நான் பொதுவா கல்லூரியில் படிக்கும் போது(செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து) இரண்டு காரியங்கள் மட்டுமே செய்வேன்.வேடிக்கைப் பார்ப்பது மற்றும் தூங்குவது.ஆட் செமஸ்டர்(1,3,5,7) நடக்கும் போது வெளியே இருக்கும் வயல்களில் நாத்து நட்டிருப்பார்கள்.பசுமையாக இருப்பதால் வேடிக்கை பார்பதற்கே நேரம் போதாது.ஈவன் செமஸ்டரில்(2,4,6,8) தூங்கி வழிவேன்.
நாங்கள் கடைசி செமஸ்டர் படிக்கும் சமயம் இன்னொரு நண்பன் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான்.ஒரு குறும்படம் எடுக்க ஒரு கதை தேவை என்று சொல்லியிருந்தான்.கதை விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது.வழக்கம் போல நான் தூங்கி மகிழ்தேன்.(என்னை எழுப்பாமல் விட்டதற்கு காரணம்இது போல ஒரு கதை கேட்ட நண்பனிடம் கிழக்கே போகும் ரயில் படத்தை உல்டா செய்திருந்தேன்.அன்று எழுந்த கோபம் தான் காரணம்)
கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி கதை கேட்டான்.(திருந்தியிருப்பேன் என்று தவறாக நினைத்த விட்டான்).நானாவது.. திருந்துவதாவது.. கதை சொல்ல ஆரம்பித்தேன்.
"மச்சான் நாடகத்திலே மொக்கை மாதிரி டிவிஸ்ட் வைக்கிறான்.நான் சொல்ற கதையிலே அவங்கள மிஞ்சிறேன் பாரு.."
"டேய் ஓவராப் பேசாத..கதைய சொல்லு.."
"பைக்ல புதுப் பொண்டாட்டி கூட வேகமா போறான்.ஒரு திருப்பத்துல எதிரே வண்டி வர்றது தெரியாம மோதி கீழ விழுகிறான்.கோவத்திலே எந்திரிச்சி திட்டப் போறான்..அப்பத்தான் கவனிக்கிறான்.வந்து மோதின பைக்லகையும் ஒரு ஜோடி இருக்கு.அத பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான்..நாலு பேரும் அதிர்ச்சி அடையிறான்க.." என்று சொன்னேன்.
"குமுதத்தில வர்ற கதை மாதிரியே இருக்கு..கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடி மாறி போச்சா.." என்று சொன்னவனிடம்
"இல்ல நாறி போச்சு..இங்க தான் நாம கத்துக்கிட்ட எடிட்டிங் திறமைய காட்டுறோம்..ஆண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..அடுத்த ஷாட்டுல அந்த பெண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..யாருக்கு யார் கூடத் தொடர்பு அப்படி தெரியாம பாக்குறவன் எல்லாம் தலையப் பிச்சிக்கிட்டு சாவான் " என்று சொல்லி முடித்தவுடன்
"போடா ப..அவன காலேஜ்ல இருந்து தூக்குறதுக்கு வழி சொல்றியா.." என்று என்னை திட்டிக் கொண்டியிருந்தான்.
எல்லோரும் சிரித்துக் கொண்டோம்.(நான் சொன்னத்தில் கடைசியில் தலைப்பு மட்டும் தான் மிஞ்சியது. தலைப்பு - கோணங்கள்.)
வினையே இதுக்கு அப்புறம் தான் ஆரம்பித்தது.பாடம் நடத்திய லேடி புரபசருக்கும் எங்களுக்கும் ஆகாது.
"சம்படி இஸ் கிகிளிங்.." என்று அவர் சொல்ல
"லாபிங்னா சிரிக்கிறது கிகிளிங்னா என்னடா மச்சான்.." என்று ஒரு நண்பன் கேட்க
"பல்ல இளிக்கிறது.." என்று இன்னொரு நண்பன் சொல்ல
"அரவிந்த் வாட் இஸ் ஜெ-ப்ரோடோ.."
"என்னடா இது மாதிரி ஒரு புரோட்டோவ நான் கேள்வி பட்டதே இல்லை.." என்று நான் வாய்க்குள்ளே முணுமுணுத்தேன்
"பாடன்.."
"பாடணுமா..எனக்கு பாடத் தெரியாதே.." இப்படி சொன்னது புரபசரின் காதில் விழுந்து தொலைத்தது.
"ஹவ் அடமென்ட் யூ ஆர்.." என்று திட்ட ஆரம்பிக்க
"என்ன அடம் பிடிக்கிரம்மா.." என்று துணைக்கு ஒரு நண்பன் சொல்ல..உடனே எம் மேல் இருந்த கோபத்தை அவன் மேல் காட்ட ஆரம்பித்தார்.
"ஐ வில் ஆஸ்க் சேர்மன் டு கிவ் எ ஷூ.." என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
"மச்சான் நீ செருப்பு போட்டுக்கிட்டு வர்றது பிடிக்காம அவங்க சேர்மன் கிட்ட சொல்லி ஷூ வாங்கி தர்றாங்களாம்.." என்று ஒரு நண்பன் மொழிபெயர்க்க
"செருப்பால அடி வாங்கி தர்றேன்னு சொல்லுதுடா.." - இது நான்
"அந்த அஞ்சு பேரும் வெளிய போங்க.." என்று அவர் தமிழுக்கு தாவியப் பிறகு வெளியே வந்தோம்.
வாசல் பக்கம் தான் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள்.பக்கத்து வகுப்பு பெண்களையும் கவனிக்கலாம்.என்னுடைய நெருங்கிய நட்பு ஒன்று துண்டுச்சீட்டில் எழுதி அனுப்பியது.
"க்ளாஸ்ல துங்குற..அசைன்மென்ட் குடுத்தா எழுதறது இல்ல..நான் எழுதி குடுத்தாலும் வாங்குறது இல்ல..முழிக்கிற நேரம் எல்லாம் அரட்டை..முதல்ல அந்த பசங்க கூட சேர்றத நிறுத்து.."
"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.
டிஸ்கி :
என் தம்பி படித்ததும் விஸ்காம் தான்.என்னிடம் எதுவும் கேட்டதில்லை.
Tuesday, September 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.//
இருந்த ஒன்னும் போச்சா?
//என் தம்பி படித்ததும் விஸ்காம் தான்.என்னிடம் எதுவும் கேட்டதில்லை//
அவ்ருக்கு நல்லா தெரியும் பக்கத்துலயே இருக்காப்புலலே , உங்க மூளை எப்படி வேலை செய்யும்னு தெரியாதா?
/அரவிந்த் வாட் இஸ் ஜெ-ப்ரோடோ.."
"என்னடா இது மாதிரி ஒரு புரோட்டோவ நான் கேள்வி பட்டதே இல்லை.." என்று நான் வாய்க்குள்ளே முணுமுணுத்தேன்
"பாடன்.."
"பாடணுமா..எனக்கு பாடத் தெரியாதே.." இப்படி சொன்னது புரபசரின் காதில் விழுந்து தொலைத்தது.
"ஹவ் அடமென்ட் யூ ஆர்.." என்று திட்ட ஆரம்பிக்க
"என்ன அடம் பிடிக்கிரம்மா.." என்று துணைக்கு ஒரு நண்பன் சொல்ல..உடனே எம் மேல் இருந்த கோபத்தை அவன் மேல் காட்ட ஆரம்பித்தார்.
"ஐ வில் ஆஸ்க் சேர்மன் டு கிவ் எ ஷூ.." என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
"மச்சான் நீ செருப்பு போட்டுக்கிட்டு வர்றது பிடிக்காம அவங்க சேர்மன் கிட்ட சொல்லி ஷூ வாங்கி தர்றாங்களாம்.." என்று ஒரு நண்பன் மொழிபெயர்க்க
"செருப்பால அடி வாங்கி தர்றேன்னு சொல்லுதுடா.." - இது நான்
"அந்த அஞ்சு பேரும் வெளிய போங்க.." என்று அவர் தமிழுக்கு தாவியப் பிறகு வெளியே வந்தோம். ///
சூப்பர் டாக்கு
/டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.//
ஏன் அவுகளுக்கு எதும் ராமர் கோடு மாதிரி போட்டு வச்சுருக்கியள?
\\நான் பொதுவா கல்லூரியில் படிக்கும் போது\\
உங்க காலேஜ் பெயர் சூப்பரா இருக்கு ஸார்.
செம காமெடி சார்... :))
:)))
//.. "டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன். ..//
அது..!
நன்றி ganesh
நன்றி சூரியன்
நன்றி ♠ ராஜு ♠
நன்றி Achilles/அக்கிலீஸ்
நன்றி சந்தனமுல்லை
நன்றி பட்டிக்காட்டான்..
நல்லா இருக்கீங்களா?
சாப்பிட்டாச்சா?
வேலையெல்லாம் ஒழுங்கா போகுதா?
தூக்கம் வருதா?
//முதல்ல அந்த பசங்க கூட சேர்றத நிறுத்து.."//
#
எந்த பசங்கள சொல்றீங்க....
ஹிஹீ... சரியான பட முயற்சிதான்!
என்ன ஆனாலும் முயற்சிய கைவிடக் கூடாது ..
ஹவ் அடமென்ட் யூ ஆர் -ன்னு உலகமே சொல்லணும்!
நன்றி சண்முகம்
நன்றி ஜெகநாதன்
Post a Comment