Tuesday, September 1, 2009

பாரதிராஜா இனி என்ன செய்யலாம்

பாரதிராஜா - தமிழ் சினிமாவை சில நல்ல மாற்றங்களுக்கு உட்படுத்தியவர். அதில் ஒன்று தான் செட்களில் இருந்த தமிழ் சினிமாவை அசாதாரணமாக கிராமத்துக்குள் இழுத்து வந்து கட்டிப் போட்டவர். இன்னொரு கதை மட்டுமே வெற்றியை நிர்ணயிக்க முடியும் என்று காட்டியவர். இன்று தமிழ் சினிமாவை பாலு மகேந்திராவின் சிஷ்யக்கோடிகள் கோலோச்சுவதுப் போல ஒரு காலத்தில் பாரதிராஜாவின் சிஷ்யப்பட்டாளங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் அடித்து ஆடினார்கள்.இழைத்து ஈன்றினார்கள்.

வாழையடி வாழையாக வந்த இன்று வரை வெற்றிக் கொடி கட்டுகிறார்கள். அந்த வாழைகளின் வரிசை
பாரதிராஜா - பாக்யராஜ் - பார்த்திபன் - விக்ரமன் - கே.எஸ்.ரவிகுமார் - சேரன் - பாண்டியராஜ் - _______ - ________ - இது இன்னும் தொடரும்.

கே.பாலச்சந்தரின் சிஷ்யர்கள் கூட இந்த அளவுக்கு வெற்றி பெற்றது கிடையாது. அவர் போலவே யோசித்து வீணாகப் போனார்கள்.

உதவியாளர்களைத் த(தி)ட்டிக் கொடுத்தே வேலை வாங்கியவர். வசனம் சரியாக எழுதவில்லை என்று 16 வயதினிலே பாக்யராஜை திட்டி தீர்க்கிறார்.மூன்று மணி நேரம் பாக்யராஜ் காணாமல் போய் விடுகிறார்.பிறகு வந்து எழுதிய வசனம் தான் "ஆத்தா ஆடு வளத்தா..கோழி வளத்தா..". அதுப் போல நடிக்கும் நடிகர்கள் அரவணை(அடி)த்தே வேலை வாங்குவார். அவரின் அறிமுக நடிகர்களிடம் கேட்டால் தெரியும்.

திறமைசாலிகள் தோற்றுப் போனாலும் திரும்பவும் வாய்ப்பு கொடுப்பவர்.நிழல்கள் - மணிவண்ணனின் கதை.பாரதிராஜா இயக்கத்தில் தோல்வியைத் தழுவிய முதல் படம்.அடுத்த முறையும் படத்தின் கதை வசனம் மணிவண்ணன் தான்.அந்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை.

16 வயதிமிலே படத்தில் தொடங்கிய வெற்றிப்பயணம் தாஜ்மகால் படத்தில் தான் முடிவுக்கு வந்தது.இன்று மிஷ்கின்,சேரன் வரை இயக்குனர்களே நடிப்பதற்குக் காரணம் பாரதிராஜா தான்.தன உதவியாளர்களை நடிகர்களாக அறிமுகப்படுத்தியவர்.

இயக்குனர்கள் நடிக்கலாம் என்ற கோட்பாட்டைத் தொடக்கி வைத்தவர்.

புதிய வார்ப்புகள் - பாக்யராஜ்.

கொடி பறக்குது - மணிவண்ணன்.

என்னுயிர் தோழன் - பாபு (தனிப்பதிவு இவர்க்கு உண்டு)

புது நெல்லு புது நாத்து,பசும்பொன் - பொன்வண்ணன்.

இவ்வளவு பேரிடம் திறமையா வேலை வாங்கியவர் மகனிடம் மட்டும் நடிப்பை வாங்கத் தவறி விட்டார்.(பாசத்தில் தவறு செய்து விட்டேன் என்று அவரே ஒத்துக் கொண்டார்).அதுதான் அவருடைய முதல் தவறு.

இன்னொரு தவறு திறமையான உதவியாளர்களை உடன் வைத்து கொள்ளாதது. நிறைய திறமைசாலிகள் இருந்தும் (சுஜாதா,ஏ.ஆர்.ரகுமான்) கண்களால் கைது செய் படத்தில் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்.

இன்றும் அவர் இயக்குனராக ஜொலிக்க முடியும்.நல்ல உதவியாளர்கள் இருந்தால்.நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்களும் சும்மாத்தான் இருக்கிறீர்கள்.உங்கள் திறமையான உதவியாளர்களும் சும்மாத்தான் இருக்கிறார்கள்.நீங்கள் இயக்குங்கள் அவர்கள் கதை,வசனம் எழுதுவார்கள்.உதவுவார்கள்.எங்களுக்கும் நல்ல சினிமா கிடைக்கும்.

அதற்கு ஒரு உதாரணம் மணிசித்ரதாழ் படத்தை இயக்கிய பாசிலின் உதவி இயக்குனர்கள் ப்ரியதர்ஷன்,சிபி மலையில்,சித்திக் மற்றும் லால்.இது நடந்தது 1993ல். அதற்கு முன்னரே அவர்கள் நால்வரும் பெரிய இயக்குனர்கள்.

இது மாதிரி நீங்களும் உங்கள் உதவியாளர்களை(பாக்கியராஜ்,மணிவண்ணன்,பொன்வண்ணன்) வைத்து கொண்டு நீங்களும் ஒரு படம் எடுக்கலாம்.ஒரே ஒரு வேண்டுகோள்.அப்படி எடுத்தால் ஒரு புதுமுகத்தை வைத்து எடுங்கள்.நடிக்க சேரனையோ,அமீரையோ,சீமானையோ கூப்பிடாதீர்கள்.இப்படி செய்ய சொல்லும் உங்களின் ஒரு பாசத்துக்குரிய ஒரு இரசிகன்.

14 comments:

லோகு said...

கிராமத்து காதல்களை வெள்ளித்திரையில் காட்டிய உங்கள் பாசத்துக்குரிய பாரதி ராஜா இதோ இந்த இரும்புத்திரையின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் வருவாரென காத்திருக்கிறோம்..

வில்லங்கம் said...

நீங்க சொல்லிட்டீங்கல்ல.... இத பாலோ பண்ணுறதுதான் அவரது மொத வேல

Nathanjagk said...

நீங்கள் கூறயிருக்கும் நிறைய விஷயங்களை அப்படியே ஏற்க முடியாது! இருந்தாலும் நல்ல பகிர்வு! பாரதிராஜா, கேபி போன்ற படைப்பாளிகளை பல கோணங்களில் (முக்கியமாக அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை - இண்டர்நெட் இல்லாத காலம்) ஆராய்ந்து எழுதணும். இதே மாதிரி இளையராஜா பற்றி எழுதிப்பாருங்கள்.. உங்களுக்கே ​தெரியவரும்!

Raju said...

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க..!
ஆனா, படிச்சு முடிச்சப்பறம் வின்னர் படத்துல வடிவேலு இன்ட்ரோ சீன்ல ஒரு கேரக்டர் வந்து "தல, வெளிய வா தல"ன்னு சொல்லுமே.. அந்த கேரக்டர் ஞாபக்த்துக்கு வருது. பாரதிராஜாவ கைப்புள்ளயா யோசிச்சுப்பார்த்து
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.
அத விட உங்களுக்கு முத்துக்காளை (?) கேரக்டர் சூப்பர் தலைவா..!
:-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாரதிராஜாவின் உதவியாளர்கள் வெற்றிபெற்ற அளவிற்கு மற்ற இயக்குநர்களின் உதவியாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்களா தல..


உதவியாளர்களுக்கு தனி இடமும் வாய்ப்புகளும் பெற்றுத் தருவதில் பாரதிராஜாதான் முதலிடம் வகிக்கிறார் என்று நினைக்கிறேன்.

நாஞ்சில் நாதம் said...

:))

Unknown said...

ஐ லைக் ஹிஸ் சஜ்ஜஸ்சன். ஆக்சுவல்லி ஐ வாண்ட் டு கம் பேக் டு டைரக்சன். பட் ஹூ வில் டூ த ப்ரடக்சன்?

- எ ஃபிலிம் பை பாரதிராஜா

நையாண்டி நைனா said...

எங்கள் அண்ணன் "அர்னால்டு" அரவிந்தை முத்துக்காளையுடன் ஒப்பிட்ட டக்ளூசை வன்மையாக கண்ணடிக்கிறேன்.( இதில் எங்கும் எழுத்துப்பிழை இல்லை )

மிக நல்ல ஆலோசனை நண்பா.

தினேஷ் said...

நல்ல யோசனைதான் .. ஆனால் நடக்குமா ?

க.பாலாசி said...

நல்ல யோசனைதான்...ஆனா பாரதிராஜாவுக்கு தெரியனுமே...

பாரதிராஜா உண்மையில் ஒரு சிறந்த இயக்குனர்தான்...அவர் பின்தோன்றிகளின் படைப்புகளை ரசித்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்...

துபாய் ராஜா said...

நியாயமான வருத்தம்.நல்லதொரு படைப்பாளி. எனது அபிமான இயக்குநர்.'சிகப்பு ரோஜாக்கள்' இப்ப பார்த்தாலும் திகிலா இருக்கும்.
'நிறம் மாறாத பூக்கள்' வித்தியாசமான காதல் கதை.இதுபோல இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

பல தோல்விகளுக்கு பின் 'கிழக்கு சீமையிலே'ன்னு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தமாதிரி மீண்டு(ம்) வருவார்ன்னு நம்புவோம்.

ஈரோடு கதிர் said...

//அடித்து ஆடினார்கள்.இழைத்து ஈன்றினார்கள்.//

அ..ஆ..இ..ஈ

//ஒரு உதாரணம் மணிசித்ரதாழ் படத்தை இயக்கிய பாசிலின் உதவி இயக்குனர்கள் ப்ரியதர்ஷன்,சிபி மலையில்,சித்திக் மற்றும் லால்.இது நடந்தது 1993ல். அதற்கு முன்னரே அவர்கள் நால்வரும் பெரிய இயக்குனர்கள். //

சிந்திக்க வேண்டிய விடயம்தான்

வழக்கம்போல் நன்கு உழைத்து இடுகை அளித்துள்ளீர்கள்

வாழ்த்துகள்

கார்த்திக் பிரபு said...

Arumaiyana padhivu .niraya information

maniratnam matum than inum nilaithu adithu aadukirrra ..bala chandarai appdi onum kuraichalai solla mduiyadhu ..sindhu bairavi paarunga ..inum rasika mudiyum

avarin problem ennavenndaral athu meeriya sindhanai/karpanai ..ipo sra voda kadhaigal madhiri than avroda padangal


bharathiraja meendu varanum..therkathi ponu ellam bore pa ..meendum oru vedham pudidhu varanum

valthukala friend

unagaluku neramum interest m irudhal indha periya thalaigal matumilamal niraya vittil poochi directors tamil cinima vil vandharagl ponargal avargalai parri elhdungalane ..udharanam..sathriyan nu oru padam apuram rosapoo ravikakari ipadi niraya solllam

expecting a reply

Unknown said...

பாரதிராஜாவின் ரசிகைகள் இப்போது TV முன் உட்கார்ந்து விட்டார்கள் என்று, யாரோ எப்போதோ சொன்னதை படித்து இருக்கிறேன்..