Wednesday, September 16, 2009

ஆண்ணியம் - ஈயம்+பித்தளை

ஆண்ணியம் பேசும் கூட்டத்தை சிங்கம் வழி நடத்தும் செம்மறி ஆட்டு கூட்டத்துடன் ஒப்பிடலாம்.பெண்ணியம் பேசும் கூட்டத்தை செம்மறி ஆடு வழி நடத்தும் சிங்கக் கூட்டத்துடன் ஒப்பிடலாம்.இறுதியில் வெல்ல போவது யார் என்று பார்த்தால் சிங்கத்தைத் தலைவனாக கொண்ட அந்த ஆட்டுக் கூட்டம் தான் வெற்றி பெறும்.

எப்படி என்று பார்ப்போம்..

முதலில் வரதட்சணை - வரதட்சணை என்பது பெண் தீர்மானிக்கும் விசயம் அல்ல என்றாலும் அதனால் தான் ஆண் ஆதிக்கம் வளருகிறது.திருமணமும் வரதட்சணையும் குடும்பம் சம்பந்தம் பட்டது என்றாலும் பெண்ணியம் பேசுபவர்கள் எல்லோரும் வரதட்சணை கொடுப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.அதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அது ஒரு ஆயுதமாக ஆண்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

என் கல்லூரி காலத்தில் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன பெண் தான் அதிக வரதட்சணை கொடுத்தது.பேசும் போது என்ன வேண்டுமானாலும் பேசுவது,பிறகு சமரசம் செய்து கொள்வது.அமெரிக்கா என்றவுடம் அந்த புரட்சி பெண் மாறி விட்டாள்.

பெண்கள் அவர்களை விட அதிகம் படித்த மற்றும் சம்பாதிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.அவர்களை விட குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஆணைத் திருமணம் செய்தது கொள்ளுங்கள் அப்படி செய்தால் விரைவில் கட்டுக்குள் வந்து விடும். அப்படி செய்தால் கணவனிடம் ஏதாவது சொன்னால் "என்னை விட அதிகம் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாயா.." என்று கணவன் சொல்வான் என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது.

மேலே சொன்னது விதண்டாவாதம் என்று சொன்னால் "ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி விட்டு பஸ்சில் தனிசீட்டு வேண்டும்" என்று கேட்பதும் விதண்டாவாதம் தான். இப்படி சொல்வது வாதம் என்றால் மேலே இருப்பதும் வாதம் தான்.

கல்யாணம் முடிந்த பிறகு ஏன் வரதட்சணை புகாரில் மற்றவர்களை உள்ளே தள்ள வேண்டும்.கல்யாணப் பேச்சு எடுக்கும் போதே வரதட்சணை கேட்டார்கள் என்று புகார் செய்ய வேண்டியது தானே.அப்படி ஒரு பத்து பேர் செய்யுங்கள்.கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள்.எல்லாம் சரி ஆகி விடும்.

வரதட்சணை வாங்க மாட்டேன் என்று யாராவது சொன்னால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று ஏன் ஊர் பக்கம் ஒருவரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.வாங்குனாலும் பிரச்சனை.வாங்காவிட்டாலும் பிரச்சனை.இரண்டு பக்கமும் அடி,இடி எல்லாம் விழுகிறது.

பெண் குற்றம் சாட்டினால் உடனே வேட்டிய வரிஞ்சு கட்டிக்கிட்டு விசாரிக்காம அந்த ஆண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இந்த மாதிரி பிரச்சனையில் அதிகம் அப்பாவி ஆண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் தவறு செய்யும் பக்கம் தப்பி விடுகிறது.

மும்பையில் ஒரே இருக்கையில் தான் ஆணும்,பெண்ணும் பயணம் செய்கிறார்கள் என்ன பிரச்சனை வருகிறது.இதுவரை ஒன்றும் இல்லை.இதுவே ரயிலில் மகளிர் பெட்டியை எடுத்து கொண்டால் ஒரு பெண்ணை ஏற விடாமல் நான்கு பெண்கள் அந்த பெண் கீழே விழுந்து இறந்து விடுகிறாள்.நல்ல ஒற்றுமை பெண்களிடம்.

பெண்களிடம் வம்பு செய்வது சில படிக்காதவர்களும்,சில படித்த முட்டாள்களும் தான்.அதற்கு ஒரு உதாரணம்.

ஒருவன் பேருந்தில் பயணம் செய்யும் போது பக்கத்து இருக்கையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் வம்பு செய்கிறானாம்.அந்த பெண் ஒரு ஊமை.எதிர்ப்பு தெரிவிக்காததால் மடிந்து விட்டது என்று ஊர் பொய் சேரும் வரை தொல்லை கொடுத்து கொண்டேயிருந்தானாம்.மேலும் எட்டு வயது குழந்தைகள் முதல் எதிர்ப்பு தெரிவிக்காத எல்லாரிடமும் இது போல நடப்பானாம்.இது இணையத்தில் இருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு ஆண்.தற்சமயம் அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நடந்து கொள்ளும் நபர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று விவாதியுங்கள்.மும்பையில் இருக்கும் பெண்களுக்கு இப்படி நடக்க முயற்சிக்கும் நபர்களைக் கையாளத் தெரிகிறது.தமிழ்நாட்டில் அது தெரியவில்லை.

ஆணுக்கு வேலை இல்லை,அந்த பெண் சம்பாதிக்கிறாள் என்றால் அந்த ஆணுக்கு ஊர் உலகம் என்ன பெயர் சூட்டும்.பெண் வீட்டில் இருந்தால் அந்த பெயர் வருமா?.

"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " என்று ஒரு விவாதத்தில் சொன்ன நேர்ந்த போது இந்த கருத்து விதண்டாவாதமாக திரிக்கப்பட்டது.பரிபூரண சுதந்திர நாடான பிரான்சில் இந்த வழக்கம் உண்டு.

பெண் சுதந்திரம் பெரிதாக இல்லாத காலக்கட்டத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள் - அவள் ஒரு தொடர்கதை,அவர்கள்,அவள் அப்படித்தான்.இந்த படங்களின் வெற்றிக்கு காரணம் ஆண்கள் தான் நிச்சயம் பெண்கள் கிடையாது.

சதி எதிர்ப்பு,பால்ய விவாக எதிர்ப்பு,பெண் கல்வி இப்படி எல்லா புரட்சிகளுக்கும் காரணம் ஆண்கள் தான்.

சிங்கக் கூட்டத்தை வழி நடத்தும் அந்த ஆடு - பெண் பிள்ளைகளின் அப்பாவி அப்பா.

ஆட்டுக் கூட்டத்தை வழி நடத்தும் அந்த சிங்கம் யார் தெரியுமா - அம்மா தான்.ஆண்கள் வளருவதே பெண்களிடம் தான் முதலில் ஆண் - பெண் பேதங்களை விதைப்பதே பெண்கள் தான்.முதல்ல இந்த இடத்துல ஆரம்பிக்கும் கோட்டை நேராக வரையுங்கள்.கடைசி வரை நேராகத் தான் இருக்கும்.

டிஸ்கி :

நான் இங்கே பேயா கத்துறேன்.எங்க வீட்டில் என் சித்தி பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம் என்று விவாதம் செய்கிறார்கள்.என்ன கொடும சார்..

இதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.வேறு வழியில்லை.தைரியமாக புரட்சிக்கருத்துகள் சொல்லும் ஒரு பெண்ணை வெளிநாட்டில் திருமணம் ஆனா ஒருவன் ஏமாற்றி விட்டான்.

13 comments:

தினேஷ் said...

//என் கல்லூரி காலத்தில் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன பெண் தான் அதிக வரதட்சணை கொடுத்தது.பேசும் போது என்ன வேண்டுமானாலும் பேசுவது,பிறகு சமரசம் செய்து கொள்வது.அமெரிக்கா என்றவுடம் அந்த புரட்சி பெண் மாறி விட்டாள்.//

என்னப்பா நீ சூதுவாது தெரியாத சின்னபயலாவே இருக்கியே இந்த பிரமாண்ட உலகத்திலே அகண்ட இந்தியாவிலே பொறுப்புள்ள குடிமக்கள்
இல்ல வாய்ப்பேச்சு குடிமக்களோ அவர்கள் சொல்வதெல்லாம் மத்தவர்களுக்குதான் அவங்களுக்கு இல்லை என்பது தெரியாதா?

தினேஷ் said...

//நான் இங்கே பேயா கத்துறேன்.எங்க வீட்டில் என் சித்தி பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம் என்று விவாதம் செய்கிறார்கள்.என்ன கொடும சார்..//

இது ஒகே நீங்க எப்படி பாஸூ வாங்குவீங்களா இல்ல மாட்டிங்களா?

யாராச்சும் பாலோ-அப் போட்டு கல்யாணத்தப்போ ஒரு பதிவ போடுங்கப்பா..

லோகு said...

தைரியமான இடுகை அண்ணா.. வாழ்த்துக்கள்..

இரும்புத்திரை said...

நன்றி சூரியன்,லோகு நான் தேர மட்டும் தான் இழுத்தேன் வந்து தெருவுல இறக்கி விடுறீங்க..புது வேலை ஒன்று வந்து இருப்பதால் நான் நாளைக்கு வர்றேன்.

நான் வாங்க மாட்டேன்..

Robin said...

அருமையான கருத்துக்கள்.

நையாண்டி நைனா said...

அப்பாளிக்காவும் மறுக்கா வருவேன்....

துபாய் ராஜா said...

//ஆண்ணியம் பேசும் கூட்டத்தை சிங்கம் வழி நடத்தும் செம்மறி ஆட்டு கூட்டத்துடன் ஒப்பிடலாம்.பெண்ணியம் பேசும் கூட்டத்தை செம்மறி ஆடு வழி நடத்தும் சிங்கக் கூட்டத்துடன் ஒப்பிடலாம்.இறுதியில் வெல்ல போவது யார் என்று பார்த்தால் சிங்கத்தைத் தலைவனாக கொண்ட அந்த ஆட்டுக் கூட்டம் தான் வெற்றி பெறும்.//

ஆரம்பமே அனல் பறக்குது...

துபாய் ராஜா said...

//பெண்கள் அவர்களை விட அதிகம் படித்த மற்றும் சம்பாதிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.அவர்களை விட குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஆணைத் திருமணம் செய்தது கொள்ளுங்கள் அப்படி செய்தால் விரைவில் கட்டுக்குள் வந்து விடும். அப்படி செய்தால் கணவனிடம் ஏதாவது சொன்னால் "என்னை விட அதிகம் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாயா.." என்று கணவன் சொல்வான் என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது.//

அருமை.

//மேலே சொன்னது விதண்டாவாதம் என்று சொன்னால் "ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி விட்டு பஸ்சில் தனிசீட்டு வேண்டும்" என்று கேட்பதும் விதண்டாவாதம் தான். இப்படி சொல்வது வாதம் என்றால் மேலே இருப்பதும் வாதம் தான்.//

அருமையிலும் அருமை.

துபாய் ராஜா said...

//ஆட்டுக் கூட்டத்தை வழி நடத்தும் அந்த சிங்கம் யார் தெரியுமா - அம்மா தான்...//

அட்றா சக்கை.அட்றா சக்கை.அட்றா சக்கை....

அரவிந்தம்மா,உஷாரு.பையன் எதுக்கோ ஐஸ் வைக்கிறாரு.... :))

துபாய் ராஜா said...

//"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " .பரிபூரண சுதந்திர நாடான பிரான்சில் இந்த வழக்கம் உண்டு//

பிரான்ஸ் நாட்டுல நிரந்தர குடியுரிமை வாங்குறது எப்படி தலிவா.... :))

துபாய் ராஜா said...

//நான் இங்கே பேயா கத்துறேன்.எங்க வீட்டில் என் சித்தி பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம் என்று விவாதம் செய்கிறார்கள்.என்ன கொடும சார்..//

ஓஓஒஹோஓஓ... உங்களை விட வயசுல குறைஞ்ச சித்தி பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிற காண்டுல தான் இந்த பதிவா... ??!!

துபாய் ராஜா said...

//"ஆண்ணியம் - ஈயம்+பித்தளை"//

அப்படின்னா
பெண்ணீயம் - பேரிச்சம்பழமா....
அரவிந்தூஊஊஊ...

நையாண்டி நைனா said...

துபாய் மச்சான் இருக்கியா போய்ட்டியா....