எஸ்.ரா குழந்தைகளைப் பற்றி எழுதி இன்னும் அதைப்பற்றி கொஞ்சம் எல்லோரும் விவாதித்துயிருந்தால் இன்னும் சாரு,ஜெயமோகன் அளவிற்கு அவருக்கு எதிராக எதிர்வினைகள் இருந்திருக்குமோ என்று சந்தேகமிருந்தது. இதில் சுவாரஸ்யமாக விஷயம் என்னவென்றால் சாரு குழந்தைகளை எனக்கு பிடிக்காது என்று புத்தகம் எழுதியிருந்தார்.அதை வெளியிட்டது சசிகுமார் அல்லது அமீர் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்துக்கு எல்லாம் சாருவின் மீது யாருக்கும் கோபம் வராது.காரணம் அதற்கு பின் தான் நித்தியின் பார்வை சாருவின் மேல் விழுந்தது.சாருவின் மேல் மட்டுமா விழுந்தது.
அந்துமணி மீள்ஸ் போட்டதில் ஒரு சிரிப்பான விஷயம் அப்பா - மகன் உறவைப் பற்றியது. அதை மீள்ஸாக மூன்று முறை போட்டு விட்டார் என்று நினைக்கிறேன். இலங்கையை சேர்ந்த தமிழர் அவர் ஜெர்மணியில் வசித்து வந்தாராம்.அங்கு குழந்தைகளை யாரும் அடிக்க மாட்டார்கள்.அடித்தால் ஜெயில் தான். இவர் பையனை மிகவும் கண்டித்து அடித்து வளர்க்க நண்பர்களிடன் ஆலோசனை கேட்டு இருக்கிறான். அடிப்பதாக போலீஸில் சொல்ல சொல்ல அவனும் போலீஸிடம் தகவல் சொல்ல அவர் பார்ட்டியில் நண்பர்களோடு உற்சாக பானம்(அந்துமணியின் டிரேட் மார்க் சொல்) அருந்தி கொண்டிருக்கும் போது காவலர்கள் வந்து தரத்தரவென இழுத்து போயிருக்கிறார்கள். வெளியே வந்தும் அடிக்க முடியவில்லை. உடனே இலங்கை டூர் போட்டு விட்டாராம்.கொழூம்பு விமான நிலையத்தில் இறங்கியதும் அடிதான். இனி பையன் சேட்டை செய்தால் அடிக்கடி இலங்கைக்கு டூர் ப்ளான் போடுவார் என்று நான் நினைத்து கொண்டேன்.
குழந்தை என்றால் அப்படி இப்படி என்று தானிருப்பார்கள்.விவரம் தெரிந்த நாமே சில சமயம் குழந்தை மாதிரி தான் நடந்து கொள்கிறோம். மும்பையிலிருக்கும் போது பக்கத்து வீட்டிலிருந்தவர் ஒரு டெரர் மாதிரியாம். குடித்து விட்டு யாராவது பேசப் போனால் வண்டையாக வண்டையாக திட்டுவாராம். அப்போது என்னிடம் பாசமாக நடந்து கொள்வாராம்.இப்போ போயிருந்தா தெரிஞ்சிருக்கும் செய்தி. அங்கு வரும் போஸ்ட்மேன் என்னை சீண்டிக் கொண்டேயிருப்பாராம்.ஒரு நாள் கோபத்தில் ஹிந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டேனாம்(அந்த ஒரு வார்த்தை இன்று வரை தெரியும் என்பது இன்னொரு விஷயம்) அவர் என்ன பிள்ளை வளர்த்தியிருக்கிறார்கள் என்று சான்றிதழ் தந்தாராம்.
அடிப்பட்டவுடன் அழ மாட்டார்கள்.யாராவது தூக்க ஓடினால் உடனே அழுகை வெடித்து கொண்டு வரும் யாருமே கவனிக்கவில்லை என்றால் அவர்களே எழுந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள். சின்ன வயதில் நான் ஒரு பையனை அடிக்க அவன் ஊர் முழுக்க சுத்தி விட்டு இரண்டு மணி நேரம் கழித்து வந்து வீட்டில் புகார் சொல்ல ஆளோடு வந்து விட்டான்.அந்த புகாரை எங்கள் வீட்டிலிருந்த நாட்டாமைகள் இரண்டு மணி நேரம் கழித்து தீர்ப்பு தந்தார்கள்.அதற்குள் நானும் அவனும் ராசியாகி விட்டோம்.
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.1990களில் எனக்கு தெரிந்த விஷயங்களை விட இப்போதுள்ள குழந்தைகளுக்கு நிறைய விஷயங்கள் தெரிகிறது. தொழில்நுட்பப் புரட்சியும் ஒரு காரணமாகயிருந்தாலும் அன்று இருந்த தைரியம் தான் இன்று இல்லாமல் போய் விட்டது. ஆசிரியர்கள் ஒரு காலத்தில் அடி வெளுத்தாலே துடைத்து விட்டு வேறு வேலையைப் பார்த்தவர்கள் தான் இன்று குழந்தையை ஆசிரியர் அடித்ததும் முதல் ஆளாக சண்டைக்கு போகிறார்கள். பத்து வயது குழந்தை தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்கிறது.
எல்லாம் வேகமாக கற்கிறார்கள்.வேக வேகமாக வாழ்ந்தும் முடித்து விடுகிறார்கள்.ஒரு பழைய கவிதை ஒன்று
சுவைப்பதில் தொடங்கி
சுகிப்பது வரை
எல்லாம் அவசரம் தான்.
திருப்தி அடையாமல்
கள்ளச்சந்தையில் புழங்கும்
இயந்திரங்களுடன் தொடர்பு
"ஆண்டு அனுபவித்து விட்டேன்"
சொல்லி மரிக்கும் போது
வயது முப்பது
வருடம் 3010
சந்ததியைப் பெருக்க
பால்ய விவாகம்
பிளாக் எழுதும் புரட்சிக்கவி
பாரதிக்கும் வயது முப்பது.
அவனைக் கொல்ல
யானையும் இல்லை
இறைப்பதற்கு
அரிசியும் இல்லை
இருந்தாலும் அதை உண்பதற்கும்
அவன் கொஞ்சுவதற்கும்
குருவிகள் இல்லை
இணையத்திலும்..
Thursday, August 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
nice...
epudi...! polaam right!
குழந்தைகள் பெரியவர்களின் பரிசோதனை உயிரினங்கள். இது இன்றைய தேதியில் இது ரொம்ப ரொம்ப அதிகம்.
எஸ் ரா என்ன சொன்னார் என்பதற்கு சுட்டி குடுங்க.
http://sramakrishnan.com/view.asp?id=442&PS=1
//நித்தியின் பார்வை சாருவின் மேல் விழுந்தது.//
அந்த விடியோ வரலையே தல!
இருந்தாலும் வேண்டாம், ரெண்டு ஆண்கள் கத்தி சண்டை போடுவதை பார்க்க எனக்கு விருப்பமில்லை!
:)
//நித்தியின் பார்வை சாருவின் மேல் விழுந்தது.//
அந்த விடியோ வரலையே தல!
இருந்தாலும் வேண்டாம், ரெண்டு ஆண்கள் கத்தி சண்டை போடுவதை பார்க்க எனக்கு விருப்பமில்லை!
:)
புரட்சித்தலைவர் என்ற பெயரில் வலைதளத்தில் எழுதுபவர்களைப் பற்றி ஒரு குட்டி கவித (கவிதை அல்ல) எழுதி வைத்துள்ளேன். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள கவிதையை படித்தவுடன் நொந்நு நூலாகிவிட்டேன். இது கவிதை.
நேற்று நண்பர் பேசிக்கொண்டுருக்கும் போது உங்களைப் பற்றி சொன்னார்.
Post a Comment