Sunday, January 31, 2010

அமீர் கான் - ஆச்சர்யப்பட்ட சில விஷயங்கள்

கமல் தமிழ்ப்படங்கள் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எப்போழுதும் விரும்புவார்.அப்படி கமல் போல மாற்றுப் பாதையை விரும்பி தனி பாணியில் செல்வது என்று பார்த்தால் அது அமீர் கான் தான்.பழைய இந்தியா டூடேவை புரட்ட நேர்ந்தப் பிறகு அவன் மீதான ஆச்சர்யங்கள் பெருகியிருந்தது.

ஆஸ்கர் - ஒரு அமெரிக்கன் விருது என்று எல்லோரும் சொல்லும் போது அவன் எடுத்த கதையையே நாம் எடுத்தால் நமக்கு எப்படி ஆஸ்கர் கிடைக்கும் என்று சொன்னவர்.

தேசிய விருது - அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.அதை நான் மதிப்பதும் இல்லை என்று வெளிப்படையாக சொன்ன விதம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்.எனக்கு இந்த வார்த்தைகள் மிகவும் பிடித்தது.காரணம் இந்த ஆண்டு குடுத்த தேசிய விருது பெற்ற தமிழ் மொழியில் வந்த சிறந்த படம்.

ஷாரூக் - இனிய எதிரி.சக் தே இந்தியாவும்,தாரே ஜமீன் பர் படமும் தேசிய விருது பிரிவில் போட்டியிட்டப் போது வென்றது அமீர்.அவர் இயக்கிய முதல் படம்.நான் தான் பெரிய ஆல் என்று இருவரும் சீண்டிக் கொள்வார்கள்.நாய்க்கு ஷாரூக் என்று பெயர் வைத்து அழைத்தேன் என்று பிளாக்கில் எழுதி சொந்த ரசிகர்களிடமே திட்டு வாங்கியதும் உண்டு.

3 இடியட்ஸ் - இவ்வளவு புத்திசாலித்தனம் எல்லாம் வேண்டாம்.எதையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் மாணவராக இருந்தால் போது திரைக்கதையில் மாற்றம் கொண்டு வந்தவர்.

படிப்பு - பள்ளியில் படிப்பு முடித்தவுடன் படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு உதவி இயக்குனராக நாலு வருடம் வேலை.நடித்த முதல் படம் பம்பர் ஹிட்.அடுத்த ஒன்பது மாதத்தில் பதினாறு படம் என்று அவசரப்பட்டு அவர் முன்னேற்றத்தை அவரே தடுத்துக் கொண்டதாக நினைக்கிறார்.காரணம் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தாராம்.இயக்குனருக்கு கொடுக்கவில்லை.

ராசி - அவருடன் சேர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து விட்டு அடுத்தது பெரிய தோல்வியாக கொடுப்பார்கள்.உதாரணம் ரந்தே பசந்தி அடுத்தது டெல்லி 6 என்று பல்ப் வாங்கி கொண்ட ராகேஷ்,லகான் கொடுத்து விட்டு சுவதேஸ் பல்ப்.அடுத்தது மிச்சமிருப்பது முருகதாஸூம்,ராஜ் குமார் ஹிராணியும் தான்.பார்ப்போம்.

சாதனை - கொஞ்சமே படித்திருந்தாலும் அவர் கஜினி படத்திற்கு விளம்பரம் செய்த விதத்தை அகமதாபாத் ஐஐஎம்மில் பாடமாக வைக்கிறார்களாம்.தொடர்ந்து ஐந்து ஹிட்.தயாரித்த படம் தனி.500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்சன்.

அதிர்ச்சிகள் - புது இயக்குனர்,தோல்வி படம் குடுத்த இயக்குனர் என்று பார்ப்பது கிடையாது.அதனால் தான் வெற்றிகளை அறுவடை செய்கிறாரோ.

2000 ஆண்டு முதல் அவர் நடித்த எல்லா படங்களுமே வித்தியாசம் தான்.

2001 - லகான்,தில் சாத்தா ஹை.

அடுத்த நாலு வருடங்கள் படமே நடித்து குவிக்கவில்லை.ஒரே ஒரு படம் தான்.ஹேராம் கமல் மாதிரி நீள முடி வளர்த்து சரித்திரப் படம்.இரண்டுமே தோல்வி.

2005 - மங்கள் பாண்டே.

2006 - ரந்தே பசந்தி.(ஆறு நாயகர்களில் ஒருவர்-தமிழில் சாத்தியமா),ஃபனா.

2007 முதல் கிருஸ்மஸ் தோறும் படம் வெளியாயாகும்.வெற்றியும் பெறும்.

2007 - தாரே ஜமீன் பர்.

2008 - கஜினி

2009 - 3 இடியட்ஸ்.

ஷாரூக்கான் படம் ஓடிய திரையரங்குகளில் இவர் செய்த விளம்பரம் பரபரப்பாகப் பேசப்பட்டது.திரையரங்கு ஊழியர்கள் அனைவருக்கும் கஜினி பாணியில் மொட்டை.பெங்களூர் கல்லூரிகளில் அப்படி முடி வெட்டத் தடை.

சொல்ல மறந்து விட்டேன்.அவர் எந்த விருது வழங்கும் விழாவிற்கும் செல்வதில்லையாம்.காரணம் விருது திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லையாம்.சரி தான் 2005ல் யாருக்கு விருது என்றால் ஹம் தும் என்ற காமெடி படத்தில் நடித்த சயீப் அலிகான்.அம்மா தேர்வுக் குழு உறுப்பினர் என்பதாலா என்றால் எனக்கு தெரியவில்லை.இந்த வருடமும் கிடைக்காது பா படத்திற்கு அமிதாப் தட்டி செல்வது உறுதி.ஹம் தும் படத்தில் நடித்தற்கே குடுக்கலாம் என்றால் 3 இடியட்ஸ் படத்திற்கும் குடுக்கலாம்.

3 இடியட்ஸ் வெளியான அடுத்த நாளே திருட்டு டிவிடி வந்து விட்டது.அமீர் கான் கதறவில்லை.காரணம் படத்தின் மீதுள்ள நம்பிக்கை.முக்கிய குறிப்பு இந்தி திரையுலகில் யாரும் திருட்டு டிவிடி குறித்து கதறவில்லை.

ஜக்குபாய் போல இரு இந்தி திரைப்படமும் இணையத்தில் வெளியாகி விட்டது.மகராஷ்டிரா முதல்வருக்கு வேலை இருக்கிறதாம்.அதனால் அழுது புலம்ப முடியவில்லை.நான் அவருக்கு சொல்வது ஒன்று தான் நீங்க தமிழ் நாட்டில் பிறந்து இருக்க வேண்டும் பாஸ்.

4 comments:

லோகு said...

அமீர் ஒரு வித்தியாசாமான கலைஞன் தான்.. அட்டகாசமான பகிர்வு அண்ணா

//மகராஷ்டிரா முதல்வருக்கு வேலை இருக்கிறதாம்.அதனால் அழுது புலம்ப முடியவில்லை//

இது 'நச்'

வினோத் கெளதம் said...

அமீர்..மிகவும் பிடித்த நடிகர்..
One of the perfectionist in indian cinema.

Dil chata haiக்கு
அப்புறம் கிட்டதட்ட அந்த காலகட்டதிற்கு பிறகு
தான் ஹிந்தி சினிமா பாதை கொஞ்சம் மாறி வந்துச்சு இல்லை.

//அடுத்த நாலு வருடங்கள் படமே நடித்து குவிக்கவில்லை.ஒரே ஒரு படம் தான்.ஹேராம் கமல் மாதிரி நீள முடி வளர்த்து சரித்திரப் படம்.இரண்டுமே தோல்வி.//

மேட்டர் புதுசு..இவ்வளோ கேப் எடுத்துக்கிட்டாரா..

Nathanjagk said...

அமீர் பற்றி நிறைய துணக்குகள். அமீரை புதிதாக பார்ப்பது ​போல் இருக்கிறது.

Unknown said...

விருது வழங்கும் விழாக்களுக்கு அமீர் கான் செல்வதில்லை என்பது பற்றி இங்கே ஒரு இந்திக்காரர் நடத்தும் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். அதன் பின் இந்திய சினிமா நடிகர்களில் என் மனதில் இருந்த வரிசையில் கமலைப் பின்னுக்குத் தள்ளி அமீர் முன்னுக்கு வந்திருக்கிறார். கமல் அமீரை இதில் பின்பற்றலாம்

அதே கட்டுரையில்தான் சொன்னார்கள். நட்சத்திரங்கள் விழாவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே புதுப்புது விருதுகளை உருவாக்கி, அவர்களுக்குக் கொடுக்கிறார்களாம் என்று.