Saturday, January 2, 2010

அபிராமி,அபிராமி - குணா கமல்,லட்டு

மடக்கி மடக்கி எழுத நினைக்கும் போதெல்லாம்
வார்த்தைகள் பிடிப்படுவதில்லை
எதிர்வினைக்கான காரணம் எழும் போதெல்லாம்
ஆற்ற நேரம் கிடைப்பதில்லை
கோபத்தில் முகம் சிவக்கும் போதெல்லாம்
கெட்ட வார்த்தைகள் சிக்குவதில்லை
நேரத்தை கொல்ல நினைக்கும் போதெல்லாம்
இணையத்தில் வேட்டைக்காரன் அகப்படவில்லை
அப்போதெல்லாம் வராத வருத்தம்
சற்றே கிளறி எழுந்து அடங்குகிறது
மிட்நைட் மசாலாவில் சரியாக தெரியாத
நாலாவது வரிசையில் ஆடும் துணைநடிகையின் முகம்.

5 comments:

இரும்புத்திரை said...

வேண்டுகோள் - இதற்கு உரைநடை எழுத விசா அழைக்கப்படுகிறார்.

Unknown said...

ஆகா கவித கவித...

Raju said...

மூஞ்சியாயா முக்கியம்...?

அகல்விளக்கு said...

வாவ்....

நிறைய கவிதை எழுத முயற்சி பண்ணுங்க தல

cheena (சீனா) said...

அன்பின் இரும்புத்திரை

அழகிய கவிதை - முகம் தெரியாத போது ஏற்படும் வருத்தம் விரைவினில் நீங்க நல்வாழ்த்துகள்