Saturday, August 14, 2010

இந்திரா காந்தி - பெயரில் ஒரு சந்தேகம்

நேருவின் மகளான இந்திரா பெரோஸ் கான் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். முஸ்லீம் மதத்திற்கு மாறினார் ஒரு முஸ்லீம் பெயரும் உண்டு என்று சொல்கிறார்கள். இந்த கல்யாணத்தை நேருவின் எதிர்ப்பையும் மீறி செய்து கொண்டார்கள்.பிற்கால அரசியலுக்கு வரும் பொருட்டு காந்தியின் ஆலோசனையின் பெயரில் காந்தி என்று பெயர் வருமாறு மாற்றி கொண்டாராம் பெரோஸ் கான். எப்படி இது சாத்தியமாயிற்று.

பெரோஸ் கானை காந்தி தத்தெடுத்து பெரோஸ் காந்தி என்ற பெயர் வைக்கலாம் என்று அந்த விவாதத்தின் போது கூறினார்களாம்.எதுவுமே சாத்தியப்படாமல் இருந்திருந்தால் அது தான் நடந்திருக்கும்.ஆனால் சட்டங்களில் ஓட்டைகளை கண்டுப்பிடிப்பதில் தான் நாம் கில்லாடிகள் ஆயிற்றே.பெரோஸ் கானின் தந்தை ஒரு முஸ்லீம்.தாய் ஒரு பார்சி. தாயின் குடும்ப பெயர் தான் காந்தே நன்றாக உச்சரித்தாலும் காந்தி என்று வராது.

பொதுவாக இந்தியா போன்ற ஆணாதிக்க நாட்டில் தாயின் குடும்ப பெயரை வைக்க மாட்டோம். வருங்கால அரசியலின் பொருட்டும்,நேருவின் கோபத்தை தணிக்கவும் பெரோஸின் அம்மாவின் குடும்ப பெயரான காந்தேவை காந்தி என்று மாற்றி பெரோஸ் பெயரில் இணைத்தார்கள். இந்திரா அப்படித்தான் இந்திரா காந்தி ஆனது.

பா.ஜ.க கட்சி ஆரம்ப காலத்தில் இருந்த சமயம் கவனம் ஈர்க்கும் பொருட்டு இரண்டு முறை பெயர் மாற்றச் சர்ச்சையைக் கையில் எடுத்தார்களாம். இப்போது யாரும் கண்டுக்கொள்வதில்லை.இது பற்றி அந்துமணி வாரமலரில் எழுதியுள்ளார். உண்மை தானா என்று இணையத்தில் தேடிய போது சர்ச்சை மேல் சர்ச்சை. தலை சுற்றி அந்த பக்கத்தை மூடி விட்டு ஓடியே வந்து விட்டேன்.

இதெல்லாம் என்ன பெரிய விஷயம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு வார இதழில் வந்து கதை உறுதி செய்தது. பெரிய பணக்கார வீட்டில் வாரிசு இருவர் காதலித்தார்களாம். கடைசியில் பார்த்தால் அண்ணன் - தங்கை உறவாம்.வீட்டில் எவ்வளவோ சொல்லியும் இருவரும் கேட்கவில்லையாம். முடிவில் மதம் மாறினார்களாம் குடும்பத்தோடு. வாட் அ லாஜிக்.ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது.ஏழை சொல் என்றுமே அம்பலத்தில் ஏறாது.

வாழ்க புரட்சி.

வாழ்க தோழர்கள்.(புரட்சி என்றாலே அவர்கள் மட்டும் தான்.இன்றைய கட்டுரையின் லீட் கூட அவர்களால் தான்)

வாழ்க ஜனநாயகம்.

வாழ்க குடியரசு

வாழ்க சுதந்திரம்.

வாழ்க மக்களாட்சி.

14 comments:

நீ தொடு வானம் said...

பெயர் ராசியோ என்னவோ காந்தி சுடப்பட்டார்.இந்திரா காந்தி சுடப்பட்டார்.சஞ்சய் காந்தி இறந்தது விமான விபத்தில்.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

pichaikaaran said...

அந்த பெரிய இடத்து காதல் ஜோடி யாரு ?

அகல்விளக்கு said...

//ganesh said...

பெயர் ராசியோ என்னவோ காந்தி சுடப்பட்டார்.இந்திரா காந்தி சுடப்பட்டார்.சஞ்சய் காந்தி இறந்தது விமான விபத்தில்.ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.
//

ஹிஹிஹிஹிஹி....

தல... வொய் டென்சன்....

கூல் டவுன்....

இரும்புத்திரை said...

சஞ்சய் காந்தி - பிரதமராக வந்திருந்தால் வேறு மாதிரியிருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். நிறைய விஷயத்தை நேராக சொல்லி விடுவார்.அவர் மரணத்தில் சர்ச்சையிருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணம் மேனகா காந்தி பா.ஜ.கவில் இருக்கிறார்.ராகுல் அவர் அப்பா ராஜீவ் போல மென்மை தான்.கொஞ்சம் அதிரடியும் உண்டு.மும்பை ரயில் பயணம் - தாக்கரே கோட்டையில்.அது மாதிரி ராஜீவ் கூட அப்படித்தான்.இந்திரா இறந்தப்பின் நடந்த கலவரத்தில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது ராஜீவ் சொன்னாராம்."பெரிய ஆலமரம் விழும் போது நிலம் அதிர தான் செய்யும்.." ராஜீவ் மரணம் கூட பெரிய ஆலமரம் போன்றது.கடல் தாண்டி அதிர்ந்தது.அதுவாவது கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ள கூடிய லாஜிக்.ஆனால் கடலும் அதிர்கிறதே.சொந்த நாட்டு மீனவன் கொல்லப்படுகிறான்.அவனுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று பிரணப் சொல்கிறார்.

வருண் காந்தி சொல்லவே வேண்டாம். கஷாப்பிற்கு சிக்கன் எனக்கு உருளைகிழங்கா என்று சண்டை போட்டவர்.

இரும்புத்திரை said...

பார்வையாளன் உங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.அவர்கள் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அரசியல் பாரம்பர்யமோ, சினிமாவில் கோலோச்சும் குடும்பம் கிடையாது. யார் எந்த வழியில் போனால் என்ன நாம் நாளைக்கு மட்டும் சட்டையில் கொடியைக் குத்துவோம்.சாக்லேட் சாப்பிடுவோம். சன் டிவியில் நடிகை பேட்டியும் கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்க்கலாம்.

vinthaimanithan said...

இந்திராவோட பி.ஏ வா இருந்த ஒருத்தரு எழுதின புத்தகத்துல இன்னொரு பெர்ர்ர்ர்ரிய சர்ச்சை இருக்காமே? (புரியும்னு நெனக்கிறேன்!). உண்மையா?

Thamizhan said...

இந்திரா பிரியதர்சினி பெரோசு கானை திருமணம் செய்ய விரும்பியது பண்டித நேருவிற்கு விருப்பமில்லை.ஆகவே காந்தியார் இங்கிலாந்தில் பெரோசு கானை பெரோசு காந்தி என்று பெயர் மாற்றம் செய்யும் மனு செய்து மாற்றினார் என்று கூறுவார்கள்.

Sanjai Gandhi said...

:)