Thursday, September 17, 2009

ரெட்டை அர்த்தம்

சின்ன வயதில் இருந்தே படம் வரைவது(வரைய தெரியாது),அசைன்மெண்ட் எழுதுவது இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது.இந்த ஒரு காரணத்தினாலே நான் ஒரு அவுட்ஸ்டாண்டிங்க் ஸ்டுடண்ட்(பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி வரை).பள்ளி நடத்தி கொண்டிருந்த ஒரு முட்டாள்(ஸாரி எங்க சேர்மன அப்படித்தான் கூப்பிடுவோம்) ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்(எல்லாம் என் நேரம்).நான் பள்ளியிலே இருந்தப்போ கூட இத்தன அசைன்மெண்ட் எழுதவில்லை.

ஒரு கட்டத்துல பொறுக்க முடியாமல்(அது சரியில்ல இது சரியில்ல இப்படி சொல்லியே நான் எழுதிய தாளை எல்லாம் கிழித்து விடுவார்கள்) பொங்காமல் எழுந்து ஒரு வழி கண்டுப் பிடித்தேன்.அதுவரை எதிரியாகவே நினைத்த பெண்களிடம் நட்பு கொள்ள முடிவு செய்தேன்.நல்ல படம் வரையும் பெண்ணாகப் பார்த்து "நீங்க ரொம்ப நல்லா வரையிறீங்க.." அப்படி ஆரம்பித்து மொக்கையை முடிக்கும் போது "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று கேட்டேன்.

அடுத்த நாள் வரைந்து தந்தவளிடம்(பேப்பர் உபயம் கூட அவளே).தொடக்கப்புள்ளி மட்டும் தான் நான் வைப்பேன்.பசங்க என்னைப் பார்த்து இதை தொடர ஆரம்பித்து விட்டார்கள்.வரைய ஒருத்தி.இப்ப எழுத ஒரு ஆள் தேவை.பிறகு அதற்கும் ஒரு பெண்ணைப் பிடித்தாகி விட்டது. இங்கே தான் எனக்கு சனி பிடிக்க ஆரம்பித்தது.(மத்திய சனி வேறு நடந்து கொண்டிருந்தது).இந்த காலக்கட்டத்தில் தான் இந்த இரண்டு பேரும் சேர்ந்து டெலிபோனில் கேடித்தனங்கள் சொல்லிக் கொடுத்து ஒரு அப்பாவியை அ"ட"ப்பாவியாக மாற்றினார்கள்.

அந்த இரண்டு பெண்களும் ஒரே பள்ளியில் படித்தவர்களாம்.முகம் குடுத்து பேசாத எதிரிகளாம்.இது எனக்கு எப்படி தெரியும்.தெரிந்தவுடம் கவலைப்படவில்லை.சரி இனி குழப்பத்தை தவிர்க்க..

முதல் பெண் பெயர் - எக்ஸ்

இரண்டாவது பெண் பெயர் - வொய்

இந்த கதையை சொன்னது - இசட் என்ற பெண்ணிடம்

வொய்யிடம் பழகுவது எக்ஸிற்கு பிடிக்கவில்லை.தனியாக இருக்கும் போது என்னிடம் பேச வந்தாள்.எல்லாம் சொல்லி முடித்தவுடன் கடைசியாக சொன்னது..

எக்ஸ் - "அ.... நான் ரொம்ப பொஸசிவ்.."

அந்த சமயத்தில் நான் ஆங்கிலத்தில் ஒரு அரகுறை..(16 வயதினிலே ரஜினிகாந்த் போல நானாகவே மொழி பெயர்த்து அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து கொண்டேன்.இப்போ எப்படி என்றால் நான் வேலைகாரன் ரஜினி மாதிரி ஐ கேன் வாக் இங்கீஸ்,ஐ கேன் டாக் இங்கீஸ்,ஐ கேன் லாவ் இங்கீஸ்.பொஸசிவாக இருந்தாலே பிரச்சனை தான்)

நான் சொன்னேன்."நல்ல டாக்டரா பாக்க வேண்டியது தானே.."நல்லவேளை அவள் காதில் விழவில்லை.திரும்ப சொல்ல தைரியமில்லை.அவளுக்கு கராத்தே தெரியும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

இப்படி வொய் மேல் இருந்த வெறுப்பு என் பக்கம் திரும்பியது.சின்ன சின்ன சண்டைகள் ஒரு பெரிய சண்டைக்கு பிறகு முடிந்து போனது.

கையெழுத்தை வைத்து கண்டுப்பிடிக்க தொடங்கி விட்டார்கள்.(ஒரு சமயம் டபிள்யூ என்ற மூன்று நண்பர்களுக்கு அசைன்மெண்ட் எழுதி தர எல்லோரும் மாட்டி கொண்டோம்).கண்கொத்தி பாம்பாக பார்க்க ஆரம்பித்தார்கள்.வொய்யும் எழுதி தர முடியாத நிலை.

ரொம்ப நாட்களுக்கு அந்த கொடுமை தாங்காமல் இந்த தடவை நிஜமாக பொங்கி எழுந்தேன்.பசங்க யாரும் எழுதக் கூடாது என்று முடிவு செய்தோம்.சில கருணாக்கள் எங்கள் கூட்டத்திலும் உண்டு.எழுதி நல்லப் பெயரும்,மார்க்கும் வாங்கி கொண்டார்கள்.நாங்கள் ஒரு பதிமூன்று பேர் மட்டும் எழுதுவதை நிறுத்தி விட்டோம்.

சரி கதைக்கு வருவோம்...

அவள் சண்டையிட்டு பிரிந்த அன்று தான் டிக்ஸ்னரியைத் தேடி கொண்டிருந்தேன்.

"அம்மா..அம்மா இங்க இருந்த டிக்ஸ்னரியப் பாத்தியா.."

"நீயே ஒரு அகராதி பிடிச்சப் பய..உனக்கு எதுக்கு இப்போ டிக்ஸ்னரி.." - அம்மா

நானே கண்டுப்பிடித்து பொசஸிவ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.
(மருதமலை வடிவேல் ஞாபகத்திற்கு வந்தார்.அவர் கேன்ஸரை டிரான்ஸர் என்று சொல்லுவார்.)

இசட் - "ம்.. ம்..நானும் பொஸசிவ்.."

"என்ன நக்கலா..ஒடிப் போயிரு.." என்று கோபத்தில் கத்தி விட்டேன்.

நாற்பது வருடங்கள் கழித்து..

"அமர் என்ன ஏதையோ ஒளிச்சி வைச்சி பாக்குற..காட்டு பாக்கலாம்.." என்று பேரனிடம் கேட்டேன்.

"இல்ல அந்த பொண்ணு 'ஜி' ஒரு லெட்டர் கொடுத்தா..அதான் படிச்சிகிட்டு இருக்கேன்.."

"என்ன அமர் லெட்டர் இங்கிலீஸ்ல இருக்கு.."

"ஆமா..அவ பி.ஏ இங்கிலீஸ் லிட்டிரெச்சர் படிக்கிறா.."

"சரி இத வைச்சுகோ..உனக்கு தேவைப்படும்.." என்று டிக்ஸ்னரியைக் கொடுத்து விட்டு வந்தேன்.

டிஸ்கி : பொண்ணுங்க மட்டும் எப்படி எல்லா மொழியையும் உடனே கத்துகிடுறாங்க..
(பின்ன கொஞ்ச நேரம் கூட வாய் பேசாம எப்படி இருக்க முடியும்..)

17 comments:

லோகு said...

பொண்ணுங்க பேசும் போது சரியா பேசறாங்களா இல்ல தப்பா பேசறாங்களா ன்னு யார் கவனிக்க போறாங்க.. அதுதான் பேசறாங்க.

நீ தொடு வானம் said...

//ஐ கேன் வாக் இங்கீஸ்,ஐ கேன் லாவ் இங்கீஸ்//

விளக்கம் கொடுக்க முடியுமா

இரும்புத்திரை said...

நடக்கும் போது செருப்பு இழுத்து நடப்பீங்க

எப்படி சத்தம் வரும் "சார்.." அது ஒரு இங்கீஸ்

சிரிக்கும் போது ஒரு சத்தம் வரும்

ஹி..ஹி இது ஒரு இங்கீஸ்

நையாண்டி நைனா said...

பதிவை காட்டிலும் இங்கே கொடுத்திருக்குற விளக்கம்.... அப்ப்பா!!!
ஆமா... நீங்க "மப்ஸ்டர்" அகராதி பயன்படுதுறீன்களோ?

இரும்புத்திரை said...

நன்றி லோகு

நன்றி நைனா பால்ஸ் அகராதி அக்மார்க் கோவை தயாரிப்பு

தினேஷ் said...

/ பால்ஸ் அகராதி அக்மார்க் கோவை தயாரிப்பு//

அது டாஸ்மாக் தயாரிப்பு இல்லையா...

தினேஷ் said...

//சின்ன வயதில் இருந்தே படம் வரைவது(வரைய தெரியாது),அசைன்மெண்ட் எழுதுவது இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது.இந்த ஒரு காரணத்தினாலே நான் ஒரு அவுட்ஸ்டாண்டிங்க் ஸ்டுடண்ட்(பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி வரை).பள்ளி நடத்தி கொண்டிருந்த ஒரு முட்டாள்(ஸாரி எங்க சேர்மன அப்படித்தான் கூப்பிடுவோம்) ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்(எல்லாம் என் நேரம்)//

same blood

தினேஷ் said...

/அதுவரை எதிரியாகவே நினைத்த பெண்களிடம் நட்பு கொள்ள முடிவு செய்தேன்.நல்ல படம் வரையும் பெண்ணாகப் பார்த்து "நீங்க ரொம்ப நல்லா வரையிறீங்க.." அப்படி ஆரம்பித்து மொக்கையை முடிக்கும் போது "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று கேட்டேன்.//

அடடா இது தெரியாம நாலு வருஷம் கஷ்டப்பட்டுட்டேனே....

தினேஷ் said...

/இங்கே தான் எனக்கு சனி பிடிக்க ஆரம்பித்தது.(மத்திய சனி வேறு நடந்து கொண்டிருந்தது)//

ரெண்டு சனிக்கு நடுவில ஒரு சனியா ? அய்யோ ஒரே சளியா இல்ல சனியா இருக்கு

தினேஷ் said...

/"நீயே ஒரு அகராதி பிடிச்சப் பய..உனக்கு எதுக்கு இப்போ டிக்ஸ்னரி.." - அம்மா//

ஆமா அகராதிக்கு ஏன் அகராதி...

Unknown said...

//.. லோகு said...

பொண்ணுங்க பேசும் போது சரியா பேசறாங்களா இல்ல தப்பா பேசறாங்களா ன்னு யார் கவனிக்க போறாங்க.. அதுதான் பேசறாங்க. ..//

நீங்க கவனிச்சுருக்கிங்களா..??!!

Raju said...

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ.
1234567890

க.பாலாசி said...

//நல்ல படம் வரையும் பெண்ணாகப் பார்த்து "நீங்க ரொம்ப நல்லா வரையிறீங்க.." அப்படி ஆரம்பித்து மொக்கையை முடிக்கும் போது "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று கேட்டேன்//

நண்பா நீங்க நம்மளமாதியா....சரிதான்...

நல்லாருக்கு நண்பா....

Nathanjagk said...

ஓ.. ​மை காட்...! அரு​மையா அனுபவம் மாதிரி ஆரம்பிச்சு க​டைசி பாராவில் பு​னைவா திரியற ந​டை மிக அற்புதம்!!
அ​சைன்​மெண்ட் எழுதித்தரும் ​பொஸஸிவ் ​தேவ​தைகள் (இப்பவும் இருப்பார்கள்) ​மென்​​மேலும் வாழ்க!
உங்க​ளைப் பற்றி ஒரு இடு​கை ​போட்டிருக்​கேன்!

துபாய் ராஜா said...

X + Y + Z = W ??!!... :))

துபாய் ராஜா said...

//"நீயே ஒரு அகராதி பிடிச்சப் பய..உனக்கு எதுக்கு இப்போ டிக்ஸ்னரி.." - அம்மா//

தாயறியாத சூல் உண்டா...??!! :))

உஷாரு அரவிந்த், கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவும்,ஊட்டுக்கார அம்மாவும் கூட்டணி சேர்ந்து கும்மிடப் போறாங்க..... :))

துபாய் ராஜா said...

டிஸ்கி : பொண்ணுங்க மட்டும் எப்படி எல்லா மொழியையும் உடனே கத்துகிடுறாங்க..

குட் கொஸ்டின்.... :))