Saturday, January 9, 2010

பார்த்திபன் கனவு படத்தின் தாக்கம்

பார்த்திபன் கனவு படம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம்.குரோம்பேட்டை ராகேஷ் தியேட்டரில் நண்பர்களோடு பார்த்த படம்.அந்த படத்திற்கு போட்டி வெற்றி திரையரங்கில் ஓடிய ஓடியே போன புதிய கீதை(இன்னும் விஜய் நடித்த எனக்கு பிடித்த படங்களில் இதற்கு தான் முதல் இடம்.).பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயில் கூவும் இரயில் பாட்டுக்கு நடுவே ஸ்ரீகாந்த் சில வார்த்தைகளை சொல்வார்.அதற்கு அவர் பாடுவார். படத்தில் வந்த வார்த்தை விளையாட்டுகளில் சிலவும்,அந்த பாதிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் நான் முயற்சி செய்த கவிதை மாதிரிகளும். (படிச்சிட்டு சொல்லுங்க..வேற வழி..இன்னைக்கு பாத்தா அந்த பழைய பேப்பர் என் கையில் சிக்கணும்.எல்லாம் விதி.)

கண்ணாடி

நான் என்னை பார்க்கிறேன்
அது உன்னை காட்டுதே.

சமையல்

உன்னை மையல் கொள்ள வைக்கும்
என் காதல் ஆயுதம்

கனவு

நான் உன்னை நினைக்கிறேன்
அது என்னுள் ஓடுதே

காதல்

நம் இருவர் நட்புக்கு
காலம் காட்டும்(சூட்டும்) பெயர் அல்லவா

குழந்தை

இந்த கவிதை மட்டும்
இரட்டை அர்த்தம் காட்டுதே

திருமணம்

இருமனம் இணைய சுற்ற்ம் சூழ
நடக்கும் ஒரு நாள் திருவிழா

நட்பு

இருவர் மனதில்
சேரும் போதும் பூக்கும் பூவல்லவா
பிரியும் போதும் கருகும் மொட்டல்லவா

பிரிவு

என் மரணம் வரைக்கும்
இனிக்கும் உன் நினைவு
கசக்கும் சில உண்மை

கண்ணீர்

என் கண்கள் கல்ங்கினால்
உன் கண்ணில் காதல் வழியுதே

கற்பு

உருவப் பொம்மை எரிப்பு
கழுதை ஊர்வலம் மனக்கண்ணில் தெரியுதே.

விழிகள்

கவிதை சொல்லிடும்
காதல் படித்திடும்
ஊமை மொழிகளின் ஜால்ங்களாலே

கடிதம்

பொசுங்கி போன பொக்கிஷமாக
பரணில் கிடக்கும் பழைய நினைவுகள்

முத்தம்

உதட்டில் விழாமல்
காதில் தொலைந்த ஈர சத்தம்
இச்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆலங்குயில் கூவும் இரயில்.

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் அரவிந்த் - நன்றாகத்தான் இருக்கிறது - முயற்சி வாழ்க

நல்வாழ்த்துகள் அரவிந்த் - 11.01.2010 நினைவில் இருக்கிறதல்லவா

Raju said...

\\\பொசுங்கி போன பொக்கிஷமாக\\\

நீங்க சேரனை விடவே மாட்டீங்களா..?
:-)


அப்ப்றம்,150க்கு வாழ்த்துக்கள்.