Tuesday, January 26, 2010

ஹிட்ஸ்,அலெக்ஸா ராங்க்,இன்னும் கண்டது கழியது எல்லாம் அதிகரிக்க

ஹிட்ஸ் பிரச்சனையில் இருந்து பதிவுலகத்தின் போதை அல்லது பார்வை கொஞ்சம் இடம் மாறி அலெக்ஸாவில் குடி கொண்டுள்ளது.வருண் எழுதிய பதிவில் எனக்கு உடன்பாடான ஒரு விஷயம் குருஜி ஜ்யோவ்ராம் சுந்தர் போட்ட பின்னூட்டம்.சில பின்னூட்டத்தில் இருந்த வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் யோசித்து பார்த்ததில் - "இது அமெரிக்கனின் ஆஸ்கர்..இந்தியர்களுக்கு கிடைக்காது.." என்று சொல்வது போல் உள்ளது.
நான் சொன்னது போல் விரைவில் அவர் ஐம்பதாயிரம் இடத்திற்குள் வரும் நாள் தொலைவில் இல்லை.இதற்கு காரணம் - வெள்ளிக்கிழமை சினிமா விமர்சனத்தையும் தாண்டி அவர் பதிவில் ஏதோ ஒரு வசீகரம் இருப்பது தான்.(இதுக்காவது அடுத்த கொத்து புரோட்டாவில் சுட்டி கொடுக்கவும். முடிந்த அளவு பில்டப் கொடுத்து விட்டேன்.இந்த அரசியல் போதுமா இன்னும் வேணுமா.)

தவிர சாரு போன வருடம் அவருடைய அலெக்ஸா ராங்க் உச்சத்தில் இருந்த போது எழுதிய காமரூபக் கதைகளும்,நிறைய எழுத்துகளும் இந்த வருடம் இல்லை.அது மட்டும் தான் காரணமே தவிர வாசகர்கள் காரணம் அல்ல.இதுவும் நான் சொல்வது மட்டும் தான்.

என் அலெக்ஸா ராங்க் வேற கொஞ்ச நாளாய் சரியத் தொடங்கி இருக்கிறது.காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால்

1.கவிதை எழுத ஆரம்பித்தது.(என்ன கொடுமை நாராயணா இது..)

2.ஒரு நாளுக்கு ஒரு பதிவு தான் எழுதுவது.(குஜராத் மோடி சொன்னது போல் ஒரு நாளைக்கு ஒன்பது பதிவு எழுதலாம்)

3.சாருவிடம் மிஷ்கின் விஷயத்தில் முரண்பாடு கொண்டு அவர் பெயரை தலைப்பில் சேர்க்காமல் போனது.(யாரு நீ..)

4.வாசகர்கள் இரும்புத்திரையை புறக்கணித்து விட்டது.(வாசகர்களா முடியலைடா சாமி..)

5.மிஷ்கின் பதிவிற்கு அவர் தளத்தில் எனக்கு சுட்டி தராமல் போனது.(ரெண்டாயிரம் ரூபாயாமே வடக்கா இல்ல வோட்கா)

6.வடைகளை சரியாக கேட்ச் பிடிக்காமல் இருப்பது.(கேட்ச் பிடிச்சிட்டாலும் சென்னை - 28 பிரேம்ஜி ஞாபகம் வருது..)

7.தமிழ்மணம்,தமிளிஸ்,சங்கமம் இங்கு ஓட்டு விழாமல் இருப்பது.(இது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியல..)

8.கள்ளஓட்டு குத்த இணையத்தளம் இல்லாமல் போனது.(மகுடம் ஏறாமல் அடங்க மாட்ட போல..வாய் முகூர்த்தம் பலித்து சங்கமம் திரட்டியில் புயூஸ் பிடிங்கிட்டாங்க..)

9.ஆணி அதிகம் ஆனது(உனக்கே ஒவராத் தெரியல ஒவர்)

10.எதிர்பதிவுகள் போடாமல் இருப்பது,எதிர்பதிவுகள் போடுபவர்கள் சுட்டி தராமல் இருப்பது.(கொசு மருந்து தீர்ந்து போச்சா..அடிச்சு கொல்லுங்க..)

அலெக்ஸா ராங்கில் ஏதாவது கோல்மால் செய்ய முடியுமா என்று ஆராய்ச்சி செய்து கேபிள் சங்கரை விட எனக்கு அதிகம் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபணம் செய்யும் வரை இப்படி ஏதாவது பதிவு போட்டு காலத்தை தள்ள வேண்டியது தான்.

10 comments:

இரும்புத்திரை said...

தலைப்புக்கும்,பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் சொல்லவும்

லோகு said...

:))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.கே//// ஓ/கே/////

Cable சங்கர் said...

ook..ரைட்டு.. ஏதோ நானும் எழுதுகிறேன் என்று அங்கீகாரம் தந்தமைக்கு நன்றி :)

சங்கர் said...

// இரும்புத்திரை said...
தலைப்புக்கும்,பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் சொல்லவும்//

இது கூட ஒரு காரணமா இருக்கலாம் :)))

அத்திரி said...

அய்யய்யோ..........ஏண்டா இப்படியெல்லாம்................ முடியல

Chitra said...

டைகளை சரியாக கேட்ச் பிடிக்காமல் இருப்பது.(கேட்ச் பிடிச்சிட்டாலும் சென்னை - 28 பிரேம்ஜி ஞாபகம் வருது..)
.....ha,ha,ha,....

Paleo God said...

கேபிள்ஜி கிட்ட புத்தக கண்காட்சியிலயே சாஃப்ட்வேர் பத்தி கேட்டங்க.. மனுஷன் மூச்சு விடலியே...

கவலய வுடுங்க எப்படினா பீரான்ஞ்சிடலாம்..:))))

நீச்சல்காரன் said...

ப்ளாக்குள் வரும் போது எழுத்துக்குதான் மதிப்பு எனஎண்ணினேன் இதை பார்த்தபின் பயமாயிருக்கிறது

Blogger said...

Alexa ranking is not reliable.
It only counts visitors using alexa toolbar.There are various methods to fabricate it.