இந்தப் பதிவில் முதலில் சினிமா மற்றும் அரசியலில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை மட்டுமே குறிப்பிட நினைத்தேன்.சரியாக எழுதி இருப்பதாக நான் நினைத்தாலும் சில கருத்துகள் வேறு கோணத்தில் பார்க்கும் போது வேறுவிதமாக தெரிகிறது.அதனால் சினிமாவும் அரசியலும் தவிர்க்கப்படுகிறது.
எந்த துறையாக இருந்தாலும் சாதிக்காத வரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளியே தெரிவதேயில்லை.அவர்கள் வெளியே தெரிய வரும் போது அதிரடி நடவடிக்கைகளுக்குப் பஞ்சமே இருக்காது.சந்தர்ப்பத்தை உருவாக்க மாட்டார்கள்.கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடவும் மாட்டார்கள்.
ஷெர்ஷா தொடங்கி இன ஒழிப்பில் ஈடுப்பட்ட ராஜபக்சே வரை நிறைய பேர்
இரண்டாம் கட்டத் தலைவர்கள் தான்.ஷெர்ஷா ஒரு தலைவர் தான் அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை.கடைசியாக சொன்ன ராஜபக்சே ஒரு தறுதல(இதுக்கு இலங்கையில் இருந்து ஐ.பி. அட்ரசுக்கு ஆட்டோ வருமா). ஷெர்ஷாவை பற்றி தெரிந்துக் கொள்ள
இங்கே போகலாம்.சந்திரிகா காலத்தில் அடக்கி வாசித்த,வசித்த ராஜபக்சே பிறகு சந்திரிகாவின் குடியுரிமையைப் பறிக்கப் பார்த்தது தனிக்கதை.(சந்திரிகா அப்பா காலத்தில் இருந்தே ராஜபக்சேவின் அப்பா இரண்டாம் நிலையில் தான் இருந்தார்).
கங்குலி கேப்டனாக இருக்கும் சமயம் ஒரு வலைபயிற்சியின் போது தான் தோனி கண்டுப்பிடிக்கப் பட்டார்.பிறகு தோனி கேப்டனாகப் பிறகு கங்குலி கட்டம் கட்டப்பட்டது எல்லோரும் அறிந்ததே.
போன வருடம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன் யுவராஜும்,தோனியும் ஒரு விவாதப் போட்டியில் கலந்து கொண்டார்கள்.யுவராஜ் சொன்னது - "தோனி கிராமத்தில் இருந்து வந்தவர்.எனக்கு கேப்டனாக ஆசை உண்டு..".தோனி அந்த நிகழ்ச்சியில் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நாலாவது ஒருநாள் போட்டியின் யுவராஜ் ஒரு கேட்சைத் தவற விட்டவுடன் சிரித்துப்படியே இருக்கும் தோனி முதல்முறையாக கோபப்பட்டார்.திரும்ப திரும்ப அதை ஒளிப்பரப்பினார்கள்.இந்த வருடம் யுவராஜ் சொன்னது "தோனி கேப்டன் பதவியில் பொறுப்பாக செயல் படுகிறார்.." இந்த வருடமும் இந்திய அணி இலங்கைக்கு சென்றது.
தெரியாத நபர்களிடம் பொறுப்பை ஒப்படிக்கும் போது தான் திறமைகள் வெளியே வரும் அதற்கு மேலாண்மை துறையில் இருந்து இரண்டு உதாரணகள்.
பற்பசை நிறுவனத்தின் விற்பனையில் சரிவு ஏற்படுகிறது.விற்பனையைக் கூட்ட எல்லோரும் விவாதிக்கிறார்கள்.கடைசியில் ஒரு கடைநிலை ஊழியரின் யோசனை தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவர் சொன்ன யோசனை "பற்பசையின் வாயை அகலப்படுத்துங்கள்..சீக்கிரமே தீர்ந்து விடும்..விற்பனையும் அதிகரிக்கும்.."
இது ஜப்பானில் நடந்தது.சோப் தயாரித்து அட்டைப் பெட்டியில் அடுக்குவது வரை செய்வது எல்லாமே இயந்திரம் மூலம் தான்.இயந்திரம் சில காலி அட்டை பெட்டிகளும் விற்பனைக்கு அனுப்பி விடுகிறது.சிலர் வழக்குத் தொடர. அதை தவிர்க்க இன்னொரு இயந்திரம் தாயரிக்க முடிவு செய்கிறார்கள்.அந்த செலவை தடுத்ததும் ஒரு கடைநிலை ஊழியர் தான்.அவரின் யோசனை."கடைசி கட்டப் பரிசோதனையில் ஒரு காத்தாடி வைப்போம்.காலி அட்டைப் பெட்டி தானாகவே கீழே விழுந்து விடும்.
அமெரிக்கர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம்.விண்வெளிக்கு போகும் அமெரிக்க வீரர்கள் குறிப்பெடுக்க பேனாவை எடுக்கிறார்கள்.அது எழுதவில்லை.இருபத்து வருடம் போராடி விண்வெளியில் எழுதும் பேனாவைக் கண்டுப்பிடிக்கிறார்கள். ஆனால் ரஷ்யர்களோ பேனா எழுதவில்லை என்றவுடன் பென்சிலை எடுத்து எழுதுகிறார்கள்.இப்படி வித்தியாசமாக யோசிப்பவர்களே பிற்காலத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாகிறார்கள்.
கீழ் டிஸ்கி : இந்த முறை டிஸ்கி முதல் பத்தியில்
Saturday, September 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//இந்த வருடமும் இந்திய அணி இலங்கைக்கு சென்றது.//
என்ன ஆச்சு இந்தத்தடவை
//ஒரு காத்தாடி வைப்போம்.காலி அட்டைப் பெட்டி தானாகவே கீழே விழுந்து விடும்.//
இது சூப்பர்
//இருபத்து வருடம் போராடி விண்வெளியில் எழுதும் பேனாவைக் கண்டுப்பிடிக்கிறார்கள். ஆனால் ரஷ்யர்களோ பேனா எழுதவில்லை என்றவுடன் பென்சிலை எடுத்து எழுதுகிறார்கள்.//
இதுவும் சூப்பர்
அருமையான சுவாரஸ்யம் மிகுந்த இடுகைடா தம்பி.எங்கேயிருந்து சேகரிக்கிற இப்படியான தகவல்களை.
தோனியை அசைக்க முடியாது என்று தெரிந்தவுடன் யுவராஜின் பாணி மாறி விட்டது
நன்றி கதிர்
எல்லாம் அண்ணன்கள் காட்டிய வழி..இப்படி எழுதினால் பிடிக்குமோ என்று தெரியாமல் தான் அதிக மொக்கைகள் வருகிறது..
நன்றி நாடோடி இலக்கியன்
//.இப்படி வித்தியாசமாக யோசிப்பவர்களே பிற்காலத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாகிறார்கள்.//
அப்படி உருவாகும் இரண்டாகட்ட தலைவர்கள் ராஜபக்ஷே மாதிரி ஆகாமல் இருந்தால் சரிதான்.
நல்ல தகவல்கள் நண்பா...
கடைசியாக சொன்ன ராஜபக்சே ஒரு தறுதல
நன்றி க.பாலாஜி
நிறைய விஷயங்களை அலசி எழுதி இருக்கீங்க.. நல்ல இடுகை அண்ணா..
நன்றி லோகு
//எல்லாம் அண்ணன்கள் காட்டிய வழி..
இப்படி எழுதினால் பிடிக்குமோ என்று தெரியாமல் தான் அதிக மொக்கைகள் வருகிறது..//
#
இதெல்லாம் அய்ங்க(அண்ணன்) பண்ண வேலத்தானா?
சொல்லவே இல்ல...
இது போல விஷயமுள்ள நல்ல பதிவுகளைத் தொடர்ந்து எழுதுங்கள். மொக்கை பிரபலமாக உதவும். நிலைத்து நிற்க தரமான பதிவுகளே தேவை
ஐ ம் ஸாரி அர்விந்த்! இந்த முறையும் நீங்கள் அவசரப்பட்டு கருத்து சிந்தியிருப்பதாகத் தோன்றுகிறது. ராஜபக்ஷேவைப் பற்றிப் பேசவேண்டுமானால், நாம் அருண்மொழிவர்மன் (ராஜராஜ சோழன்) காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அன்றும் ஒரு மகிந்தா! இன்றும் ஒரு மகிந்தா!! சோழன்கள்தான் சோரம் போய்விடுகிறார்கள்!!!
***
சினிமாவும் அரசியலும் தவிர்க்கப் படுகிறதா? அப்படியென்றால் எழுத என்ன இருக்கிறது? அப்படியே எதாவது எழுதியிருந்தாலும் படிக்க என்ன இருக்கிறது??
***
2ம் கட்டம், ஒருமித்தப் புரட்சியின் ஒரு வரி வடிவம். கிரிக்கெட் முதல் இனப்படுகொலை வரை இது ஒரே வடிவம்தான்! நிலைநிறுத்தல் என்பது போராட்டம்; அடையாளப்படுத்தல் 2ம் கட்டப் போராட்டம். இதுக்கெதிராக யாரும் போராட முடியுமா?
நல்ல இடுகை,பேஷ் பேஷ்
நன்றி சண்முகம்
நன்றி அண்ணாச்சி
நன்றி ஜெகநாதன்
நன்றி PEACE TRAIN
Post a Comment