Friday, January 8, 2010

சேரன் ரசிகர்களே என்னை வெட்ட வராதீங்க

சேரன் உணர்ச்சிகளின் பொங்குமா சமுத்திரம் என்று சொல்ல மறந்த கதை,ஆட்டோகிராப்,தவமாய் தவமிருந்து படங்களை பார்த்தப் போதெல்லாம் தெரியாமல் போய் விட்டது.முதல் முறை மாயக்கண்ணாடி ஓடாத சமயம் குடுத்த பேட்டியில் தான் தெரிந்தது."மாயக்கண்ணாடியைப் புறக்கணித்த மக்களுக்கு இரசனை இல்லை.." என்று சொன்னார்.அந்த படத்தின் நீதி என்ன - "நீ இருந்த இடத்தில் இரு..தகுதிக்கு மீறி ஆசைப்படாதே.." ஆனால் அவர் மட்டும் சினிமாவில் ஜெயிப்பாராம்.என்ன கொடுமை சேரன் இது.அடுத்த முறை ராமன் தேடிய சீதை படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு பிறகு மன்னிப்பு கேட்டார்.அடுத்தது ப்ளாக்கர்கள் பொக்கிஷம் கிளாஸிக் என்ற படத்தின் தழுவல் என்று சொன்ன போது நம் பதிவர்களுக்கும் அர்ச்சனை. நடிகைகளைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்டப் பிறகு நடந்த கண்டன கூட்டத்தில் சமுத்திரம் பொங்கி வழிந்து விட்டது.மீண்டும் இப்போது தான் பொங்கி இருக்கிறார்.(நடுவில் தங்கர் பச்சானும் இவரும் ஆனந்த விகடனில் பொங்கி எழுந்து சண்டைப் போட்டது ஒரு இடைச்செருகல்.)

ஜக்குபாய் இணையத்தில் வெளியாகி விட்டதாம்.அதை தரவிறக்கம் செய்து விற்றவனை ரசிகர்கள் தேடிப் பிடித்து வெட்ட வேண்டுமாம்.அப்படி தேடிப் பிடித்து வெட்டினால் என்ன ஆகும் அந்த ரசிகன் உள்ளே போவான்.அவன் குடும்பம் அனாதை ஆகும்.நீங்கள் உங்க வீட்டில் அமர்ந்து கொண்டு அடுத்த படத்திற்கான கதையை டிவிடி பார்த்து உருவிக் கொண்டு இருப்பீர்கள்.ரசிகன் என்ன உங்களின் எடுபிடியா.அவன் அப்படி வெட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போய் விட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்."நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு சொல்லி விட்டேன்..".இப்படித்தானே சேரன்.இனி நீங்கள் கலந்து கொள்ளும்(கொல்லும்) விழாவில் மைக்கை உங்கள் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்கிறேன்.நீங்க ஏதாவது பேசி அப்புறம் நான் வேற ஒரு பதிவு எழுதணும்.எனக்கு நிறைய வேலை இருக்கு.

கிளாஸிக் என்ற கொரியன் படத்தை உருவிய உங்களை கொரியன் ரசிகர்கள் துப்பாக்கியால் சுட வேண்டுமா இல்ல கத்தியால் வெட்ட வேண்டுமா என்று சொன்னால் கொரியன் ரசிகர்களுக்கு வசதியாக இருக்கும்.

வாசாபி என்ற பிரென்ச் படத்தை உருவி ஜக்குபாய் என்று எடுத்தவர்களை என்ன செய்தால் தகும் அதையும் நீங்களே சொல்லுங்கள் சேரன்.

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா.அதுவும் பிரபல நாயகர்கள் ரசிகர்களுக்கு தலா பத்தாயிரம் தந்து இந்த வேலைக்கு வைக்க வேண்டுமாம்.போய் முதல்ல டிக்கெட் விலையை குறைக்க வழி செய்யுங்கள்.எல்லா திருட்டுகளும் ஒழியும்.

கில்லி படம் வெளி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னே சென்னையில் திருட்டு விசிடி அமோக விற்பனை.படம் வெளி வந்து எப்படி ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும்.

அது மாதிரி தான் பருத்தி வீரன் படத்திற்கும் நேர்ந்தது.ஆனாலும் ரசிகர்கள் திரையரங்குகளில் தான் பார்த்தார்கள்.காரணம் கதை.ஜக்குபாய் படத்திலும் அது இருந்தால் படம் ஓடும்.இல்லை திரையரங்கை விட்டு ஓடும்.

போங்க போய் புதுசா நீங்களே ஏதாவது கதை இருந்தா யோசிங்க பாஸ்.அதை விட்டுட்டு அவனை வெட்டு,இவனை வெட்டு என்று சொல்லி விட்டு திரியாதீங்க.

நீங்க ரசிகர்களைத் தூண்டி விடுவதை பார்த்தால் எனக்கு கவுண்டமணி-செந்தில் காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.கப்பலில் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி கவுண்டனணிக்கு ஒரு ஆப்பு வைப்பாரே செந்தில்.அது மாதிரி நீங்களும் செய்யாதீங்க.

அப்புறம் சேரனுக்கு ரசிகர்கள் யாராவது இருந்தால் என்னை வெட்ட வர வேண்டாம்.நான் ஒரிஜினல் படமான கிளாஸிக் தான் தரவிறக்கம் செய்வேன் பொக்கிஷத்தை அல்ல.இதுக்கும் தான் தோன்றி என்ற பட்டத்தைப் புதுப்பிக்க வேண்டாம்.மீறி கொடுத்தாலும் சந்தோஷம் தான். எனக்காவது சொந்தமாக யோசிக்கத் தெரிகிறது.ஆனா உங்களுக்கு..

இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.இனிமேலாவது புதுசா ஏதாவது சொல்லுங்க பாஸ்.இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம்.

7 comments:

Anonymous said...

கிளாசிக் படத்தின் அருகில் கூட போக்கிசம் வர முடியாது. அந்தப் படம் பார்த்து அழுத எனக்கு பொக்கிசம் பார்க்கும் போது அடிக்கடி ஒண்ணுக்கு தான் வந்தது.

கடைக்குட்டி said...

கரெக்ட்தான்..

சிடி வந்ததாலே ஓடாதாம் படம்.. சும்மாங்க..

படம் நல்லா இருந்தா கண்டிப்பா ஒடுங்க..

உங்க கருத்து ஓகே.. ஆனால் சேரன் பத்தியெல்லாம் ஒரு பதிவு தேவையா??

இக்னோர் கர்.. இக்னோர் கர்..

Unknown said...

சேரன் ரசிகரா ???? அப்படீன்ன ???? யாரு ......அவரு ஓட்டே அங்க இல்ல.. ஏன் பாசு .........அவன்லாம் பெரிய ஆளா ஆக்கறிங்க.....சும்மா காமெடி பீஸ் கணக்கா தள்ளி உட்டுட்டு போவமா ..
இதுக்கு போய் இவ்வளு எழிதிக்குன்னு. அனா ஒன்னு .. முதல்ல ரசிகர் மன்றங்கள தடை செய்யணும் . இல்லைனா கோடிகணக்கான சந்ததியினர் பாதிக்கபடுவார்கள் .
வருங்கால தலைமுறை மிக பெரிய பாதிப்பை சந்திப்பார். அவர்களை இந்த சினிமா மாயை இருந்து மீட்க வேண்டும் .

அப்துல் சலாம் said...

அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு....அவருக்கு ஏது ரசிகர்கள் !!!

Henry J said...

Visit 10 websites and earn 5$. Click here to see the Proof

Burj Dubai opening ceremony Photo Gallery
"Burj" is Arabic for "Tower" World Wonder Burj Dubai Photo Gallery

குப்பன்.யாஹூ said...

nice post.

stealing the story, stealing the scene is more cruel than realesing the film in internet

உண்மைத்தமிழன் said...

மாயக்கண்ணாடியில் நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் போலிருக்கிறது..!

எந்தத் துறையில் உனக்கு திறமை இருக்கிறதோ.. வருகிறதோ.. அந்தத் துறையிலேயே பாடுபட்டு முன்னேறு.. வெற்றியடைவாய் என்பதைத்தான் அவர் சொன்னார்.. அரசியல் ஆக்கிவிட்டார்கள் பலரும்..!

அவர் மட்டும் சினிமாவுக்கு வந்தார் என்றால், அதில் அவருக்குத் திறமை இருக்கிறது என்பதை நம்பினார். அதனால் வந்தார். அதிலொன்றும் தப்பில்லையே..

இப்போதும் கோடம்பாக்கத்திற்குள் புகுந்து பாருங்கள்.. எத்தனை பேர் வெறும் ஆர்வத்தை மட்டுமே வைத்துக் கொண்டு தங்களுடைய பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்..!