Wednesday, September 23, 2009

(பத்தாம் (நம்பர்),(எழுத்து))

முதலில் பழமாகயிருந்து(1-a-apple)
விளையாட்டுப் பொருளாய் மாறுகிறேன் அடுத்ததில் (2-b-ball)
மூன்று முறை அழகாக சோம்பல் முறித்து (3-c-cat)
நான்காவதில் இறக்கிறேன். (4-d-dead)
ஐந்தாம் ஜென்மத்தில் இடத்தை உருவத்தால்
நிரப்புகிறேன் (5-e-elephant)
ஆறில் தந்தையாக மாறுகிறேன் (6-f-father)
பதினொரு முத்தங்களுடன் அடுத்த
காதலைத் தேடுகிறேன்(11-k-kiss,12-l-love)
அடுத்த நொடி அம்மா வருகிறாள் (13-m-mother)
உறங்கும் பத்தொன்பது வயது மகனை எழுப்ப (19-s-son)
பத்து வயதில் பார்த்த பிம்பம் துள்ளி வருகிறது.. (10-j-jumb)

ஒரெழுத்து இல்லாததால் (நீ)
கிடைக்கும் இரண்டெழுத்தின் சுகத்தால் (மது,மாது,சூது)
மறக்கடிக்கப்படுகிறது
மூன்றெழுத்து மிச்சங்கள் (பரிவு,பாசம்,நட்பு,உறவு)
நான்கெழுத்தாலும் முடியவில்லை (முயற்சி,மரணம்,தற்கொலை)
ஐந்தெழுத்தில் இணைகிறேன் (கல்யாணம்,குடும்பம்)
மறுபடியும் ஒரெழுத்து .. (நீ)

டிஸ்கி : இது கவிதையா.......

13 comments:

நீ தொடு வானம் said...

//டிஸ்கி : இது கவிதையா....... //

ஒரு மண்ணும் புரியல..

இரும்புத்திரை said...

//ஒரு மண்ணும் புரியல..//

பதிவ செலக்ட் பண்ணி படிங்க..

Ashok D said...

நல்லாதான்யாயிருக்கு...

எதுக்கும் ஜ்யோவ்ராமுக்கு பார்வர்ட் பண்ணுப்பா...
அப்பதான் கவிதையின் முழு அர்த்தம் விளங்கும்.

jokes apart

நல்லா ரைமிங்கா எழுதியிருக்கீங்க... நல்ல முயற்சி
keep it up

Beski said...

இது விடுகதையா?

நீ தொடு வானம் said...

இது உள்குத்து இருக்கு போல

இரும்புத்திரை said...

நன்றி அசோக்

நன்றி எவனோ ஒருவன் ஆமா விடுகதை தான்

நன்றி கணேஷ் ஆமா உள்குத்து இருக்கு

தினேஷ் said...

இரெண்டாவது சூப்பர்..

Anonymous said...

இது கவிதை தான்.
புதுக்கவிதைனு சொல்லிக்கலாம்.
பழமையில் ஊறாமல் புதுசா எழுதுங்கனு டிஸ்கி எழுதி, எப்படியாச்சம் கவிதையாக்கிடலாம்..
#
சூப்பர் கவிதை
~

Anonymous said...

உக்காந்து யோசிச்சு கவிதை எழுதின உங்களுக்கு ஒரு பின்னூட்டம் தகுமா?
அதான் இன்னோன்னு..
~
நான் உங்ககிட்ட கவிதை எழுத கத்துக்கிட தினமும் கவிதை கிளாஸ் வரட்டுமா?

Anonymous said...

சரி 10வது கமெண்டும் நானே எழுதிடுறேன்.
~
ஆமா அந்த "நீ" யாருங்க..?

நையாண்டி நைனா said...

ஒன்னும் பிரியலை.... அதனாலே இது கவிதை தான்....

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்

நன்றி சண்முகம் சொல்லி தந்ததே ஜெகன் அண்ணன் தான்

நன்றி நையாண்டி நைனா

Nathanjagk said...

//அனுபவம், ஆர்வக்கோளாறு, கவிதை, கிறுக்கு, மொக்கை, லூசுத்தனம் //
இப்படி ​லேபி​ளைப் ​போட்டுட்டு.. கலக்கல் கச்​சேரியா??
வித்தியாசமான ட்ரீட்​மெண்டு (அல்லது ​கொல முயற்சி??)
டிஸ்கியில்.. பிரியாதவங்க ​கவி​தை​யை செலக்ட் பண்ணி மறுவாசிப்பு ​செய்யவும் என்று ​போட்டிருக்கலாம்!

​வெரி​வெரி​வெரி குட்!!