Tuesday, August 31, 2010

நிர்வாண முகம்

திரும்பவும் அவள். கனவு மாதிரியும் தெரியவில்லை.அதுவும் குறிப்பாக சலனமற்ற அவளின் ஒரு பக்க முகம் கோபத்தை விட வேறு எதையோ தூண்டுவதாகயிருந்தது.அவள் பார்வையில் இருந்து விலகி என்னில்,என்னுள் அவள் விலகாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் அழகாகியிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.

யாருக்காக காத்திருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு எரிச்சல் காரணம் வெயிலாக இருக்குமோ என்று சூரியனை முறைத்தால் அதிகம் சுட்டது.காற்றில் கூட அனல் வீசியது.கெட்ட வார்த்தைகளை மனதுக்குள் தெளித்து கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருப்பது தெரிந்தது காரணம் வந்தவனுடன் ஒரு பெண்ணுமிருந்தாள்.அவள் கண்களில் என் முகம் தெரியுமளவிற்கு பார்வைகள் பரிவர்த்தனை நடத்தாதே என்று அவள் கவனிக்காத சமயம் காதில் அவன் சொன்னான்.

ரேகா என்று யாரோ என் பின்னால் இருந்தபடி கூப்பிட திரும்பியவள் கண்களில் கண நேர அதிர்ச்சி தெரிந்தது.எப்படி மறைவது என்று தெரியாமல் சிலையாகிருந்தேன்.

ரேகா....................அவன் சொன்ன குட்டிப் புராணத்தில் பெயர் தவிர ஒன்றும் கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து போயிருந்தேன்.காரணம் தெரிந்த புராணத்தைத் தெரிந்து என்ன பிரயோஜனம்.

ரேகாவும் நடுத்தரமும் கதை பேச தொடங்க,அவள் காதையும் வாயையும் அவளுக்கு கொடுத்து விட்டு கண்களால் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள்."போ..போ.." என்று கெஞ்சுவது போலிருந்ததால் இன்னும் கெஞ்சட்டுமே என்று போக மனமில்லாமல் நின்றேன்.

ரேகாவை பார்த்துக் கொண்டே இருவரும் பேசிக் கொண்டேயிருந்தோம்.சாலையின் அடர்த்தி அதிகமாக தொடங்கியது.அறுவை தாங்க முடியாமல் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் அவளை பார்க்க, கண்கள் விரிய "இன்னும் கொஞ்ச நேரம்.." கண்களால் கொஞ்சினாள். இன்னொரு முறை கொஞ்சலுக்கு இடம் கொடுக்காமல் கதற கதற அவன் அறுவையை பொறுத்துக் கொண்டேன்.

"முகமே சரியில்லையே..யாரு தெரிந்தவனா.." என்று நடுத்தரம் கேட்க முதலில் திடுக்கிட்டாலும் "இல்ல..தெரிஞ்சவங்க மாதிரி இருந்தது.." சமாளித்து விட்டாள்.நடுத்தரம் தான் நம்பியது போல் தெரியவில்லை.மாமியார்காரியாக இருக்கும்.அவர்களின் மாமியாரும் இதே கேள்வியை கேட்டிருக்கலாம்.

"ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா.." அவன் கேள்வியில் ஏமாற்றம் தெரிந்தது."பரவாயில்ல..அறிமுகம் செய்ய வேண்டியது மிச்சம்..ரொம்ப ராவிட்ட மாதிரி தெரியுது.." கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.இப்போ ரேகா முறை எப்படி சந்தித்தோம்.எப்படி எல்லாம் காதல் சொன்னேன் என்று அவள் பங்கிற்கு பழிக்கு பழியாக அறுக்க தொடங்கினாள்.அவனுக்கு தான் இன்னும் நம்பிக்கை வரவில்லை.எப்படி வரும்.எனக்கு இப்படி ஒரு தேவதையா என்ற சந்தேகமாகயிருக்கும்.

போன் பண்ணியிருப்பாள் போல .பத்துக்கும் அதிகமான மிஸ்டு கால்.சாப்பிடாமல் தண்ணியடித்தது மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இன்னும் ஞாபகபிருக்கிறதா யோசிப்பதற்குள் திரும்ப அழைத்து விட்டாள்."இன்னும் நம்பர் மாத்தலையா.." முதலில் கேள்வி சம்பிரதாயமாக ஆரம்பித்தது."நீ வாங்கி கொடுத்தது தானே..அதான் மாத்தல" அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்."டோன்ட் மீ சில்லி..அண்ட் டோன்ட் எவர் ட்ரை டூ கிரியேட் சீன்.." கோபம் கூட இங்கீலிஸ் பேசுனா தான் வரும் போல என்று நினைத்து கொண்டேன்.பிறகு அவளே சமாதானாமாகி "இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா என் மாமி கிட்ட மாட்டியிருப்பேன்..நான் வர்றேன்..".சமாதானம் தமிழில் செய்தாள். என்னோடு சேர்த்து தமிழும் ஞாபகம் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.

ஏர்டெல் ஜோடி கார்ட் வாங்கி தந்தாள்."கூட்டுத் தொகை உன் சைஸ் சொல்லுது.." என்று சொன்னவுடம் "இப்படி கூட்டி கழித்து பார் செருப்பு சைஸ் வரும்.." சொல்லி விட்டு அவளே சிரித்தாள்.அவள் கோபம் கானல் நீர் போல மறைந்தது.எல்லா செலவும் அவளே செய்வாள்."நீ கொடுத்து வைச்சவன்.." யாராவது சொல்லும் போது கடைவாய் வரை நீண்ட சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருந்தது.

அதே கடைவாய் சிரிப்பு பட்டம் தான் மாறி விட்டது."இளிச்சவாயன்.." என்று.வந்தவளை முழுதாக பார்த்தேன்.மூக்குத்தி குத்தியிருந்தாள்.இன்னும் அழகாகத் தெரிந்தது அழுக்கு அறை.எடுத்தவுடம் மூக்குத்தியைப் பற்றி அவளே சொன்னாள்.அவனுக்கு பிடிக்குமாம்."பெரிய பெண்ணாகி விட்டாய்.." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

"மூக்குத்தி போட்டுக் கொள்..அழகாகயிருக்கும்.." வற்புறுத்தினாள் கூட மறுத்து விடுவாள்."பெரிய பெண் மாதிரி தெரிவேன்.." காரணம் கூட மெலிதாகயிருக்கும்.

கொஞ்சம் அதிகமாகவே பதற்றப்பட்டாள்.போனில் அவனாகயிருக்கும்.கொஞ்ச நேரத்தையும் யாராவது இப்படி கெடுத்து விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்."சரி கண்ணம்மா.." என்பது மட்டும் கேட்டது.பிடிக்காத வார்த்தைகள் மட்டும் காதில் விழுவதேன்.பாரதி போல அவளுடைய அவனும் செத்து போனால் எப்படி இருக்கும் யோசிக்கும் போதே மனது இனித்தது.

"கண்ணம்மா.." கூப்பிட்டால் போச்சு கோபத்தில் பொறிவாள்."கால் மீ ரேகா.." காரணம் அப்படி கூப்பிட்ட பாரதி முப்பதுகளின் தொடக்கத்திலே இறந்து விட்டானாம்.

மடியில் படுத்திருந்தேன்.முத்தம் கொடுக்க முகத்தை நோக்கி முன்னேறினேன்.முகத்தை திருப்பி கொண்டாள் வலுக்கட்டாயமாகத் திருப்பியவுடன் உதட்டை மடித்திருந்தாள்."நான் இப்போ வேறொருத்தன் பொண்டாட்டி..தே... இல்ல..".எனக்கு எப்படி தெரியும் அடுத்தவன் பொண்டாட்டியோ தே...யோ இப்படித்தான் இருப்பாள் என.

உதட்டை குவித்து வைத்து கொண்டு "முத்தமிடேன் முட்டாளே.." சொல்லும் போதே உள்ளுக்குள் ஏதோ கிறங்கும்.அது தாங்க முடியாமல் "ஐட்டம் மாதிரி செய்யாதே.." தெரியாமல் வந்து விட்டது."அங்க எல்லாம் நீ போவியா.." என்று சண்டை.சமாதானம் செய்யவே கொஞ்ச நேரம் ஆனது.முத்தமிட நேரம் எடுத்துக் கொண்டேன்.

"இனிமே நான் இங்க வர மாட்டேன்..ஏதோ என்னால் தான் இப்படி இருக்கிறாய் என்று வந்தேன்..இது தான் கடைசி..என்னை தொல்லை பண்ணாதே..ப்ளீஸ்..இனிமே என்ன பாக்க வராதே.." அழுதவளை அணைத்து கைகளை சற்றே மேய விட்டேன்."ஆடைகளை அவிழ்க்காமல் என்ன வேண்டுமானாலும் செய்.." சொன்னதும் அசிங்கத்தை மிதித்தவனாய் அவள் நிர்வாண முகத்தில் கை வைத்து தள்ளினேன்.

எல்லாம் முடிந்திருந்த காலம்.அவ்வளவு நெருக்கம்.ஆடையில்லாத மேனியை விட தலையில் ஸ்கார்ப் போதை ஏற்றியது.ஒருநாள் அப்பா,அம்மா,நாய்க்குட்டி கதை.அழுத்தி கேட்டேன்."நான் காதலிக்க தான் லாயக்காம்..கல்யாணத்திற்கு இல்லையாம்.." எங்கே கை வைத்தேன் என்று தெரியவில்லை.கோபத்தில் கண் மண் தெரியவில்லை.

அவள் இருக்கும் போதே ஏமாற்றத்தில் கையை அறுத்து கொண்டேன்."செத்து தொலை..ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறாய்.." என்று கத்தினாள்.முதல் முறையாக பிழைக்க ஆசைப்பட்டேன்..

வேகமாக பைக் ஓட்டி லாரியில் மோதி இரத்தமிழந்து சில பல எலும்புகள் உடைந்து ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தேன்.வந்தவள் நிறைய அழுதாள்.எனக்காக ஒருத்தி அழும் போது சந்தோஷமாகயிருந்தது."வீணை அறுந்த உணர்வு.." என்றாள்.இன்னொரு முறை இறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.எந்திரிக்க முடியவில்லை பின் எங்கிருந்து இறக்க முடியாமல் மடங்கினேன்.

பிழைத்தால் அவளை கொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.வீணை,அறுந்த தந்தி,பாரதி,கண்ணம்மா,தே..முத்தம்.ஐட்டம், ஸ்கார்ப் என்று கண்டபடி நினைவு ஓடி அறுந்து விடும் போலிருந்தது.

நாலாவது நாள் கல்யாணப் பத்திரிக்கை வைத்து கருணை கொலை செய்தாள்.வேறு வீணை கிடைத்து விட்டது போலும் நினைத்தவுடன் மயங்கி போனேன்.

பிழைத்தால் அவளை கொன்ற கதை சொல்கிறேன்

மயக்கத்தில் இருந்த மீண்டால் புது வீணை எப்படியிருந்தது என்று சொல்லவும்.

Monday, August 30, 2010

ஒத்து வந்தா பங்கு உடைசல குடுத்தா சங்கு


"என்ன இந்த முறையும் ஆள் தப்பிச்சிட்டானா..என்ன மயி.. புடுங்குறீங்க..குமார் அவனை கூப்பிடுங்க..அவன் தான் இந்த வேலைக்கு சரியான ஆள்.." என்று காட்டுக் கூச்சல் போட்டார் கவுதம்.

அரை மணி நேரம் கழித்து குமார் வர..எல்லோரையும் அனுப்பி விட்டு இருவர் மட்டும் தனியாக..

"குமார் உன்னை பத்தி சொன்னாங்க..நீ தான் இந்த காரியத்தை செய்யனும்..எங்களால அவனை நெருங்க கூட முடியவில்லை.."

"ம்..பண்றேன்..ஆனா நான் கேட்பதை உடனே செஞ்சு தரணும்..கேள்வி கேட்க கூடாது.."

"என்ன படிச்சியிருக்க.."

"பி.எஸ்.சி மேக்ஸ் பாதியிலே விட்டுட்டேன்..திரும்பவும் சொல்றேன் எனக்கு கேள்விகள் பிடிக்காது.."

"சரி கேக்கலை..இவன தான் நீ முடிக்கனும்..போட்டோஸ் அண்ட் டிடேயில்ஸ்.." என்று குமாரிடம் ஒரு கவரை குடுத்தார் கவுதம்.

"எத்தனை தடவை முயற்சி பண்ணீங்க அவனை கொல்ல.." கவரை பிரிக்காமலே கேட்டான் குமார்.

"நிறைய தடவை இருக்கும்..ஒரு தடவை அவனுக்கு பலத்த அடி தலையில..அதுல இருந்து ரொம்ப உஷாரா இருக்கான்.."

"அப்ப அவனை கொல்ல ஆறு மாசம் ஆகும்.."

"என்ன ஆறு மாசமா.."

"சரி வேண்டாம்..கவரப் பிடிங்க..ஆள விடுங்க..புதுசுனா உடனே முடிக்கலாம்..அவன் பழசு.." என்று எழுந்தவனை தோளைப் பிடித்து அமர்த்தினார் கௌதம்.

"ஏன் இவ்ளோ கோபம்..சயின்ஸ் படிச்சுருந்தா உனக்கு இதெல்லாம் புரியும்.."

"எது சயின்ஸ்.."

"இரத்தம்,அதில் வரும் அழுத்தம்.."

"ரத்தத்தின் அளவு,அதில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை,அழுத்ததின் அளவு இப்படி எல்லாமே கணக்கு தான்..வாழ்க்கையே ஒரு கணக்கு தான்.."

"எப்படி சொல்றே.." என்று சிரித்தவரைப் பார்த்து

"அது தெரிஞ்சா தான் நீங்களே அவனை போட்டு இருப்பீங்களே..பை தி பை..உங்க சிரிப்பு இன்னும் நல்லாயிருந்திருக்கும் ஒரு பல்லைப் புடுங்காமல் விட்டுடிருந்தால்.." சொல்லிவிட்டு எழுந்து சென்ற குமாரை வெறித்து பார்த்தாஎ கௌதம்.

************
மூன்று மாதங்கள் கழித்து குமார் போனில்..

"ஜேம்ஸ் அவன் காரை சர்வீஸுக்கு விட்டு இருக்கான்..அதுல டைம் பாம் வைங்க கௌதம்.."

"நீ செய்வன்னு பாத்தா எங்களை செய்ய சொல்ற..என்ன இதெல்லாம் குமார்.."

"சொன்னதை மட்டும் செஞ்சா போதும்.." என்று போனை வைத்து விட்டான்.

காரில் குண்டு வெடித்து டிரைவர் மரணம் என்று செய்திதாள்களில் வந்தது தான் மிச்சம்.

"குமார் நீ என்ன நினைச்சி இருக்க உம் மனசுல..முடியலைன்னா சொல்லு..நாங்க பார்த்துக்குவோம்.."

"ஜேம்ஸை நாம நேர்ல சந்திக்கப் போறோம்..அப்பாயிண்மெண்ட் பிக்ஸ் பண்ணுங்க..துப்பாக்கி கூட வேண்டாம்.."

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சியிருக்கு.."

"ப்ளீஸ் சொன்னதை மட்டும் செய்ங்க.."

ஜேம்ஸை அவன் வீட்டில் பார்த்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார்கள் குமாரும்,கௌதமும்.

"நாளைக்கு ஆயுத பூஜை..ஆயுதத்தை எல்லாம் ரெடி பண்ணுங்க..அவன் நாளைகழிச்சி அவனுக்கு கடைசி நாள்.."

"நடந்தா சரி..".

**************

ஆயுத பூஜைக்கு மறு நாள் வெளியே வந்த ஜேம்ஸ் கொல்லப்பட்ட செய்தி கேட்டு ஊரே கொந்தளித்தது.

குமார் வீட்டில்..

"எப்படி முடிச்ச.." என்ற கௌதமை பார்த்து

"அவன் கேஸ் ஹிஸ்டரிய படிச்சேன்..அவனுக்கு எழுத படிக்க தெரியாதுன்னு அதுல இருந்தது..ஆனா அவன் வீட்டுக்கு தினமும் எல்லா பேப்பரும் போகுது..இங்கே தான் என் சந்தேகம் வந்தது.."

"ம்..அப்புறம்.."

"அந்த பேப்பர் கடையிலே விசாரித்தேன்..அவனுக்கு தலையில அடி பட்ட கொஞ்ச நாள் கழிச்சி தான் பேப்பர் வாங்க தொடங்கியிருக்காங்க.."

"கணக்கு..கணக்கு தான்.."

"பழைய பேப்பர்காரனை அனுப்பி அவங்க வீட்டு சமையல்காரனை சரிகட்டி பழைய பேப்பர்,காலண்டர் எல்லாம் எடுத்திட்டு வந்தேன்.."

"இதெல்லாம் சொல்லவேயில்ல.."

"நீங்க டிசம்பர் 25ம் தேதி அவனுக்கு குறி வைச்சு இருக்கீங்க..அவன் காலண்டர்ல 24ம் தேதில சிகப்பு வட்டம் இருக்கு..இப்படி நீங்க தாக்குதல் நடத்துன எல்லா நாளுக்கும் முன்னாடி உள்ள நாள் குறிக்கப்பட்டிருக்கு.."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.."

"24ம் தேதி பேப்பர்ல ஒரு பக்கம் மட்டும் வெட்டி எடுத்து இருந்தாங்க..அது என்ன நியூஸ்னு பாக்க 23,24,25 உள்ள பழைய பேப்பரை எடுத்து பார்த்தேன்..25ம் தேதி ஒரு பக்கத்துல அவன் மேல நீங்க நடத்த திட்டம் போட்டிருந்த விஷயம் இருந்தது..அவனுக்கு எல்லாமே ஒரு நாளைக்கு முன்னாடியே தெரியுது.."

"அப்ப நீ நடத்த சொன்ன கார் பாம்.."

"அவனுக்கு விஷயம் தெரியுதான்னு கன்பார்ம் பண்ணினேன்.."

"அவன் வீட்டுக்குப் போனது.."

"காலண்டரைப் பாக்க.."

"ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் ஏண் கொலை பண்ண திட்டம் போட்ட.."

"ஆயுத பூஜை அன்னைக்கு தான் பேப்பர் வராது இல்ல..அதான் அடுத்த நாள்.."

"சரியான் ஆள்டா நீ.." என்று சொல்லி கட்டிக் கொண்ட கௌதமை பார்த்து..

"கடைசியில உன் புத்தியை காட்டிட்ட இல்ல பாடு.._த்த சாவுடா.." என்று குமார் துப்பாக்கியை எடுத்தான்.

"என்ன பண்ற.."

"சாகும் போது ஜேம்ஸ் சொன்னான்..நீ என்ன கொல்ல திட்டம் போட்டு இருக்கன்னு..அவன் கையில் அப்ப பேப்பர் இருந்ததுடா..அவன் பேப்பர் வாங்க தான் வெளியே வந்தான்.."

"டூமீல்..டப்.." என்று சத்தம் கேட்டு வந்த கௌதமின் ஆட்கள் குமாரை துரத்த தொடங்கினார்கள்.

ஓடும் போது தூரத்தில் எக்மோர் ஸ்டேஷனில் 2164 வண்டி மும்பைக்கு புறப்பட தொடங்க..குமாருக்கு ஜேம்ஸ் சாகும் போது சொன்ன 2163 எண் ஞாபகம் வந்தது.

"இன்னும் நாலு அடிதான்..கம்பியை பிடித்து விட்டால் தப்பி விடலாம்.." என்று நினைத்து கொண்டே கம்பியைப் பிடிக்க தாவிய குமாருக்கு முதல் முறையாக கணக்கு தப்பாக,கை ஸ்லிப்பாக..அலற கூட நேரம் இல்லாமல் தண்டவாளத்திற்கு உள்ளே போய் விட்டான்.

*********

அடுத்த நாள் செய்திதாளின் முதல் பக்கத்தில்..

பிரபல தாதா ஜேம்ஸ் காலை 9 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

விசாரிக்க சென்ற உளவுத்துறை போலீஸ் அதிகாரி கௌதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டு விட்டு தப்பிக்க முயன்ற குமார் என்ற பட்டதாரி வாலிபர் இரயில் அடிப்பட்டு சாவு.

Sunday, August 29, 2010

சினிமாத்தனமான திருப்பம்

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சண்டையில் எனக்கு உதடும்,குணாவுக்கு சட்டையும் கிழிந்திருந்தது. எதிர் கோஷ்டியில் அருணின் மூக்கை உடைத்திருந்தோம்.

"நம்ம ஏரியாவுல அடி வாங்குனது நெனச்சா தான் ரொம்ப வலிக்குதுடா மச்சான்.." என்று சொல்லிக் கொண்டே இரத்தத்தைத் துடைத்தேன்.

"புது சட்ட மச்சான்..இனிமே போடவே முடியாது..அவன எதாவது பண்ணனும்.." என்று குணா வன்மத்தோடு சொன்னான்.

"பொண்ணுங்க முன்னாடி இனிமே உதார் உடவே முடியாதுடா.."

"உதட்டுல இன்னும் இரத்தம் வருதுடா.. அவன பழிவாங்க ஒரு வழி இருக்குடா.." என்று துடைத்து விட்டப்படியே குணா எதோ சொல்லி கொண்டியிருந்தான்.

"எப்படி.."

"இனிமே அவன் ஏரியாவுக்குப் போய் விளையாடுவோம்.." என்று குணா சொல்ல

"இப்பத்தான் வாங்கியிருக்கோம்..ஆனந்த் என்ன இந்த கோலத்துல இருக்கிறத மட்டும் பாத்தான்..நீ,நான்,அவன் எல்லாரையும் அடிப்பான்.."

ஆனந்த் எங்களுக்கு ஆதர்ஷம்.அவன் இல்லாத தைரியத்தில் இந்த சண்டையை எங்களிடம் இழுத்து இருந்தார்கள். அவனுக்கு என்னிடம் ஒரு பாசம் உண்டு.எல்லோருமே அவனை "அண்ணா.." என்று கூப்பிடுவார்கள்.(குணா உட்பட.என்னை தவிர..)

"ஆனந்த் ஒரே ஒருநாள் நம்ம கூட வரட்டும்..யாருமே நம்மள ஒன்னும் கேட்க மாட்டாங்க..இனிமே அவன் ஏரியாவுல தான் விளையாடுறோம்..எப்படியாவது நாளைக்கு மட்டும் அவன கூட்டிட்டு வந்துரு.." என்று குணா சொல்ல.எனக்கும் அது பிடித்திருந்தது.

ஆனந்த் தயவுல ஆங்கே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தோம்.

"அவன வேற மாதிரி அடிக்கணும்..அதுக்கு ஒரு ஐடியா பண்ணியிருக்கேன்..அருணுக்கு ரெண்டு மாமா பொண்ணு. அதுல அக்காக்காரி அவன மதிக்கவே மாட்டா..நம்மளையும் தான்..அருணுக்கு ரெண்டாவது பொண்ணத்தான் ரொம்ப பிடிக்கும்..நீ சீதாவுக்கு கை ஆட்டுவியோ இல்ல கால ஆட்டுவியோ.. என்னோமோ பண்ணு..அதப் பாத்து அவன் சாவனும்.." குணாவின் கண்களில் கோபம் தெரிந்தது.

"நீ பண்ண வேண்டியது தானே.." என்று நான் சொல்லவும்.

"என் உதடா கிழிஞ்சுது..இப்போ சொல்லு..நான் சொல்றப்படி மட்டும் செய்..அது போதும்.." அவன் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தேன்.

குணா சொல்லிக் கொடுத்த மாதிரியே சீதா வந்தால் கை காட்டுவது,அவளோட கடைக்கு அருகில் நிற்பது(பீல்டிங் செய்ய),இன்னும் இதர வேலைகளையும் செய்தது வந்தேன்.

குணா இன்னும் ஒருப்படி மேலே போய் அவளைப் பார்ப்பதற்கு தான் நான் வருகிறேன் என்று யார் மூலமோ சீதாவிடம் சொல்லியிருக்கிறான்.

அதற்கு பிறகு நான் கை காட்டுகிறேனோ இல்லையோ அவள் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தையை வைத்து நாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்து கையாட்டி கொண்டிருப்பாள்.

அம்மா வரைக்கும் விஷயம் தெரிந்து போனது.

ஒருநாள் காய்கறி வாங்கிய விட்டு வரும் போது பாரம் தாங்காமல் பை அத்து விழ சீதா உதவியிருக்கிறாள்.

"நல்ல பொண்ணு.." என்று சொன்ன அம்மாவைப் பார்த்து கூட இருந்த பெண் சொல்லிய வார்த்தைகள் "இரண்டு பையன் வைச்சுயிருக்கீங்க..அதான் ஓடி ஓடி உதவி செய்யுது.."

வீட்டில் வந்து விசாரித்தப் போதும் எப்படியோ சமாளித்து விட்டேன்.

அருணும் எங்களுடன் பேச ஆரம்பித்தியிருந்தான்.நானும் நடந்ததை மறந்து இருந்தேன்.ரொம்ப நாள் களைத்து குணா இல்லாத நேரம் வந்து என்னிடம் "சீதாவை நான் லவ் பண்றேன் விட்டுரு மச்சான்.." என்று சொன்னவனிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்து விட்டேன்.

சீதாவை தவிர்க்க தொடங்கினேன்.பீல்டிங் செய்வதை நிறுத்தி விட்டு கீப்பிங் செய்ய ஆரம்பித்தேன்.சீதா வந்து குணாவிடம் அழவே..குணா நியாயம் கேட்டான்.

"அவளுக்கு என்னடா குறைச்சல் அக்கா தங்கச்சியோட பொறந்து இருந்தா தானே உனக்கு ஒரு பொண்ணோட அருமை தெரியும் அவள நடத்துர மாதிரி தான் உங்க அம்மாகிட்டையும் மரியாதை இல்லாம நடப்ப" குணா சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டையை பிடித்து இருந்தேன்.

"கிடைக்கு ரெண்டு ஆடு கிடைச்சா நரி கூட நாட்டாமை பண்ணும் அது மாதிரி அவ கடையில வாங்கி குடிக்கிற ஓசி டீக்கு என்ன அடமானம் வைக்க பாக்குறியா "

"இப்படி எல்லாம் நடக்கும் எனக்கு முன்னாலே தெரியும் " சட்டையை என் பிடியில் விடுவித்து கொண்டே குணா சொன்னான் .

"என்ன தெரியும் உன் சட்டையை பிடிப்பேன்னா ?"

"இல்ல அவள நீ லவ் பண்றத சொன்னேன் " என்று அவன் சட்டையை திரும்ப பிடிக்க முடியாத தூரத்தில் இருந்து சொன்னான் .

"சீதாவை அருண் கல்யாணம் செய்யட்டும்.." என்று சொல்லியவனைப் பார்த்து குணா சிரித்தான்.

"டேய் அவன் நல்லவன் இல்லடா..நல்லவன் மாதிரி நடிக்கிறான்..அவனுக்காக விட்டு கொடுக்காத..அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி.."

குணா சொல்வதை காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

அருணுடன் போன இடத்தில் ஒரு பிரச்சனை வர,வேறு வழியில்லாமல் ஒளிய வேண்டிய சூழ்நிலை.இந்த சந்தர்ப்பத்தில் ஆனந்திடம் அருண் நெருங்கியிருந்தான். அந்த ஊரையையே காலி செய்திருந்தோம்.

பத்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் வழியாக போகும் போது குணாவை சந்தித்தேன்.

சீதாவை பற்றி மட்டும் விசாரிக்கவில்லை.

"ஆனந்தை கொன்று விட்டார்கள்.." என்று சொல்லி அழுதான்.

"எப்படி மச்சான்.." என்றேன் அதிர்ச்சியுடன்

"கூட இருந்தே காட்டி கொடுத்துட்டாங்க..அவன் சாவுக்கு காரணமான ஒருத்தனையும் விடல..போட்டுத் தள்ளிட்டோம்..நீ இருக்க வேண்டிய இடத்துல இப்போ நான்.." என்று சொன்னவனைக் கட்டிப் பிடித்து அழுதேன்.

"மச்சான் ஒரு விஷயம் சொல்லணும்.." என்று குணா ஆரம்பிக்கவும்

"சீதாவைப் பத்தியா..வேணாம் தெரியாமலே இருக்கட்டும்.." என்று கண்களைத் துடைத்தப்படியே சொன்னேன்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம்.

"மச்சான் இப்போ வந்துறேன்.." என்று எங்கோ போய் விட்டான்.அப்போது தான் கவனித்தேன். மொபைலை விட்டு விட்டு போயிருந்தான்.

மொபைலில் ஒரு அழைப்பு வரவும் குணாவைத் தேடி கொண்டிருந்தேன். அவன் வரவேயில்லை.கட் செய்ய மொபைலை எடுத்தால் சீதாவின் படம் போட்டு "வைப்" என்று டிஸ்ப்ளேவில் தெரிந்தது.

குணா வருவது போல தெரியவும் ஒன்றுமே தெரியாதது போய் நடந்து கொண்டேன்.

"மச்சான் என்னை மன்னிச்சிரு..இதுலையும் நீ இருக்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன்..அருண் தாண்டா நம்ம ஆனந்த கொன்னது..சீதா கல்யாணத்து அன்னைக்கு தான் தெரிஞ்சது..புல்லா தண்ணிய ஊத்தி விட்டு தண்ணியிலே முக்கி நாந்தான் அவன கொன்னேன்..சீதாவ ரெண்டு வருசத்து முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டேன்..உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..என்னை மன்னிச்சிரு.." இன்னும் என்னமோ புலம்பி கொண்டே வந்தான்.

"என்ன பார்த்தத சீதா கிட்ட சொல்ல வேண்டாம்..நான் தொலைஞ்சி போனவன்..அப்படியே இருக்கிறேன்.." என்று அவனிடம் அவன் மொபைல் நம்பரைக் கூட வாங்காமல் நடக்கத் தொடங்கினேன் கால்(மனம்) போன போக்கில்.

Saturday, August 28, 2010

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

சித்தார்த் "தெலுங்கில்" கொஞ்சமாவது யதார்த்தமாக கதையுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தப் பின் தெலுங்கிலும் இது மாதிரி படம் வரும் போல என்று கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்திருந்தேன். உனக்கும் எனக்கும்(இந்த பெயரை தெலுங்கில் சொன்னால் கை சுளுக்கி விடுகிறது),பொம்மரில்லு என்று அடித்து ஆட ஆரம்பித்தவுடன் நல்லா இருந்தா நமக்குத்தான் பிடிக்காதே உடனே ஆட்டா என்று படத்தில் நடிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைக்க பார்த்தார்கள். சுதாரித்து கொண்டு நடித்த படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். இதை தமிழ் பேசும் நல்லுககிற்கு காணும் வாய்ப்பு ஜெயம் ரவி நடிக்காத காரணத்தால் கிடைக்காமல் போய் விட்டது. அடுத்து நடித்த ஓய் படமும் பப்படம் ஆனதால் இதிலும் ஜெயம் ரவி நடிக்கவில்லை.தப்பித்தோம்.

சித்தார்த் தமன்னாவை காதலிப்பார். அப்பா மேல் பாசமிருப்பதால் பெயர் சொல்லும் போது கூட அப்பா பெயரை சொல்லும் தமன்னாவிடம் கல்யாணத்திற்குப் பின் என் பெயரை தானே வரும் என்று சித்தார்த் கேட்க வரும் சண்டையில் இருவரும் பேச மாட்டார்கள். உடனே பிரகாஷ்ராஜூடன் தண்ணியடித்து கொண்டியிருக்கும் சித்தார்த் நடு ராத்திரியில் தமன்னாவை சமாதானப்படுத்த ஒரு அட்டையில் தமன்னாவின் அப்பா பெயருக்கு அடுத்து சித்தார்த் பெயர் வருமாறு எழுதி காட்டுவார்.இப்படி ஒரு யோசனை எப்படி கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் நிஜத்திலும் ஒரு பெயர் அப்படி இருக்கிறதே.அதிலிருந்து அடித்திருப்பார்களோ என்னவோ.ஐஸ்வர்யா ராய் பச்சண்.

சித்தார்த்தின் சின்ன வயதிலேயே மனைவியை விட்டு பிரியும் பிரகாஷ்ராஜ் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசியில் ரம்யா கிருஷ்ணனுடம் சேருவார். நிஜத்தில் அது நகைமுரணாக போய் விட்டது. பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை நல்ல வேளை இப்போது எழுதவில்லை.மீள் வாசிப்பு செய்தாலும் குப்பையில் தூக்கி எறிவேன் என்று தான் நினைக்கிறேன்.

ஒரு காட்சியில் தமன்னா ஒரு திண்டின் மீது ஏறிக் கொண்டு பின்னால் பார்க்காமல் சரிவார். சித்தார்த் வந்து பிடித்து கொள்வார். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கும் போது அதான் நீ இருக்கியே என்று சொல்வார். காதலிக்கும் போது பெண்களுக்கு என்ன நம்பிக்கை காதலன் மேல்.திரும்ப இந்த படத்தை பார்க்கும் போது நான் மகான் அல்ல காட்சியும்,ஒரு டிவிட்டரும் ஞாபகத்திற்கு வந்தது. நான் மகான் அல்ல படத்தில் காஜல் அகர்வால் ஜீவாவை(கார்த்தியை) தீவிரமாக காதலிக்கிறேன் என்று சொல்ல அதை இருபது வருடம் கழித்து வந்து சொல் என்று ஜெயபிரகாஷ் சொல்வார். இரண்டு வருஷம் என்று சொல்லியிருந்தாலும் பொருந்தியிருக்கும். அராத்து டிவீட்டரில் - பாய் ஃப்ரெண்டிடம் திறந்து காட்டுவது வேண்டுமானல் பெண்களின் உரிமையாயிருக்கலாம் ,செல் போனில் படமெடுக்க அனுமதிப்பது மடமையல்லவா? அவ்வளவு நம்பிக்கை.

தெலுங்கிலேயே இந்த படம் பாருங்கள்.இந்த படம் மட்டும் பாருங்கள். பொம்மரில்லு படம் பார்த்து விட வேண்டாம் பிறகு சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம் ரவி திட்டு வாங்குவார்.

Friday, August 27, 2010

பெண்களும் நான் ரசித்த சினிமாக்களும்

பின்னாடி இருந்து ஒரு பெண்ணை பார்த்து பரவசப்பட்டு அந்த பெண்ணை ஓவர்டேக்செய்து ஏமாந்து நிற்போமே அது போல டிரைலர் பார்த்து ஒரு மொக்க படத்த பார்த்து விட்டு வருவோமே (உதா சேவல்,சின்னா (கூச்சமே படாம ஜூராசிக் பார்க் படத்துல வர்ற காட்சிய சுட்ட ஒரே ஜீவன் சுந்தர்.சி) .

நம்ம பின்னாடி ஒரு பொண்ணு நடந்து வரும் சட்டுன்னு திரும்பி பார்க்க முடியாது.தப்பா நினைச்சுட்டா (நல்ல பிகரான்னு கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம் எதிர்ல வர்றவன் கண்ணைப் பார்த்தால் தெரிஞ்சிட போகுது). மொழியே தெரியாமல் படம் பார்த்து ரசிப்பது இதில் சேரும் - தில் சாத்தா ஹை இந்தி படம் .

ஊர்ல இருக்கிறவன் ஒருத்தனுக்கு கூட அந்த அட்டு பிகர பிடிக்காது ஆனா நமக்கு பிடிக்கும் அப்படி பிடித்த மொக்க படம் - புதிய கீதை (விஜய் ரசிகர்கள் கூட காறி துப்பிய படம்).

ரொம்ப நாளாக கேள்விப்பட்ட அழகான பொண்ணு தீடிர்ன்னு வீட்டுக்கு வந்து "நாங்க பக்கத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கோம் கொஞ்சம் சுத்தியல் வேணும்.."அப்படி சொன்ன உடனே ஆணி ,சுத்தியல் ,நாற்காலி ,நீங்க உட்பட அவங்க வீட்டுல பொய் இருப்போமே - ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டு பிறகு ஏதோ ஒரு லக்குல பார்த்த படம் மரோசரித்ரா .

சின்ன வயதில் மூக்கு சிந்திகிட்டு திரியும் பெண்களை பார்த்தாலே கோபம் வரும் நமக்கு ஒரு வயது வந்த உடன் இந்த அழுக்குஉருட்டி உள்ளே ஒரு அழகியா ? என்று ஆச்சர்ய படுவோம் - மொக்க அடிதடி படமா கொடுத்த தெலுங்கு சினிமா திசை மாறி பொம்மரில்லு, ஹாப்பி டேஸ், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்று படம் வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும் .

சின்ன வயசுல அந்த பெண்ணை விழுந்து விழுந்து சைட் அடித்து இருப்போம் அவளுக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதை போய்யா ரசித்தோம் என்று நமக்கு நேம் குட்டி கொள்வோமே - காதல் கொண்டேன் ,துள்ளுவதோ இளமை,அந்தமான் காதலி,திரிசூலம் போன்ற படங்கள் இந்த வரிசையில் வரும் .

நண்பர்கள் சிலாகித்து சொல்வார்கள் அந்த பொண்ண மாதிரி அழகி கிடையாது .தொண்டையிலே சாப்பாடு போவது வெளியே இருந்து பார்ப்பவனுக்கு தெரியும் .ஆனா பொய் பார்த்தா சொன்னவன் மேலே கொலைவெறியே வரும் - அப்படி அவர்கள் சொல்லி கொலைவெறி வந்தது மாசிலாமணி,காதலில் விழுந்தேன் ,தெனாவட்டு போண்டா சன் டிவி யின் விளம்பரங்களைத் தாங்கி வரும் படங்கள்.

தீடிர்ன்னு ஏரியாக்குள்ள ஒரு புது பொண்ணு வந்த உடன் பரபரப்பு கிளம்புமே இத்தனை நாளாக எங்கு தான் இருந்துதோ என்று விசாரித்து தள்ளுவோமே -வந்து பத்தே நாட்களில் திரையரங்கை விட்டு தூக்கிய பிறகு ரசிக்கப்படுவது தெரிந்து வந்த படம் சேது.

+1 படிக்கும் பொழுது ஒரு கல்லூரி பெண்ணின் நட்பை முறித்து கொள்ளாவிட்டால் பரிட்சையில் காட்ட மாட்டேன் என்று மிரட்டியே அந்த நட்பை உடைத்த ஒரு +2 படித்த நெருங்கிய கிராதகன். அவனுக்கு தெரியாமல் பேசுவது அல்லது பேச முயற்சிப்பது - நெருக்கமான காதல் காட்சிகள் வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் ரிமோட்டை தேடுவது போல பாவ்லா காட்டுவது (குருதிப்புனல்) கண் தொலைக்காட்சியிலே இருக்கும், கை தேடும் .

உறவினர் வீட்டுக்கு வந்து இருக்கும் பெண்ணோடு தொடக்கத்தில் எரிச்சலோடு பழகி பிறகு அவள் அல்லது நாம் ஊருக்கு போகும் நாள் வரும் பொழுது பதற்றத்தோடு பேச வேண்டியதை சீக்கிரம் சொல்ல வேண்டும் என்று ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வரும் வழியில் அவளை மறக்கும் விதமாக அடுத்த பெண்ணைப் பார்ப்போமே - வேறு வழி இல்லாமல் மொக்க படத்தையும் பார்த்து வெளியே வந்த உடன் அடுத்த படத்தைப் நோக்கி செல்வது( காதல் வைரஸ் பார்த்து நொந்த பிறகு மௌனம் பேசியதே படத்தை பார்த்தது போல)

Thursday, August 26, 2010

குழந்தைகளை அப்படியே விட்டுரணும்

எஸ்.ரா குழந்தைகளைப் பற்றி எழுதி இன்னும் அதைப்பற்றி கொஞ்சம் எல்லோரும் விவாதித்துயிருந்தால் இன்னும் சாரு,ஜெயமோகன் அளவிற்கு அவருக்கு எதிராக எதிர்வினைகள் இருந்திருக்குமோ என்று சந்தேகமிருந்தது. இதில் சுவாரஸ்யமாக விஷயம் என்னவென்றால் சாரு குழந்தைகளை எனக்கு பிடிக்காது என்று புத்தகம் எழுதியிருந்தார்.அதை வெளியிட்டது சசிகுமார் அல்லது அமீர் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்துக்கு எல்லாம் சாருவின் மீது யாருக்கும் கோபம் வராது.காரணம் அதற்கு பின் தான் நித்தியின் பார்வை சாருவின் மேல் விழுந்தது.சாருவின் மேல் மட்டுமா விழுந்தது.

அந்துமணி மீள்ஸ் போட்டதில் ஒரு சிரிப்பான விஷயம் அப்பா - மகன் உறவைப் பற்றியது. அதை மீள்ஸாக மூன்று முறை போட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இலங்கையை சேர்ந்த தமிழர் அவர் ஜெர்மணியில் வசித்து வந்தாராம்.அங்கு குழந்தைகளை யாரும் அடிக்க மாட்டார்கள்.அடித்தால் ஜெயில் தான். இவர் பையனை மிகவும் கண்டித்து அடித்து வளர்க்க நண்பர்களிடன் ஆலோசனை கேட்டு இருக்கிறான். அடிப்பதாக போலீஸில் சொல்ல சொல்ல அவனும் போலீஸிடம் தகவல் சொல்ல அவர் பார்ட்டியில் நண்பர்களோடு உற்சாக பானம்(அந்துமணியின் டிரேட் மார்க் சொல்) அருந்தி கொண்டிருக்கும் போது காவலர்கள் வந்து தரத்தரவென இழுத்து போயிருக்கிறார்கள். வெளியே வந்தும் அடிக்க முடியவில்லை. உடனே இலங்கை டூர் போட்டு விட்டாராம்.கொழூம்பு விமான நிலையத்தில் இறங்கியதும் அடிதான். இனி பையன் சேட்டை செய்தால் அடிக்கடி இலங்கைக்கு டூர் ப்ளான் போடுவார் என்று நான் நினைத்து கொண்டேன்.

குழந்தை என்றால் அப்படி இப்படி என்று தானிருப்பார்கள்.விவரம் தெரிந்த நாமே சில சமயம் குழந்தை மாதிரி தான் நடந்து கொள்கிறோம். மும்பையிலிருக்கும் போது பக்கத்து வீட்டிலிருந்தவர் ஒரு டெரர் மாதிரியாம். குடித்து விட்டு யாராவது பேசப் போனால் வண்டையாக வண்டையாக திட்டுவாராம். அப்போது என்னிடம் பாசமாக நடந்து கொள்வாராம்.இப்போ போயிருந்தா தெரிஞ்சிருக்கும் செய்தி. அங்கு வரும் போஸ்ட்மேன் என்னை சீண்டிக் கொண்டேயிருப்பாராம்.ஒரு நாள் கோபத்தில் ஹிந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டேனாம்(அந்த ஒரு வார்த்தை இன்று வரை தெரியும் என்பது இன்னொரு விஷயம்) அவர் என்ன பிள்ளை வளர்த்தியிருக்கிறார்கள் என்று சான்றிதழ் தந்தாராம்.

அடிப்பட்டவுடன் அழ மாட்டார்கள்.யாராவது தூக்க ஓடினால் உடனே அழுகை வெடித்து கொண்டு வரும் யாருமே கவனிக்கவில்லை என்றால் அவர்களே எழுந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள். சின்ன வயதில் நான் ஒரு பையனை அடிக்க அவன் ஊர் முழுக்க சுத்தி விட்டு இரண்டு மணி நேரம் கழித்து வந்து வீட்டில் புகார் சொல்ல ஆளோடு வந்து விட்டான்.அந்த புகாரை எங்கள் வீட்டிலிருந்த நாட்டாமைகள் இரண்டு மணி நேரம் கழித்து தீர்ப்பு தந்தார்கள்.அதற்குள் நானும் அவனும் ராசியாகி விட்டோம்.

ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.1990களில் எனக்கு தெரிந்த விஷயங்களை விட இப்போதுள்ள குழந்தைகளுக்கு நிறைய விஷயங்கள் தெரிகிறது. தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு காரணமாகயிருந்தாலும் அன்று இருந்த தைரியம் தான் இன்று இல்லாமல் போய் விட்டது. ஆசிரியர்கள் ஒரு காலத்தில் அடி வெளுத்தாலே துடைத்து விட்டு வேறு வேலையைப் பார்த்தவர்கள் தான் இன்று குழந்தையை ஆசிரியர் அடித்ததும் முதல் ஆளாக சண்டைக்கு போகிறார்கள். பத்து வயது குழந்தை தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்கிறது.

எல்லாம் வேகமாக கற்கிறார்கள்.வேக வேகமாக வாழ்ந்தும் முடித்து விடுகிறார்கள்.ஒரு பழைய கவிதை ஒன்று

சுவைப்பதில் தொடங்கி
சுகிப்பது வரை
எல்லாம் அவசரம் தான்.
திருப்தி அடையாமல்
கள்ளச்சந்தையில் புழங்கும்
இயந்திரங்களுடன் தொடர்பு
"ஆண்டு அனுபவித்து விட்டேன்"
சொல்லி மரிக்கும் போது
வயது முப்பது
வருடம் 3010
சந்ததியைப் பெருக்க
பால்ய விவாகம்
பிளாக் எழுதும் புரட்சிக்கவி
பாரதிக்கும் வயது முப்பது.
அவனைக் கொல்ல
யானையும் இல்லை
இறைப்பதற்கு
அரிசியும் இல்லை
இருந்தாலும் அதை உண்பதற்கும்
அவன் கொஞ்சுவதற்கும்
குருவிகள் இல்லை
இணையத்திலும்..

Wednesday, August 25, 2010

எல்லா கொசுவையும் ஒரேயடியா

நான் மகான் அல்ல - நேற்று சொன்ன அதிர்ச்சி பற்றி சிறுகுறிப்பு. தொண்ணூறுகளின் தொடகத்தில் நாவலாசிரியர்கள் வெளுத்துக் கொண்டிருந்த நேரம். அப்படி ஒரு கதை போலவே ஈரம் படத்தின் திரைக்கதையிருக்கும் மைனஸ் பேய்.உங்களுக்கு பால்ராஜ்,சிரஞ்சீவி, நரேந்திரன்,வைஜெயந்தியை தெரியுமா. நரேந்திரன் பிரபல டிடெக்டிவ்.பால்ராஜ் திறமையான இன்ஸ். சிரஞ்சீவி அதேயளவு திறமையுள்ள சப்-இன்ஸ்.வைஜெயந்தி எல்லாம் நரேந்திரனுக்கு காதலியாக வராத நேரமது.கடற்கரையில் இருக்கும் காதலர்களை ஐந்து பணக்கார மாணவர்கள் அடித்து கற்பழித்து,கற்பழிக்கும் போது வீடியோ எடுக்கும் கதை.லேசான சுய நினைவோடு இருக்கும் அந்த பெண் கேமிராவைத் தட்டி விட அது இருட்டில் எங்கோ விழுந்து விடும்.ஆதாரத்தை விட்டு வைத்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அதை எடுத்து தர நரேந்திரனை அணுகுவார்கள்.நரேந்திரன் அங்கு இருக்கும் புற்றில் அந்த கேமிராவை கண்டுப்பிடித்து அதை போட்டுப் பார்த்து விட்டு கோபத்தில் அந்த மாணவர்களை கொலை செய்ய முடிவு செய்வான்.அதே சமயம் இன்ஸ் பால்ராஜ் கற்பழிப்பு கேஸில் அந்த பசங்களை நெருங்கியிருப்பார். கொலை செய்ய புறப்படும் நரேந்திரனை சாமர்த்தியமாக ஜெயிலில் அடைத்து விட்டு விபத்தில் சாவது போல அந்த ஐந்து மாணவர்களையும் பால்ராஜ் கொன்று விடுவார்.இதே கதை தான் ஏழை மாணவர்கள், நாயகனின் அப்பா கொலை,பழிவாங்கல் என்று மாறி மிக சுமாராக வந்திருக்கிறது.அந்த கதையை எழுதியவர் கொஞ்சம் கண்டுபிடிங்க .தொண்ணூறுகளின் தொடகத்தில் வந்த கிரைம் நாவலை எடுத்தாலே நிறைய சூப்பர் ஹிட் படத்தைத் தரலாம்.

வம்சம் - இந்த படத்தை மட்டும் பாண்டியராஜ் முதல் படமாக எடுத்திருந்தால் இன்னும் பத்து வருங்களுக்கு அடுத்த படமே கிடைத்திருக்காது. அவ்வளவு திராமையான திரைக்கதை. நண்பரின் நண்பரான தாஜ் நூர் (ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர்) மிகவும் ஏமாற்றி விட்டார்.ஏ.ஆர்.ரகுமான் என்று ஆலமரத்திற்கு அடியில் எதுவும் முளைக்காது என்று இன்னொரு முறை உறுதியாகியுள்ளது. முதல் படத்திலேயே சரக்கு தீர்ந்து போவது ஒன்றும் புதிதல்ல. உடன்போக்கு என்று இலக்கியத்தில் சொல்வார்களே அது மாதிரி கிஷோர் அத்தை பெண்ணுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது முறைப்பெண் குதிரையை எடுத்து கொண்டு கிளம்பும் போது அதை கண்டும் காணாமலிருக்கும் அம்மா என்று இயக்குனர் அறியாமலே எடுத்த சில சுவாரஸ்யமான காட்சிகளும் உண்டு.

பாணா காத்தாடி - மெல்லிய உடம்புக்குள் ஒரு முரட்டுத்தனமான குரல் என்பது கதையின் நாயகனுக்கு பொருந்தி வந்தது.முரளியின் வருகை போது ஏற்படும் புன்னகை படம் முழுவதும் வரவில்லை என்பது தான் உண்மை. பிரசன்னா அந்த முஸ்லீம் பையனை(நான் மகான் அல்ல படத்திலும் முதலில் முஸ்லீம் மாணவன் சாவார்) கொன்று விட்டு அழுவாரே - இன்னும் பத்து வருடம் ஆனாலும் பிரசன்னாவை தமிழ் சினிமா பயன்படுத்தாது என்பது தான் உண்மை.கத்தியைத் தூக்க எல்லோருக்கும் ஒரு காரணம் வரும் என்று பட்டியலிடும் காரணத்தை கடந்து வராத மாநகராட்சி பள்ளி மாணவர்கள் குறைவாகத்தானிருப்பார்கள். படிக்கட்டில் தொங்கும் போது கிரிப் போய் விடாமலிருக்க மண்ணைத் தடவி கொள்வார்கள்.கடைசி காட்சியில் ஹீரோ தடவியிருக்க மாட்டார் கீழே விழுந்து விடுவார் என்று லாஜிக் நன்றாகயிருந்தாலும் அப்படி நிற்கும் விழ சாத்தியமேயில்லை என்பது தான் உண்மை. பறந்து வரும் காத்தாடி கையில் வெட்டி விட்டது என்று வைத்தாலும் சர்வம் ஞாபகம் வருமே. அதை விட கதையின் நாயகன் விளையாட்டுப் பையன் என்பதால் பறந்து வரும் காத்தாடி பிடிக்க முயற்சி செய்து விழுந்து இறந்தார் என்று வைத்திருந்தாலும் கொஞ்சமாவது காதில் சுத்தியிருந்த பூவின் எடை குறைவாக மாறியிருக்கும்.

இனிது இனிது - ஹேப்பி டேஸ் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை பார்த்திருந்தால் அடுத்த நிமிடம் கூட்டமாக தற்கொலை செய்திருப்பார்கள். ஹேப்பி டேஸ் படத்தில் டைசன்,ராஜேஷ் என்று மனதை ஆக்ரமித்தவர்களை எல்லாம் இந்த படத்தில் நடித்தவர்கள் மிதித்தே வெளியே தள்ளுகிறார்கள். பிரகாஷ் ராஜ் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்தைத் தயாரித்திருப்பதை விட அந்த படத்தை டப் செய்து விட்டு இருக்கலாம். தமன்னாவுக்கு இப்போதிருக்கும் மார்க்கெட்டுக்கு அது சாத்தியமே. நல்ல படங்கள் தான் எடுப்பேன் என்ற உத்வேகமிருந்தாலும் மார்க்கெட்டிங் செய்யும் திறமை தெலுங்கு படத்தயாரிப்பாளர்களை விட கம்மி தான் என்று பிரகாஷ் உறுதி செய்துள்ளார். இதே மாதிரியான கதையோடு புகைப்படம் என்ற படம் வந்ததும் இன்னொரு மைனஸ்.

Tuesday, August 24, 2010

துவையல் - வெளுப்பு ஸ்பெஷல்

இன்னொரு முறை கௌதம் மேனனைப் பிடித்து தொலைக்கிறது.கற்றது தமிழ் ராம் இயக்கி நடிக்கும் அல்லது கருணாஸ் நடிக்கும் தங்க மீன்கள் படத்தைத் தயாரிக்கிறாராம். அஜித் படம் நடிக்கவில்லை என்று முடிவாகி விட்டது.இன்னும் குமுறுகிறார்.குமுறுவார்.அடுத்து அஜித்,விஜய் யார் கூப்பிட்டாலும் போய் நிற்பார்.இதே மாதிரி தான் சில ஜீவன்களுக்கு படிக்காமலிருக்க முடிவதில்லை போலிருக்கிறது. என்னை ரொம்ப திட்டாதீங்க.நாளைக்கே ஒரே இரவில் புரட்சி ஏற்பட்டு நானும் தோழராக மாறி விட்டால் என்ன எழுதினாலும் கொஞ்சும் போது ஒரு மாதிரியாக இருக்கும். அடுத்த அனானி பின்னூட்டம் தயாராகுது போல.

நான் மகான் அல்ல படம் பார்த்தேன்.அதில் எனக்கு எந்த குறுயீடுகளும் தெரியாமல் போனது எனக்கே வருத்தமாக இருக்கிறது.நல்ல வேளை சென்சார் போர்டில் நான் வேலை செய்யவில்லை (என்னை சொன்னேன்) செய்திருந்தால் நிறைய படமும் வந்திருக்காது. எந்திரனை தொடக்கத்திலே புறக்கணித்திருப்பேன்.(அட பார்த்து விட்டு தான்).இந்த படத்தில் எனக்கு ஏற்பட்ட மிக பெரிய அதிர்ச்சியால் படமே நினைவில் நிற்காமல் போய் விட்டது.அந்த அதிர்ச்சி அந்த அதிர்ச்சி அந்த அதிர்ச்சி அதிர்ச்சி நைட்டிக்குள் பேண்ட் இருந்தது என்று ஜாக்கி அண்ணன் சொன்னதால் வரவில்லை. (உனக்கு இதெல்லாம் தேவையாடா.

ஜெயமோகன் தளத்தில் பின்னூட்டம் நிறுத்தப்பட்டது எனக்கு வருத்தமே.இனி அவர் சொல்வது மட்டும் சத்தமாக கேட்கும். ஆனால் இன்னொரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியே.இனி சாருவை எல்லோரும் பிரித்து மேய்வது போல எதிர்வினைகள் கொடி கட்டிப் பறக்கும்.என்னிடம் கூட ஜெயமோகனுக்கு "ஆதரவாக" எழுதிய ஸ்கீரின் ஷாட் பதிவு இருக்கிறது.என்ன செய்ய. பாலகுமாரனை விவாதித்தால் ஏற்கனவே உதை வாங்கியவர் ஜெயமோகன் என்று ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது.நல்லவேளை சுஜாதா இருக்கும் போது அவரை பற்றி எழுதவில்லை. எழுதியிருந்தால் வைக்கும் எதிர்வினைகளால் எழுதவே மாட்டேன் என்று சொல்லியிருப்பார். பாலகுமாரனும் இல்லாமல் இருந்தால் மீண்டும் பின்னூட்டப் பெட்டி திறக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் சாருவை பார்த்து ஜெயமோகன் காப்பியடிப்பார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.மீண்டும் ஒருமுறை பின்னூட்டப் பெட்டியை மூடி உறுதி செய்துள்ளார். என்ன செய்தாலும் சாருவின் பாசத்தை என்னால் மறைக்க முடியவில்லை என்று வால்பையன் வந்து பின்னூட்டம் போட்டால் நானும் பின்னூட்டப் பெட்டியை அடைத்து எழுத்தாளராகி விடுவேன் என்று எச்சரிக்கை விடுகிறேன்.

ராம்ஜி யாஹூ பின்னூட்டதில் தோழர்களே தெறித்து விழுவார்கள்.ஜெமோ ஏம்மாத்திரம்.என்னையும் ஒரு ஆளாக மதித்து அல்லது எரிச்சலில் ஒரு பத்து முறை பின்னூட்டம் போட்டது. ஆஸ்கார்,ஆம்பாசிடர் கார், பென்ஸ் கார், மாருதி கார் என்று எல்லா காரிலும் ஒரே நேரத்தில்(நித்தி மாதிரி அல்ல) பயணித்தது போல ஒரு உணர்வு.எழுத வந்ததில் ஒரு லட்சியம் நிறைவேறி விட்டதடா.

பாணா காத்தாடி தொடங்கி நான் மகான் அல்ல,இராவணன் என்று எல்லா படத்திலும் திறமையான உதவி இயக்குனர்கள் இல்லை என்று தெரிகிறது.நான் ரெடி.ஆனா நான் கேக்குற சம்பளம் அவர்களால் கொடுக்க முடியாத வருத்தத்தில் சோகத்தில் இன்னும் பல தில்களோடு படம் இயக்கத் தெரியவில்லை அது தெரியவில்லை,இது தெரியவில்லை என்று நான் (நான் மட்டுமே) புறக்கணிக்க தெரியாமல் பார்த்து தொலைக்கிறேன். இல்லை சில படங்களின் டிஸ்கசன் நடக்கும் போது அதே உதவியாளர்கள் வேலை செய்திருப்பார்கள்.ரீப்பிட் காட்சிகள்.

விஷ்ணுபுரம் படித்த ஏதோ ஒரு உதவி இயக்குனர் தான் கிறிஸ்டோபர் நோலனிடம் வேலை பார்த்திருக்கிறார். பாருங்க பயபுள்ள பொய் சொல்லியிருக்கு.இந்த கதை மட்டும் ஜெயமோகனுடையது என்று சொன்னால் நாய் சேகர் மட்டுமல்ல கிறிஸ்டோபர் நோலனே அடுத்த படம் எடுக்க இருக்க மாட்டார். அடுத்து மணிரத்னமுடன் ஜெயமோகன் சேர்வதால் ஐயோ பாவம் மணிரத்னம் என்று சொல்ல முடியாமல் ஐயோ பாவம் இரும்புத்திரை என்று முடித்து கொள்கிறேன்.

Monday, August 23, 2010

பாணா காத்தாடியும் ஒரு காதலும்

இன்று வரை என் லட்சியங்களில் ஒன்றாகயிருப்பது வெறும் ஓட்டைக் காத்தாடியாவது விடுவது தான். கிராமத்தில் அந்த கனவு நிறைவேறாத சோகத்தில் இருந்த நான் சென்னை சி.ஐ.டி நகருக்கு வந்த பின் தான் லட்சியத்தில் பாதியை கடந்தது போலிருந்தது. மூன்றாவது மாடி டேங்கில் ஏறி கண்ணாம்மா பேட்டையில் இருந்து விடும் காத்தாடியை டீல் போடுவார்கள். யாருக்காவது லுங்கி அவிழ்ந்து விடாதா என்னையும் பிடிக்க சொல்ல மாட்டார்களா ஏக்கத்தோடு நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருவருக்கும் அவிழாது.அப்படியே லுங்கி இறங்கினாலும் உள்ளே கொஞ்சம் பெரிதான டிராயரோடு இருப்பார்கள். இப்படியாக தொடர்ந்த ஒரு நாளில் ஏதோ காயப் போட வந்த பெண்மணி டிராயரோடு நின்ற பசங்களைப் பார்த்து எல்லார் வீட்டிலும் புகார் கொடுக்க எனக்கு மட்டும் ஸ்பெஷல் அர்ச்சனை. இனி எதையும் தொட மாட்டேன் என்று வாக்குறுதியோடு தான் என்னை அனுமதித்தார்கள். அதற்குப்பின் தான் என் மேல் பாசம் பீறிட்டு அடித்ததோ என்னவோ எனக்கு காத்தாடி விட சொல்லித் தர நிறைய குருமார்கள் முன்னுக்கு வர செய்த சத்தியத்தால் அதை தொடாமல் நின்றுக் கொள்வேன். எதிர்க்காற்றில் டீல் போட அது நாங்கள் விட்ட காத்தாடிக்கே பாதகமாக முடிந்தது. என்னை எவ்வளவோ கெஞ்சியும் பிடிக்காத காரணத்தால் நிறைய நூலோடு காத்தாடி போய் விட்டது.ஸ்ரீனிவாசா தியேட்டரில் பிடித்திருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் கெட்ட வார்த்தைகளோடு சரளமாக சென்னை பாஷையும் பேசத் தொடங்கியிருந்தேன். திருநெல்வேலி நடையில் பேசி விட்டு புட்டுக்கிட்டான் நட்டுக்கிட்டான் என்று பேச இங்கேயிருந்தால் இன்னும் சோவாரியாக மாறி விடுவான் என்று சொல்லி காலம் என்று எதிரே வந்த காத்தாடி எங்களில் நூலை வெட்ட விருகம்பாக்கத்தில் போய் விழுந்தோம். சுற்றி கொஞ்சம் சொந்தங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக திருநெல்வேலி தலையைக் காட்ட நான் சி.ஐ.டி நகர் நண்பர்களை மறக்க தொடங்கியிருந்தேன்.என் சுயநலத்திற்காக அதே மாதிரி ஏதோ ஒரு பிரச்சனையில் பெரம்பூரில் இருந்து விருகம்பாக்கம் வந்தவனிடம் நான் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.

ஏதோ ஒரு மழைநாளில் சோம்பேறித்தனப்பட்டு 12 பியில் வராமல் இறங்காமல் வீடு வந்து சேர ஆசைப்பட்டு 12 சியில் பயணம். மழையோடு பேசிக் கொண்டிருந்தவளை மீள்பார்வையில்லாமல் முதல் பார்வையிலே பிடித்து தொலைத்தது. அவளை பார்க்கவே 12 சியில் பயணம். ஒரு நாளாவது பார்த்து விட மாட்டாளா என்று நப்பாசை தான் அவள் பின்னால் அலைய வைத்தது. ஒரு நாளும் நடக்கப்போவதில்லை என்று மட்டும் தெரியும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் கவனித்தேன் அவள் கையிலிருக்கும் புத்தகம் வித்தியாசமாக தெரிய தொடர்ந்து கவனித்ததில் அவள் தாவணியும் வித்தியாசமாக இருந்தது. விசாரித்தால் அவள் ப்ளஸ் டூவாம். பள்ளியில் மாணவிகளின் தலைவியாம். பஸ்ஸில் ரவுடியாம். எவ்வளவு வித்தியாசம் நான் ரெண்டு வருடம் ஜூனியர் மற்றும்  நெற்றியில் விபூதியோடு இருக்கும் பையனை அந்த வயதில் எவளுக்குத் தான் பிடித்திருக்கிறது. அவளிடம் பேச எப்போதாவது கிடைக்கும் சந்தர்ப்பதிற்காகவே அவனிடம் நட்பு கொள்ள ஆரம்பித்தேன்.அவன் அக்காவும் அவளும் ஒரே வகுப்பு.நட்பு என்றால் அப்படி ஒரு நட்பு.பள்ளியில் சாம்பியன் அணியான எங்கள் அணிக்கு எதிராக அவன் வகுப்பின் சார்பாக களமிறங்கும் அளவிற்கு நட்பு.

எங்கள் பள்ளியையும் பெண்கள் பள்ளியையும் ஒரே நேரத்தில் தான் விடுவார்கள். ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி மாதிரி சரித்திரத்தில் இடம் பிடிக்க நிறைய பேர் முயல அது தெரிந்து பெண்கள் பள்ளி எங்களுக்கு முக்கால் மணிநேரம் முன்னால் விட கடைசி வகுப்பை புறக்கணித்தால் மட்டுமே அவளை அல்ல எல்லோரையும் பார்க்க முடியும் என்ற நிலை. சுவர் குதிக்க ஆரம்பித்திருந்தோம். துரைசாமி சப்வேவில் காத்திருப்போம்.பர்கிட் ரோடு வழியாக பஸ் துரைசாமி சப்வேவிற்கு வரும். அடிக்கடி மாட்டிக் கொள்வோம்.ஆசிரியர்கள் பிடித்தாலும் பாதி நாள் அப்செண்ட் தான் தண்டனை.அடி எல்லாம் கிடையாது என்பதால் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் வேதாளத்தைப் பார்க்க காத்திருப்போம்.பழம் என்று சொல்லி விடுவாளோ தம்பி என்று சொல்லி விடுவாளோ என்று பயத்தில் வீட்டிலிருந்து வரும் போதே விபூதியை அழித்து விட்டு இன்சர்ட்டை வெளியே எடுத்து விட்டு வருவது வழக்கம். அன்று ஆரம்பித்த பழக்கம் இன்றும் விபூதி பூசிய ஐந்து நிமிடத்தில் அழித்து விடுகிறேன். அவளும் என்னை லேசாக கவனிக்க ஆரம்பித்தது தெரிந்தது. காரணம் கூடவே வருபவன் தோழியின் தம்பி. பிறகு வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே விஷயத்தை அவனிடமிருந்து வாங்கியிருக்கிறாள். தெரிந்தப்பிறகும் யாரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.நான் மட்டும் பேக்கு மாதிரி பேக்கை எடுத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பேன்.
 
அவளை பார்த்துக் கொண்டே இறங்கியதில் பஸ்சில் இருந்த தகரம் கிழிக்க சுண்டு விரல் முழுவதும் வொய் ஷேப்பில் கிழித்து விட அவள் பதற்றப்பட்டாளா என்று பார்க்கும் முன் வெளியேறிய ரத்தத்தில் தலையை சுற்ற ஆரம்பித்து. தம்பியைப் பிடித்து கொண்டு காயத்தைக் கழுவி ஆள் மாற்றி ஆள் விரலில் கைக்குட்டையைஸ் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நீலக்கலர் பேண்ட் கருநீலமாக மாறத் தொடங்கியிருந்தது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள டாக்டரிடன் போன முதல் பேஷண்டே நான் என்பதால் அளவுக்கு மீறி பணமும்,பேண்ட் எய்டும் காதில் சுற்றத் தொடங்கியிருந்தார். பள்ளியில் நிறைய பசங்க செய்வது அடிபடாமல் கட்டுப் போட்டுக் கொண்டு பெண்களிடம் உதார் விடுவார்கள். என்னையும் அப்படி நினைத்து விடப் போகிறாள் என்று மறைத்துக் கொண்டே பயணிப்பேன். நண்பனுக்கு விஷயம் தெரிந்து  உன் தம்பிக்கு கொஞ்சம் ஊட்டி விடேன் என்று கேலி செய்வானாம். காய்ச்சல் காரணமாக இரண்டு நாள் அவள் ஏறும் பஸ்சில் மட்டம் போட அவள் இவனிடம் கேட்டாளாம். உன் தம்பியா வீட்டுக்குப் போயிருப்பான் என்று கேலி செய்ய அவன் ஒண்ணும் என் தம்பியில்லை.இனி சொல்லாதே என்று சிடுசிடுத்தாளாம். அதை அவன் என்னிடம் சொன்னதும் மழை நாளில் அவள் பார்த்தாலே சாரலடிக்கும்.இப்படி சிடுசிடுத்தது காதல் சொல்லி விட்டு முத்தமிடாமல் கன்னத்தில் உரசி சென்றது போலிருந்தது.


கைகாயம் ஆறியிருந்தது.காதலா ஏதோ ஒரு ஏழவோ பெருகிப் பெருகி வழிந்தது. அணையப் போகும் விளக்கு போல அன்றைய தினமே பிரகாசமாயிருந்தது.கடைசி ஸ்டாப்பிங் கொஞ்சம் பெருசு. ரங்கராஜபுரத்தில் ஆரம்பித்து பனகல் பார்க்கில் முடியும்.கோடம்பாக்கத்தில் பஸ் நுழைந்தவுடன் கூட்டம் அம்ம ஆரம்பித்திருந்தது.அவளை பார்க்க முடியாமல் கடைசி ஸ்டாப்பிங் மட்டும் தொங்க முடிவெடுத்து முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.
 
இரவு ஒரு மணிக்கு பாணா காத்தாடி பார்க்க ஆரம்பித்திருந்தேன்.படம் போக போக வெளியில் அடை மழை.இப்படி ஒரு மழையை நான் பார்த்ததேயில்லை.எனக்காகவே யாரோ அழுதது போலிருந்தது. படம் முடிந்தும் மடிக்கணினியைக் கூட அணைக்காமல் சுருண்டிருந்தேன்.அன்று சொல்லாமல் விட்ட ரகசியம். எனக்கு பயம் ஏற்படும் போது மட்டும் பாட்டியை நினைத்து கொள்வேன்.அன்றும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன். "என்னை எப்படியாவது காப்பாத்து..நான் அவப் பின்னாடி போறதை விடுறேன்.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் கீழே விழும் போதெல்லாம் யாரோ என்னை தாங்கிப் பிடிக்க என்னுடனே இருக்கிறார்கள்.

Sunday, August 22, 2010

தோழர்கள் அப்டேட்ஸ்

முதல் முறையாக என் பஞ்சரான பஸ்,ப்ளாக்,டிவிட்டர் எல்லாமே தோழர்களால் தான் பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கிறது.(இதோ பார்றா.அந்த பணத்தினால் கடலுக்கு அடியிலிருக்கும் என் வீட்டிற்கு போக பாலம் அமைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது).இனி வாராவாரம் கொத்து புரோட்டா மாதிரி தோழர்கள் புரோட்டா வரும். புரட்சியைப் புரட்டி எடுப்பதே இனி எனக்கு வேலை.

நான் பாட்டுக்கு செவனேன்னு ராஜி,அமர்,ஐஸ் காபி,அலாஸ்கா,லட்டு என்று சொற்சமாதி எழுதிக்கிட்டு இருந்தா ஜூனியர் கென்னு என்று திட்டுகிறார்கள்.. நான் அவர் அளவிற்கு கோபமோ புனைவோ இன்னும் எழுதி தொலைக்கவில்லை.மிக முக்கியமாக குருஜி என்னை பார்த்து "ஐ ல" என்று கூட சொல்லவில்லை. அப்புறம் என்னை எப்படி சொல்லாம் எந்திரனை மட்டும் புறக்கணிக்க வேண்டாம் எல்லா படத்தையும் புறக்கணியுங்கள் என்று சொன்னால் காமெடி செய்யாதே என்று சொல்கிறார்கள். காமெடியில் வினவை மிஞ்ச முடியுமா. நான் ஏதாவது உதாரணம் தந்தால் எப்படி எங்களை குற்றம் சொல்லலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் மங்களூர் சிவா,அபி அப்பா,குசும்பன் என்று ஒரு ஒரமாக நிற்பவர்களை உள்ளே இழுத்து விடுவார்கள்.நியாயம் என்பது அவர்களுக்கு ஒரு மாதிரியும் அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது.

அதனால் நான் தோழராக மாற முடிவு செய்து விட்டேன். நானே பெண் பெயரில் எழுதி அவர்கள் தரப்பிலிருக்கும் தோழர்கள் யாராவது கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று பழியைப் போட்டு விட்டு இரும்புத்திரையில் முடிந்த அளவு காறித்துப்பி டிசைன் டிசைனாக மன்னிப்பு கேட்க சொல்லி விட்டு இருபது நாள் பன்னாடை என்று திட்டி இன்னும் முடிந்தால் நாலு மிதிமிதித்து விட்டு மூன்று மாதம் கழித்து நான் தனி மனித தாக்குதல் நடத்துவேனா என்று சொல்லி புரட்சி செய்ய வேண்டியது தான். அப்புறம் அனானியாக மாறி இல்லையென்றால் அனானியாக மாறி ஒருத்தனைத் திட்ட சொன்னால் வழக்கம் போல இன்னொருவரையும் சேர்த்து திட்டு அனானிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.நீங்கள் அனானியைக் கேட்க வேண்டியது தானே என்று சொல்லி விட்டால் புரட்சியாளர் கோர்ஸ் முடிந்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு புரட்சி செய்யலாம்.

தோழர் ஏழர விரும்பும் ஒரு பின்னூட்டவாதி

மூணு மாசம் முன்னாடி நின்றுக் கொண்டும் தற்போது உட்கார்ந்தபடியே போகிறாராம். இது புரட்சியா என்று கேட்கிறார்.ஏங்கே போகிறார் தனி மனித தாக்குதல் நடத்தவா என்று கேட்டேன்.தோழர் உன்னை காமெடி என்று சொல்வது இதனால் தான்.நான் செல்வது தனி மனித அவசரத்திற்கு என்றார். நான் சொன்னேன் யார் மேலும் தெறித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று.

தோழர்கள் கூட துப்பும் போது யார் மீதும் தெறிக்காதாம்.காரணம் மல்லாக்க படுத்து கொண்டு துப்பினால் எப்படி அடுத்தவர் மீது தெறிக்கும்.

எதில் எல்லாம் புர்ச்சி செய்கிறார் என்று அலுத்தப்படியே ஒரு முட்டை புர்ஜியை உள்ளே தள்ளினேன்.

புரட்சி என்று சொல்வதால் தான் தோழர்களுக்கு கோபம் வருகிறது.உண்மையான வார்த்தை புர்ச்சியாம். இனி அப்படியே சொல்லுங்கள்.தோழர்கள் என்று சொன்னாலும் கோபம் வருகிறது.அதற்காக தோழிகள் என்று சொல்ல முடியுமா.

என்னதான் எனக்கு அவர்கள் மேல் கோபமிருந்தாலும்,அவர்களுக்கு என் மேலிருந்தாலும் அலாஸ்காவை மீட்டுத் தருவேன் என்ற வாக்குறுதியை மீற மாட்டேன்.(நல்ல வேளை கஜகஸ்தான் மீண்டும் சேர்ப்பேன் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால் முந்திரி கொத்து விற்க வேண்டியது தான்)

Saturday, August 21, 2010

பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய

என்னை மாதிரி சின்னப்பசங்க சொன்னா யாருமே காது கொடுத்து கேக்குறதேயில்லை.போட்ட சண்டையால பரிந்துரை போச்சு.இப்பவாது நான் சொல்றதை கேளுங்க.முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கலாம்.

நமக்கு யாருமே பின்னூட்டம் போடலையேன்னு வருத்தப்பட்டு மூலையில் முடங்கி விடக்கூடாது.நமக்கு நாமே திட்டம் மாதிரி பத்து நிமிஷத்து ஒருமுறை நமக்கு நாமே திட்டத்தில் பின்னூட்டம் போடணும்.ஒரே பெயர்ல போட முடியலையா வேற வேற பெயர்ல போடணும்.நம்ம பதிவு முகப்பில் தெரிந்து கொண்டேயிருக்கும்.இல்லை யாருக்காவது பின்னூட்டம் போடலாம்.டெரர் மாதிரி பின்னூட்டம் இருக்கணும்.அப்படி பதிவைப் படிக்கிற கூட்டம் புரோபைல் வழியா நமக்கு வந்துரும்.இப்படி வழியிருக்கான்னு ஆச்சர்யப்படக் கூடாது.அதனால் யாருக்காவது பின்னூட்டம் போட்டுகிட்டேயிருந்தா வேலை போயிரும்.பின்ன முழு நேரமா அதே வேலையை செய்யலாம்.

இன் முழு பதிவும் ஒரே தடவையில் எழுதுறதை விட ஒவ்வொரு பத்தியா தனித்தனி பதிவா போடலாம்.(உண்மைத்தமிழன் அண்ணன் இந்த மாதிரி போட்டியில் ஜெயிப்பார்.அதனால் கப்பை தனியா எடுத்து வைத்து விடவும்).சரி அவர பீர் பண்ண ஒரே வழி தான்.ஒவ்வொரு வரியா பதிவு போடலாம்.பதிலுக்கு அவரும் போட்டா என்னவாகும்.

இல்லை லேபிள் இப்படி வைங்க - அனுபவம், நையாண்டி, மொக்கை, நகைச்சுவை,நிகழ்வுகள்,சினிமா, திரைப்படம்,விமர்சனம்,சமையல்,கவிதை, சிறுகதை,அரசியல்,சமூகம் - இப்படி தமிழ்மணத்தில் தெரியும் குறிச்சொல்லை எல்லாம் நம்ம லேபிளில் போடணும்.சினிமாவுக்கு தனியா தமிழ்மணம் ஒரு பக்கம் ஒதுக்கி இருக்காங்க.அதை தூக்கிற வரைக்கும் நாம ஒயக்கூடாது.

பாஸ் தமிழிஸ்ல பிரபலம் ஆக என்ன வழியா எல்லாத்தையும் நானே சொல்லணுமா.ஒரு பத்து பெயர்ல ஐடி கிரியேட் பண்ணுங்க.ஓட்டை குத்துங்க.

இன்னும் ஒரு வழி இருக்கு - தமிழிஸ்ல டிரெண்டுக்கு ஏத்த மாதிரி குறிச்சொற்கள் மாறும்.உதாரணம் சச்சின்,சிங்கம்,சுறா,நித்யானந்தா இப்படி அதனால பதிவு தலைப்பு இப்படி வைக்கணும்.சிங்கம் எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அல்லது சிங்கம் - பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய இப்படி வைக்கணும்.அவசரக்குடுக்கை மாதிரி நித்யானந்த எழுதும் பரிந்துரை வடப் போச்சே - இனி பதிவு முகப்பில் தொடர்ந்து தெரிய அப்படி வைச்சுக்கிட்டு மிதி வாங்க கூடாது.அடுத்த் வார டிரெண்ட் ராவணன்.எழுதப் போகும் எல்லா பதிவின் தலைப்பிலும் ராவணன் என்றே வைக்கவும்.

பிரபலம் ஆகணும் என்ற ஆசையில் எல்லா திரட்டியிலும் இணைக்க ஆசைப்படக்கூடாது.அப்புறம் உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா மாதிரி பதிவு மட்டுமல்ல உங்க ப்ளாக்கே போயிரும்.

இதை படிச்சுட்டு இதே மாதிரி எல்லாம் பண்ணாதீங்க.எதையும் ப்ளான் போடாம பண்ணப்புடாது.

இன்றைய மாற்றத்தின் படி சிங்கம்,ராவணன் என்பதை எடுத்து விட்டு எந்திரன் என்று போடவும்.திட்டக்குடி,விருந்தாளி என்று போட்டால் ஹிட்ஸ் கிடைக்காது.

ஏழர ரசிக்கும் கணேஷ் பின்னூட்டத்திற்காக பழைய பதிவு.முதல் பின்னூட்டமும்,இரண்டாவது பின்னூட்டமும் தோழர்களுக்காக சமர்ப்பணம்.

Friday, August 20, 2010

தோழர்,புரட்சி - நான் சொல்லக்கூடாத கெட்ட வார்த்தைகளாம்

தினம் தினம் தோழர்கள் (கெட்ட வார்த்தை ஒரு முறை) மாதிரி எதையாவது படித்து விட்டு (முகிலன் பாயிண்ட் நம்பர் ஒன்) ஏன் எதிர்க்கிறோம் என்று தெரியாமலே அதற்கு எதிர்வினை வைத்து விட்டு எல்லா தோழர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி ஓட்டுப் போட சொல்லி விட்டு பரிந்துரையில் நின்றோமா ஐந்து பத்து வாங்கிக் கொண்டு அடுத்த நாள் பேப்பரைப் படித்து எதையாவது எழுதி வைக்கலாம் என்ற முயற்சியில் குவைத்தில் இன்போசிஸ் கட்டி வரும் கோப்ரா டவர்ஸைக் காறித் துப்பலாம் என்று முடிவு செய்திருந்தேன்.அந்த டவர் எப்படியிருந்தால் என்ன ஏற்கனவே இந்தியாவை பாம்புகள் தேசம் என்று சொல்கிறார்கள்.அதை உறுதி செய்வது போலவே இந்த இன்போசிஸ் செயல் படுகிறதே.இனி வெளி நாட்டுக்காரன் என்ன நினைப்பான். நான் என்ன இன்போசிஸ் கொம்பெனியிலா வேலை செய்கிறேன் அதற்கு ஜிங்கு சாங்கு அடிக்க சேர்ந்தாலும் நான் ப்ளாக் எழுதுவது எப்படி தெரியப் போகிறது. அவர்கள் என்ன எனக்கு ஓட்டுப் போட்டு பரிந்துரையிலா நிறுத்துகிறார்கள்.அவர்கள் என்ன கட்டினாலும் ஆகா ஏகோ என்று எக்கோவில் கதற இப்படி எழுதி கொண்டிருந்தவனை கொஞ்சம் இங்க வாங்க இங்க வாங்க என்று நான் களப்பணி செய்வதை தடுத்தால் நான் எப்படி புரட்சி(கெட்ட வார்த்தை ரெண்டு) செய்வேன். எப்படி நாளைய புரட்சியாளர் ஆவேன்.(புரட்சியாளர் என்று சொன்னாலே உன்னை வைச்சி காமெடி பண்றாங்கன்னு அர்த்தம் - இப்படி யார் அங்க சொல்றது) காமெடியோ ஏதோ காமெடிக்கு கூட அந்த கெட்ட வார்த்தையை என் மேல் பயன்படுத்தலாமா. கண்டவர்கள் எல்லாம் இந்த கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்த இதென்ன காமன் டாய்லெட்டா போலிகளான எங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு கழிப்பிடம்.

நிற்க நான் எந்திரனை விமர்சித்தால் பொங்குகிறேனாம்.பாடல் மொக்கை என்று தான் சொல்லியுள்ளேன். எந்திரனை மட்டும் அடித்தால் ஹிட்ஸ் மட்டுமே குறிக்கோள்.கம்யூனிஸ்ட் தான் பாரபட்சம் பார்க்காதவர்கள் ஆயிற்றே ஏன் திட்டக்குடி,விருந்தாளி என்று கவர்ச்சி காட்டிய படங்களை ஒன்றும் சொல்லவில்லை. அது சரி இதை சொன்னால் எவன் படிப்பான். நானாவது படம் பார்த்து விட்டு வெளுக்கிறேன்.ஒரு நாளும் அதை புறக்கணியுங்கள் என்று சொல்ல மாட்டேன்.அப்படி நாம் புறக்கணிக்க வேண்டுமானாம் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் கண்டுப்பிடித்த ப்ளாக்,டிவிட்டர் இதை தான் புறக்கணிக்க வேண்டும்.என்னது அடிமடியிலே கை வைத்தால் எப்படி. நான் எந்திரன் பற்றி எழுதினால் ரஜினிகாந்தே அலறுவார் தெரியுமா.

கார்த்தி சொல்லியிருக்கிறார்.நான் புரட்சி,தோழர் என்று சொல்வது அருவெறுப்பாக இருக்கிறதாம்.இது முதல் எடிசனில் வந்தது.அடுத்த எடிசனில் அந்த கெட்ட வார்த்தைகளை நான் எளிமையாக சொல்வது கொச்சையாக உள்ளதாம். இது நிச்சயம் மண்டபத்தின் வேலையாகத்தானிருக்கும். பத்து பேர் கொண்ட குழுக்கள் ஓட்டுப் போட மட்டுமல்ல எடிட் செய்யவும் இருக்கிறது என்று  அடிக்கடி ஒத்துக் கொண்டு போலி என்று நிரூப்பிக்காதீர்கள். பெண்களை வல்லுறவு செய்த போது நான் பொங்கவில்லையாம். கேரளாவில் திருநெல்வெலியை சேர்ந்த பெண்கள் ஆடைகளை களைந்து விடியோ எடுத்ததைப் பற்றி பேசுங்கள் என்று கேட்ட சமயம் தோழர்கள் வாயில் நேந்திரம் பழம் அடைத்து விட்டதாம்.அதற்கு நண்பர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா உனக்கு கேரள வெறுப்பு என்று. இன்று சொல்கிறார் அவர்கள் பெண்களுக்கு ஒன்று என்றால் பொங்குவாரார்களாம். ஆமாம் நீங்கள் உங்களுக்கு வேண்டிய பெண்களாகயிருந்தால் பொங்குவது வழக்கம். அதனால் உங்களை புரட்சியாளர்,தோழர் என்று முகிலன்,அது சரி எல்லோரும் சொல்கிறார்கள். இன்று அடுத்த பதிவில் இரும்புத்திரை என்று போட்டு வந்தது அது ஏன் கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டு முகிலன்,அது சரி என்ற பெயர்கள் மட்டும் இருந்த காரணம் ஏற்கனவே சாருவின் அபிமானி என்று சொல்லி வாங்கி கட்டிக் கொண்ட மண்டப எழுத்தாளர்கள் சொல்லியிருப்பார்கள். இரும்புத்திரையை நீக்கி விட வேண்டும் என்று. முதலில் உண்மையான புரட்சியாளர் ஆக வேண்டும் என்றால் தைரியம் வேண்டும்.எழுதி விட்டால் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதை நான் பார்த்து விடுவேனோ என்று தூக்குவது இன்னும் உங்களுடைய போலித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்னும் நிறைய பேசலாம்.பிறிதொரு சந்தர்ப்பத்தில்.

அடுத்து நண்பர் புலிகேசி.தோழர்களிடம் (நாளைய தோழர்களிடம்) நாம் ஒன்று கேட்டால் அவர்கள் ஒன்று சொல்வார்கள்.முதலில் கம்யூனிசம் என்றால் என்ன எல்லோருக்கும் சமமாக எல்லாம் கிடைப்பது. இங்கு பரிந்துரையே எல்லோருக்கும் கிடைக்க மாட்டேன் என்கிறது.அப்புறம் இது போலி கம்யூனிசம் தானே. முகிலனுக்கும் புலிகேசிக்கும் பொதுவான ஒருவர் இருவருக்கும் ஓட்டுப் போட்டார்.அதனால் புலிகேசிக்கு அவர் மேலிருந்த மரியாதை குறைந்து விட்டதாம். அவர் தான் ஆரம்ப காலத்தில் புலிகேசிக்கு ஓட்டளித்து வருபவர்.யார் என்று எதற்கு கிசுகிசு பாணியில் எழுத வேண்டும்.நாளை அவர் வந்து கேட்டால் உங்களை சொல்லவில்லை என்று சொல்வதற்கு தான்.இன்னும் கிசுகிசு எழுதிக் கொண்டு இருந்தால் புரட்சியாளர் என்று நக்கல் அடிப்பதில் என்ன தப்பு. அடுத்து நர்சிம் விவகாரத்தில் யாருக்கு என்ன பலனோ தெரியாது.கார்த்தி மட்டும் புலிகேசி காட்டில் மழை தான்.இந்த விவகாரம் நடக்கும் வரை கார்த்தி பதிவுக்கு பதிவு புலம்புவார் விதர்பா பற்றி எழுதினேன். யாரும் ஓட்டுப் போடவில்லை. படிக்கவில்லை.பொறுப்பில்லை என்று சொல்வார்.இப்போது சொல்வதில்லையே ஏன். நர்சிமை எதிர்த்ததும் வாக்களிக்க தோழர்கள் கிடைத்து விட்டார்கள். அந்த நன்றி கடனுக்கு பார்க்கும் எல்லோரையும் வெளுத்தால் தானே நன்றிக்கடன் தீரும். கார்த்தி முதலில் தோழர் தியாகுவைப் பற்றி தெரிந்து கொள்வது நலம்.அவருக்கு துரோகம் செய்தது யார் என்றெல்லாம் தெரிந்து கொண்டாம் பின்னாளில் உபயோகப்படும். அடுத்து புலிகேசி அவருக்கு இப்பொதெல்லாம் புரிதல் ஏற்பட்டு விட்டதாம்.அதனால் நர்சிம் பிரச்சனை நடந்து  பதினாறு நாட்கள் ஆனப்பின் பன்னாடை என்று சொன்னார். உடனே தோழர்கள் மகிழ்ந்து இன்னொரு ஆள் கிடைத்து விட்டார் என்று அவருக்கும் வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்கள். நானும் நர்சிம் பிரச்சனை பதினாறு நாள் முடிந்தாலும் தட்டிக் கேட்ட புலிகேசி நேர்மையானவர் என்று நம்பி அப்துல்லா என்ற பதிவர் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்கிறார்.நீங்கள் தான் பன்னாடை என்று பதினாறு நாள் கழித்து திட்டுவீர்களே இதற்கும் திட்டுங்கள் என்று சொன்னால் அது அப்துல்லாவுடைய தனிப்பட்ட பிரச்சனையாம். எப்படி அப்துல்லா பதிவை அப்துல்லா மட்டுமே படிக்க முடியுமாம்.மற்றவர்கள் கண்ணுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒன்று என்றால் பொங்கும் பொங்குமா சமுத்திரமான தோழர்களுக்கு தெரியாதாம். எச்சில் சுரப்பி வேலை செய்வதை நிறுத்தி விட்டதாம். இதை கேட்டால் நான் எந்திரனை சொன்னேன்.புரட்சி என்று சொன்னேன்.புண்ணாக்கு என்று சொன்னேன் என்று இன்றைய பொழுதிற்கு எழுதி முடித்தாகி விட்டார்கள்.பரிந்துரையிலும் வந்து விட்டது. நீங்க எந்திரனை அடிங்க ஏன் கலாநிதி மாறனை வேண்டுமானாலும் திட்டுங்கள் எனக்கு என்ன.ஆனால் நான் நேர்மையாக இல்லாதவர்களை வெளுப்பேன். அப்புறம் கார்த்தி,புலிகேசி நீங்கள் இருவரும் நாளைய கெட்ட வார்த்தைகள் (அதாம்பா புரட்சியாளர்கள்) கிசுகிசு எல்லாம் எழுதாதீர்கள்.நேரடியாக இது மாதிரி சொல்ல வேண்டும்.அப்புறம் பதிவு போட்டு விட்டு தூக்கக்கூடாது.ரீடரில் பல்லைக் காட்டுகிறது.

இனி முகிலன் மற்றும் அது சரி இவர்களுக்கு. இனி புரட்சியாளர்களை கிண்டல் செய்யாதீர்கள். பிறகு ப்ளாக் எழுதாமல் இருந்து விடுவார்கள்.பதிவுலக சுப்ரமணிய சாமிகளை இயங்க விடாமல் செய்த பாவம் உங்களுக்கு வேண்டாம்.குறிப்பாக எதிர்வினை எழுத தெரியாமல் காணாமல் போனவர்கள் என்று அறிவித்து இருப்பதற்கு இந்த குழந்தைகளையா அடித்தோம் என்று தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டாம் அப்புறம் ரொம்பவும் சீண்டினால் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஏதாவது பெண்ணை விட்டு சொல்ல வைத்து உங்களை பன்னாடை என்று சொல்லி துப்புவார்கள்(அப்போது எச்சில் சுரந்து விடும்.காரணம் நீங்கள் அடுத்தவர்கள் தானே) அதுவும் கல்யாணம் ஆனவர்களை மட்டும் தான் கையைப் பிடித்து இழுத்த கேஸில் உள்ளே தள்ளுவார்களாம். நல்ல வேளை எனக்கு கல்யாணம் ஆகவில்லை. இது ஜன நாயக ஆட்சியாக இருந்த காரணத்தால் காணாமல் போன அறிவிப்போடு நிற்கிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியாகயிருந்தால் நீங்கள் நிஜமாகவே காணாமல் போய் இருப்பீர்கள். தோழர்களுக்கு துப்ப மட்டும் தான் அடுத்தவர் ஆட்சியில்.இதுவே அவர்கள் ஆட்சியாக இருந்தால் கொலை தான். புரிந்ததா முகிலன்.

இந்த பதிவு என்றும் நிரந்தரமாகயிருக்கும்.என்னை அடுத்த பதிவிற்கும் இழுக்கலாம்.இன்னும் ஆதாரத்தோடு ஏவி விட்ட வில்லை உடைப்பேன்.நாளை இணையப்புரட்சி நடக்கவிருக்கிறது. அப்போதாவது நம்புங்கள் முகிலன் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புரட்சி வரும் என்று. தமிழில் அதை எழுதாதே. புரட்சி,தோழர் என்று சொல்லாதே. இந்த பதிவை பற்றி தான் எழுத வேண்டும் இதெல்லாம் உங்கள் ஆட்சி நடக்கும் சீனாவில் போய் ப்ளாக்கில் எழுதுங்கள்.என்னிடம் சொல்ல வேண்டாம். பாருங்க சீனாவில் ப்ளாக் கிடையாது என்பதையே மறந்து விட்டேன். ஜூலை மாதம் நான் எழுதிய போலி என்று தலைப்பு வரும் எல்லா பதிவையும் படித்து பார்த்தால் இன்னும் தோழர்களின் உண்மை முகம் நன்றாக தெரியும்.


Thursday, August 19, 2010

முகிலனுக்கு தெரியுமா நான் தோல(ள)ர் என்பது

முகிலன் உங்களுக்கு தெரியுமா நான் பிறந்த உடன் தோலர் ஆகி விட்டேன்.(தோலினால் உடம்பு செய்யப்பட்டதால் அல்ல) புரட்சியாளர் என்பதால். நான் பிறந்த உடன் பாளையங்கோட்டை வேளாங்கன்னி மருத்துவமனையில் இருந்த உறவினர்களுக்கு மட்டும் மிட்டாய் கொடுத்தார்கள். எனக்கு கோபத்தில்  தோள் தினவெடுத்து சாக்லேட் தந்து கொண்டிருந்த என் தங்கைக்கு ஒரு உதை விட்டு எல்லோருக்கும் கொடுக்க சொன்னேன்.அதிலிருந்து புரட்சியாளரைத் தோளர் என்று சொல்லி விட்டார்கள்.

நீங்கள் அது தெரியாமல் என்னுடன் பழகி வருகிறீர்கள். நான் தான் என் வலைப்பூ பெயரையே இரும்புத்திரை என்று தோழர்களின் நாட்டைக் குறிக்கும் சொல்லை வைத்திருக்கிறேனே. மேலும் என் புத்தக விற்பனையால் தோழர்கள் விற்ற அலாஸ்காவை வாங்க அங்கு லட்டு என்ற காவியத்தை விற்றுக் கொண்டிருக்கிறேன். அதை தடை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கலஹாரி இலக்கியம் படிக்க நைச்சியமாக என்னை அழைத்து அழிக்க பார்த்தீர்கள். நல்ல வேளை நான் ஏற்கனவே எந்திரம் படம் பார்த்து விட்ட காரணத்தால் அங்கு ரோபோவை அனுப்பி வைத்து தப்பித்துக் கொண்டேன்.

படம் வெளியாகி நூறு ஒளியாண்டுகள் ஆனப்பின் எந்திரம் விமர்சனம் எழுதினால் மக்களிடம் தாக்கமோ வீக்கமோ ஏற்படாது என்று காரணத்தால் அதை எழுதவில்லை.இதிலிருந்தாவது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா. அதை விட்டு விட்டு புரட்சி என்று எழுதி ஹிட்ஸ் கிடைக்காது என்று பொய் வேறு சொன்னால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.உங்களுக்கு ஹிட்ஸ் கிடைக்காது என்று நீங்கள் கட்டிய புரளியை உடைக்க என்னால் முடிந்த அளவு உங்கள் தளத்தில் குதித்து விளையாடினேன்.தயவு செய்து ஒத்துக் கொள்ளுங்கள் நான் புரட்சியாளன் என்பதை.

எந்திரன் தான் ஏழை மக்களை ஏழை ஆக்குகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஏன் புரியவில்லை. அது பார்க்காமலிருந்தால் அந்த பணத்தை உழைத்த அலுப்பு தீர டாஸ்மாக்கில் குடுத்து விடுகிறார்கள்.அதை பற்றி நாங்கள் என்றாவது கண்டித்திருக்கிறோமா. எந்திரன் பத்து தடவை மக்கள் பார்க்காமலிருந்தால் அதை வைத்து இன்னொரு எந்திரன் எடுத்து விடலாம் அதாவது உங்களுக்கு தெரியுமா.அப்படி ஏழை மக்கள் எல்லாம் எந்திரம் படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் எந்திரனை  தாங்கிப் பிடிக்கிறீர்கள் என்று தெரிகிறது.இதெல்லாம் உங்கள் நடுத்தர வர்க பேத சிந்தனையைக் காட்டுகிறது. முதலாளித்துவ சிந்தனையில் இருந்து நடுத்தர வர்க்க சிந்தனைக்கு மாற்றியதே தோழரான எனக்கு வெற்றி தான். எப்படியும் போராடி போராடி உங்களுக்கு ஏழை சிந்தனை ஊற்றி மாற்றி காட்டா விட்டால் நான் தோழர் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் இவ்வளவு நாளாக நான் சாருவுக்கு கொடுத்து வந்த ஆதரவு,ஹிட்ஸ்,பட்ஸ் எல்லாம் வாபஸ் வாங்குகிறேன். அவர் எப்படி இப்படி உண்மையை சொல்லி தோழர்களை அதுவும் தோழரான என்னை இப்படி அசிங்கப்படுத்தலாம்."இந்தியாவில் உள்ள எல்லா குடிமக்களையும் பிச்சைக்காரர்களாக்குவதற்கு கம்யூனிஸ்டுகளிடம் உரிய திட்டம் இல்லாததுதான்." இப்படி எல்லாம் சொன்னாலும் போராட்டம் நிற்காது.சாரு மனதிலும் நடுத்தர வர்க்க சிந்தனை ஓடுவது எனக்கு பெரிய அதிர்ச்சி.

இப்படியே எழுதி அமெரிக்க ஏகாபத்தியத்திடமிருந்து ஒரு நாளில்லை ஒரு நாள் நான் அலாஸ்காவை மீட்டு சகத் தோழர்களிடம் கொடுப்பேன்.இல்லா விட்டால் இப்படி எழுதியதற்கு அலெக்ஸாவில் உரிய இடத்தை அடைவேன். எந்திரன் விமர்சனம் ஏதாவது ஒரு தோழர் பதிவில் குறிப்பாக அறிமுக எழுத்தாளர் கம் புரட்சியாளர் வினவு தளத்தில் வந்தால் அன்று வந்து நாக்கைப் பிடுங்குமாறு கேளுங்கள். ஏன் நீங்கள் மட்டும் எந்திரன் பார்த்தீர்கள் என்று உங்கள் வீட்டிலிருக்கும் பியந்து போன விளக்குமாறால் சாத்துங்கள். நாங்கள் வாங்கி கொள்கிறோம்.அதுவரை எந்திரனைப் புறக்கணிப்போம் என்று கோஷத்தில் எங்கள் வேஷத்தில் தலையிட்டு பரிந்துரையில் பங்கு கேட்காதீர்கள். நாங்கள் அலாஸ்காவை தான் விட்டு விட்டோம். தமிழ் மண பரிந்துரையை விட மாட்டோம்.இப்படி தொடர்ந்து புரட்சி எண்டு எழுதினால் உங்களுக்கு மகுடம் கிடைத்து விடும் என்று நினைத்து விட வேண்டாம் .அதற்கு முப்பது தோழர்கள் தேவை.நீங்களும் எந்திரனைப் புறக்கணித்தால் ஒரு நிமிடம் உங்களை மகுடத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்போம். அதையும் மீறி ஆதரவு தந்தால் உங்கள் வீட்டுக்கு தோழர்கள் வந்து முற்றுகையிருவார்கள்.பிறகு எல்லோரும் ஒரு முறை துப்பினாலே போதும் உங்கள் வீடே எச்சில் வெள்ளத்தில் மூழ்கி விடும். அதுவும் அங்கு வர நீங்கள் எங்கள் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து தர வேண்டும்.

Wednesday, August 18, 2010

கோட்டா,பேட்டா,சேட்டா

இணையத்தில் புரட்சி செய்யலாம் என்று தான் பார்க்கிறேன்.எதில் என்று தெரியாமல் கண்ணில் கண்டதை எல்லாம் வெளுத்து விட்டால் புரட்சி வெடித்து விடும் போலிருக்கிறது.நானும் முயற்சி செய்யலாம் என்று பார்த்தாலும் சுட்டுப் போட்டாலும் வர மறுக்கிறது. அட வினவினாலும் வரவே மாட்டேன் என்றால் பார்த்துக்கோங்களேன். ஏதாவது கோளாறா என்று நண்பரிடன் கேட்டேன்.பதினெட்டு வயசில் கம்யூனிசம் பேசணும்.அப்புறம் என்றேன் அதை வெளுக்கணும் என்று சொன்னார். அப்ப நான் சரியாகத்தானிருக்கிறேன். என்ன செய்வது இணையப்புரட்சியாளர்கள் ஓட்டுப் போடுவதில் தான் புரட்சி செய்கிறார்கள்.

முகிலனுக்கு இன்று இந்த பாட்டை டெடிகேட் செய்கிறேன். ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கபாலி கபாலி. என்னால் அம்பிகா மாதிரி அவரை தாங்க முடியாது வேண்டுமென்றால் கபாலி மாதிரி தாங்குகிறேன். எந்திரனைப் புறக்கணியுங்கள் முகிலன் நீங்கள் புறக்கணிக்கத்தால் அமெரிக்காவில் ஒபாமாவும் புறக்கணித்து விடுவார். அப்புறம் பிரிட்டன் வழியாக ஆஸியில் புறக்கணித்தால் கடைசியில் தமிழ்நாடு புறக்கணித்து விடும்.

டிவிட்டருக்கு தெரியுமா கவிதையின் வாசனை அருமை.

முக்கில் முயற்சித்த
முதல் முத்தம்
மூக்கில் முடிந்தது !

இப்படி ஒண்ணுக்கு கீழே ஒண்ணு அடித்தேன்.அப்பவும் ஒரே வரியில் காட்டுகிறது.நண்பனிடம் சொன்னேன் ஒண்ணுக்குன்னா கீழே தான் அடிக்கணும் என்று சொல்கிறான்.அடுத்த முறை வாயைத் திறக்கட்டும். கழுதைக்கு தெரியுமா என்று நினைத்துக் கொண்டேன். இதை தான் காதல் கவிதை படத்தில் பின் நவீனத்துவ இயக்குனர் அகத்தியன் ஒரு காட்சியில் கவிதையாக எழுதினார். அது தான் கடைசி பிரசாந்த் படம் பார்த்தது.

இந்தியாவின் முதல் பணக்காரனையும், இரண்டாம் பணக்காரனையும் ஒரே படத்தில் கண்டுக்களிக்கிறேன். தமன்னா முகத்தில் எதுக்குடா நாலு இஞ் மேக்கப் அதை சூர்யாவிற்கு அடித்திருந்தால் அல்லது மிச்சம் வைத்திருந்தால் அதையும் விற்று பில்கேட்ஸை விட இரண்டு ரூபாய் அதிகமாக சம்பாதித்திருப்பார்.வியாபாரி.

புரட்சியாளர்கள் இன்னும் அமீர்கானை விட்டு வைத்திருப்பது ஆச்சர்யம் தான். 2005லிருந்து கதை சொல்லி சொல்லி போராடி இதை இயக்கியிருக்கும் பெண் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். மனிதன் எதை தொட்டாலும் கொட்டுது.நிச்சயம் இவர் ஒரு 100 % வியாபாரி என்று அவர் மூக்கில் குத்து விட்டாலும் அவருக்கு தெரியாதாம். தமிழ் படிக்க தெரியாது என்று சொன்னேன். விதர்பா விவசாயிகள் அமீர் கான் அசிங்கப்படுத்தி விட்டார் என்று போர்க்கொடி தூக்கி அமீர்கான் உருவபொம்மையை எரித்திருக்கிறார்கள். அமீர் கான் தப்பாகவே சொல்லியிருந்தாலும் (சிலர் சொன்ன மாதிரி) அதை உலக அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை அவருக்கே.

இலங்கை பந்து வீச்சாளர்,அணித் தலைவர்,வாரியத் தலைவர் விட்டால் நாட்டின் தலைவரும் சேவாக்கிடம் மன்னிப்பு கேட்பார்கள் போல. கோபத்தில் இந்தியா விளையாட வராமல் இருந்து விட்டால் துட்டுக்கும்,சாதனைக்கும் என்ன செய்வது. பெரிய லாடு லங்கோத்து தான் இந்திய கிரிக்கெட் வாரியம் இதில் எல்லாம் ஆஸ்திரேலியாவை உதாரணம் காட்டுவார்கள்.மற்ற விளையாட்டு விளையாடுவதில் ஆஸ்திரேலியாவை காட்டுங்கள் என்றால் மாட்டார்கள். மீன்வன் மீது தாக்குதல் நடத்தினால் விளையாட வர மாட்டேன் என்று சொன்னால் நிச்சயம் நிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன். சொல்வதற்கு தான் வாய் வராதே.

Tuesday, August 17, 2010

பதினி,கள்,ஈச்சிக்கள்,கருப்பட்டி,அதிர்ச்சி வைத்தியம்

சின்ன வயதில் பாட்டி வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு போன போது அங்கிருந்த ஆட்டைப் பிடித்து அதில் சவாரி செய்ய அது ஒரு சறுக்கத்தில் வேகமாக போக கீழே விழுந்து போட்டிருந்த சட்டையையும் மீறி வலது பக்க முதுகு முழுவதும் தோல் உரிந்து விட்டது. அழுகை வந்தாலும் அடக்கிக் கொண்டேன். என்னாச்சு என்று கேட்க சுற்று வட்டாரத்தில் யாருமேயில்லை. வீட்டிற்கு போனால் விழும் அடியை நினைத்து ஒரு மணி நேரம் கழித்து போனேன். அந்த ஒரு மணி நேரமும் வலியை மறக்க எதையாவது நினைக்கலாம் என்று பார்த்தால் வலி எதையும் நினைக்க விடாமல் செய்து விட்டது.

மற்ற வீடுகள் மாதிரி கீழே விழுந்தால் எல்லாம் அடிப்பதேயில்லை.மிரட்டல் தான்.அதிரடி வைத்தியங்கள் தான்.சின்ன வயதில் காசை முழுங்கி விட அப்பா தலைகீழாக ஒரு தூக்கு தூக்கி முதுகில் தட்டியவுடன் பழைய பத்து காசு வெளியே விழுந்ததாம். இறக்கி விட்டப்பின் தான் அடியே விழுந்ததாம்.அடி வாங்கும் வயது ரெண்டு.அந்த சம்பவத்தை எல்லோரும் சொல்லியிருப்பதாலும், அதிசயமாக அந்த விடுமுறைக்கு அப்பா கூட இருந்தாலும் பயம் அதிகரித்தது.பயத்தை வலி வென்று விட வீட்டிற்கு போய் கமுக்கமாக படுத்து கொண்டேன். இப்படி கமுக்கமாக படுத்தாலே தெரிந்து விடும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதோ வில்லங்கம் நடந்திருக்கிறது என்று.

சட்டையைக் கழற்றி பார்த்தால் தோல் போன இடத்தில் சட்டை ஒட்டிக் கொள்ள வலியில் அழ "மூச் அந்த கருப்பட்டியைக் காச்சி ஊத்து அக்கா சரியாயிரும்.." என்று சொல்ல இதுக்கு வலியே பரவாயில்லை என்பது போலிருந்தது. சப்ராமைஷின் போட்டால் ஏற்கனவே பாதி காலியாயிருந்தது. மீதியும் காலியாகி விடும் என்று நினைத்து கொண்டேன்.முதுகில் அடிப்பட்டதால் முட்டியை கவனிக்கவில்லை.அதில் அடிப்பட்டு தொலைத்தால் காயம் ஆற இன்னும் நாள் ஆகும்.வலிக்குது என்று சொன்னால் கருப்பட்டியைக் காச்சி விடுவார்களே என்று பயத்திலேயே உறங்கிப் போனேன்.

(பனையில் இருந்து இறக்கி அதில் சுண்ணாம்பு கலந்திருந்தால் அது பதினி.சுண்ணாம்பு கலக்காமலிருந்தால் கள்.இன்னும் அதில் தேனீக்கள் சேர்ந்து கிடந்தால் இன்னும் போதையேறுமாம். கண்டிப்பா அதை அருந்த வேண்டும் ஒருவர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்திருக்கிறார். பதினியில் மாம்பழம் போட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான்.மிச்சம் இருக்கும் பதினியோடு என்னை விட உயரமான அகப்பையோடு நானும்,தம்பியும் முன்னால் செல்ல ஆச்சி பின்னால் வருவார்கள். பதினி காச்ச ஓலை எல்லாம் தயாராகயிருக்கும்.பதினி காச்ச காச்ச நாங்கள் ஓலையைத் தள்ளுவோம்.சுவைக்கு ஆமணக்கு போடப் போகும் ஆச்சியிடமிருந்து வாங்கி நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றாக போடுவோம். சுத்தமான ஓலையில் காச்சிய கருப்பட்டியை எடுத்து தர நாங்கள் வீடு வரைக்கும் அதை வைத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே வருவோம். வீட்டிற்கு வந்ததும் சிரட்டை கருப்பட்டியா பானை கருப்பட்டியா என்று விவாதம் நடக்கும்.பானை என்றால் மொத்தமாக அதில் ஊற்றி விடுவார்கள்.சிரட்டை என்றால் ஆறுபது சிரட்டையில் ஊற்றி வைப்பார்கள். அந்த உள்ளறையில் கோழி அடை காக்க வைத்திருப்பார்கள். கருப்பட்டியைப் பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு கோழி எத்தனை முட்டை அடை காக்கிறது என்று அதை பார்த்துக் கொண்டியிருப்போம். சிரட்டையில் இருந்து எடுத்தப்பின் வழுவழுப்பாக என்னுடையது தான் இருக்கிறது என்று நானும் தம்பியும் மாற்றி சொல்லிக் கொண்டிருப்போம். கள்ளை எடுத்து மதியம் வெயிலில் வைத்து விட்டு அதற்கு ஏற்ற மாதிரி கறி சாப்பிட்டால் ஜென்ம சாபல்யம் என்று நண்பர் ஒருவர் உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.நான் இன்னும் பதினியிலே நிற்கிறேன்.கிராமத்து வீட்டை கருப்பட்டியோடு,முட்டை சேர்த்து கட்டினார்களாம். காரை மட்டும் தான் பெய்ர்ந்திருக்கிறது.இன்னும் டபுள் ஸ்டாராங்க் தான்.)

அப்படி காயம்,சண்டை எல்லாவற்றிருக்கும் மிரட்டி மிரட்டி வளர்த்தாலே மும்பையில் ஒரு காய்ச்சலின் போது மூன்று நாட்கள் படுத்தபடியே கிடந்தேன்.மூன்றாவது நாள் எந்திரிக்க முடிந்ததும் நான் போய் ஆட்டுக்கறி சாப்பிட்டேன்."உனக்கு காய்ச்சல் அதை ஏன் சாப்பிட்ட.." என்று பயந்தபடியே நண்பன் சொல்ல ஒண்ணும் ஆகாது என்று வெளியே உதார் விட்டாலும் உள்ளூர எழுந்த பயத்தால் அம்மாவிடம் சொல்ல அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.காய்ச்சல் வந்தா நல்லா சாப்பிடணும்.பயந்தா தான் காய்ச்சல் வரும் என்று சொல்ல சரி என்று அடுத்த கோட்டாவிற்கு தயாராகி விட்டேன்.

அதில் ஒரு காய்ச்சலின் போது யாராவது கல்யாணம் பண்ணிக்கோ என்று சொன்னால் மனதிருக்கும் நிலையில் சரி என்று சொல்லி விடுவேன் என்ற பயத்தில் காய்ச்சல் வந்ததையே வீட்டில் சொல்லவில்லை. மனது சரியில்லாத போது உடம்பும், உடம்பு சரியில்லாத போது மனதும் பெண் அருகாமையை விரும்பி தொலைக்கிறது.அந்த சமயத்தில் என்ன நினைத்தாலும் கண்டுப்பிடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு கல்யாணப் பேச்சு எடுத்தாலே குழந்தை திருமணம் தப்பு என்று சொல்லியே தப்பிக்க வேண்டியிருக்கிறது..

நண்பருக்கு கல்யாணமாம்.கண்டிப்பாக வர சொல்லியிருக்கிறார்.பதினி,கள்,ஈச்சிக்கள் எல்லாம் தயாராகயிருக்கிறதாம்.நான் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் நான் போனால் இங்கு என் விலாவை சிறப்பித்து புதுப்பித்து விடுவார்கள். போகும் போது காய்ச்சியது எதாவது வாங்கி போக வேண்டும்.விடுப்பட்டு போய் விட்டது.எனக்கு பதிமூன்று வயது தான் ஆகிறது.இந்த ப்ளாக்கர் தப்புத்தப்பா காட்டுது.

Monday, August 16, 2010

துவையல் - கோபம் ஸ்பெஷல்

இன்று சுதந்திர தினம் பற்றி யாரும் பேச மாட்டார்கள்.இந்தியா இலங்கை போட்டியைப் பற்றி பேசுவோம். இலங்கை இன்று தோற்கப் போகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருப்பது உத்தமம். நம் எல்லையில் இருக்கும் போது அவர்கள் எல்லையில் இருந்து சிங்கள டாக்ஸ் சுட்டாலும் நாளை பிரணப் சொல்வார்.நாம் தான் எல்லைத் தாண்டக் கூடாது.குண்டு எல்லை தாண்டி வந்து மீனவர்களைத் தாக்கினால் நாம் பாதுகாப்பு தர முடியாது என்று.ஒரு மலையாள மீனவன் சாகட்டும் பார்க்கலாம். நாடாளுமன்றம் அமளி துமளி ஆகி விடும்.அதே நிலை தான் தெலுங்கு பேசும் மீனவன் இறந்தாலும் துமளி அமளி ஆகி விடும்.இப்படி விட்டுக் கொண்டு இருங்கள்.பிறகு மெரினாவில் கால் நனைத்தாலும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் என்று பிரணப் முழங்குவார்.அன்றாவது தந்தி அடிக்காமல் இருக்க வேண்டும்.தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்து விடுவோம் என்று தோழர்கள் பார்வையில் பாப்பானாக இருக்கும் பாரதி சொன்னார்.உணவுக்கே ஜகம் என்றால் உயிருக்கு ராஜபக்சே மயிர் திருப்பதியில் காணிக்கையாக்கப்படும்.

அடிக்கடி சொல்வார்கள்.நானும் அதை நம்புகிறேன்.சினிமாகாரர்கள் வாயில் வருவது எல்லாம் பொய் தான்.சாருவை நீங்கள் இளமையாக இருக்குறீர்கள் என்று சேரன் முதல் மிஷ்கின் வரை சொல்லும் போது சாருவும் சினிமாகாரர் ஆகி விட்டார் என்று தெரிகிறது.எப்படி நான் ஜெயமோகன் தளம் படிப்பதில்லை என்று சொல்கிறார்.பிறகு எப்படு இவ்வளவு நேர்த்தியாக பகடி செய்ய முடியும்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உண்மை வந்து விடுகிறது.

முற்போக்குவாதிகள் என்று காட்டிக் கொண்டு அடுத்த மதத்தை வெளுக்கும் போது சும்மா இருப்பவர்களும், இல்லை கூட சேர்ந்து வெளுப்பவர்களும் தன் மதம்,ஜாதியை சொல்லும் போது பாய்ந்து வரும் போது செம காமெடியாக இருக்கிறது. ஒன்று எல்லா சந்தர்ப்பத்திலும் எதுவுமே சொல்லாமல் இருப்பது இல்லை எந்த மதத்தை அடித்தாலும் தட்டிக் கேட்டால் மட்டுமே நான் முற்போக்குவாதி என்று ஒத்துக் கொள்வேன் என்று முற்போக்குவாதிகளின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.

போலி சுதந்திரம் என்று போலித்தனத்தை எல்லாம் சாடுபவர்கள் ஏன் போலியாக இருக்கிறார்களோ தெரியவில்லை. நான் பெண்களை ஏதாவது சொன்னால் கழன்று விடும் நிலையில் டவுசர் இருந்தாலும் இறுக்கிக் கட்டிக் கொண்டு துப்பும் போலிகள் ஆணுக்கு அதே நேரும் போது நல்லாயிருக்கும் டவுசர் பட்டனைப் பிய்த்து ஏன் தைப்பது போல் நடிக்கிறார்களோ தெரியவில்லை. ஆணாதிக்கம் என்று அடுத்தவர்களைக் காட்டிப் பகடி பேசுபவர்கள் வீட்டில் கேட்டால் தெரியும் யார் ஆணாதிக்கவாதி என்று. நான் ஆணாதிக்கவாதி தான்.அதனால் நான் ஆணாதிக்கவாதி என்று யாரையும் சொல்ல மாட்டேன்.

ஆகஸ்ட் மாதமே எனக்கு சம்பந்தமிருக்கும் நாடுகளுக்கு சுதந்திர தினம் வருகிறது.சிங்கப்பூர்,பாகிஸ்தான், இந்தியா, மலேஷியா என்று எல்லாமே ஆகஸ்ட் 9,14,15,31 தேதிகளில் வருகிறது.நல்ல வேளை மலேஷியா சிங்கப்பூர் மாதிரி நமக்கு ஆறுபதுகளில் சுதந்திரம் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் இன்னும் முன்னேறியிருப்போம். பிரிட்டிஷ் போனப் பின் நாம் போட்ட பத்தாயிரம் கிலோமீட்டர் ரயில் பாதையை அவன் அறுபதுகளிலே போட்டிருப்பான். அவர்கள் நம் நாட்டை விட்டுப் போவதற்கு முன் இருந்த ரயில் பாதை - ஐம்பாதாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல். என்னா உழைப்பு.நகைச்சுவையான முரண் அவர்கள் விட்டு சென்ற போது நம் மக்களின் எண்ணிக்கை என்ன. இப்போழுது இருக்கும் எண்ணிக்கை என்ன.போகும் இடத்தில் எல்லாம் நாட்டைப் பிரித்து விட்டு செல்வது தான் அவர்கள் வழக்கம் போல.அது சரி நாம் மட்டும் என்ன செய்கிறோம்.தனி தெலுங்கானா, தனி தைலாபுரம் இன்னும் நிறைய தனி வந்தால் தானே என்றாவது ஒரு நாள் முதல்வராக முடியும்.

இன்போசிஸ் ஊழியர் அவர் மனைவியைக் கொன்று விட்டாராம்.தலைப்பு செய்தி.ஏன் கோபம் வந்தால் எவனும் கொலை செய்வான்.நடிகர் கடலில் சண்டை போடும் போது வாந்தி எடுத்து விட்டாராம்.(எத்தனை மாசம்) இப்படி போடுவதை விட்டு விட்டு மது கோடா என்ன செய்கிறான், கொள்ளை அடித்தப் பணம் என்ன ஆயிற்று என்று எழுதலாம். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து மது கோடா முதல்வர் ஆகும் போது வழக்கை அவர் பாகிஸ்தானில் நடத்தலாம் என்று சொல்வார்.நம் ஆளுங்களும் மண்டையை ஆட்டுவார்கள்.பத்திரிக்கைகளும் பாருங்க பாகிஸ்தான் கோர்ட்டில் நடக்கும் முதல் இந்திய வழக்கு என்று முதல் பக்கத்தில் எழுதுவார்கள்.அடுத்த டிசிஎஸ் ஊழியர் எதாவது செய்திருப்பார். செத்து போய் விட்டாரே ஒரு பேட்டி எடுக்க முடியாமல் போச்சே என்று வருத்தம் தெரிவித்து தீனி போடுவார்கள். அரபு நாடு மாதிரி ஒரே ஒரு முறை கற்பழித்தவனுக்கு தண்டனை கொடுத்தால் பயம் வரும்.அது சரி அப்படி பார்த்தால் பெரிய மனிதர்கள் எல்லோருக்கும்  ஒரு முறையிலே காணாமல் போய் விடும்.அதை தடிக்க வாய்தா எடுப்பார்கள்.பத்திரிக்கைகளும் வியந்து எழுதும்.

Sunday, August 15, 2010

மனம் மொத்தி பறவைகள் - சொற்சமாதி

டிரட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன்.மூக்கு துவாரத்தில் பேசான சூடு பரவி இரத்த வாடை அடிக்கத் தொடங்கியது.நண்பன் அடிக்கடி வந்து பார்த்து விட்டு உள்ளறையில் போனில் யாருடனோ பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.அவனுக்கு வித்தியாசமாக தெரிந்து டிரட் மில்லை நிறுத்தினான்.

"மூக்குல ரத்தம் வருதுடா..இப்ப யார் மேல இந்த கோபம் அமர்.." கேட்டுக் கொண்டிருந்தான்.

பதில் சொல்லாமல் துடைக்க துணியை தேடிக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு செமஸ்டர் முடிவில் போட்டு சென்ற வெள்ளைச் சட்டையில் வகுப்பே கையேழுத்திட்டது.அதை துவைக்காமல் போகும் இடத்திற்கெல்லாம் எடுத்து செல்வது வழக்கம்.

"பதில் சொல்றியா இல்லையா..உன் டீம்ல புதுசா சேர்ந்துச்சே ஒரு பொண்ணு..அவ வந்ததில் இருந்து முகமே சரியில்லையே..அவ தான் ராஜியா.."

"அவ பேரு மாயா.."

"ஸ்போட்ஸ்ல கூட அந்த பொண்ணுக்கு இன்ட்ரஸ் கையில பாத்தியா ஸ்போட்ஸ் ஸ்டார்.."

"வில் யூ ஸ்டாப் இட்..போன் வருது பாரு..போய் அங்க வறு..என்னை விட்டுரு.." அவன் போனதும் என் மேல் எனக்கே கோபம் வந்தது.

மாயா,ஸ்போட்ஸ் ஸ்டார்,ராஜி,ரத்தம் என்று நினைவு சுழன்றடித்தது.

*************************

இதற்கு முன்னால் இப்படி ஒரு முறை மூக்கில் ரத்தம் வருமளவிற்கு ஓடியிருக்கிறேன்.ராஜியை காதலித்து கொண்டிருந்த வேலையை மட்டும் செய்த காலமது.

வாரத்திற்கு ஐந்து சண்டையிழுக்கும் வகுப்பில் படித்ததால் இயல்பிலேயே ஒரு மூர்க்கமிருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டிருந்தாள் ராஜி. காதலித்து தொலைத்தால் கோபம் குறையுமாமே எந்த முட்டாள் அறிஞன் சொன்னானோ அதே மாதிரி என் இயல்பை நான் தொலைத்து கொண்டிருந்தேன்.

ஏற்கனவே ஸ்போர்ஸ் பக்கத்தை மட்டும் படிப்பதால் எங்கள் வீட்டில் ஸ்டார்ஸ் ஸ்டார் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் ஏதேச்சையாக எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலிருந்த மாயா வீட்டில் ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்குவது எனக்கு கடன் வாங்கி படிக்க இலகுவாகயிருந்தது. மாயா ஏதோ ஆசிரமத்தில் தமிழ் நாட்டில் வேலைக்கு வந்து இங்கேயே காதலித்து திருமணம் செய்து கொண்டாள். எல்லாம் அஜீஷ் வரும் வரை சரியாகத்தானிருந்தது.மாயாவோடு ஆசிரம்த்தில் படித்தவனாம்.தம்பி,தம்பி என்று தான் சொல்வாள்.

அஜீஷ் இருக்கும் போது ஸ்போர்ஸ் ஸ்டார் வாங்க போனால் அவன் செய்கையே சரியாக இருக்காது. அமர் அமர் என்று பேச்சுக்கு நூறு தடவை கூப்பிட்டு  கையைப் பிடித்து கொண்டே தொட்டுத் தொட்டு பேசுவது எரிச்சலை தந்தாலும் பொறுத்து கொண்ட ஒரே காரணம் ஸ்போர்ஸ் ஸ்டார். அவன் இல்லாத நேரத்தில் வாங்குவது தான் எனக்கு உசிதமாகப்பட்டது.அஜீஷ் செருப்பில்லாத நாளில் மாயா வீட்டுக்கு போய் ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்க கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரம் கழித்து அஜீஷ் வந்து கதவை பாதியாக திறந்து வழிமறித்து நின்றுக் கொண்டிருந்தான்.

"என்னடா வேணும்.."

"ஸ்போட்ஸ் ஸ்டார்.."

"அதெல்லாம் வாங்குறதில்லை..பெருசா வந்துட்டான்.." எரிச்சலில் பொறிந்தான்.மாயா கொஞ்சம் தள்ளி எதுவும் சொல்லாமல் நின்றுக் கொண்டிருந்தது வித்தியாசமாக தெரிந்தது.

ஒரு வாரம் எல்லாமே இயல்பாக தெரிந்தது.வீட்டிற்கு வந்தால் ஸ்போட்ஸ் ஸ்டார்.

"என்ன இது புதுப்பழக்கம்.." அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

"இந்த வயசில அப்படித்தானிருக்கும்.."

"என்னம்மா உளர்ற..எந்த வயசுல.."

"ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்க மாயா வீட்டுக்கு போகாதே.."

"ஏன்.."

"வாங்க போக வேண்டாம்னு சொன்னா கேக்குணும் கூடக்கூட பேசுறது நல்லப் பழக்கமில்ல.." சொல்லி விட்டுப் போன அம்மாவையே வெறித்துக் கொண்டிருந்தேன்.

ராஜி ரெண்டு நாளா போனே செய்யவில்லை என்பது மறந்து விட்டிருந்தது. சரி பேசுவாள் என்று நான் விட்டு விட்டேன்.

"நான் புளிச்சுப் போயிட்டேனா.." குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

இந்த உலகத்தில் உள்ள எல்லா பெண்களுக்கும் கிறுக்கு முத்தி விட்டது என்று நினைத்து கொண்டேன். ஒருத்தியே இப்படி என்றால் எப்படித்தான் மன்னர்கள் எல்லாம் இத்தனை கல்யாணம் செய்தார்களோ என்று பக்கத்திலிருந்த நண்பனிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தேன்.

"செய்றது எல்லாம் தப்பு..சிரிக்கிறதைப் பாரு.." அடுத்த குறுஞ்செய்தி

கோபத்தில் குறுஞ்செய்தியைத் தட்டி விட்டேன்."ஹேய் லூசுக் கம்னாட்டி நான் என்ன தப்பு செய்தேன்.."

"ஆமா நான் லூசு தான் கம்னாட்டி தான்.." அடுத்தது.

"இப்ப அதை ஏன் கன்பார்ம் பண்ற.."

"திமிறுடா உங்களுக்கு எல்லாம்.." அடுத்தாக வீசிக் கொண்டிருந்தாள்.

"என்ன திமிறு..நேரா விஷயத்துக்கு வா.."

"மாயா.."

"ஆமா மாயா..மாயா மாயா சாயா சாயா..ரஜினி பாட்டு..சுமாராயிருக்கும்..அதுக்கென்ன இப்போ.."

"அவகிட்ட என்ன கேட்ட.."

"எவகிட்ட.."

"மாயாகிட்ட.."

"எந்த மாயா.."

"அதானே ஒரு பொண்ணுப் பின்னாடி சுத்துனா ஞாபகமிருக்கும்.."

"லூசாடி நீயி.."

"மாயா உன் வீட்டுப் பக்கத்தில் இருக்காளே..அவ கிட்ட என்ன கேட்ட.."

"ஸ்போட்ஸ் ஸ்டார்.."

"அது மட்டும் தானா.."

"ஆமா.."

"ஏன் இப்படி பொய் சொல்ற..என் அக்கா அன்னைக்கே சொன்னா நீ நல்லவன் இல்லன்னு.."

"கூடவே உன் பாட்டியும் சொன்னாளே..அப்புறம் என்ன டாஷூக்கு என் கிட்ட பழகின.."

"இனி என் மூஞ்சிலே முழிக்காத.."

"இப்போ பார்த்தாலும் குடிக்கத் தண்ணி கிடையாது.."

"குட் பை.."

இந்த பெண்களிடம் பேசி ஜெயிக்க முடியாது.போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன்.மதிய கிளாஸ் கட்டடித்து விட்டு ஜூனியரோடு படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

பல்லாவரம் நூறடி ரோடில் நடந்து போனால் குரோம்பேட் வெற்றி தியேட்டருக்கு போய் விடலாம்.

"யார் மேல கோபம் அமர்..இன்னைக்கு என் கூட சுத்துற..ராஜி கூட என்ன சண்டை.."

"பொத்திக்கிட்டு வாடா.."

"என்ன அண்ணா கோபம்..எனக்கு சுனிதா மேல கோபம் வரும் போதெல்லாம் ஹான்ஸ் போட்டுட்டு ஓடுவேன்.." நான் கோபத்திலிருக்கும் போது மட்டும் அண்ணா என்று அழைப்பான்.

"ஹான்ஸ் போட்ட இனிமே ஷூவால அடிப்பேன்.."

"சரி ஓடுவோம்..வா அமர்.."

அவன் அளவுக்கு ஸ்டாமினா இல்லாத கொஞ்ச நேரத்தில் மூச்சிறைத்தது.ஈகோ விடாமல் ஓட வைத்தது. முதல் முறையாக மூக்கில் ரத்தம்.

"சங்கர்.." என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடும் போது பைக் இடித்தது மட்டும் தான் ஞாபகமிருக்கிறது. ஹாஸ்பிடலுக்கு ராஜி வரவேயில்லை.

"ராஜி கிட்ட சொன்னேன்..அவ வரலைன்னு சொல்லிட்டா..அவ கிடக்குறா.." ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்தி விட்டான்.

"சங்கர் புதுசா ஒரு மொபைல் வாங்கப் போறேன்னு சொல்லிக்கிட்டிருந்த..வாங்கியாச்சா.."

"ம்ம்..ஒரு வாரம் யூஸ் பண்ண சுனிதா கிட்ட கொடுத்திருக்கேன்.."

"நாளைக்கு எனக்கு வேணும்.."

"சரி..பிடுங்கிட்டு வர்றேன்..நான் அடிப்பட்டாலும் அவளும் இப்படி செஞ்சாலும் செய்வா.."

மாயா ஏதோ ஒரு ரோடில் பார்த்தேன்.

"அமர் நல்லாயிருக்கியா.." ஒண்ணுமே நடக்காத மாதிரி கேட்டது கொஞ்சம் எரிச்சலாகயிருந்தது.

"ஏன் மாயா இப்படி பண்ணுன.." நேரடியான கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

"நீ யாருகிட்டயாவது போட்டு தந்தா..அதான் நான் முந்திட்டேன்.."

"அஜீஷ் விஷயமா..நான் சொல்லப் போறதில்லை.."

"ஆமா..எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கு இருக்கட்டும்னு உன்னை போட்டுக் கொடுத்தேன்..நீ என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.."

"அது அப்ப..இப்போ நம்புவாங்க.." மொபைலில் ரெக்கார்ட் பண்ணியதைப் போட்டுக் காட்டினேன். ஒழுங்கா ராஜி கிட்ட உண்மையை சொல்லு.அப்புறம் அஜீஷ் இங்க இருந்தா போட்டுக் குடுக்க மாட்டேன்..போட்டுருவேன்..என்ன சரியா..இருந்தாலும் தேங்க்ஸ்..எனக்குள்ள இருக்கிற கேடி சாகாமல் இருக்க நீயும் ஒரு காரணம்.." பதிலுக்கு காத்திராமல் போய் விட்டேன்.

அஜீஷ் பெங்களூர் ஆபிஸ் போய் விட்டான்.

சங்கர் சொல்லிக் கொண்டிருந்தான்.அதை பிடுங்க ஆள் வைச்சி அடிச்சாலும் அடிப்பாங்க.பொருள் வைச்சிக்கோ அமர்.அவன் சொன்னதும் சரி என்று தான் தோன்றியது.

வீடு கட்டும் போது மிச்சமான கேபிள் வயர் இருந்தது.அடித்தால் பழுத்து விடும்.ரெண்டு காலிலும் சுற்றிக் கொண்டு மேலே ஷாக்ஸ் போட்டுக் கொண்டேன்.

"என்ன புதுசா ஷூ எல்லாம்.." அம்மா பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

லேப் போனதும் ஷூவைக் கழற்ற சொன்னார்கள்.கழற்றினால் தெரிந்து விடும்.அதனால் ரெக்கார்ட் முடிக்கவில்லை என்று சொல்லி வெளியே நின்று கொண்டேன்.

விதி வலியது."என்னைக்கு தான் நீ ரெகார்ட் முடிச்சிருக்க..இன்னைக்கு முடிக்க..உள்ளே போ.." ஒரு பாட்ஷா அம்மணி வந்து சொல்ல

மெதுவா ஷூவைக் கழற்றி விட்டு காப்பர் வயரை எடுத்துக் கொண்டிருந்தேன்.லேட்டாக வந்த ராஜி பார்த்து விட போடி உன் வேலையைப் பார்த்துக்கிட்டு என்று சொன்னேன்.ரிலேஷன் ஷிப்பில் நான் அப்பர் ஹேண்டாக மாறிய சமயமது.எப்போதாவது அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் அதை விடுவேனா.
அவள் பார்வையில் படுமாறு இடது காலில் இருந்து காப்பர் வயரை உருவ ஆரம்பித்தேன்.

**************************

"ரத்தம் உறைஞ்சி போய் இருக்குடா..இன்னும் தொடைக்கலையா.." சத்தம் கேட்கவும் எல்லாரும் கையெழுத்து போட்ட சட்டையும் கிடைக்க சரியாகயிருந்தது. துணியால் கொஞ்சம் அழுத்தி துடைத்து விட்டேன் போல. ரத்தம் ராஜி கையெழுத்து போட்ட இடத்தில் சரியாக சிந்தியது.

அடுத்த நாள் மாயா வந்து பேசிக் கொண்டிருந்தாள்.அவள் பேசுவதை நான் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தேன்.

****************************

கொஞ்ச நாள் கழித்து மாயா கொஞ்சம் நெருக்கமான நாளில் நான் உன் கூட கொஞ்சம் பேசணும் என்று கேண்டீனுக்கு கூப்பிட

"போன் வேண்டாம்..உனக்கு அடிக்கடி போன் வருது..நிறைய பேசணும்..தொந்தரவு இல்லாம.."

".."

"நான் பேசுறதை ரெகார்ட் பண்றீயா..யூ ஸ்டூபிட்.."என்று ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தாள்.நான் சொல்லவேயில்லை மெமரி கார்ட்டைத் தொலைத்து இருபது நாளிருக்கும் என்பதை.

"இனி என் மூஞ்சிலே முழிக்காதே.." போகும் போது காணாமல் போன மைமரி கார்ட்டைத் தந்து விட்டு போனாள்.

இன்னும் ஒரு மனம் மொத்தி பறவை.

***********************

Saturday, August 14, 2010

இந்திரா காந்தி - பெயரில் ஒரு சந்தேகம்

நேருவின் மகளான இந்திரா பெரோஸ் கான் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். முஸ்லீம் மதத்திற்கு மாறினார் ஒரு முஸ்லீம் பெயரும் உண்டு என்று சொல்கிறார்கள். இந்த கல்யாணத்தை நேருவின் எதிர்ப்பையும் மீறி செய்து கொண்டார்கள்.பிற்கால அரசியலுக்கு வரும் பொருட்டு காந்தியின் ஆலோசனையின் பெயரில் காந்தி என்று பெயர் வருமாறு மாற்றி கொண்டாராம் பெரோஸ் கான். எப்படி இது சாத்தியமாயிற்று.

பெரோஸ் கானை காந்தி தத்தெடுத்து பெரோஸ் காந்தி என்ற பெயர் வைக்கலாம் என்று அந்த விவாதத்தின் போது கூறினார்களாம்.எதுவுமே சாத்தியப்படாமல் இருந்திருந்தால் அது தான் நடந்திருக்கும்.ஆனால் சட்டங்களில் ஓட்டைகளை கண்டுப்பிடிப்பதில் தான் நாம் கில்லாடிகள் ஆயிற்றே.பெரோஸ் கானின் தந்தை ஒரு முஸ்லீம்.தாய் ஒரு பார்சி. தாயின் குடும்ப பெயர் தான் காந்தே நன்றாக உச்சரித்தாலும் காந்தி என்று வராது.

பொதுவாக இந்தியா போன்ற ஆணாதிக்க நாட்டில் தாயின் குடும்ப பெயரை வைக்க மாட்டோம். வருங்கால அரசியலின் பொருட்டும்,நேருவின் கோபத்தை தணிக்கவும் பெரோஸின் அம்மாவின் குடும்ப பெயரான காந்தேவை காந்தி என்று மாற்றி பெரோஸ் பெயரில் இணைத்தார்கள். இந்திரா அப்படித்தான் இந்திரா காந்தி ஆனது.

பா.ஜ.க கட்சி ஆரம்ப காலத்தில் இருந்த சமயம் கவனம் ஈர்க்கும் பொருட்டு இரண்டு முறை பெயர் மாற்றச் சர்ச்சையைக் கையில் எடுத்தார்களாம். இப்போது யாரும் கண்டுக்கொள்வதில்லை.இது பற்றி அந்துமணி வாரமலரில் எழுதியுள்ளார். உண்மை தானா என்று இணையத்தில் தேடிய போது சர்ச்சை மேல் சர்ச்சை. தலை சுற்றி அந்த பக்கத்தை மூடி விட்டு ஓடியே வந்து விட்டேன்.

இதெல்லாம் என்ன பெரிய விஷயம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வார இதழில் வந்து கதை உறுதி செய்தது. பெரிய பணக்கார வீட்டில் வாரிசு இருவர் காதலித்தார்களாம். கடைசியில் பார்த்தால் அண்ணன் - தங்கை உறவாம்.வீட்டில் எவ்வளவோ சொல்லியும் இருவரும் கேட்கவில்லையாம். முடிவில் மதம் மாறினார்களாம் குடும்பத்தோடு. வாட் அ லாஜிக்.ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது.ஏழை சொல் என்றுமே அம்பலத்தில் ஏறாது.

வாழ்க புரட்சி.

வாழ்க தோழர்கள்.(புரட்சி என்றாலே அவர்கள் மட்டும் தான்.இன்றைய கட்டுரையின் லீட் கூட அவர்களால் தான்)

வாழ்க ஜனநாயகம்.

வாழ்க குடியரசு

வாழ்க சுதந்திரம்.

வாழ்க மக்களாட்சி.

Friday, August 13, 2010

கிறுகிறுக்க வைக்கும் குரல்கள்

சில நேரங்களில்,சில மனிதர்களின் குரல் மட்டும் என்னை வசீகரிக்கும்.அப்படி ஈர்க்கும் அந்த சமயங்களில் நான் அவர்களின் இரசிகனாகவே மாறி இருக்கிறேன்.அப்படி வசீகரித்த சில குரல்கள் எந்த காலத்திலும் அடிமனதில் தங்கி விடுகிறது.என் பெரியப்பா ஒரு பிரபல வக்கீல்.அவர் வாதாடும் போது குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.எனக்கு அப்படி கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.சில பேரின் குரல்கள் சமூகத்தின் குரலாகவே ஒலிக்கிறது.அப்படி குரலாலே ஆட்சியைப் பிடித்தவர்கள் இரண்டு பேர் தமிழ்நாட்டில் உண்டு.ஒன்று எம்.ஜி.ஆர் (இரவல் குரலினால் பாடியே) அடுத்து கருணாநிதி.(பேசியே)

அப்பாவுக்கும் ஒரு தனி குரல்.ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்.ஒரு நாள் ஒரு பாடலை அவர் பாடி கேட்ட சமயம் என்னிடம் தான் ஒரு திறமையும் இல்லை என்று நினைத்து வருந்தினேன்(இப்பவும் அப்படித்தான்).எந்த விஷயம் பேசினாலும் அவர் கருத்துக்கு எதிர் கருத்து தான் நான் வைப்பேன்.அவர் குரலைக் கேட்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.நாங்கள் மடிப்பாக்கத்தில் இருக்கும் போது எங்கள் கடை அண்ணா சாலையில் இருந்தது.கல்லூரி சேர்ந்தப் பிறகு மணிக்கணக்காக (அ)வறுப்பது வழக்கம்.போன் எந்த நேரமும் பிஸியாக பசியாக இருக்கும்.அப்பா வரும் போது குரலைக் கேட்டு வைத்து விடுவேன்.எதிர்முனையில் இருந்து வைக்காதே என்று கெஞ்சினாலும் கேட்பதில்லை.சில சமயம் அப்பா குரல் கேட்டு வெளியே வந்து பார்த்தால் தம்பி நின்று கொண்டுயிருப்பான்.இல்லை போனை வைத்து விட்டு எங்காவது பம்மி விடுவேன்.வருவது யார் என்று பார்த்தால் பெரும்பாலான தம்பியாகத் தான் இருக்கும்.அப்படியொரு அவனுக்கு அப்பா மாதிரியே அச்சு அசல் குரல்.யாராவது உறவினர்கள் என்னிடம் நீ பேசும் போது உன் அப்பா குரல் மாதிரி இருக்கிறது என்றால் சிரித்து விடுவேன்.பாசத்தில் சொல்கிறார்கள் என்று நினைத்து கொள்வேன்.(இப்போழுது கூட தண்டோரா அண்ணன் நான் நையாண்டியில் ஜொலிப்பதாக சொல்கிறார்.அது அவருடைய பாசம்.நான் பதிவுலகத்தில் ஒரு முக்கியப்புள்ளி என்று கார்த்திக் சொல்கிறான் அது அவனுடைய பாசம்).

தம்பி அதிகமாக பேசவே மாட்டான்.ஒரு வார்த்தையில் முடித்து விடுவான்.தேவையான சமயம் பேசும் போது ஒரு எதிரில் இருப்பவருக்கு ஒரு அணுகுண்டு வெடித்தது போல் இருக்கும்.நானும் இதை கற்க முயற்சி செய்கிறேன்.அது போல இருக்க முடியவில்லை.இவன் வரும் போது அப்பா என்று நினைத்து அவள் மறுக்க மறுக்க போனை வைத்து விட்டு திரும்ப பேச முடியாமல்....................

சினிமாவில் என்று பார்த்தால் சின்ன வயதில் இருந்தே கமல்,ரஜினி படத்திற்கு மட்டும் அதிகமாக போவோம்.பாட்டி வீட்டிற்கு போக முடிவு செய்து பஸ் ஏறும் சமயம் போஸ்டரைப் பார்த்து விட்டு படம் பார்க்க அம்மாவிடம் அடம் பிடித்த நாட்கள் அதிகம்.ரஜினி ரசிகனாகவே வளர்ந்த நான் தேவர் மகன் படம் பார்த்தப் பிறகு கமல் மேல் ஒரு மரியாதையே உருவாகி இருந்தது.காரணம் அந்த குரல் தான்.ரஜினி படத்தையே ஒரு முறைக்கு மேல் பார்க்காத நான் தேவர் மகன் படத்திற்கு அடுத்த நாளும் போய் திட்டு வாங்கி இருக்கிறேன்.கமல் படத்தில் நான் தேவர் மகன் படத்தை ரீமேக் செய்யவே ஆசைப்படுவேன் என்று சேரன் சொன்னார்.(என்ன கொடுமை சேரன் இது..மனசாட்சி இல்லாமல் இப்படி பேசக் கூடாது..ரம்யா தான் கேட்டார் அதுக்காக இப்படியா..)

இன்று எனக்கு விக்ரமை மிகவும் பிடிக்கிறது.காரணம் குருதிப்புனல் படத்தில் ஒலித்த விக்ரமின் குரல்.கமலை விட கம்பீரமாக தெரிந்தது.பிரபுதேவா,அப்பாஸ் என்று பலருக்கு குரல் குடுத்து இருக்கிறார்.(காதலன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்).குருதிபுனல் படத்தில் இரவல் குரல் குடுத்தப் பிறகு நிச்சயம் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தி இருப்பார்.

பதிவர்களில் அவரை போட்டோவில் பார்த்து இருக்கிறேன்.குரல் இப்படிதான் இருக்கும் என்று நான் நினைத்து இருந்தது போல் இல்லை.அவ்வளவு கம்பீரமான குரல்.இன்னும் காதில் ஒலிக்கிறது அவருடைய குரல்.

என்னுடைய மேலதிகாரி கௌஷிக்.அவருக்கும் அது போல ஒரு வித்தியாசமான குரல்.என் மேல் எப்பவும் ஒரு வருத்தம் உண்டு.அவர் சொல்வதை நான் கேட்பதேயில்லை என்று.ஒரு பழமொழி உண்டு.ஜாக் ஆப் ஆல் மாஸ்டர் ஆப் நன்.அதுதான் அவர்.அது போல நானும் மாறக் கூடாது என்று சொல்லும் அவர் என் வாழ்க்கைப் புத்தகத்தின் சிறப்புரை.

கடைசியாக கௌதம் மேனன்.என்ன ஒரு குரல்.கம்பீரம்.ஒரு உதாரணம் போதும்.வாரணம் ஆயிரம் பாடல் கேஸட் ரீலிஸ் செய்த சமயம் அவர் தான் தொகுப்பாளர்."உறுதிமொழி படம் உங்களுக்காக நான் பார்த்து இருக்கிறேன்.முதல் பாடலை நீங்க தான் ரீலிஸ் செய்யனும்..வாங்க சிவக்குமார் சார்.." என்று முதல் பாடலை வெளியிடும் போது சிவகுமாரை அழைத்த விதத்தை இன்னும் மறக்கவில்லை.டேனியல் பாலாஜியின் குரல் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலை விட கம்பீரமாக இருக்கும்.காரணம் கௌதம் மேனன் என்று நினைக்கிறேன்.வாரணம் ஆயிரம் படம் தான் எனக்கு பிடிக்கவில்லை.மின்னலே தவிர எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை.

இன்றும் கௌதம் மேனனின் குரலுக்கு நான் ரசிகன்.என்ன ஒரு பிரச்சனை என்றால் அவர் பேசுவது ஒத்துக் கொள்ளாமல் போய் விடுகிறது.அது தவிர கௌதம் மேனனை விட கம்பீரமான குரலை கேட்டு விட்டேன் போலிருக்கிறது.அது பர்கன் அக்தர்.முதல் படமே அமீர்கானை வைத்து இயக்கினார். ராக் ஆன் படத்தில் நடிகராக பரிமளித்தார்.என்ன குரல். கம்பீரம் குரலிலே தெரியும் என்பது உண்மை என்று பர்கன் அக்தர் மூலம் நிரூபணம் ஆனது.முடிந்து போனதைப் பேசி என்ன பயன் என்று ராக் ஆன் படத்தில் சொன்னது தான் எவ்வளவு உண்மை.நாம் அதை தான் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டு படங்கள் பார்க்க வேண்டும்.பர்கன் அக்தரின் குரலை கேட்க.

பெண்களில் எனக்கு பிடித்த குரல் நாலு வருடம் போனில் பேசி பேசியே என்னை கொன்று போட்ட அந்த குரல் தான்.அதை நினைக்கும் போதெல்லாம் வெள்ளிவிழா படத்தில் இருந்து "காதோடு தான் நான் பேசுவேன்.." என்ற பாடல் ஒலிக்கிறது.ஹஸ்கி வாய்ஸ் இன்று நினைத்தாலும் உடம்பே ஒரு கணம் சிலிர்க்கிறது.என்றும் என்னால் மறக்க முடியாத ஒரு குரல்.

இது ஒரு அப்டேட் ஆன மீள்ஸ்.அதில் எனக்கு பிடித்த ஒரு பின்னூட்டத்திற்காக மீண்டும்.

Thursday, August 12, 2010

சொல்ல முடியாத ஈர்ப்பு - பெயர்கள்

உலகில் அதிகப்பட்ச வெறுப்பும்,நேசமும் ஏதோ ஒரு ஈர்ப்பினாலே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று யாருமில்லாத தனிமையில் நானிருக்கும் போது நிழலாடித் தொலைத்தது. சில பெயர்கள்,சில குரல்கள், சில மனிதர்கள், சில விஷயங்கள் மீதெல்லாம் காட்டப்படும் வெறுப்பிற்கும்,நேசத்திற்கும் பிண்ணனியில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்து வேடிக்கை காட்டி காட்டியே என்னை களைத்துப் போக செய்கிறது.

சின்ன வயதிலிருந்தே கார்த்திக் என்ற பெயரின் மீது அதிக ஈர்ப்புடன் இருந்திருக்கிறேன். அதனாலே நடிகர் கார்த்திக்கைப் பிடித்து மனம் தொங்கியதோ என்னவோ.இராவணன் படத்தில் அவர் தொங்கியது தனிக்கதை. அப்படி வளர்ந்த பின்னால் ஏதோ காலக்கட்டத்தில் அமர் என்ற பெயரின் மேல் அதீத ஈடுபாடு காட்டித் தொலைக்கிறேன்.அதுவும் கார்த்திக் நடித்த அமரன் படத்தின் சுருக்கமான அமராகயிருக்கும் என்று லேசான காரணத்தையே எந்த காரணமுமில்லாமல் ஏற்கிறேன்.

ஒற்றை இலக்க செம்களின் போது வெளியே தெரியும் வயல்களில் காற்றில் ஆடும் நாத்துகளை வேடிக்கை பார்ப்பது தான் என் வழக்கம். நடுநடுவே கவனம் இன்று படத்தில் மட்டுமே இருக்கும் கொக்கின் வருகையின் போது மட்டும் சிதறும். அப்படி வெளியே வேடிக்கை பார்க்காமல் ஒரு வகுப்பை மட்டும் தீவிரமாக கவனிப்பேன்.காரணம் எடுத்த அசிரியையின் பெயர் பிருந்தா. அதிகம் பேர் இந்த பெயரை ஏன் வைப்பதில்லை என்றே தெரியவில்லை. இந்த பெயரை எப்படி சுருக்கி கூப்பிடுவது என்று யோசித்தும் இன்று வரை சுருங்காமலேயிருக்கும் பெயராக இது இருந்து வருகிறது.

என்னை விட இரண்டு மூன்று வருட சீனியராக இருந்திருப்பாள். இது மாதிரி இரண்டு கதைகள் பள்ளியிலே ஓடியதால் என் மனது கொஞ்சம் தடுமாறிக் கொண்டேயிருந்தது. அதில் ஒரு பெண் அடிக்கடி சொல்வாள் என் பெயர் ரொம்ப யூனிக்கான பெயர் என்று.இன்னொருத்திக்கு பெயரே கவிதை தான். இங்கு ரெண்டும் சேர்ந்து தனியாவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தது.

அவள் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருப்பேன்.(பாடத்தை சொன்னேன்)."என்ன சார் நீங்க என் கிளாஸ் மட்டும் தான் கவனிப்பதாய் ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று ரெகார்ட் எழுதாமல் வெளியே நின்று கொண்டிருந்த போது கேட்டு வைத்தாள்."ஆமா பிருந்தா..உண்மை தான்.." சொல்லிக் கொண்டிருந்தேன். "அப்புறம் உனக்கு என்ன கேடு..எழுதிட்டு வர வேண்டியது தானே.." கோபம் கண்ணில் தெரிந்தது. "இல்ல மேடம் அது வேற இது வேற..பசங்க வெளியே நிற்கும் போது நான் மட்டும் எப்படி.." என்று சொன்னது தான் தாமதம் இனிமே என் லேப்புக்கு வராதே என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.உம் என்று ஒரு வார்த்தை சொன்னாலே அன்று ரெக்கார்ட் எழுதித் தர நண்பர்களிருந்தார்கள்.கோபத்தில் அடுத்து வந்த தேர்வில் அவள் நடத்தும் பேப்பரில் மட்டும் பெயிலானது இன்னும் கோபத்தை வரவழைத்திருந்தது.

அடுத்த நாள் வந்து நீ முதல் பெஞ்சில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை வேறு.அதுக்கு நான் வெளியவே நிற்கிறேன் என்று சொல்லி விட்டு ஒரு ஐந்து பேர் மட்டும் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம்.வழக்கம் போல லேப் போகும் போது எனக்கு மட்டும் அர்ச்சனை நடந்தது வேறு விஷயம்.

ஒரு செமஸ்டர் தேர்வின் போது அவள் சூப்பர்வைசராக வந்திருந்தாள். ஒரு சந்தேகம் என்றேன். "தெரியுமே படித்திருக்க மாட்டாயே..இந்த சம்முக்கு இதுதான் பார்மூலா என்று குவெஸ்டின் பேப்பரில் எழுத "அதெல்லாம் இல்ல..என் உங்க கிளாஸ் மட்டும் கவனிக்கிறேன் என்று அடிக்கடி கேட்பீங்களே.. அதுக்கு பதில் சொல்லட்டுமா.." முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். "ம்..சீக்கிரம்.." அவசரம் தெரிந்தது. "பிருந்தா.."என்று ஒற்றை வார்த்தையில் முடிக்க "சீக்கிரம் சொல்லித் தொலையேன்.." குரலில் கடுமை தெறித்தது. "அதான் சொன்னேனே பிருந்தா.." சொல்லி முடிக்கும் முன் கோபத்தில் "மொக்கை போடாத சனியனே..என்னை சொல்லணும்..என் வேலை எல்லாம் விட்டுட்டு உங்கிட்ட கதைக் கேக்குறேன் பாரு.." திட்டி முடித்ததும் சொன்னேன். "பிருந்தா இந்த பெயர் தான் காரணம்.." நான் சொன்னதை நம்பவேயில்லை. "சைட் அடிச்சேன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே..நான் அழகாயிருக்கிறேன்னு நேரா சொல்ல வேண்டியது தானே..ஏன் பொய் சொல்ற.." கோபத்தில் பொறியத் தொடங்க  "உண்மை தான் அதற்கு காரணமா ஒரு கதையிருக்கு.." என்று அந்த கதையை சொன்னேன். (சத்தியமாக அது இன்னொரு காதல் கதையில்லை.அது ஒரு புராணக்கதை.நம்புங்களேன் ப்ளீஸ்.) அந்த கதை சொன்னப்பின் இன்னும் இரண்டு கேள்விக்கு பதில் சொல்லித் தந்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் நண்பன் ஒருவன் அந்த மூலையிலிருந்து "மேடம் அடிஷனல் ஷீட் தாங்க.." என்று குரல் கொடுக்க "டேய் அண்ணா யூனிவர்சிட்டில ஏதுடா அடிஷனல் சீட்..ஒழுங்கா எழுது.." நிமிராமல் பதில் சொல்லித் தந்தபடியே சொன்னாள். பல்ப் வாங்கினியா என்று கைக்காட்டினேன். உடனே "அங்க என்ன செய்ற..ஒழுங்காக எழுதிட்டு ரப்பரால் அழித்து விடு.." என்று பக்கத்து பெண்ணிடமிருந்த பெண்ணிடம் ரப்பர் வாங்கித் தந்து விட்டு போனாள்.நான் என்னைக்கு ரப்பர் எல்லாம் கொண்டு போயிருக்கிறேன். அவளுக்கு கடைசி வரை தெரியாது எனக்கு அந்த கேள்விக்கு எல்லாம் பதில் தெரியும் என்று.குவெஸ்டின் பேப்பரில் அந்த ரப்பரை மடித்து பின்னாலிருந்த நண்பனுக்கு பாஸ் செய்தேன். தேர்வு முடிந்தப்பின் அந்த  பெண் வந்து ரப்பரைக் கேட்க நீ யாரு என்று கேட்டு வைத்து விட்டேன். திட்டிக் கொண்டே போனது தெரிந்தது. அவள் பெயரை கேட்க மறந்திருந்தேன்.

"பிருந்தா இந்த பெயரால் தான் அவள் அழகாகயிருந்தாள்.." என்று வேலை கிடைக்காமல் மனது உடைந்திருந்த நாளில் எனக்குள் நானே முணுமுணுத்துக் கொண்டேன். பிறகொரு நாள் தொட்டி ஜெயா என்ற படம் பார்க்கும் போது ஞாபகம் வந்து தொலைத்தது.அதில் கோபிகாவின் பெயர் பிருந்தா. அந்த பெயருக்காகவே அவள் அழகாகயிருந்தாள் என்று நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

Wednesday, August 11, 2010

துவையல் - சலம்பல் ஸ்பெஷல்

காவலர் குடியிருப்பு பையாவோடு ரீலிஸ் ஆகிறது என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இன்னும் ஆகவில்லை.முரளி மனோகர் ஜோஷி கடைக்கண் பார்வையில் சிக்கியிருக்கிறதாம்.அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று பார்ப்போம். காதலர் குடியிருப்பு என்று மாற்றியிருக்கிறார்களாம். சில படங்களின் புகைப்படங்களே கதையை ஏதோ ஒரு விதத்தில் சொல்லும். அந்த படங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை ஒரு விதமான மங்கிய பிண்ணனியிலேயே இருக்கும்.பருத்தி வீரன்,கற்றது தமிழ், சுப்ரமணியபுரம், அஞ்சாதே, களவாணி,வெண்ணிலா கபடிக்குழு அந்த வரிசையில் இந்த படத்தின் புகைப்படங்களும் ஏனோ கவர்ந்தது. சரண்யா அதகளப்படுத்த இன்னொரு படம் கிடைத்திருக்கிறது.அந்த வரிசையில் அடுத்தது அழகர்சாமியின் குதிரை.


ரெண்டு கதைகளை (நிச்சயம் சொற்சமாதி தான்.எனக்கு நானே கட்டிக்கொள்ளும் சமாதி) எழுதி வைத்து விட்டு இரண்டு வாரமாக போடாமலே இருக்கிறேன்.ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்கிறது.எனக்கு வேண்டியவர்கள் யாரோ என் தளத்தைப் படிப்பது போல கொஞ்ச நாளாகவே ஒரு பிரமை. ஒரு ஜக் அல்லது மக் அடித்தால் தான் தெளியும் போலிருக்கிறது. அதே தான் ஐஸ் டீ.

சச்சின் இல்லாமல் ரெண்டு மூன்று போட்டிகள் ஜெயித்தாலும் இரண்டாம் இடத்தை தக்க வைக்கும் போட்டிக்கெல்லாம் நிச்சயம் சச்சின் தேவை தான் என்று நேற்று ஒருமுறை நிரூபணம் ஆனது. டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தைத் தக்க வைக்க காரணம் சச்சின் தான் என்பது இன்னொரு உண்மை. சச்சின் அடிக்கிறாரோ இல்லையோ இருந்தாலே மேட்ச் ஜெயிப்பார்கள் என்று அடிக்கடி சொல்வேன். அதனால் ஆடாவிட்டாலும் சச்சின் மேட்ச் வின்னர் தான்.

பிரகாஷ்ராஜ் தோழியில் இருந்து செல்லமாக புரமோஷன் குடுத்திருக்கிறாராம். சொல்லாதும் உண்மை படித்து விட்டு நிறைய நாள் சிலாகித்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அது தப்பு இது தப்பு என்று சொல்ல நான் என்ன கலாச்சாரக் காவலரா இல்லை நாட்டாமையா. நம்மிடமே நிறைய நிறைய ஓட்டைகளை வைத்து கொண்டு அடுத்தவர்களை விமர்சிக்கும் போது தான் கோபம் வந்து தொலைக்கிறது. எனிவே பிலிம்பேர் விருதுக்கு வாழ்த்துக்கள். நான் ரசித்தவர்களை எப்படி போனால் என்ன பிடித்தம் சற்றும் குறையாமல் தானிருக்கிறது.

நீங்க ஒரு ஜூனியர் __________, __________ என்று சொல்லும் போது கோபம் வந்து தொலைக்கிறது. எனக்கு எழுத்தில் கோபமோ,குரோதமோ, உண்மையோ,பொய்யோ,காமமோ,காதலோ இன்னும் நினைத்ததை ஒழுங்காக கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கிறேன். எழுதி வைத்து விட்டு அவர் என்ன நினைப்பாரோ இவர் எப்படி எடுத்து கொள்வாரோ என்று நினைத்து பயந்தே நிறைய எழுதாமல் விடுகிறேன். சமீபத்தில் அப்படி தூக்கியது ஒரு பத்தியும்,ஒரு புகைப்படமும்.

மூன்று மாதம் எழுதாமலிருக்கும் போது நிறைய இந்தி படங்களும்,ஆங்கில படங்களும், தெலுங்கு,கொரியா,ஜப்பானிய,மலையாள,மராத்திய படங்கள் என்று மொழி பேதமில்லாமல் பார்த்து தொலைந்தே போனேன்.சப் டைட்டில் இல்லாமலே பார்த்தது தான் இயல்பாக இருந்தது. கண் அளக்காமல் போனதையா கை அளந்து விடப் போகிறது என்று ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி நடிகர்களின் முகத்தில் காட்டும் உணர்வுகளை விடவா சப்டைட்டில் உணர்த்தி விடப் போகிறது. இனி தமிழ் படம் பார்க்கும் போது மட்டும் சப்டைட்டிலோடு பார்க்கப் போகிறேன். இங்கு தெரியும் உணர்ச்சிகளிருந்து தப்பிக்க சப் டைட்டில் உதவுகிறது. அப்படி பார்த்த இரண்டு படங்கள் வி.தா.வ,சுறா.

Tuesday, August 10, 2010

ஜீ டிவி வளையலில் தெரிந்த தமிழ்சினிமா - ஆடும் கூத்து

ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து படத்திற்கு நடுவில் சேரன் ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டியிருக்கிறேன். பின் த.த,மா.க,பொக்கிஷம் என்ற படங்கள் எல்லாம் வெளி வந்தப் பிறகும் ஆடும் கூத்து வெளியாகவே இல்லை. எந்திரனை விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர்  ஆடும் கூத்து,ரைட்டா தப்பா, காஞ்சிவரம் படங்களை எல்லாம் பார்த்திருப்போம். மாயக்கண்ணாடி படமே ஆடும் கூத்தில் இருந்து கிடைத்த கருவாக தானிருந்திருக்கும்.அவ்வளவு ஒற்றுமைகள் படத்தில் உண்டு.

நவ்யா நாயர் திருவிழாவில் ஒரு கொலையைப் பார்ப்பதோடு ஆரம்பிக்கிறது. அதை சொன்னால் யாரும் நம்பவில்லை. முறைப்பையன் மட்டும் நம்புவதாக சொல்கிறான்.திருவிழாவில் வாங்கிய வளையலை நவ்யாவுக்கு தந்து அதில் ஒரு கறுப்பு வெள்ளை படம் ஒளிந்திருப்பதாக சொல்கிறான். கேலி செய்யும் நவ்யா அதில் ஒரு வெளிவராத ஒரு படத்தைப் பற்றி சொன்னாலும் நம்பாமல் வீட்டில் உள்ளவர்களிடமே குறை சொல்கிறான்.எல்லோரும் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல கண்ட கண்ட புத்தங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறார்.

கொலை நடந்தது தலையில்லாத முண்டம் கிடைத்ததும் உறுதியானாலும் கறுப்பு வெள்ளை படத்தை மட்டும் நம்ப மறுக்கிறார்கள். முன்னும் பின்னும் கதை நகர்ந்து போக வளையலில் தெரியும் கறுப்பு  வெள்ளை படம் உதவி அந்த கதையை நவ்யாவிற்கு புரிய செய்கிறது.அதில் கதாநாயகியாக நவ்யா மற்றும் நாயகனாக சேரனும், ஜமீன்தாராக பிரகாஷ்ராஜூம் அந்த படத்தில் தெரிகிறார்கள்.

கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்று சொல்ல படிப்பை நிறுத்தி விட்டு கல்யாணம் செய்ய சம்மதிக்கும் நவ்யாவிற்கு தாலி கட்டும் நேரத்தில் மறுபடியும் திரைப்படம் தெரிய அதில் மொட்டைத் தலையோடு நவ்யா தெரிய அதிர்ந்து ஓடி கல்யாணத்தை நிறுத்துகிறார். மருத்துவமனையில் அந்த கதையை நவ்யா விவரிக்க கல்யாணம் நின்ற கோபத்தில் முறைப்பையன் வீட்டை விட்டு போய் பத்திரிக்கையில் வேலைக்கு சேர்கிறார். அங்கு 1975ல் வந்த நாளிதழில் அந்த கறுப்பு வெள்ளை படத்தைப் பற்றிய செய்தி இருக்கிறது.

நவ்யாவும்,முறைப்பையனும் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு போக,அங்கு பிரகாஷ்ராஜை சந்திக்க அவர் ஞானசேகரன் மற்றும் பிரபா என்ற இயக்குனர்,நடிகர் வாழ்வில் நடந்த கதையை சொல்கிறார்.சின்ன வயதில் சேரனைப் பாதித்த ஜமீந்தாரின் அடக்குமுறைகளை பற்றி படமெடுக்க முடிவி செய்கிறார் அதில் உண்மையாக தெரிய தத்ரூபமாக தெரிய நவ்யா நாயர் ஒத்துக் கொள்கிறார்.எல்லாம் முடியும் நேரத்தில் ஜமீந்தாரின் மகன்(சீமான்) கலாட்டா செய்ய படப்பிடிப்பு நிற்க நவ்யா தற்கொலை செய்ய அவரை காதலித்த சேரன் காணாமல் போகிறார்.

பிற்கு புரட்சியாளராக திரும்பி வந்து(அதானே நமக்கு ஒரு பிரச்சனை வந்தால் புரட்சியாளனாக மாறி விட வேண்டியது தானே) சீமானை கொல்ல அதற்கு பதில் நடவடிக்கையாக எமர்ஜன்சி காலக்கட்டத்தில் சேரன் கொல்லப் படுகிறார். இவ்வளவும் தெரிந்த பின் நவ்யா அதை ஆவணப்படமாக எடுக்கிறார். ஒரு தியாகம் செய்து அதை முடிக்கிறார்.

சேரன்,தலைவாசல் விஜய்,மனோரமா,சீமான்,பிரகாஷ்ராஜ்,பாண்டியராஜன் தவிர எல்லாம் மலையாள நடிகர்கள் இருப்பது படத்தில் ஒரு பெருங்குறை.பட்ஜெட் பட்ஜெட்.சேரன்,நவ்யா,பிரகாஷ்ராஜ்,சீமான் போன்ற நடிகர்கள் பணமே வாங்காமல் நடித்தும் படம் வெளி வராமல் போனது வருத்தமே.

நாடகம் பார்ப்பது போல சில இடங்களில் படம் நகர்வது ஒரு மைனஸ்.படமே ஒரு ஆவணப்படம் மாதிரி தான் தெரிகிறது. இந்த படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் கூட அதிக தமிழர்கள் பார்த்திருப்பார்கள் என்பது மட்டுமில்ல திரையரங்கிலும் வெளி வந்திருக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மீனாள் என்ற நடிகை லவ்லி படத்தில் நடித்திருந்தாலும்,ஆடும் கூத்தில் வந்து போனாலும் சேரன் தான் அறிமுகப்படுத்தினார் என்று நம்பி தொலைக்க வேண்டியிருக்கிறது. படத்தில் ஒரு காட்சியில் சொல்வது போல இந்த படம் வெள் வந்தால் பிரபா உன்னை கொண்டாடுவார்கள் என்று இயக்குனர் ஞானசேகரன் சொல்வார். உண்மை தான் கொண்டாட விட்டாலும் கொஞ்சமாவது பேசியிருப்பார்கள். மலையாளத்திலே எடுத்திருந்தால் இது உலக சினிமா பட்டியலை நெருங்கியிருக்கும். குலுங்கி குலுங்கி அழாத சேரனைப் பார்க்கும் போது கொஞ்சம் சந்தோசமாகத்தானிருந்தது.இசையும் அருமை. யாருமே கவனிக்காமலிருந்தால் இதுவும் எதாவது வளையலாக மாறியிருக்கும்.அதை வெளியே காட்டிய பெருமை ஜீடிவி என்ற அற்புத விளக்கில் இருந்து வந்த வெளி மாநிலத்துப் பூதத்திற்கு தான் சேரும்.

சன்,கே,கலைஞர்,ஜெயா என்று என் வீட்டிலிருக்கும் ரிமோட்டில் முதல் நான்கு சேனல்கள் இருக்கிறது. ஜீ டிவி ஏதோ தொன்னூறுகளிலிருக்கிறது.மாற்ற நினைத்தாலும் வீட்டிற்கே வருடத்திற்கு முப்பது நாட்கள் மட்டுமே வந்து செல்லும் அன்னியனாகயிருப்பதால் அதை மாற்ற மறந்து விடுகிறேன்.