதாவில் வரும் புகழ் பெற்ற வாசகம்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்"

இதில் எனக்கு உடன்பாடே கிடையாது. தர்மம் வென்றது அதற்கு காரணம் கிருஷ்ணன் செய்த துரோகங்களே.

குருஷேத்திரப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. முதல் பத்து நாட்கள் பீஷ்மரும்,பத்தில் பாதியான ஐந்து நாட்கள் துரோணரும்,அதில் பாதி இரண்டு நாட்கள் கர்ணனும்,அதிலும் பாதியான கடைசி ஒரு நாள் சல்லியனும் கௌரவ சேனைக்கு தலைவர்களாக இருக்கிறார்கள்.

இதில் பீஷ்மரை சிகண்டியை முன்னிறுத்தி அர்ஜுனன் பின்னால் இருந்து அம்பு மழை பொழிய சாய்க்கப்படுகிறார்.

அடுத்து துரோணர் - அவருக்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது மகன் அசுவாத்தாமன். பீமன் "அசுவாத்தாமன்" என்று யானையைக் கொன்று விடுகிறான். அசுவத்தாமன் இறந்தான் என்று எல்லோரும் கத்துகிறார்கள்.குழப்பமடைந்த துரோணர் தர்மனிடம் கேட்கிறார். தர்மன் சுற்றி வளைத்து காதைத் தொடுகிறார்.

தர்மனின் பதில் - "பீமன் கொன்றது அசுவாத்தாமன் என்ற யானையை". "என்ற யானையை" - இது துரோணர் காதில் விழாதவாறு மெதுவாக சொல்கிறார்.கேட்டு விடும் என்ற பயத்தில் அந்த வார்த்தைகளின் உச்சரிப்பின் போது கிருஷ்ணன் வெற்றிச்சங்கை ஊதுகிறார். ஆயுதத்தை கீழே எறிந்த துரோணர் தியானத்தில் அமர்கிறார்.துருபதன் பெற்ற கொள்ளி துரோணரின் தலையை வெட்டுகிறான்.

அதுவரை தரையைத் தொடாமல் ஓடிக் கொண்டிருந்த தர்மனின் தேர் மண்ணைத் தொடுகிறது.இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததால் நரகத்தை ஒருமுறை சுற்றிக் காட்டி தர்மனை பயமுறுத்துகிறார்கள்.

அடுத்து கர்ணன் - இவனை குழப்புவதற்காகவே சல்லியனைத் தேரோட்டியாக அனுப்புகிறார்கள்.கவசக் குண்டலத்தைப் பறிக்கிறார்கள்.உயிர் போக அவன் செய்த தர்மத்தின் பலனைக் கூட விட்டு வைக்காமல் அவனிடம் பிச்சை போல யாசித்து பெறுகிறார்கள்.

கடைசி நாள் போரின் போது யுத்த தர்மத்தை மீறி துரியோதனன் தொடையில் அடித்து கொள்கிறான் பீமன். இடுப்புக்கு மேல் தான் அடிக்க வேண்டும்.அதை மீறச் சொல்லி குடுக்கிறார் கிருஷ்ணன்.

அசுவாத்தாமன் தலைமை ஏற்கிறான்.உத்திரையின் வாரிசை கருவறுக்கப் புறப்படுகிறான். அதை கிருஷ்னான் தடுக்கிறார். அசுவாத்தாமன் குடுமிகள் இருக்கும் மணியோடு சேர்த்து குடுமியும் அறுக்கப்படுகிறது.அறுத்தவன் பீமன்.

இப்படி துரோகங்கள் செய்தே போரில் வென்று விட்டு தர்மம் வெல்லும் என்று உபதேசம் செய்யக் கூடாது.

தர்மம் வெல்லும் எப்படி என்றால் முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி.

கிருஷ்ணரின் படையை விட்டு விட்டு போர் புரியாத கிருஷ்ணரை எடுக்கிறார்கள் பாண்டவர்கள். காரணம் கிருஷ்ணன் - நூறு சகுனிகளுக்கு நிகர்.

தண்டோரா அண்ணனின் கவிதை

நாம் வசிக்குமிடம் எங்கும்
அது காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு தருணத்திற்காக..

தெரியாமல்
அதற்கு பலியாகிறோம்
தெரிந்து அடுத்தவனை பலியாக்குகிறோம்..

ஒத்த பெயருடைய இருவரில்
ஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்
குருவையே வீழ்த்தியது

’குருஷேத்திரம்’ தொடங்கி
’சுப்ரமண்யபுரம்’ சித்திரம் வரை
எல்லா துரோகங்களின் முடிவிலும்
கேட்கப்படும்
”நீயா’ என்ற கேள்விக்கு
நாமாகவும் இருந்தோம்
என்பது வேதனையின்
வெளிப்பாடாகவே..

இன்று கௌரவப் படையில் சேர்ந்து பாண்டவர்களை அழித்த கலியுக கிருஷ்ணன் - இந்தியா.

ஆதாரம் இந்த சுட்டியைப் பார்க்க

14 comments:

லோகு said...

ஆழமான விடயம்.. ரொம்ப நல்ல அலசி இருக்கீங்க அண்ணா.. கலக்கல்..

இரும்புத்திரை said...

நன்றி லோகு

Raju said...

:((

இரும்புத்திரை said...

உங்க கொலைவெறிக்கு அளவே இல்லையா டக்ளஸ்

Nathanjagk said...

நல்ல ஆராய்ச்சி! நல்ல இணைப்பு! தண்டோரா கவிதையும் அருமை!! வாழ்த்துகள்!

இரும்புத்திரை said...

நன்றி ஜெகநாதன்

மணிஜி said...

இந்தியா காரணம் இல்லை
இங்கிருக்கும் போலித் தமிழர்கள்தான் காரணம்.அவர்கள்தான் துரோகிகள்
அப்புறம் என் கவிதையை உலகளவில் கொண்டு போனதுக்கு நன்றி தம்பி

இரும்புத்திரை said...

நன்றி தண்டோரா அண்ணன்

Thamira said...

சிந்தனியின் பதிவுக்கும், தண்டோராவின் கவிதைக்கும் தொடர்பாக பதிவு விரிந்துள்ளது. உங்கள் நடை சிறப்பாக இருக்கிறது.

(பதிவேற்றும் முன் மீள்வாசிப்பு செய்யுங்கள். எழுத்துப்பிழைகள் தவிருங்கள்.)

இரும்புத்திரை said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

துபாய் ராஜா said...

நியாயமான் அறச்சீற்றம் அரவிந்த்.

மகாபாரத உதா'ரணங்கள்' அருமை.மகாபாரதத்தை பலமுறை படித்தால் மட்டும் தான் இவ்வளவு தெளிவாக எழுதமுடியும்.நீங்கள் படித்தது திரு.ராஜாஜி எழுதிய
'வியாசர் விருந்து' ஆக இருக்கும் என்பது என் கருத்து.

விரோதியை விட துரோகி கொடுமையானவன். நாமெல்லாம் மிகவும் கொடுமையானவர்கள்தான்.

நானும் இதற்காக பதிவிட்டுள்ளேன்.

பதிவிட்டு பழித்திடுவோம்....
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_30.html

இரும்புத்திரை said...

நன்றி துபாய் ராஜா

கானகம் said...

//பகவத் கீதாவில் வரும் புகழ் பெற்ற வாசகம்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்" //

இது பாஞ்சாலி சபதத்தில் வரும் வாசகம்.. பகவத் கீதையில் அல்ல

இரும்புத்திரை said...

நன்றி ஜெயக்குமார்