Wednesday, September 9, 2009

மயக்கும் சுயநலம் மழுங்கும் புத்தி

இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான் தென் மேற்கு பருவ மழை பெய்யும் என்ற செய்தியைப் பார்த்தப் பிறகு மனதே சரியில்லை.

மழை வரவில்லை என்றால் என்ன நமக்கு தான் அண்டை மாநிலத்தில் இருந்து கொஞ்சம் தருவார்களே என்று அரைகுறையாக வரும் கனவில் கூட நினைத்து விட வேண்டாம்.

கேரளாவை நாம் கடவுளின் தேசம் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.அப்ப தமிழ் நாடு நிச்சயமாக சாத்தான்களின் தேசம் தான்.

கொச்சையாக சொன்னால் "நமக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் அழகாக தெரிவாள்..நம்ம பொண்டாட்டிய பராமரிக்கவும் தெரியாது..அழகாக மாற்றவும் தெரியாது.."

கூவம் - ஆறுபது வருடங்களுக்கு முன் இது ஒரு ஆறு.பாண்டி வரை நீளும்.அதையே சாக்கடையாக மாற்றிய பெருமை நமக்கு மட்டும் தான் உண்டு.இப்படி ஒரு அடையாளச் சின்னம் எந்த நகரத்திலும் கிடையாது.

திருநெல்வேலியின் அடையாளமான தாமிரபரணியும் மாசுப்பட்டுள்ளது என்று என் அம்மா சொன்ன போது விரைவில் இதுவும் ஒரு சாக்கடையாக மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது.

தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது பருவ மழை பொய்த்தால் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதை விட மாசுப்படுத்துவது தான் அதிகம்.சோளக்காட்டில் நுழைந்த யானை சாப்பிடுவதை விட சேதப்படுத்துவது தான் அதிகம்.அது தான் நடக்கும்.குடிக்கும் தண்ணீருக்காக தான் மூன்றாம் உலகப்போர் நடக்கும்.

இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டிக் கொண்டே வந்தால் பருவ மழை வராது என்று தெரிந்தும் நாம் அதை செய்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

மரம் நடுங்கள் என்று கரடியாக கமல் ஒரு படத்தில் கத்தினார்.அந்த படம் (படு)தோல்வியைத் தழுவியது.படம் - உன்னால் முடியும் தம்பி.

சுவிஸ் நாட்டில் சீரான தட்பவெட்ப நிலை வேண்டும் என்பதற்காக அதற்கு நேர் எதிரே இருக்கும் தமிழ் நாட்டில் ஒரு செடியை நடுகிறார்கள்.அவன் குளுகுளுவென இருப்பான்.முட்டாள்களான நாம் தான் வெட்பத்தில் பொசுங்கி சாக வேண்டும்.

அமெரிக்க கழிவுகளை ஏற்றி வரும் கப்பலை ஐரோப்பாவின் துரைமுகங்களில் கூட அனுமதிக்க மாட்டார்கள்.ஆனால் தூத்துக்குடியில் அந்த கழிவுகளை இறக்கி விட்டு செல்கிறார்கள்.நிலத்தடி நீர் பாதிக்கும் என்ற அறிவு கூட நமக்கு இல்லாமல் போய் விட்டது.படிக்க படிக்க நமது அறிவும் மழுங்கி வருகிறது (சுயநலம் அதிகரித்ததால்).

ஆதி காலத்தில் மனிதனுக்கு ஆயுள் நாற்பது வயதிற்கு அருகில் வந்தாலே அது ஒரு உலக அதிசயம்.அப்படி ஒரு கற்காலத்திற்கு நாம் நம் சந்ததியர்களை வழி நடத்தி செல்கிறோம்.இனி ஒரு மூன்னூறு வருடம் கழித்து மனிதனின் சராசரி வயதே நாற்பதை விட குறைவாகவே இருக்கும்.இப்படி மக்கி போகாத பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து நாம் கற்காலத்திற்கு நம் சந்ததியர்களை வழிநடத்தி செல்கிறோம்.

வெளி நாடுகளில் ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நடுவார்கள்.நாம் பத்து மரத்தை வெட்டுகிறோம் ஒரு கன்றாவது நடலாமே.

மரம் நடுங்கள் என்று ஜக்கி வாசுதேவ் சொன்னால் தான் நட வேண்டுமா ? .நம் வளங்கள் அழிந்து விடாமல் இருக்க நாமும் நம்மால் முடிந்த முயற்சிகள் செய்வோமே.வருடத்திற்கு இரண்டு மரமாவது நடலாமே.

சமீபத்தில் கேட்ட பாடல்

"நெல்லாடிய நிலமெங்கே..
சொல்லாடிய அவையெங்கே.."

இது தான் நிதர்சனம்..தமிழ் நாட்டின் அவலம்..

இது சோழ நாட்டை வைத்து எழுதப்பட்ட பாடல்.இது தமிழகம் எங்கும் நடக்கும் முன் நாம் நம்மால் முடிந்த மரங்களை நட வேண்டும்.

பாடலைக் கேட்டு விட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது என்று நிறைய பேர் சொன்னார்கள்.உங்கள் மனமும் சிலிர்த்திருந்தால் ஒரு மரத்தையாவது நடுங்கள்.செய்த நாசங்கள் போதும்.

மரம் இருந்தால் தான் பறவைகளும் இருக்கும்.குஜராத் பூகம்பம் வருவதற்கு முன் அங்கு இருந்த காக்கைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக பறந்து போனதாம்.இயற்கை சீற்றங்களை நாம் அறிவதற்கு முன் பறவைகள் தெரிந்து கொள்ளும்.தென்மதுரை நகரத்தைக் கடல் சூரையாடிய போது உயிர் சேதம் இல்லாமல் தப்பியதற்கு நிச்சயம் பறவைகளும் ஒரு காரணமாக இருந்து இருக்கும்.இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தவர்கள் நாம்.ஆனால் இன்று ஏரிகளில் வீட்டை கட்டிக் கொள்கிறோம்.சென்னைக்கு வரவே வராது என்று நினைத்த பூகம்பத்தை வரவழைத்து கொள்கிறோம்.
(தமிழகத்தை மூன்று சுனாமிகள் விழுங்கியது ஆதாரபூர்வமான உண்மை. முதல் கடல் கோளால் பஃறுளியாறும், குமரிக் கோடும் காணாமல் போயின. பஃறுளியாற்றின் கரையில்தான் தென்மதுரை இருந்தது. பாண்டியன் தலைநகரம். புறநானூறு இந்த சமயத்தில் ஆண்ட பாண்டிய அரசன் நெடியோன் என்கிறது. நிலந்தரு திருவிற்பாண்டியன் என்கிறது தொல்காப்பியம். கடல் கொண்ட பிறகு இந்த அரசன் வடக்கே சென்று கவாடபுரத்தை தலைநகராகக் கொண்டான். இரண்டாவது கடல் கோளால் கவாடபுரம் கடலில் அமிழ்ந்தது. மணவூர் என்பது பாண்டியன் தலைநகராக இருந்தது. மூன்றாவது முறைக் கடல் கோளால் ஏற்பட்ட பிறகு, மணவூரும் குமரியாறும் மறைந்தன. மதுரை பிறகுதான் பாண்டியன் தலைநகரமாயிற்று.)

கடவுளின் தேசம் செழிப்பாக இருப்பதற்கு காரணம் மரங்கள் தான்.நாமும் கடவுளின் தேசத்திற்கு அருகில் இருக்கிறோம் என்று சொல்லி மகிழ்வதை விட நாமும் அது போன்ற தேசத்தில் தான் இருக்கிறோம் என்று சொல்வது சாத்தியம் தான் மரங்களை நட்டால்.

நான் பள்ளியில் படிக்கும் போது "ரெயின் க்ளாப்" என்று ஒரு முறை உண்டு.முதலில் இரண்டு கையில் இருக்கும் ஆட்காட்டி விரல்களை மட்டும் தட்டுவோம்.மழை ஆரம்பிப்பது போல இருக்கும்.சிறிது இடைவெளி விட்டு தட்டும் விரல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும்.மழை சத்தமும் வலுக்கும்.முடிவில் மழை விடாமல் பெய்வது போல இருக்கும்.இது கூட்டு முயற்சிக்கு ஒரு உதாரணம்.

இந்தப்பதிவு மரம் நடுவதற்கு மட்டும் அல்ல..அழிவில் இருந்து தப்பி வாழ்வதற்கும் தான்.

ஒரு அழகான கோலமே ஒரு புள்ளியில் தான் தொடங்குகிறது.மரங்களை நடுவோம் அழியாத கோலங்களைப் படைப்போம்.

டிஸ்கி :

"தென் மேற்கு பருவக் காற்று தேனி பக்கம் வீசும் போது சாறல் முத்துச் சாறல்" - கருத்தம்மா படத்தில் வரும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசே குளிரும்.பிற்காலத்தில் இது ஒரு உவமையாக மாறி விடக் கூடாது.

உவமைக்கு ஒரு உதாரணம்..ராஜபார்வை படத்தில் குருடன் கமல் பாடுகிறார்."அந்தி மழை பொழிகிறதே ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே.." கண்ணில்லாத குருடன் கூட மழையை வைத்து தான் பாடுகிறான்.நாம் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கிறோம்.நமக்கு மழை வந்தாலும் வராவிட்டாலும் அது ஒரு செய்தி மட்டும் தான்.மழையை உணரும் குருடனே அதை கொண்டாடும் போது நாம் மழை வருவதற்கு முயற்சியாவது செய்ய வேண்டும்.அதற்கு மரங்களை நடுவோம்.

14 comments:

ஈரோடு கதிர் said...

//அனுபவம், அவலம், கோபம், சமூகம், புரட்சி, முயற்சி //

லேபிளில் இதைக்கண்டபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

நான் உங்களை வாசிக்க ஆரம்பித்த பின் பிடித்த இடுகையில் இதற்கு முதலிடம்.

//பராமரிக்கவும் தெரியாது..அழகாக மாற்றவும் தெரியாது..//

அறையும் வரிகள்...

இது போன்ற இடுகைகள் தொடர்ந்து வந்தால், ஒரு கட்டத்தில் தொடர்ந்து தொடர்ந்து வந்தால், சிறிது சிறிதாக நம் மனம் மாறும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

//வெளி நாடுகளில் ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நடுவார்கள்.நாம் பத்து மரத்தை வெட்டுகிறோம் ஒரு கன்றாவது நடலாமே.//

இதில் பிந்தங்கித்தான் இருக்கிறோம்

மரம் என்பதை நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பார்க்கும் மனோபாவம் கண்டிப்பாக வரவேண்டும்

வாழ்த்துகள் அரவிந்

தொடர்ந்து இது போல் நிறைய எழுதுங்கள்

Ashok D said...

//"நமக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் அழகாக தெரிவாள்..//

நமக்கு மட்டுமில்லை உலகில் 95% ஆண்கள் அப்படித்தான்.

//பராமரிக்கவும் தெரியாது..அழகாக மாற்றவும் தெரியாது..//

அப்படின்னு யாரு சொன்னது. தாம்பத்தியம் சிறக்க நம்ம சுறுசுறுப்பா இருக்க.. கண்டிப்பா பராமரிக்கவும் அழகா மாற்றவும் தெரிஞ்சியிருக்கனும் ;)

மரமும் மழையும் அவசியம் வேனுங்கறதனால இது முக்கிய பதிவுதான்ப்பா... :) keep it up

க.பாலாசி said...

நண்பா...எந்த இடத்த சுட்டிக்காட்டி பாராட்டுரதுன்னு எனக்கு தெரியல..ஒவ்வொரு மனிதனும் யோசிக்க வேண்டிய விசயம்...செயல்படுத்தவேண்டிய விசயம்....

நான் சுட்டிக்காட்ட விரும்பும் சில விசயங்களையும் அன்பர் கதிரே சொல்லிவிட்டார்...

நல்லதொரு சிந்தனைப் பகிர்வு நண்பரே...

இரும்புத்திரை said...

நன்றி கதிர்..இப்படியும் என்னால் எழுத முடியும் அப்படி சொன்னதே நீங்கள் தானே

நன்றி அசோக்..உணல் அன்பிற்கும்,பாராட்டிற்கும்.

நன்றி பாலாஜி..ரொம்ப நாள் ஏக்கம் இது..

Thamira said...

நல்லதொரு பதிவு. பாராட்டுகள் அரவிந்த்.!

இரும்புத்திரை said...

நன்றி ஆதி..நேற்று எழுதிய பதிவு இந்த பதிவை படிப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடத்தான்.

வில்லங்கம் said...

மிக அருமையான பதிவு....

Unknown said...

சிறப்பான தேவையான பதிவு..

கடந்த வருடத்தில் நான் மூன்று மரங்களை நட்டி பராமரித்து வருகிறேன்.. அதன் ஒவ்வொரு கொழுந்து துளிர்ப்பிலும் எனது மகிழ்ச்சியை(உழைப்பை) காண்கிறேன்..

//.. சுவிஸ் நாட்டில் சீரான தட்பவெட்ப நிலை வேண்டும் என்பதற்காக அதற்கு நேர் எதிரே இருக்கும் தமிழ் நாட்டில் ஒரு செடியை நடுகிறார்கள் ..//

இந்த வரி எனக்கு சரியாக புரியவில்லை..

துபாய் ராஜா said...

நல்லதொரு சமூக அக்கறையுள்ள பதிவு.

ஒவ்வொரு வரிகளும் உண்மையை உணர்த்துகின்றன.எல்லோருக்கும் உரைத்தால் நல்லது.

அரவிந்த்,இந்த பதிவை வெகுஜனங்களுக்கு சென்றடையும் வகையில் ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்க முயற்சியுங்களேன்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை அரவிந்த்.

லோகு said...

அட்டகாசமான இடுகை அண்ணா.. உங்கள் ஒவ்வொரு வரியுடனும் அப்படியே ஒத்துப்போகிறேன்.. சமூக அக்கறையோடு இந்த இடுகை இட்டதற்கு நன்றி..

நையாண்டி நைனா said...

மிக மிக அருமையான இடுகை நண்பா....
உனக்கு ஒரு சல்யூட்.

நாஞ்சில் நாதம் said...

அருமையான இடுகை.

M.G.ரவிக்குமார்™..., said...

நல்லது எதை சொன்னாலும் நம்மாட்கள் கேட்க மாட்டார்கள்!இவர்களை இவர்கள் வழியிலேயே மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஜோதிடத்தைக் காரணமாக்கி உங்கள் நட்சத்திரதிற்கேற்ற மரங்களை நடச் சொன்னார்கள் அப்போதும் ஒரு பிரயோஜனமும் இல்லை.தண்ணீருக்காய் கண்ணீர் விடும் காலம் வெகு தூரத்திலில்லை!