டிரட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன்.மூக்கு துவாரத்தில் பேசான சூடு பரவி இரத்த வாடை அடிக்கத் தொடங்கியது.நண்பன் அடிக்கடி வந்து பார்த்து விட்டு உள்ளறையில் போனில் யாருடனோ பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.அவனுக்கு வித்தியாசமாக தெரிந்து டிரட் மில்லை நிறுத்தினான்.
"மூக்குல ரத்தம் வருதுடா..இப்ப யார் மேல இந்த கோபம் அமர்.." கேட்டுக் கொண்டிருந்தான்.
பதில் சொல்லாமல் துடைக்க துணியை தேடிக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு செமஸ்டர் முடிவில் போட்டு சென்ற வெள்ளைச் சட்டையில் வகுப்பே கையேழுத்திட்டது.அதை துவைக்காமல் போகும் இடத்திற்கெல்லாம் எடுத்து செல்வது வழக்கம்.
"பதில் சொல்றியா இல்லையா..உன் டீம்ல புதுசா சேர்ந்துச்சே ஒரு பொண்ணு..அவ வந்ததில் இருந்து முகமே சரியில்லையே..அவ தான் ராஜியா.."
"அவ பேரு மாயா.."
"ஸ்போட்ஸ்ல கூட அந்த பொண்ணுக்கு இன்ட்ரஸ் கையில பாத்தியா ஸ்போட்ஸ் ஸ்டார்.."
"வில் யூ ஸ்டாப் இட்..போன் வருது பாரு..போய் அங்க வறு..என்னை விட்டுரு.." அவன் போனதும் என் மேல் எனக்கே கோபம் வந்தது.
மாயா,ஸ்போட்ஸ் ஸ்டார்,ராஜி,ரத்தம் என்று நினைவு சுழன்றடித்தது.
*************************
இதற்கு முன்னால் இப்படி ஒரு முறை மூக்கில் ரத்தம் வருமளவிற்கு ஓடியிருக்கிறேன்.ராஜியை காதலித்து கொண்டிருந்த வேலையை மட்டும் செய்த காலமது.
வாரத்திற்கு ஐந்து சண்டையிழுக்கும் வகுப்பில் படித்ததால் இயல்பிலேயே ஒரு மூர்க்கமிருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி கொண்டிருந்தாள் ராஜி. காதலித்து தொலைத்தால் கோபம் குறையுமாமே எந்த முட்டாள் அறிஞன் சொன்னானோ அதே மாதிரி என் இயல்பை நான் தொலைத்து கொண்டிருந்தேன்.
ஏற்கனவே ஸ்போர்ஸ் பக்கத்தை மட்டும் படிப்பதால் எங்கள் வீட்டில் ஸ்டார்ஸ் ஸ்டார் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் ஏதேச்சையாக எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலிருந்த மாயா வீட்டில் ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்குவது எனக்கு கடன் வாங்கி படிக்க இலகுவாகயிருந்தது. மாயா ஏதோ ஆசிரமத்தில் தமிழ் நாட்டில் வேலைக்கு வந்து இங்கேயே காதலித்து திருமணம் செய்து கொண்டாள். எல்லாம் அஜீஷ் வரும் வரை சரியாகத்தானிருந்தது.மாயாவோடு ஆசிரம்த்தில் படித்தவனாம்.தம்பி,தம்பி என்று தான் சொல்வாள்.
அஜீஷ் இருக்கும் போது ஸ்போர்ஸ் ஸ்டார் வாங்க போனால் அவன் செய்கையே சரியாக இருக்காது. அமர் அமர் என்று பேச்சுக்கு நூறு தடவை கூப்பிட்டு கையைப் பிடித்து கொண்டே தொட்டுத் தொட்டு பேசுவது எரிச்சலை தந்தாலும் பொறுத்து கொண்ட ஒரே காரணம் ஸ்போர்ஸ் ஸ்டார். அவன் இல்லாத நேரத்தில் வாங்குவது தான் எனக்கு உசிதமாகப்பட்டது.அஜீஷ் செருப்பில்லாத நாளில் மாயா வீட்டுக்கு போய் ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்க கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரம் கழித்து அஜீஷ் வந்து கதவை பாதியாக திறந்து வழிமறித்து நின்றுக் கொண்டிருந்தான்.
"என்னடா வேணும்.."
"ஸ்போட்ஸ் ஸ்டார்.."
"அதெல்லாம் வாங்குறதில்லை..பெருசா வந்துட்டான்.." எரிச்சலில் பொறிந்தான்.மாயா கொஞ்சம் தள்ளி எதுவும் சொல்லாமல் நின்றுக் கொண்டிருந்தது வித்தியாசமாக தெரிந்தது.
ஒரு வாரம் எல்லாமே இயல்பாக தெரிந்தது.வீட்டிற்கு வந்தால் ஸ்போட்ஸ் ஸ்டார்.
"என்ன இது புதுப்பழக்கம்.." அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"இந்த வயசில அப்படித்தானிருக்கும்.."
"என்னம்மா உளர்ற..எந்த வயசுல.."
"ஸ்போட்ஸ் ஸ்டார் வாங்க மாயா வீட்டுக்கு போகாதே.."
"ஏன்.."
"வாங்க போக வேண்டாம்னு சொன்னா கேக்குணும் கூடக்கூட பேசுறது நல்லப் பழக்கமில்ல.." சொல்லி விட்டுப் போன அம்மாவையே வெறித்துக் கொண்டிருந்தேன்.
ராஜி ரெண்டு நாளா போனே செய்யவில்லை என்பது மறந்து விட்டிருந்தது. சரி பேசுவாள் என்று நான் விட்டு விட்டேன்.
"நான் புளிச்சுப் போயிட்டேனா.." குறுஞ்செய்தி வந்து விழுந்தது.
இந்த உலகத்தில் உள்ள எல்லா பெண்களுக்கும் கிறுக்கு முத்தி விட்டது என்று நினைத்து கொண்டேன். ஒருத்தியே இப்படி என்றால் எப்படித்தான் மன்னர்கள் எல்லாம் இத்தனை கல்யாணம் செய்தார்களோ என்று பக்கத்திலிருந்த நண்பனிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தேன்.
"செய்றது எல்லாம் தப்பு..சிரிக்கிறதைப் பாரு.." அடுத்த குறுஞ்செய்தி
கோபத்தில் குறுஞ்செய்தியைத் தட்டி விட்டேன்."ஹேய் லூசுக் கம்னாட்டி நான் என்ன தப்பு செய்தேன்.."
"ஆமா நான் லூசு தான் கம்னாட்டி தான்.." அடுத்தது.
"இப்ப அதை ஏன் கன்பார்ம் பண்ற.."
"திமிறுடா உங்களுக்கு எல்லாம்.." அடுத்தாக வீசிக் கொண்டிருந்தாள்.
"என்ன திமிறு..நேரா விஷயத்துக்கு வா.."
"மாயா.."
"ஆமா மாயா..மாயா மாயா சாயா சாயா..ரஜினி பாட்டு..சுமாராயிருக்கும்..அதுக்கென்ன இப்போ.."
"அவகிட்ட என்ன கேட்ட.."
"எவகிட்ட.."
"மாயாகிட்ட.."
"எந்த மாயா.."
"அதானே ஒரு பொண்ணுப் பின்னாடி சுத்துனா ஞாபகமிருக்கும்.."
"லூசாடி நீயி.."
"மாயா உன் வீட்டுப் பக்கத்தில் இருக்காளே..அவ கிட்ட என்ன கேட்ட.."
"ஸ்போட்ஸ் ஸ்டார்.."
"அது மட்டும் தானா.."
"ஆமா.."
"ஏன் இப்படி பொய் சொல்ற..என் அக்கா அன்னைக்கே சொன்னா நீ நல்லவன் இல்லன்னு.."
"கூடவே உன் பாட்டியும் சொன்னாளே..அப்புறம் என்ன டாஷூக்கு என் கிட்ட பழகின.."
"இனி என் மூஞ்சிலே முழிக்காத.."
"இப்போ பார்த்தாலும் குடிக்கத் தண்ணி கிடையாது.."
"குட் பை.."
இந்த பெண்களிடம் பேசி ஜெயிக்க முடியாது.போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன்.மதிய கிளாஸ் கட்டடித்து விட்டு ஜூனியரோடு படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
பல்லாவரம் நூறடி ரோடில் நடந்து போனால் குரோம்பேட் வெற்றி தியேட்டருக்கு போய் விடலாம்.
"யார் மேல கோபம் அமர்..இன்னைக்கு என் கூட சுத்துற..ராஜி கூட என்ன சண்டை.."
"பொத்திக்கிட்டு வாடா.."
"என்ன அண்ணா கோபம்..எனக்கு சுனிதா மேல கோபம் வரும் போதெல்லாம் ஹான்ஸ் போட்டுட்டு ஓடுவேன்.." நான் கோபத்திலிருக்கும் போது மட்டும் அண்ணா என்று அழைப்பான்.
"ஹான்ஸ் போட்ட இனிமே ஷூவால அடிப்பேன்.."
"சரி ஓடுவோம்..வா அமர்.."
அவன் அளவுக்கு ஸ்டாமினா இல்லாத கொஞ்ச நேரத்தில் மூச்சிறைத்தது.ஈகோ விடாமல் ஓட வைத்தது. முதல் முறையாக மூக்கில் ரத்தம்.
"சங்கர்.." என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடும் போது பைக் இடித்தது மட்டும் தான் ஞாபகமிருக்கிறது. ஹாஸ்பிடலுக்கு ராஜி வரவேயில்லை.
"ராஜி கிட்ட சொன்னேன்..அவ வரலைன்னு சொல்லிட்டா..அவ கிடக்குறா.." ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்தி விட்டான்.
"சங்கர் புதுசா ஒரு மொபைல் வாங்கப் போறேன்னு சொல்லிக்கிட்டிருந்த..வாங்கியாச்சா.."
"ம்ம்..ஒரு வாரம் யூஸ் பண்ண சுனிதா கிட்ட கொடுத்திருக்கேன்.."
"நாளைக்கு எனக்கு வேணும்.."
"சரி..பிடுங்கிட்டு வர்றேன்..நான் அடிப்பட்டாலும் அவளும் இப்படி செஞ்சாலும் செய்வா.."
மாயா ஏதோ ஒரு ரோடில் பார்த்தேன்.
"அமர் நல்லாயிருக்கியா.." ஒண்ணுமே நடக்காத மாதிரி கேட்டது கொஞ்சம் எரிச்சலாகயிருந்தது.
"ஏன் மாயா இப்படி பண்ணுன.." நேரடியான கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.
"நீ யாருகிட்டயாவது போட்டு தந்தா..அதான் நான் முந்திட்டேன்.."
"அஜீஷ் விஷயமா..நான் சொல்லப் போறதில்லை.."
"ஆமா..எதுக்கும் ஒரு பாதுகாப்புக்கு இருக்கட்டும்னு உன்னை போட்டுக் கொடுத்தேன்..நீ என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.."
"அது அப்ப..இப்போ நம்புவாங்க.." மொபைலில் ரெக்கார்ட் பண்ணியதைப் போட்டுக் காட்டினேன். ஒழுங்கா ராஜி கிட்ட உண்மையை சொல்லு.அப்புறம் அஜீஷ் இங்க இருந்தா போட்டுக் குடுக்க மாட்டேன்..போட்டுருவேன்..என்ன சரியா..இருந்தாலும் தேங்க்ஸ்..எனக்குள்ள இருக்கிற கேடி சாகாமல் இருக்க நீயும் ஒரு காரணம்.." பதிலுக்கு காத்திராமல் போய் விட்டேன்.
அஜீஷ் பெங்களூர் ஆபிஸ் போய் விட்டான்.
சங்கர் சொல்லிக் கொண்டிருந்தான்.அதை பிடுங்க ஆள் வைச்சி அடிச்சாலும் அடிப்பாங்க.பொருள் வைச்சிக்கோ அமர்.அவன் சொன்னதும் சரி என்று தான் தோன்றியது.
வீடு கட்டும் போது மிச்சமான கேபிள் வயர் இருந்தது.அடித்தால் பழுத்து விடும்.ரெண்டு காலிலும் சுற்றிக் கொண்டு மேலே ஷாக்ஸ் போட்டுக் கொண்டேன்.
"என்ன புதுசா ஷூ எல்லாம்.." அம்மா பதிலுக்கு சிரித்து வைத்தேன்.
லேப் போனதும் ஷூவைக் கழற்ற சொன்னார்கள்.கழற்றினால் தெரிந்து விடும்.அதனால் ரெக்கார்ட் முடிக்கவில்லை என்று சொல்லி வெளியே நின்று கொண்டேன்.
விதி வலியது."என்னைக்கு தான் நீ ரெகார்ட் முடிச்சிருக்க..இன்னைக்கு முடிக்க..உள்ளே போ.." ஒரு பாட்ஷா அம்மணி வந்து சொல்ல
மெதுவா ஷூவைக் கழற்றி விட்டு காப்பர் வயரை எடுத்துக் கொண்டிருந்தேன்.லேட்டாக வந்த ராஜி பார்த்து விட போடி உன் வேலையைப் பார்த்துக்கிட்டு என்று சொன்னேன்.ரிலேஷன் ஷிப்பில் நான் அப்பர் ஹேண்டாக மாறிய சமயமது.எப்போதாவது அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் அதை விடுவேனா.
அவள் பார்வையில் படுமாறு இடது காலில் இருந்து காப்பர் வயரை உருவ ஆரம்பித்தேன்.
**************************
"ரத்தம் உறைஞ்சி போய் இருக்குடா..இன்னும் தொடைக்கலையா.." சத்தம் கேட்கவும் எல்லாரும் கையெழுத்து போட்ட சட்டையும் கிடைக்க சரியாகயிருந்தது. துணியால் கொஞ்சம் அழுத்தி துடைத்து விட்டேன் போல. ரத்தம் ராஜி கையெழுத்து போட்ட இடத்தில் சரியாக சிந்தியது.
அடுத்த நாள் மாயா வந்து பேசிக் கொண்டிருந்தாள்.அவள் பேசுவதை நான் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தேன்.
****************************
கொஞ்ச நாள் கழித்து மாயா கொஞ்சம் நெருக்கமான நாளில் நான் உன் கூட கொஞ்சம் பேசணும் என்று கேண்டீனுக்கு கூப்பிட
"போன் வேண்டாம்..உனக்கு அடிக்கடி போன் வருது..நிறைய பேசணும்..தொந்தரவு இல்லாம.."
".."
"நான் பேசுறதை ரெகார்ட் பண்றீயா..யூ ஸ்டூபிட்.."என்று ஆரம்பித்து திட்ட ஆரம்பித்தாள்.நான் சொல்லவேயில்லை மெமரி கார்ட்டைத் தொலைத்து இருபது நாளிருக்கும் என்பதை.
"இனி என் மூஞ்சிலே முழிக்காதே.." போகும் போது காணாமல் போன மைமரி கார்ட்டைத் தந்து விட்டு போனாள்.
இன்னும் ஒரு மனம் மொத்தி பறவை.
***********************
Sunday, August 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ரெண்டு கேள்வி
அமர் ராஜியின் பெயரை பார்க்க அந்த சட்டையைத் துவைத்தாரா.
அமர் மாதிரி நீங்களும் ரெகார்ட் செய்யும் வழக்கம் உண்டா.காப்பர் வயர் காலில் சுத்தும் வயர் உள்ளதா.
ஐயா இது அக்மார்க் சொற்சமாதி மற்றும் புனைவு தான்.
இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனை தான்.உயிரோடு இருப்பவர்களையோ,சமாதி ஆனவர்களையோ குறிக்கவில்லை.அப்படி குறிப்பிடுவது போல் தெரிந்தால் பொறுத்தருளவும்.
இருந்தாலும் அமர் அந்த சட்டையைத் துவைக்கவில்லை.அது ஒரு குறியீடு.அதுவும் தவிர அமர் ராஜிக்காக துவைத்தால் மற்றவர்களின் பெயரும் அழிந்து விடும்.எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.
அடுத்தது நான் யாரிடமும் தொலைபேசுவதில்லை.பேசினாலும் ரெகார்ட் செய்ய முடியாது.நான் வைச்சிருப்பது ஒரு மொக்கை போன்.அதில் புளூ டூத் கூட கிடையாது.இங்கு திருட்டுப்பயம் ஜாஸ்தி என்பதால் திருடர்கள் அதை திருட முயற்சித்தாலும் இந்த போனைப் பார்த்து காறித் துப்பி அவர்கள் லேட்டஸ்ட் போனை தர வாய்ப்பிருப்பதால் நான் இதையே உபயோக்கிறேன்.
காப்பர் வயர் நம்மூரில் சாத்தியம்.இங்கு பாதுகாப்பிற்கு குடை வைத்திருக்கிறார்கள்.அவர்களிடம் கத்தி இருக்கிறது.கேட்டதை கிருஷ்ணர் மாதிரி கொடுத்து விட்டு காலி செய்வது தான் நல்லது.
மாயா யார், தியா யார்? ஒரே குயப்பம்
முகிலன் கதையில் ரெண்டு மாயா.எடிட்டிங் கோளாறு.மன்னிச்சு.
Post a Comment