Friday, January 1, 2010

வாய்ப்பு தரப்படாத இரண்டு திறமையான இசையமைப்பாளர்கள்

உல்லாசம் படத்தின் பாடல்களை முதல் முறையாக கேட்டு விட்டு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று தான் நினைத்து கொண்டோம்.பிறகு படம் பார்க்கும் போது இசை என்று கார்த்திக் ராஜாவின் பெயர் இருந்தது.அண்ணன் தம்பி இருவரும் ஒரே துறையில் இருந்தால் உடனே ஒப்பீடுகள் தொடங்கி விடும். அதில் சிக்கிக் கொண்டவர் தான் கார்த்திக் ராஜா.2000ம் ஆண்டுக்கு முன் வரை இந்த ஒப்பீடுகள் இல்லை.காரணம் இரண்டு பேரும் பெரிதாக வெற்றிப் படங்கள் தரவில்லை.தலா ஒரு ஹிட். கார்த்திக் ராஜா - உல்லாசம்.யுவன்சங்கர் ராஜா - பூவெல்லாம் கேட்டுப்பார். பிறகு யுவனுக்கு அமைந்த கூட்டணிகள் போல கார்த்திக்ராஜாவுக்கு அமையவில்லை.(செல்வராகவன் - 5,அமீர் - 4 ,சிலம்பரசன் - 3, விஷ்ணுவர்தன் - 4,வெங்கட் பிரபு - 3) இப்படி நல்ல பாடல்கள் வாங்க தெரிந்தவர்கள் யுவனோடு சேர்ந்தது தான் இந்த வெற்றிக்கு காரணம்.கே.எஸ்.ரவிக்குமார் எதிரி படத்திற்கு எப்படி பாடல்கள் என்று கேட்டாலே அதிகம்.

அது மாதிரி முழுப்பாடல்களுடன் என்னை கவர்ந்த ஒரு படம் ஆல்பம்.(வசந்தபாலின் முதல் படம் - ஆப்பம் ஆகி விட்டது.பாடல்கள் எனக்க்கு மிகவும் பிடித்து இருந்தது.)செல்லமே செல்லமே என்றாயடி என்று ஒரு பாடல் இன்று கேட்டாலும் மனதை அள்ளுகிறது.நல்ல கூட்டணி அமையாமலே திறமைகளை காட்ட வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

நாளை,டும்டும்டும்,உள்ளம் கொள்ளை போகுதே படங்களும் அவர் இசையில் வந்து குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும்.

இன்னொரு இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட்.மின்னல் ஒரு கோடி என்று ஹரிகரன்,சித்ராவின் குரலில் இன்றும் நான் விரும்பும் பாடல்.பத்து நாட்களுக்கு முன் ஏதாவது புதுப்பட பாடல்களை கேட்டிருப்பேன்.இதற்கு இசையமைப்பாளர் யார் என்று கேட்டு பல்ப் வாங்குவேன்.அப்படி எல்லாம் இல்லாமல் இத்தனை வருடங்கள் கழித்தும் நிறைய வரிகள் அந்த பாடலில் வரி மாறாமல் தெரிவது எனக்கே ஆச்சர்யம் தான்.

வி.ஐ.பி படத்திற்கு பின் காணாமல் போய் பின் 2007லில் தான் திரும்ப வந்தார்.மீண்டும் உற்சாகத்தோடு திரும்ப வந்து ஒரு ஹிட் ஆகாத படத்துக்கு இசையமைத்தார்.படம் உற்சாகம்.நந்தா,ஷெரின் நடித்தது.பாடல்கள் எல்லாம் அருமை.பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை.அது சரி நாம் தான் ஜெயிக்கும் குதிரை பின் போய் தானே உதை வாங்குவோம்.ஒரு முறை கேட்டு பாருங்கள்.பிரீத்திக்கு இல்ல இல்ல பிடிக்கும் என்பதற்கு நான் கேரண்டி.

சந்தர்ப்பமே குடுக்காமல் ஒப்பீடு செய்வதில் இருப்பதைப் போல முட்டாள்த்தனம் எதிலும் இல்லை - இது எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வது.

19 comments:

செழியன் said...

boss mundinthal dum dum dum kettu parunga super music

பாலாஜி சங்கர் said...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா

Unknown said...

நண்பரே உங்கள் கருத்து சரியே.கார்த்திக் ராஜாவின் இசைக்கோர்ப்புகள் இனிமையானது.

இவரின் 1.”ரைட்டா தப்பா” 2.“அச்சமுண்டுஅச்சமுண்டு” கேளுங்கள்.

தப்பா ரைட்டாவில் “இளமை என்பது”
”யாரிடம் சொல்வேன்”பாட்டில் வரும் இசைக் கோர்ப்புகள்.

http://www.thiraipaadal.com/albums/ALBKAR00016.html

அச்சமுண்டுவில் “கண்ணில் தாகம்”
அருமை.

http://www.thiraipaadal.com/albums/ALBKAR00023.html

அத்திரி said...

கார்த்திக் ராஜாவின் இசையில் இளையராஜா பாடிய உல்லாசம் படப்பாடல் அவ்ளோ இதமா இருக்கும்........ டும்டும்டும் பாடல்களும் ஓகே.....................

SHOSAR said...

ஆம் அன்பரே எனக்கும் கார்த்திக் ராஜவை தமிழ் திரை உலகம் நன்றாக பயன் படுத்தவில்லை என்ற அபிப்பிரயம் உண்டு. மாணிக்கம் படத்திற்கும் அவருடைய இசை அமைப்பே.

RK said...

நாம் இருவர் நமக்கு இருவர்-பிரபுதேவா-மீனா கெட்ட ஆடும் போடும் ஐலசா ஐலசா சரியான pep song..

அந்த படத்தின் கிளைமேக்ஸ் எபிசோடில் ஒரு அருமையான ரீ-ரிக்கார்டிங் பண்ணியிருப்பார்..இன்னும் மனதிலேயே இருக்கிறது..

அகல்விளக்கு said...

கரீட்டா சொன்னீங்க தல....

டும்டும்டும்-ல ரகசியமாய் பாட்ட கேட்டுட்டு ஏ.ஆர். இல்லன்னா ஹாரிஸ் தான் மியூசிக்-னு அடிச்சு சொல்லி பல்ப் வாங்கியிருக்கேன்...

இரும்புத்திரை said...

நன்றி செழியன் - டும்டும்டும் பத்தி சொல்லி இருக்கேன்.(ரொம்ப கம்மியாக)

நன்றி பாலாஜி - அதுவும் உண்மைதான்.எதிர்பார்ப்பு காலை வாருவதும் உண்டு.

நன்றி ரவிசங்கர் தல - ரைட்டா தப்பா படம் பத்தி வேற விவரம் குடுக்க முடியுமா தல.பாட்டுக்களுக்கு நன்றி தல.

நன்றி அத்திரி தல ஆமா தல நாளையும் நல்லா இருக்கும்

நன்றி ஷோஸ்கர் சரிதான் தல

நன்றி ராதாகிருஷ்ணன் - அதை மிஸ் பண்ணிட்டேன்

நன்றி அகல் விளக்கு - தினமணி அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

இரும்புத்திரை said...

ரஞ்சித் பரோட் தனியா நிற்கிறாரே.உற்சாகம் கேளுங்கள்.ப்ளீஸ் எனக்காக.வேண்டாம் உங்களுக்காக

அருண்மொழிவர்மன் said...

ரகசியமாய் என்றொரு படம் பிரசன்னா நடித்து வெளியானது. அதில் ஓடுதே ஓடுதே என்ற அருமையான மெலடி ஒன்றை இசையமைத்துப் பாடியும் இருப்பார். இளையராஜாவே பலமுறை யுவனை விட, இசை நுணுக்கம் அதிகம் தெரிந்தவர் கார்த்திக் என்று சொல்லி இர்ப்பார். நான் நினைக்கிறேன், கார்த்திக் ராஜாவின் பாடல்கள் சற்று அதிகம் மென்மையானதாக, மெதுவான வேகம் கொண்டதாக இருப்பது கூட அவர் பெரிய அளவு வராமைக்கு காரணமாயிருக்கலாம் என்று.

SIV said...

எனக்கும் கார்த்திக் ராஜா மிகவும் பிடிக்கும்.. சரியான் கூட்டணி இல்லை என்பது உண்மை
பின்ணனி இசையில் இளையராஜாவிற்கு இணையாக பல படங்களின் விமர்சினங்களில் கார்த்திக் ராஜா பாராட்டப்பட்டுள்ளார். மருதநாயகம் டிரைலரின் இசை கார்த்திக் ராஜா அமைத்தது என்பது கூடுதல் தகவல். கார்த்திக் ராஜா - சுந்தர்.C கூட்டணி மட்டும் இரண்டு படங்களை score செய்திருக்கிறது.

மனோஜ் கியான் (ஊமை விழிகள், செந்தூரபூவே, etc), இவரும் அருமையான இசை கொடுத்திருக்கிறார். இளையராஜா என்ற புயலில் சிக்கி காணாமல் போய்விட்டார்

Unknown said...

//நன்றி ரவிசங்கர் தல - ரைட்டா தப்பா படம் பத்தி வேற விவரம் குடுக்க முடியுமா தல.பாட்டுக்களுக்கு நன்றி தல//

கிழ் உள்ள சுட்டியில் பாருங்கள்.

http://www.hindu.com/thehindu/fr/2005/02/25/stories/2005022502650200.htm


பின்னூட்டத்தில் விட்டுப் போனது.
கேளுங்கள்:

“கண்ணில் தாகம்” பாட்டில் கவுண்ட் 0.51 - 1.03 பின்னணியில் ஒரு கருவியின் நாதம் மெயின் மெலடியோடு இணையும். இது புதுமை.இனிமை.

நண்பரே கேட்டுவிட்டு இங்கேயே feed back கொடுங்கள்.

நன்றி.

Unknown said...
This comment has been removed by the author.
Jawahar said...

நல்ல இடுகை. எனக்கு இது மாதிரி ஆதங்கம் 'பூ' படத்தின் இசையமைப்பாளர் பற்றி இருக்கிறது. (குமாரசாமியா?). அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆவாரம் பூ' பாட்டு பல நூறு முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிற பாடல். அதிலும் அணு பல்லவியில் 'கொண்ட வேரோடு, தான் கொண்ட காதலையே....' என்கிற வரிகள் சைன் வேவ் பார்மில் குதித்துக் குதித்து வருவதை ஒருதரம் கேளுங்கள்.


http://kgjawarlal.wordpress.com

Unknown said...

கார்த்திக் ராஜாவிற்கு யுவனை போல் கூட்டணிகள் அமையவில்லை என்பதே உண்மை... உற்சாகம் படத்தின் பாடல்களுக்காகவே போய் பார்த்து பல்பு வாங்கியதும் உண்டு..., இதே வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்... வெற்றிதானே இங்கே எல்லாவற்றையும்தீர்மானிக்கிறது...,

இரும்புத்திரை said...

நன்றி அருண்மொழிவர்மன் தல.நீங்கள் சொன்னது சரிதான்.அந்த மெலடி கேட்கணும் தல.

நன்றி சிவ்.இதே விமர்சனம் தான் சூர்யாவின் மீதும் வைக்கப்பட்டது.நல்ல கூட்டணிகள் கிடைத்தால் கார்த்திக் ராஜாவும் ஜொலிப்பார்.

அருமையான பாடல் ரவிசங்கர் தல.உங்கள் பதிவில் பாலைவனசோலை படத்தின் ஒப்பீடுகள் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.அங்கெ பின்னோட்டம் போடா முடியவில்லை.அதே பக்கத்தில் இருந்தால் என்னக்கு தடை செய்யப்பட்டுள்ளது.பின்னூட்டப் பெட்டி வேறு பக்கத்தில் திறந்தால் என்னால் போட முடியும்.போட முடியாத காரணத்தினால் வருந்துகிறேன்.

நன்றி ஜவகர்.அருமையான பாடல்.கதைக்காக இசையமைக்கும் அவர் விரைவில் வெற்றி பெறுவார்.

நன்றி பேநா மூடி படம் பார்த்தால் பாடல்களும் பிடிக்காது.

Marimuthu Murugan said...

"விழிகளின் அருகினில் வானம்" ரமேஷ் வினாயகத்தை விட்டுட்டீங்களே...

ரவிஷா said...

நேத்தோ முந்தாநேத்தோ உற்சாகம் படம் பார்த்தேன் கே.டி.வியில்! இசை ரஞ்சித் பலோட்! பிண்ணணி இசை அலங்கோலம்! பாட்டுக்கள் என்னவோ வேறு பாஷையில் போன்று இருந்தது! சகிக்கவில்லை!

நாரதர் கலகம் said...

but i heared karthik raja is very lazy, thats y he get very less chasnces