Wednesday, January 6, 2010

எனக்கும் ஒரு உளுத்துப் போன வட கிடைச்சாச்சு - கௌதம் மேனன்

கௌதம் மேனனின் அறிவுஜீவித்தனத்தின் மீது எழுந்த கோபத்தில் சில மாதங்களுக்கு முன் பரிசல்காரனின் பதிவில் போட்ட பின்னூட்டம் இதோ.பரிசல் எழுதிய தற்போதைய தமிழ் சினிமாவின் டாப் டென் எதிர்பார்ப்புகள் பதிவில் ஏழாவது இடம் விண்ணைத் தாண்டி வருவாயா.அதை தொடர்ந்து நான் எழுதிய பின்னூட்டம்.

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனனின் அப்பாவின் கதையை சொன்ன படம் . அதில் வந்தது எல்லாம் கௌதம் மேனனின் வாழ்வில் நடந்தது தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் காதல் தோல்வியில் இருந்து கௌதம் (சூர்யா) மீண்டு வந்த பிறகு இராணுவத்தில் சேருவார் .

ஆனால் உண்மையில் அவர் சேர்ந்தது ராஜீவ் மேனனின் உதவியாளராக - இந்த கதை தான் விண்ணைத் தாண்டி வருவாயா .

கதையில் த்ரிஷா சிம்புவின் தங்கையின் தோழி . வாரணம் ஆயிரம் படத்தில் திவ்யா சூர்யாவின் தங்கையின் தோழி .

ஆக மொத்தம் இரண்டு கதையும் ஒன்று தான் . இரண்டையும் குப்பையில் தான் போட வேண்டும் (பாடல்களை நான் சொல்லவில்லை).

தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை இந்த முட்டாள்கள் எடுத்த கதையையே எடுப்பார்கள் .

மதுரையின் மோடி,குஜராத்தின் மஸ்தான் இதற்கு பொங்காத காரணத்தால் நான் பொங்குகிறேன்.காரணம் ஆயிரம் அதில் ஒன்று இதற்கெல்லாம் அவர் பொங்க மாட்டார் என்று நினைக்கிறேன்.(அடுத்த அஜீத் பட இயக்குனர் கௌதம் மேனன் என்று கேள்விப்பட்டேன். )

வாரணம் ஆயிரம் பாடல்கள் வெளியீடு.கௌதம் மேனன் இப்படி சொல்கிறார் - "நானும்,சூர்யாவும் அந்த படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தோம்.அறிமுக இயக்குனராக இருந்தாலும் மிரட்டி இருந்தார்.எங்களுக்கு படம் பிடித்து இருந்தது.அதனால் வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு பாடலை வெளியிட அவரை அழைக்கிறேன்.அந்தப் படம் சுப்ரமணியபுரம்.வாங்க சசிகுமார்.."

தற்போது அவர் அடித்த அந்தர் பல்டியைப் பார்ப்போம் - "என்னாலும் வன்முறை படங்கள் எடுக்க முடியும்.ஏன் சசிகுமாரை இப்படி தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை.நான் இயல்பான படம் எடுத்தால் அது இங்கீலிஷ் படம் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.என்னாலும் அந்த படங்கள் போல (சுப்ரமணியபுரம்,பருத்தி வீரன் போல) எடுக்க முடியும்.."

இதற்கு என் பதில் - "எடுக்க வேண்டியது தானே.காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,பச்சைக் கிளி முத்துச்சரம் எல்லாம் வன்முறை இல்லாத படங்களா..இல்லை கெட்ட வார்த்தைகளே அந்த படத்தில் வரவில்லையா..காக்க காக்க,வேட்டையாடு விளையாடு,பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் வில்லங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்தது இன்பத்தேனாக காதில் பாய்ந்ததே.சசிகுமாரை கொண்டாடமல் என்ன செய்வார்கள்.அவர் படம் ஏ,பி,சி என்று எல்லா செண்டர்களிலும் ஓடுகிறது.உங்கள் படம் ஏ செண்டரைத் தாண்டினால் சிங்கி தான் அடிக்கும்.வினியோகம் செய்தவர்களின் நிலைமை - சிங்கிள் டீக்கு திண்டாடுவார்கள்..சுப்ரமணியபுரம் வந்தப் பிறகு வாங்க சசிகுமார் வாங்க கேஸட் ரீலிஸ் செய்யுங்கள் என்று குரலில் தேன் தடவி அழைத்தது யார்..கிராமத்து படம் எடுப்பேன் என்று யாரும் சொல்வதில்லை.எடுத்து விட்டு சொல்லுங்கள்.ஹாலிவுட்டில் கிராமங்கள் இல்லையா.."

ஏன் இந்த மாற்றம் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் சசிகுமார் தற்போது நகரம் என்று நகரத்து கதையை இயக்குகிறார்.இதிலும் வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயமா கௌதம் மேனன்.மிஷ்கினை சிறந்த இயக்குனர் என்று சொல்ல மாட்டார்.காரணம் அஞ்சாதே.மிஸ்டிக் ரிவர் படத்தின் தழுவல் என்று சொன்னாலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.அவ்வளவு நேர்த்தியான இயக்கம்,திரைக்கதை அமைப்பு.காக்க காக்க படத்தை விட நூறு மடங்கு சிறந்தது.வன்முறை காட்சிகள் எல்லாம் குறைவு.உங்கள் வேட்டையாடு விளையாடு படத்தின் வன்முறைகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.நாலு ஆங்கில படத்தில் இருந்து காட்சிகள் எடுத்தால் அது நேர்த்தியான படமாக இருக்கும்.அதைதான் நீங்கள் செய்து வருகிறீர்கள்.மிஷ்கின் உங்களை விட சிறப்பாக செய்கிறார்.அதனால் சிறந்த இயக்குனர் என்று ஒத்துக் கொள்ள ஈகோ தடுக்கிறது.சசிகுமாரும் உங்களை மிஞ்சி விட்டார் என்ற பயம் தான் உங்களை இப்படி எல்லாம் பிதற்ற செய்கிறது.

அடுத்து ஏற்கனவே அடித்த பல்டி - "லிங்குசாமியின் பீமா - அந்த இறுதி காட்சி இந்த படத்தில் இருந்து திருடப்பட்டது,இப்படி எல்லாம் எடுக்க வேண்டுமா என்று அப்பட்டமாக ஆனந்த விகடனில் பேட்டிக் கொடுத்து விட்டு அவர் வருத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்.அதனால் ஸாரி. காலையில் சாப்பிட்டது பூரி.மண்ணு அள்ள வந்தது லாரி என்று சில மாதங்கள் கழித்து இந்து நாளிதழில் ஒரு பேட்டி.ஏன் இந்த அந்தர் பல்டி.

இப்போது அதே ஆனந்த விகடன் - "எனக்கு "இந்த" அமீரின் மீது இருந்த மரியாதையே போய் விட்டது.டோட்ஸி படம் எடுக்க அமீர் தேவையா..".இந்த என்ற வார்த்தையில் தான் எவ்வளவு அலட்சியம்.ஹிந்து நாளிதழில் உங்கள் ஸாரி,பூரி,மண்ணு லாரி அந்தர் பல்டி பேட்டிக்காக காத்திருக்கிறேன்

கௌதம் மேனனின் புத்திசாலித்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பேக்லாஸ்(BACKLASH) - 1999 படத்தை சுட்டு காக்க காக்க எடுத்து விட்டு என்ன பில்டப். பேக்லாஸ் படம் எடுக்க "இந்த" கௌதம் மேனன் தேவையா.

அந்த படத்தின் கதை - படத்தின் ஆரம்பத்தில் நாயகி தங்கியிருக்கும் ஹோட்டல் நீச்சல்குளத்தில் மயங்கி கிடப்பார்.அங்கு இருந்து அவர் கதை சொல்வார்.கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவனை கொன்று விட அவனுடைய சொந்தங்கள் அவளை மிரட்டி பழி வாங்க துடிக்கும் கதை.நாயகிக்கு பதில் சூர்யா ஒரு ஆற்றங்கரையோரமாக மயங்கி கிடப்பார்.அங்கிருந்து கதை சொல்வார்.

இதுல என்ன கொடுமைன்னா இந்த படத்தை பற்றி எங்கும் அவ்வளவாக சொல்லப்படவில்லை.தெரியாமல் திருடி பெயர் எடுத்து விட்டு சரியாக திருடாதவனைப் பார்த்து தரையில் புரண்டு புரண்டு சிரிப்பது போல் உள்ளது கௌதம் மேனன் செய்வது.

இரண்டுமே திருட்டுத்தான்.நாட்டையே சுரண்டும் பெரும் பணக்காரத் திருடன் வகையராக்களில் ஒருவர் தான் கௌதம் மேனன்.பிக்பாக்கெட் திருட்டுக்கு மிதி வாங்கும் பாவப்பட்ட கும்பல்களில் ஒருவர் தான் அமீர்.நாங்க எங்கள் காசை இழக்கிறோம்.அமீரை திட்டுகிறோம்.இன்னொரு ஹாலிவுட் திருடன் திட்டினால் அவருடைய பழைய கதைகளை நோண்டி வெளியே எடுப்போம்.(சந்தேகம் ராஜேஷ்குமாரின் 1989 நாவல்களில் உள்ள கதையும் வேட்டையாடு விளையாடு கதையும் ஒன்றா.)

விஜய் கதை கேட்டு விட்டு திருப்பாச்சி,சிவகாசி டி.வி.டி கொடுத்தார் என்று ஒரு பெட்டி கொடுத்தார்.திரும்ப விஜய் கூப்பிட்டால் கதை சொல்ல போகாமல் இருப்பாரா மானமுள்ள மகராசன்.காலம் பதில் சொல்லும்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கதை ஆரம்பத்தில் இருக்கிறது.அமெரிக்காவுல சூட் செய்தால் தான் படம் ஓடுமாம்.எவன் வீட்டு காசு.மிச்சம் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற குப்பை வரட்டும்.அப்போ தெரியும்.

12 comments:

மணிப்பக்கம் said...

:) நல்ல அலசல் ... !

அப்துல் சலாம் said...

ஏன் இந்த கொலை வெறி?
இருந்தாலும் சரியான கருத்து.
இந்த மேதாவி சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தனக்கு மலையாள படங்கள் மட்டும் தான் பிடிக்கும் என்று உளறி கொட்டியது

ILA (a) இளா said...

//.எவன் வீட்டு காசு//
அவர் சொந்தப் படம்தான்.

லோகு said...

:)

யாசவி said...

கூல் டவுன்.

இவரும் ஒரு மொக்கைச்சாமிதான் சந்தேகமில்லை.

நீங்க சொல்றதுல சில விசயங்களில் உடன்படுகிறேன்.

ஜெட்லி... said...

கௌதம் காலி.....

Selva Weds Mathangi said...

சரியான கருத்து

அத்திரி said...

கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.மறுபடியும் மரம் ஏறிட்டியே

Vikram said...

@i'm afraid the name of the inspirational movie for Kaakha kaakha has been given incorrectly... kindly check it..

Unknown said...

//ஏன் இந்த கொலை வெறி?
இருந்தாலும் சரியான கருத்து.
இந்த மேதாவி சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் தனக்கு மலையாள படங்கள் மட்டும் தான் பிடிக்கும் என்று உளறி கொட்டியது//

”மேனன்” பேர வச்சிக்கிட்டு அவ்வளவு கூட சொல்லலன்னா எப்படி சலாம்??...

:)

Ganpat said...

தமிழில் வரும் எந்த நல்ல படமும் ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலோ அல்லது அப்பட்டமான காபியோ தான்.இதற்கு விதிவிலக்கு யாரும் கிடையாது ஒரிஜினல் எல்லாம் ஸ்ரீதர்,மகேந்திரன் மற்றும் பாரதிராஜா வுடன் over.மணிரத்தினம் முதல் அனைவரும் காபியாளர்கள்தான்

Bala said...

தலைவா DERAILED படம் போன வாரம் ZEE STUDIO சேனல்ல பாத்தேன். இதைத்தான் அப்படியே பச்சைக்கிளி முத்துச்சரம் என எடுத்திருக்கார் நம்ம கவுதம். சரத் வாயில் வழிகிற ரத்தம் முதற்கொண்டு காப்பி. அத விட்டுடீங்களே......