Monday, September 14, 2009

அசத்திய அறிமுக இயக்குனர்கள்

அறிமுக இயகுனர்களால் மட்டுமே சினிமா அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு போக முடியும் என்பது என்னுடைய கருத்து.பாரதிராஜாவின் வருகைக்கு பிறகே தமிழ் சினிமாவில் ஒரு புது இரத்தம் பாய்ச்சப்பட்டது.அதனால் அவரில் இருந்து ஆரம்பிப்போம்.

16 வயதினிலே : பாரதிராஜா

மயில் என்றுதான் படத்திற்கு முதலில் பேர் வைக்கப்பட்டது.இளையராஜா - பாரதிராஜா சேர்ந்து கலக்கிய படம்.முதலில் இந்த படத்தில் பணி புரிய இளையராஜா மறுத்துள்ளார்(ஈகோ - அவர் வாழ்க்கைச் சுவடை படித்து தெரிந்து கொள்ளலாம்.இதுவே ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக இருந்தது).இந்த படம் கூட ஆங்கில படத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.(மறுபடியும் இளையராஜா வாழ்க்கை சுவடு).கமல்,ரஜினி இருவருக்கும் இது ஒரு மைல்கல்.

கோகிலா(கன்னடம்) - பாலு மகேந்திரா

கலைஞனுக்கு மொழி தடையில்லை என்று நிருபித்த படம்.கமல்,ஷோபா,மைக் மோகன்(அங்கே அவர் கோகிலா மோகன்) என்று எல்லோரும் நடித்த படம். கமலின் மிக சிறந்த நடிப்பு என்றால் இந்த படத்தை தான் சொல்வார்கள்.( மதன் சொன்னது - இந்த படத்தைப் பார்த்த பிறகு கமலின் நடிப்பை பற்றிய விமர்சனங்களை நான் மாற்றி கொண்டேன்).கமல் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.

முள்ளும் மலரும் - மகேந்திரன்

பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு.ரஜினி,ஷோபா,சரத்பாபு என்று மும்முனை பாசப் போராட்டங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய படம். "இன்ஜீனியர் சார் உங்கள இப்பவும் எனக்கு பிடிக்கல.." என்று இறுதிகாட்சியில் ரஜினி வசனம் பேசிய போது சரத்பாபு கோவப்பட்டு எங்கோ போய் விட்டாராம்.அந்த அளவிற்கு ஒரு அழுத்தமான படம்.(கல்யாணத்தை விட அண்ணனே முக்கியம் என்று ஷோபா ஒட்டி வரும் காட்சி ஒன்றே போதுமே)

பன்னீர் புஷ்பங்கள் - வாசு - பாரதி

வாசு - சந்தானபாரதி இணைந்து இயக்கிய படம்.படிக்கும் காலத்தில் வரும் காதலை பற்றிய கதை.இதன் தொடர்ச்சி என்று துள்ளுவதோ இளமை படத்தை எடுத்து கொள்ளலாம்.

புதிய பாதை - பார்த்திபன் .

கமலுக்கு எழுதிய கதை.பிறகு பார்த்திபன் நடித்து விட்டார்.வித்தியாசமான திரைக்கதை.

புது வசந்தம் - விக்ரமன்

அந்த காலக்கட்டத்தில் ஆண் - பெண் நட்பை சொல்லிய படம்.வெற்றியைத் தேடி கால் தேய நடக்கும் ஒவ்வொரு இளைஞனின் போராட்டத்தையும்,ஏக்கத்தையும் இந்த படத்தில் பார்க்கலாம்.

கமலஹாசன்

கமல் தான் அந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு எல்லாம்.அந்த இயக்குனரோடு சண்டை.பாதி படத்தை கமல் தான் இயக்கினார்.பேர் போடவில்லை(மன்மதன் சிம்பு இதை கொஞ்சம் யோசிங்க..)

ஜென்டில்மேன் - ஷங்கர்

அழகிய குயிலே என்று படம் எடுக்க அலைந்தவரை கோடம்பாக்கம் மாற்றியதற்கு உதாரணம் தான் இந்த படம். அவரால் கடைசி வரை அந்த படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.

பாரதி கண்ணம்மா - சேரன்

சேரனின் வருகையை பறைசாற்றிய படம்.பெரிய வீட்டில் இழவு விழுந்திரிச்சி படுக்கையில் கிடக்கும் பாட்டி என்று எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் மீனா இறந்தியிருப்பார்.பிறகு பார்த்திபனும் சிதையில் விழுந்து விடுவார்.(ஆண் முதல்முதலாக உடன்கட்டை ஏறுவார்).

சேது - பாலா

கமல் நடிக்க வேண்டிய படம் இது என்று கதை சொல்லும் போது விக்ரமிடம் சொல்லியுள்ளார் பாலா.யாராவது ஒருவர்(நாயகன் அல்லது நாயகி) இறப்பது என்ற முடிவை ஆரம்பித்து வைத்த படம். பாலு மகேந்திராவின் பள்ளியின் வெற்றியை சொன்ன முதல் படம்.

இன்னும் வந்த சில வித்தியாசமான படங்கள்.

கண்ணெதிரே தோன்றினாள் - இரவிச்சந்திரன்

காதலை விட நட்பை பெரிது என்று சொன்ன படம்.

விரும்புகிறேன் - சுசிகணேசன்

காதலின் அழுத்தத்தை சொன்ன படம்.

மின்னலே - கௌதம் மேனன்

இன்று பார்த்தாலும் சலிக்காத படம்.

இந்தப் படத்தை பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை.

சுப்ரமணியபுரம் - சசிகுமார்.

வெண்ணிலா கபடிக்குழு - சுசீந்திரன்

பசங்க - பாண்டியராஜ்.

யாராவது விடுபட்டு இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும்.

21 comments:

ஜோ/Joe said...

நல்ல தொகுப்பு.

பாண்டியராஜன் - ஆண்பாவம்
சுரேஷ் கிருஷ்ணா - சத்யா

இரும்புத்திரை said...

பாண்டியராஜனின் முதல் படம் - கன்னிராசி

சத்யா கமலின் ஆளுமை இருப்பதால் குறிப்பிடவில்லை

லோகு said...

அருமையான தொகுப்பு அண்ணா..

ஒரு தலை ராகம் - டி. ஆர்

இரும்புத்திரை said...

டி.ராஜேந்தர்,வெங்கட் பிரபு மிஸ் ஆகி விட்டது

Raju said...

வெங்கட் பிரபுவா..?
உங்க குரு நாதர் கோவிச்சுக்க போறார்.

Mothiyoci said...

k.s. Ravi kumar ?

Mothiyoci said...

amir ?

நையாண்டி நைனா said...

Why do u missed. Mr.Naiyaandi Naina?

Oh.. Sorry. It is a collection of Tamil films and Directors.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜயகாந்த் - விருத்தகிரி(விரைவில்) அட மூணு V.
கே.எஸ்.ரவிகுமார் - புரியாத புதிர்
அர்ஜுன் - ஜெய்ஹிந்த்
சத்யராஜ் - வில்லாதி வில்லன்
எழிழ்- துள்ளாத மனமும் துள்ளும்
எஸ்.ஜெ.சூர்யா - வாலி
வசந்த்- கேளடி கண்மணி

Senthil said...

sundarrajan -----
ameer
Ram - katrathu tamil (padam ottavillai enpathu veru visayam)
paakiyaraj -

இரும்புத்திரை said...

//விஜயகாந்த் - விருத்தகிரி(விரைவில்) அட மூணு V.//

சற்று முன் கிடைத்த தகவல்

நாங்க இன்னும் ரெண்டு வெடிக்காத ஆர்.டி.எக்ஸ் வைச்சு இருக்கோம்

பேரு வேணுமா கேபிள் சங்கர் மற்றும் தண்டோரா

ஒரு ஹாலிவுட் இயக்குனர் இப்போ வருவார்

நையாண்டி நைனா said...

/*ஒரு ஹாலிவுட் இயக்குனர் இப்போ வருவார்*/

Who is he?

இரும்புத்திரை said...

//நையாண்டி நைனா said...
/*ஒரு ஹாலிவுட் இயக்குனர் இப்போ வருவார்*/

Who is he?
//

? he is who

Raju said...

\\Who is he?\\

குயிக் கன் முருகன்.

க.பாலாசி said...

நல்ல ஆராய்ச்சி கட்டுறை நண்பா....

நையாண்டி நைனா said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
\\Who is he?\\

குயிக் கன் முருகன்.*/

Arvind???

மணிஜி said...

ரொம்பதான் மெனக்கெடற தம்பி

துபாய் ராஜா said...

ஊர்ங்க பேருல படம் எடுத்து
பீ(பே)தியை கெளப்பிட்டிருக்கும் பேரரசை விட்டுட்டிங்களே அரவிந்த்..

Ashok D said...

nice one

(ஈகோ - அவர் வாழ்க்கைச் சுவடை படித்து தெரிந்து கொள்ளலாம்.இதுவே ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக இருந்தது)- இந்த வரிகள் தேவையில்லாதது அரவிந்த்

இரும்புத்திரை said...

நன்றி ராஜு

நன்றி சும்மா

நன்றி நைனா

நன்றி ரமேஷ்

நன்றி செந்தில்

நன்றி பாலாஜி

நன்றி துபாய் ராஜா

நன்றி அசோக் இனிமே இது போல வராமல் பார்த்துக் கொள்கிறேன்