Thursday, January 7, 2010

இளையராஜா பாணியில் எனக்கு ராயல்டி

என் பதிவுகளைப் படித்து விட்டு சில பன்னாட்டு நிறுவனங்கள் எனக்கு ராயல்டி தருகிறேன் என்று ஒற்றை காலில் எல்லாம் நிற்காமல் நாற்காலியில் இருந்து கொண்டே கட் காப்பி பேஸ்ட் செய்து நன்றியோடு நிறுத்தி விட்டார்கள்.அதிலும் குஜராத்தில் இருந்து இயங்கும் மோடி மஸ்தான் குரூப் எதிர்பதிவுகள் எல்லாம் எழுதி எனக்கு கிடைக்க வேண்டிய நானூறு ஹிட்ஸை அபகரித்து விட்டார்கள்.அதனால் 2009 டிசம்பர் வரை எழுதிய பதிவுகளை ஆப்கானிஸ்தானில் இருந்து நடத்தப்படும் டெக்ரான் மெக்ரான் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன்.

அதனால் இனி என் 2009 வருடத்திய பதிவுகளை எல்லாம் யாராவது கணினியில் தரவிறக்கம்(படிக்கிறதே பெருசு) செய்தால் கூடவே அந்த நிறுவனத்தின் பெயர் பொறித்த வைக்கோல் போர் ஒன்று பறந்து வருமாறு செட் செய்யப்பட்டுள்ளது.

நான் பின்னூட்டம் இட்ட பதிவுகளுக்கும் ராயல்டி தந்தால் அந்த பதிவுகளுக்கும் உரிமை கொண்டாடலாம் என்று இருக்கிறேன்.அதற்கு அவர்கள் ஒத்து வந்தால் அடுத்த கட்டமாக படித்த பதிவுகளுக்கு உரிமை கோரப்படும்.

அதனால் இனி எனது 2009 பதிவுகளை ரீமிக்ஸ்,எதிர்பதிவு இப்படி படிப்பது,பின்னூட்டம் இடுவது,ஃபாலோயாராக சேருவது தவிர என்ன செய்வதாக இருந்தாலும் அந்த நிறுவனத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இல்லை என்றால் வருங்காலத்தில் வக்கீலாக போகும் இரும்புத்திரை குட்டி ரசிகர்கள் எல்லாம் இதை முதல் வழக்காக எடுப்பார்கள் என்று எச்சரிக்கை தரப்படுகிறது.

மேலே படித்தது காமெடியாக இருந்ததா இல்லை எரிச்சலை தந்ததா.

இப்படி தான் நேற்று இளையராஜா சொன்னதாக படித்த போது எனக்கு காமெடியாக இருந்தது.சில வருடங்களுக்கு முன் கே.ஜே.ஜேசுதாஸின் மகன் அப்பா பாடிய பாடல்கள் அனைத்தும் அவருக்கே சொந்தம்.ராயல்டி எங்களுக்கு தான் வர வேண்டும்,பாடல்களை எங்களை கேட்டு தான் பயன்படுத்த வேண்டும் என்று கூச்சப்படாமல் சொல்லி வாங்கி கட்டிக் கொண்டார்.

அவர் தயாரித்த படங்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தும்.அவர் இசையமைத்த படங்களுக்கு இது எப்படி பொருந்தும்.இனி அவர் உதவியாளராக வேலை செய்த கே.வி.மகாதேவனின் பாடல்களின் ராயல்டியும் என உரிமை கொண்டாமல் இருந்தால் சரி.அப்படி என்றால் தளபதி,நாயகன் பாடல்கள் அவருக்கு சொந்தமா.மனிரத்னத்திற்கு சொந்தமா.சிந்து பைரவியும்,புது புது அர்த்தங்களும் இளையராஜாவின் உரிமைகளா இல்லை கே.பாலசந்தரில் உரிமைகளா.யாராக இருந்தாலும் அந்த நிறுவனத்திடம் கேட்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இது யுவன்சங்கர்ராஜாவிற்கும்,கார்த்திக் ராஜாவிற்கும் பொருந்துமா.

வியாபாரத்திறமை மற்றும் உத்தியை எல்லாம் அமீர் கானிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.3 இடியட்ஸ் படத்தை ஏழு வாரத்தில் யூடூயுப் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.அதுவே தமிழ் சினிமா இணையத்தில் தரவிறக்கம் செய்பவனை கைது செய்ய வேண்டுமாம்.அடுத்த இயக்குனரின்,தயாரிப்பாளர்களின் உழைப்பை இசையமைப்பாளர் மட்டும் தான் அனுபவிக்க வேண்டுமாம்.ராயல்டி கோருவது தவறில்லை என்னிடம் தான் உரிமை பெற வேண்டும் என்று சொல்வதில் மறைந்திருக்கும் உள்குத்து என்ன.இந்த உள்குத்து மூலம் அவர் சொல்ல வருவது என்ன.காலம் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.

இந்த சூழ்நிலைக்கு தகுந்த பாடல் ஒன்று இளையராஜாவிற்காக.

"உலகம் இப்போ எங்கோ போகுது..
நமக்கு இந்த அன்னை பூமி போதும்.."

தெரியாமல் பாடல் வரிகளை யூஸ் பண்ணிட்டேனே.

இப்படி எல்லாம் பாட்டு பாடி அல்வா குடுக்க வேண்டியது.அப்புறம் இப்படி பாட வேண்டியது.

"மலேஷியப் பணமும் வேணும்.."

ரீமிக்ஸ் வேற பண்ணிட்டேனே.எனக்கு ஒரு ஓட்டை காலணா தந்தால் போதும்.என் பதிவு உங்களுக்கு தரப்படும்.பயமா வேற இருக்கே.பாரதியின் வரிகளை நினைத்து கொள்கிறேன்.

அச்சம் தவிர
ரௌத்திரம் பழகு

இப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என்று தெரியாமல் வறுமையில் வாடி யானையால் இறந்து போன பாரதிக்காகவும்,கணவரின் பாடல்களை மதிப்பு தெரியாமல் இழந்து விட்ட செல்லம்மாவிற்காகவும் கண் சிறிது கலங்குகிறது.

7 comments:

ஜோ/Joe said...

சிறுபிள்ளைத்தனமான பதிவு.

“சில இசை நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் எனது இசை உரிமை, தயாரிப்பாளரிடம் இருப்பதாக கூறி எனது அனுமதியின்றி காலர் ட்யூன், ரிங் டோன், எம்.பி 3 என எல்லா வடிவங்களிலும் ஏகபோக உரிமை கொண்டாடி வருகிறது. எனது பெரும்பான்மையான இசை சார்ந்த காப்புரிமையும், அறிவார்ந்த சொத்துடமையும் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. எனது பாடல்களின் அனைத்து பயன்பாடுகள் சார்ந்த அனுமதியை அகி மியூசிக் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறேன்.” -இளையராஜா.

இதுக்கு மேல விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

அத்திரி said...

ரொம்ப வாங்கி கட்டனும்னு ஆசை போல நல்லா வாங்கி கட்டிக்கடே

Unknown said...

Hello Sir,
I think you really need to do some research on intellectual property and copyright.

Harry

யாசவி said...

aravind,

you have to check contractual terms on the music about the IP(intellectual Property).

May be Raja right. Also his claim is reasonable for me.

hope u realize :)

Renga said...

உங்கள் கருத்துக்கள் 100000000000000% correct. இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பதில் சொல்லாமல் போய் கொண்டிருங்கள்...

thamizhparavai said...

ஜோ சொன்னதை வழிமொழிகிறேன்...
இப்போ ஒரு மைனஸ் ஓட்டு நான் தான் போட்டேன்.... :-(

Unknown said...

இது தயாரிப்பாளர் இசையமைப்பாளரிடம் எப்படி ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்பதைப் பொறுத்தது.

பம்பாய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தாலும் அதற்கான காப்பி ரைட்டையும் சேர்த்து அவர் இசைத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்று விட்டார். அதனால் தான் அந்த இசை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டபோது க்ரெடிட்ஸ் அந்த இசைத் தயாரிப்பு நிறுவனத்துக்குப் போனது (ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இல்லை).

அதோடு இது தயாரிப்பாளர்கள் சந்திக்க வேண்டிய பிரச்சனை. இசையின் உரிமையாளர் தயாரிப்பாளரோ இல்லை இசையமைப்பாளரோ, திருட்டுத்தனமாக எம்.பி.3 தரவிறக்கம் செய்வது சட்டப்படி தவறு.