Monday, January 25, 2010

துவையல் - அக்கப்போர் ஸ்பெஷல்

இண்டியானா ஜோன்ஸ் நான்காம் பாகம் பார்க்கும் போது சற்றே கண் அயர்ந்து விட்டேன்.அதனால் ஒரு விஷயத்தை சரியாக கவனிக்க முடியாமல் போய் விட்டது.சனிக்கிழமை இரவு திரும்ப பார்த்ததில் தான் தெரிந்தது.அதில் வரும் காட்டுவாசிகள் இரண்டு நிறத்தில் இருந்தார்கள்.இது சமீபத்தில் வெளுத்து காயப்போட்ட படத்தில் வருவது போல் இருந்தது.அதில் சாம்பல் மற்றும் மா நிறத்தில் இருந்தார்கள்.இதில் கருப்பு மற்றும் சிவப்பு.திராவிட கொடியின் நிறம் என்று நினைத்துக் கொண்டேன்.இன்னும் அந்த படங்களை உற்றுப் பார்த்தால் என் அக்கப்போர் என்னாலே தாங்க முடியாது என்பதால் அதை அழித்து விட்டேன்.

இனி ஒரு மாதம் பதிவு எழுதாமல் சும்மா இருந்து பதிவுலகத்திற்கு நான் செய்து வரும் சேவைகளை நிறுத்தலாம் என்று இருக்கிறேன்.காரணம் அத்திரி போன்ற பெரிய பெரிய அல்லது இந்தியில் படா படா பதிவர்கள் என் பெயரை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.அவர் ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்தில் கேபிள் மற்றும் கார்க்கி பெயரை குறிப்பிட்டதோடு இல்லாமல் சுட்டி வேறு தந்து இருந்தார்.அவர்கள் இருவரும் தான் அந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என்று சொல்லி என் பெயரை சேர்க்காமல் வளரத் துடிக்கும் ஒரு பதிவருக்கு ஒரு ரெண்டாயிரம் ஹிட்ஸ் கிடைக்காமல் செய்து விட்டார்.அதனால் நான் எழுதுவதை நிறுத்தப் போகிறேன்.இனி யாராவது இப்படி எழுதினால் என் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்.நானும் ஒரு இரவுடியாக பார்ம் ஆகி விட்டேன் என்று கெஞ்ச வைத்து ஜீப்பில் ஏற்றாதீர்கள்.

அலெக்ஸா ராங்க் பற்றி வருண் எழுதிய பதிவிற்கு சுட்டி கொடுத்து இருந்தார் என் அண்ணனும் "யூத்துமான" கேபிள்.நான் காலையில் கேட்டேன். "அண்ணா நீங்க எண்டர் கவிதை எழுதி முதல் ஐம்பதாயிரம் இடத்திற்குள் வருவீர்கள் என்று ஆருடம் சொன்னவனே நான் தான்.என்னைப் பற்றி குறிப்பிடவே இல்லையே.." என்று கேட்டால் "உனக்கு அரசியல் தெரியவில்லை.." என்று பதில் வருகிறது.என் அரசியல் குரு யார் தெரியுமா.அவர் பெயர் நீலப்புலி சாத்தை பாக்யராஜ்.அரசியலில் டி.ராஜேந்தர்,சுப்ரமணிய சுவாமி அளவுக்கு பேட்டி கொடுப்பார்.நிறைய பேருக்கு அவரை தெரியாது என்று நினைக்கிறேன்.அதனால் எனக்கு அரசியல் தெரியும் என்று ஒத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ்.

நான் என்னால் அப்படி எழுத முடியவில்லையே என்று யாரை பார்த்தும் பொறாமை அடைந்தது கிடையாது என்று சொன்னால் அது பச்சை பொய் என்று எனக்கே தெரியும்.முதலில் அப்படி பொறாமை கொண்டது கென் மீது.இரண்டாவது அப்படி பொறாமை தீ கிளர்ந்து விட்டு எரிகிறது என்றால் அது அருமை அண்ணன் ஜெக நாதனை பார்த்து தான்.ராதிகாவின் கணவனாயிருத்தல் மற்றும் யூகலிடப்ஸ் மணம் கவிதை படித்து விட்டு பொறாமையில் வெந்து அவிந்து நொந்தேன்.இனி என் டார்க்கெட் அவர் தான்.அக்கப்போர் ஸ்டாட்ஸ்.

குஜராத் பினாமி மதுரை சுனாமி(லாஜிக் இல்லையே..மதுரையில் தான் கடல் இல்லையே..) குஜராத் சுனாமி,மதுரை பினாமி(தமிழ்படம் தயாரிப்பாளருக்கா என்று கேட்டால் தெரியாது) எழுதிய பிரபல பதிவர் ஆவது எப்படி தொடரை பார்த்து நான் முயற்சி செய்து வந்தேன்.இந்த கிளையாறு காட்டாறாக மாறக் காரணம் அந்த மோடி மஸ்தான் தான்.இன்று கூட நாலாவது பாகம் எழுதியுள்ளார்.நீங்களும் முயற்சி செய்யுங்கள். காட்டாறுக்கு மொத்த எதிர்ப்பதிவும் அவர் தான் குத்தகை எடுத்துயுள்ளார்.இன்றைய பதிவை படித்து விட்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினேன்.

உனக்கு கொஞ்சம் கூட மரியாதையாக பேசத் தெரியவில்லை.குறிப்பாக பெண்களிடம் என்று சண்டை போட்டவர்கள் உண்டு.அதிலிருந்து ரெண்டு சாம்பிள்.என் தம்பி பேசுவதில் எனக்கு நேரெதிர்.இதற்கும் அந்த குறிப்பாக ஒத்து வரும்.நான் ஏதாவது பெண்ணை பற்றிய முதல் வரி ஆரம்பித்தால் அவன் முடித்து வைப்பான்.அதோடு பேச்சு வேறு திசைக்கு திரும்பி விடும்.அல்லது திருப்பி விடப்படும்.

குறிப்பாக வேலை நேரத்தில் (அதாவது பதிவு எழுதும் போது) சாம்பிளுக்கு ரெண்டு.

சின்ன சாம்பிள்.இப்படி எல்லாம் பேசக் கூடாது என்பதற்காக சொல்கிறேன்.மீறினால் நான் பொறுப்பு அல்ல.

"I am having lot of pain.."

"Take some wine.."

"What.."

"Water..Spelling Mistake.."

பதில் சொன்னதில் இருந்து ஆளை காணவில்லை.

பெரிய சாம்பிள் வேண்டுமா - சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது கடைசியாக அவள் சொன்னது மட்டும் - "எப்படி பேச வேண்டும் என்று உங்கள் தம்பியிடம் கற்றுக் கொள்ளுங்கள்.."
"விஜயகாந்த் படம்.. விஜயகாந்த் படம்.."

"என்ன.."

"மரியாதை.. மரியாதை.. "

"திருந்துறதா உத்தேசம் இல்லையா.. "

எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.இவன் ஒழுங்காகப் பேசி ஏன் என் பெயரை கெடுக்கிறான்.

2 comments:

அகல்விளக்கு said...

//குறிப்பாக வேலை நேரத்தில் (அதாவது பதிவு எழுதும் போது) //

சரிதான்......

கடைசி மேட்டரு செம பல்பு....

அத்திரி said...

//நீலப்புலி சாத்தை பாக்யராஜ்//

டேய் இவரைப்போய் வம்புக்கு இழுக்குறியே...... திருநெல்வேலியில் கால் வைக்க முடியுமா