Monday, August 2, 2010

அலாஸ்காவில் லட்டு விற்றக் கதை - முகிலனைத் தொடர்ந்து

தமிழ்ப்பிளாக்கன் அலாஸ்காவில் எஸ்கீமோக்களிடம் லட்டு விற்க முயற்சித்து கொண்டிருந்தான்.யாரும் சீண்டுவதாக தெரியவில்லை.வால்பையன் சொன்னது போல் ஐஸ்கீரிம் விற்றியிருக்கலாம். அதை நாய்க்கு எறிந்து ஒரு தமிழ்ப் பிளாக்கனை அசிங்கப்படுத்துகிறார்கள். வெறுத்து போய் ஆப்பிரிக்காவில் அதே லட்டை விற்க முயற்சித்தேன். பூந்தியாக உதிர்த்து தர வேண்டும் அடம் பிடிக்கிறார்கள். உதிர்ப்பதா தமிழ்ப்பிளாக்கனுக்கு வேலை. தமிழ் சமூகத்தில் ஒரு ப்ளாக்கனுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா.திரும்பவும் அலாஸ்கா,எஸ்கீமோ,லட்டு. திரும்பவும் வால்பையன் வந்து தமிழ்ப்பிளாக்கனைச் செருப்பால் அடித்தால் திருந்து விடுவான் என்று டிவிட்டீனார். அலாஸ்காவில் தான் ஷூவை கழற்றினால் நாய் சேகர் செத்து விடுவான் என்று தெரிந்து கொண்டு தானே அங்கே தமிழ்ப்பிளாக்கன் லட்டு விற்கப் போனான். அவன் என்ன முட்டாளா கொஞ்சம் புத்திசாலி தான்.இப்படி என்ன சொன்னாலும் படித்து சிரிக்கும் புத்தி தமிழ் சமூகத்திற்கு தானிருக்கும். பலா பட்டறை வந்து செஷல்ஸ் தீவில் கலஹாரி இலக்கியம் படிக்க வர சொன்னார்.கூடவே முகிலனும். தமிழ்ப்பிளாக்கன் பிறந்ததிலிருந்து எழுதுகிறான்.சுவரில் கிறுக்கிறான். இன்று இலக்கியம் படிப்பவர்கள் எல்லாம் அவனை கூப்பிட்டால் அது நியாயமா. லட்டு விற்பனை சூடாகும் போலிருந்தது.நேரடியாக சொல்ல முடியவில்லை. எப்படி மறுத்தேன்.எஸ்கீமோக்கள் என்று சொன்னால் அது தவறு என்று மிரட்டி கூட பார்த்தார். இதற்கெல்லாம் இந்த தமிழ்ப்பிளாக்கன் அசறுவானா என்ன.

தினமும் தோழர்கள் தமிழ்ப்பிளாக்கன் இரும்புக்கடையைப் பார்க்காமல் போக மாட்டார்கள். அவன் லட்டு விற்பது தெரிந்ததும் பாருங்கள் அமெரிக்கர்களுக்கு லட்டு விற்கிறான்.ஆப்பிரிக்கர்களுக்கு பூந்தி விற்க மறுக்கிறான் என்று ஒரே ரகளை. லட்டு என்பது திண்பண்டமா.அது அவன் ரத்தம்.அவன் இருபத்தியாறு வருடத் தவம். அது ஒரு புத்தகம்.படித்தால் கசக்கும் என்று லட்டு என்று பெயர் வைத்து விட்டான். பெயரளவிலாவது இனிக்கட்டுமே. அது தெரியாமல் லட்டு விற்கிறான் என்று கூப்பாடு போட்டால். அவனாவது லட்டு தான் விற்றேன்.தோழர்கள் அலாஸ்காவையே விற்று விட்டார்கள்.எது பெரிய தவறு என்று அவர்கள் முடிவு செய்யட்டும்.

அவர்கள் கூச்சல் போடுமளவிற்கு அவன் எதையுமே எழுதுவதில்லை. கண்ணாடி இதயம் வைத்திருப்பவனிடம் வாசகங்கள் நிரம்பிய தட்டியோடு வந்து நிற்கும் போது அது கண்ணாடியில் அழிந்து போன மொழியாகத் தெரிகிறது. இது புரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது இரவோடு இரவாக செஷல்ஸ் தீவிற்கு கடத்தி விட்டார்கள்.ஒரு போர்டில் எதையோ எழுதி முகிலன் அவர் கடையில் வைத்து விட்டார்.தோழர்களுக்குத் தான் அவனிடம் தெரியுமே.நேராக வந்து கூச்சல் போடத் தொடங்க யாருமில்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறீங்க என்று பக்கத்து சந்து ப்ளாக்கர்கள் கேட்க நமக்கு பயந்து இரும்புக்கடைக்கு சீல் வைத்து விட்டான் என்று சொல்லிக் கொண்டே கலைந்தார்கள்.

அப்படியும் செஷல்ஸ் தீவிலிருந்து தப்பித்து எதிர்வினை வைக்கும் போது பலாபட்டறை வந்து கட்டபொம்மன் வசனங்களாகப் பேச முடியாத பட்சத்தில் அவர்களுடன் கிளம்பி வருகிறேன் என்று வாக்குறுதி தந்து விட்டான். அதை அவன் என்றாவது மீறியிருக்கானா. போக வழி தெரியாமல் நிற்கும் போது ஒரு பஸ்ஸிலிருந்து சார் என்று குரல் கேட்க அட நம்மையும் மரியாதையாக கூப்பிடுகிறார்களே என்று ஏறிப்பார்த்தால் கடைசி எழுத்து "ர்" இல்லையாம் அது "ரு"வாம். அவருக்காவது கேரளாவில் தான் கட் அவுட் வைத்திருக்கிறார்கள். தமிழ்ப்பிளாக்கனுக்கு அலாஸ்காவில் கட் அவுட் வைத்து கொண்டாடியிருக்கிறார்கள்.எழுத்தாளன் என்ற பட்டம் குடுக்க வரும் போது அதை அவனே தடுத்து நிலா அல்லது செவ்வாய் கிரக நூலகத்தில் என்று அவன் புத்தகம் வருகிறதோ அன்று தான் இந்த பட்டத்தை ஏற்பேன் என்று சொல்லிவிட்டவனை அப்படி ஒப்பிட்டால் சும்மா விடுவானா. பஸ்ஸில் அவன்  கும்மியடிக்க செஷல்ஸ் தீவிற்கு போகவிருந்த டெல்டா நாதன் அவனுக்கு எதிர்வினை வைக்க பஸ் ஓனர் கடுப்பாகி இருவர் காதையும் பிடித்துக் கிள்ளி நீங்கள் வைத்ததை,எடுத்ததை எழுதியதை,பேசியதை நீங்களே எடுங்கள் என்று சொல்லி ஓடும் பஸ்ஸிலிருந்து இறக்கி விட முதலில் டெல்டா நாதன் கீழே விழ தமிழ்ப்பிளாக்கன் அவருக்கு மேல் விழ அவர் அடிப்பட்டு மயங்கி விட்டார்.தனியே செஷல்ஸ் தீவிற்கு போய் சேர்ந்தான் தமிழ்ப்பிளாக்கன்.

அவனுக்கு தமிழ் படிக்கத் தெரிந்த அதுவும் அவன் எழுத்தைப் படிக்கும் பெண்களையே பிடிக்காது. மும்பையில் இருக்கும் போது ஒரு மராத்தி பெண்ணைப் பிடித்து போய் மராத்தியிலே கவிதை எழுதி கடைசி நாளில் குடுக்க முடியாமல் பிரிந்து வந்தான்.காரணம் அவள் எல்லா மண்ணின் மைந்தர்களைப் போல தாய் மொழியைப் படிக்காதவளாம். செஷல்ஸ் தீவில் சாப்பிட ஆர்டர் குடுக்கும் போது பேப்பர் இல்லாமல் மராத்தி கவிதைகளின் பின்னால் மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ் கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.

வேகமாக ஓடும் போது என் செருப்பே என் தலையில் வந்து விழ நல்லவேளை முகிலன் அதை பார்க்கவில்லை.இல்லை தமிழ்ப்பிளாக்கனை செருப்பால் அடித்து விட்டார்கள் என்று கதை கட்டியிருப்பார். செருப்பை கூட எடுக்காமல் எதிர்ப்பட்ட பஸ்ஸில் ஏற அந்த பஸ்ஸின் ஓட்டுனர் தமிழ்ப்பிளாக்கனின் முந்தைய பஸ் பிரயாணத்தில் விமர்சிக்கப்பட்டவர். இனி யார் பஸ்ஸிலும் ஏற மாட்டேன் என்று உறுதி எடுத்து விட்டார். இதற்கு எதிர்வினை வைத்தாலும் பாவமன்னிப்பு தருவேன் என்று சொல்ல உணர்ச்சிவசப்பட்டு ஆமென் என்று சொல்ல வாய் வந்தாலும் கோபத்தில் அவர் பஸ்ஸை அவரே உடைத்து விட்டால் என்ன செய்வது. அங்கேயே சபதம் எடுத்துக் கொண்டு பஸ்ஸில் யாருக்கும் தெரியாமல் இறங்கி விட்டான். சபதம் இதுதான் இனி அவர் டிவிட்டர்,ப்ளாக் எதிலும் வம்பிழுக்கக் கூடாது.இழுத்து விட்டால் அவர் எழுத மாட்டேன் என்று சொல்லி விடுவார்.பிறகு சுஜாதா இறந்து மூன்று வருடம் ஆனப்பிறகு அவரை விமர்சிக்கும் அகில உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டியப்பன் யார் தளத்தில் போய் சினிமா விமர்சனம் படிப்பார்.அதனால் தான் இந்த உறுதிமொழி. சுஜாதாவும் மிஞ்சும் விஞ்ஞானச்சிறுகதை அவர் இன்னும் ஆயிரம் வருடத்தில் எழுதி விடுவார் என்பதால் அவரை ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டான்.

தற்போது மல்லையா மொழியில் காவியம் எழுதிக் கொண்டியிருக்கிறான். முகிலனின் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்து கொண்டான் அவர்கள் படிக்கப் போனது கலஹாரி இலக்கியம் அல்ல காலைவாரி இலக்கியம் என்று.அது தான் அவனுக்கு கை வந்த கலையாயிற்றே. வீட்டில் வந்து பார்த்தால் இரண்டு கடிதங்கள்.ஒன்று செஷல்ஸ் பல்கலைகழகத்திலிருந்து கலஹாரி இலக்கிய வகுப்பு எடுக்க சொல்லி அழைப்பிதழ் இருந்தது.இன்னொரு கடிதம் தமிழில் எழுதியிருந்தது. எழுதியது அந்த தாய்லாந்து பெண். இங்கே வாருங்கள் அப்பம் விற்றாவது உங்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லியிருந்தாள்.அது அப்பம் இல்லை ஆப்பம் என்று வாய் முணுமுணுத்தாலும் அங்கே போனால் ஆப்பு நிச்சயம் என்பதாலும் அலாஸ்காவிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தேன். அங்கே வைக்க போகும் கட் அவுட்டில் பழனி படிக்கட்டுகளாக பாடியை வரையத்தான். கிளம்பும் முன் கொரியரில் ஒரு பார்சல் அனுப்பியிருந்தார்கள். என்னவென்று பிரித்து பார்த்தால் செஷல்ஸ் தீவில் விட்டு விட்டு வந்த செருப்பு தான்.அனுப்பியதும் தாய்லாந்து பெண் தான்.

அவள் மேல் காதல் துளிர் விட ஆரம்பித்திருந்தது.இருந்தாலும் அலாஸ்காவிற்கு பயணப்பட்டான். விமானத்தின் பக்கத்து இருக்கையில் அனுஷ்கா. அனுஷ்கா வரப்போவது ஏற்கனவே தெரிந்திருந்ததால் சிங்கம் சூர்யாவிடம் திருடியிருந்த ஷூவைப் போட்டுக் கொண்டு அவள் கவனம் காலுக்குப் போகாமல் அனுஷ்காவை விட உயரமாக நின்று பேசிக் கொண்டிருந்தான்.இன்னுமொரு காதல் கதை.

17 comments:

வால்பையன் said...

பேப்பரை கசக்கி போட்ட மாதிரி இருக்கு

இரும்புத்திரை said...

நல்ல வேளை தொடச்சி போட்ட மாதிரி இல்லையே..

நீ தொடு வானம் said...

என்னது தமிழ்ப்பிளாக்கனுக்கு மராத்தி தெரியுமா.கொஞ்சம் பேச சொல்லுங்கள்.இந்த பதிவில் தான் சாரு பெயர் வரவில்லை

இரும்புத்திரை said...

அவனுக்கு என்ன எனக்கே தெரியும்.பேசட்டுமா.

மராத்தி.

தமிழர்களுக்கு பெங்காலி கூடத்தெரியும்.அது கூடத் தெரியாமல் அவன் கருங்காலியாக திரிகிறான்.பிறகு எப்படி தமிழ்ச்சமூகம் உருப்படும்.

இது புனைவுமில்லை,சொற்சித்திரமுமில்லை.லட்டு படித்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்குமோ.

Joe said...

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா, எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே? ;-)

இரும்புத்திரை said...

இதுக்கே இப்படியா பார்ட் டூ இருக்கு..

சங்கர் said...

தமிழனுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் சுதந்திர தினத்திற்கு மிட்டாய் வாங்கி தின்ற எல்லாருக்குமே மராத்தி தெரிந்திருக்கும் என்பது என் அனுஷ்கா, ச்சே, அனுமானம்

சங்கர் said...

*மராத்தி இல்லை அது பெங்காலி # மன்னிப்பு

சங்கர் said...

*மராத்தி இல்லை அது பெங்காலி # மன்னிப்பு

சங்கர் said...

*மராத்தி இல்லை அது பெங்காலி # மன்னிப்பு

இரும்புத்திரை said...

உங்களுக்கு ஏன் பொறாமை சாறு சங்கர்..கட் அவுட் வைப்பது உறுதி..இறுதி..மறதியா இருந்துராதீங்க..

இரும்புத்திரை said...

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் லட்டு மொழி பெயர்க்கப்படும்..மன்னிப்பை மிச்சம் வைத்து கொள்ளுங்கள்..

Radhakrishnan said...

ம்ம், தொடரட்டும். அலாஸ்கா, அலாக்கா.

Paleo God said...

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!

Paleo God said...

பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?

ஏறு மயில் ஏறு!

ஈசனிடம் நாடு!

இன்முகம் காட்ட வா நீ!

ஏற்றுக் கொள்வார்!

கூட்டிச் செல்வேன்!

என்னுடன் ஓடி வா நீ!


என்னுடன்

ஓடி

வா

நீ

Paleo God said...

கலஹாரி இலக்கிய விடிவெள்ளியே அடுத்து கவிதைக் களம் அமைக்கிறேன். லட்டுடன் வருக! :)

சாமக்கோடங்கி said...

//நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கு என்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணித் தான்
அப்பனித்தலையர் தரவில்லை!
ஆதலால் முருகா உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே!//

இப்பாடலை ஒலி வடிவில் மட்டுமே கேட்டு இருக்கிறேன்... நன்றி ஷங்கர் அண்ணே.. முதன் முதலில் எழுத்து வடிவில் படிக்கிறேன்..