காதலின் சுவாரஸ்யமான பரிமாணங்களைப் நான்கு கட்டங்களாகப் பார்க்கலாம்.காதல் கட்டங்களைக் கட்டம் கட்டி நகர்த்துவோம்.
1.முதல் கட்டம் (லவ் - LOVE)
L - LOOK
O - OBSERVE
V - VERIFY
E - ENJOY
இதில் எல்லாமே இருந்தது.பார்த்து,கவனித்து அநியாயத்துக்கு ஆராய்ந்து எல்லாம் முடிந்த பிறகு தான் கடைசி கட்டத்திற்கு வருவார்கள்.பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்.அக்கா பெண்ணையோ அல்லது ஏதாவது உறவு பெண்ணையோ(வேற வழி) காதலித்து கொண்டு திரிவார்கள்.பேசுவதற்குள் நாக்கு வறண்டு ஓட்டிக் கொள்ளும்.சக்சஸ் ரேட் ஜாஸ்தி(கல்யாணத்தில் முடிய).
இரண்டாவது கட்டம் (லோ -LOE )
பரவலாக நிறைய பேர் படிக்க ஆரம்பித்தவுடன் ஆராய்வது எல்லாம் நின்றுப் போனது.காதலுக்காக லோ லோ என்று அலைந்தார்கள்.ஜாதி மாறி,மதம் மாறி திருமணம் நடந்தது.பிடித்தப் பெண்ணைக் கவனித்து கட்டம் கட்டி கல்யாணம் செய்தார்கள்.சக்சஸ் எல்லாம் இருந்தது.ஆனால் என்ன ஒரு பிரச்சனை அதிர்ஷ்டமும் வேணும்.(அருவா,வேல் கம்பு இன்னும் இத்யாதி ஆயுதங்களில் இருந்து தப்பிக்க).தப்பித்தவர்கள் ஆதர்ஷமாக வாழ்ந்தார்கள்.
மூன்றாவது கட்டம் (லே - LE)
சிக்கல்களின் தொடக்கமே இந்த மாதிரி காதல்களில் தான் ஆரம்பிக்கிறது. கவனிப்பும் கிடையாது.ஆராய்வது கிடையாது.கண்டதும் காதல்.பண்ணும் போது நல்லாத்தான் இருக்கு.ஆனா கல்யாணம் அல்லது சேர்ந்து வாழும் போது தான் பிளஸ் எல்லாம் மைனசாக மாறுகிறது. இருவருடைய ஆக்கமும் தெரிய வந்து வீக்கமாக மாறுகிறது.
நாலாவது கட்டம் ( ஈ - E)
ரொம்ப வேகம்.டூ மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி சீக்கிரம் தயாராகி விடும்.(கடைசி கட்டம்).ஈ மாதிரி பாக்கிற எல்லா எடத்துலயும் மனசு உக்காரும்.சாக்கடை அடைக்கும்.சரி செய்ய வந்தா காரணம் தெரியும்.சிக்கினவனுக்கு பிரச்சனை.சிக்காதவனுக்கு எண்ணிக்கை.
டிஸ்கி :
யாருக்கு எது வேணுமோ அந்த கட்டத்துல விளையாடுங்க
Saturday, September 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ம்ம் ரொம்பத்தான் மினக்கறியல் போல்
//மினக்கறியல்//
இப்படின்னா என்ன புது வகையான சமையலா
நன்றி தியாவின் பேனா
அண்ணே என்ன சொல்ல வர்றீங்கண்ணே புரியலை...
அரவிந்த்,எல்லா கட்டத்துலயும் கலந்து கட்டுறீங்க போலிருக்கு..... :))
சிறுத்தை சிக்கும்.சில்வண்டு சிக்காதுடி... :))
//சிக்கினவனுக்கு பிரச்சனை.சிக்காதவனுக்கு எண்ணிக்கை//
தி பெஸ்ட்டு!!
இப்படி காதலை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்ச அரவிந்துக்கு காதலியுண்டா?
Post a Comment