காவலர் குடியிருப்பு பையாவோடு ரீலிஸ் ஆகிறது என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இன்னும் ஆகவில்லை.முரளி மனோகர் ஜோஷி கடைக்கண் பார்வையில் சிக்கியிருக்கிறதாம்.அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று பார்ப்போம். காதலர் குடியிருப்பு என்று மாற்றியிருக்கிறார்களாம். சில படங்களின் புகைப்படங்களே கதையை ஏதோ ஒரு விதத்தில் சொல்லும். அந்த படங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை ஒரு விதமான மங்கிய பிண்ணனியிலேயே இருக்கும்.பருத்தி வீரன்,கற்றது தமிழ், சுப்ரமணியபுரம், அஞ்சாதே, களவாணி,வெண்ணிலா கபடிக்குழு அந்த வரிசையில் இந்த படத்தின் புகைப்படங்களும் ஏனோ கவர்ந்தது. சரண்யா அதகளப்படுத்த இன்னொரு படம் கிடைத்திருக்கிறது.அந்த வரிசையில் அடுத்தது அழகர்சாமியின் குதிரை.
ரெண்டு கதைகளை (நிச்சயம் சொற்சமாதி தான்.எனக்கு நானே கட்டிக்கொள்ளும் சமாதி) எழுதி வைத்து விட்டு இரண்டு வாரமாக போடாமலே இருக்கிறேன்.ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்கிறது.எனக்கு வேண்டியவர்கள் யாரோ என் தளத்தைப் படிப்பது போல கொஞ்ச நாளாகவே ஒரு பிரமை. ஒரு ஜக் அல்லது மக் அடித்தால் தான் தெளியும் போலிருக்கிறது. அதே தான் ஐஸ் டீ.
சச்சின் இல்லாமல் ரெண்டு மூன்று போட்டிகள் ஜெயித்தாலும் இரண்டாம் இடத்தை தக்க வைக்கும் போட்டிக்கெல்லாம் நிச்சயம் சச்சின் தேவை தான் என்று நேற்று ஒருமுறை நிரூபணம் ஆனது. டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தைத் தக்க வைக்க காரணம் சச்சின் தான் என்பது இன்னொரு உண்மை. சச்சின் அடிக்கிறாரோ இல்லையோ இருந்தாலே மேட்ச் ஜெயிப்பார்கள் என்று அடிக்கடி சொல்வேன். அதனால் ஆடாவிட்டாலும் சச்சின் மேட்ச் வின்னர் தான்.
பிரகாஷ்ராஜ் தோழியில் இருந்து செல்லமாக புரமோஷன் குடுத்திருக்கிறாராம். சொல்லாதும் உண்மை படித்து விட்டு நிறைய நாள் சிலாகித்தது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அது தப்பு இது தப்பு என்று சொல்ல நான் என்ன கலாச்சாரக் காவலரா இல்லை நாட்டாமையா. நம்மிடமே நிறைய நிறைய ஓட்டைகளை வைத்து கொண்டு அடுத்தவர்களை விமர்சிக்கும் போது தான் கோபம் வந்து தொலைக்கிறது. எனிவே பிலிம்பேர் விருதுக்கு வாழ்த்துக்கள். நான் ரசித்தவர்களை எப்படி போனால் என்ன பிடித்தம் சற்றும் குறையாமல் தானிருக்கிறது.
நீங்க ஒரு ஜூனியர் __________, __________ என்று சொல்லும் போது கோபம் வந்து தொலைக்கிறது. எனக்கு எழுத்தில் கோபமோ,குரோதமோ, உண்மையோ,பொய்யோ,காமமோ,காதலோ இன்னும் நினைத்ததை ஒழுங்காக கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கிறேன். எழுதி வைத்து விட்டு அவர் என்ன நினைப்பாரோ இவர் எப்படி எடுத்து கொள்வாரோ என்று நினைத்து பயந்தே நிறைய எழுதாமல் விடுகிறேன். சமீபத்தில் அப்படி தூக்கியது ஒரு பத்தியும்,ஒரு புகைப்படமும்.
மூன்று மாதம் எழுதாமலிருக்கும் போது நிறைய இந்தி படங்களும்,ஆங்கில படங்களும், தெலுங்கு,கொரியா,ஜப்பானிய,மலையாள,மராத்திய படங்கள் என்று மொழி பேதமில்லாமல் பார்த்து தொலைந்தே போனேன்.சப் டைட்டில் இல்லாமலே பார்த்தது தான் இயல்பாக இருந்தது. கண் அளக்காமல் போனதையா கை அளந்து விடப் போகிறது என்று ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி நடிகர்களின் முகத்தில் காட்டும் உணர்வுகளை விடவா சப்டைட்டில் உணர்த்தி விடப் போகிறது. இனி தமிழ் படம் பார்க்கும் போது மட்டும் சப்டைட்டிலோடு பார்க்கப் போகிறேன். இங்கு தெரியும் உணர்ச்சிகளிருந்து தப்பிக்க சப் டைட்டில் உதவுகிறது. அப்படி பார்த்த இரண்டு படங்கள் வி.தா.வ,சுறா.
Wednesday, August 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பாஸ் தமிழ் சினிமா வாழும். போலிகள் சொல்வது போல யாரும் எதையும் "யாரையும்" அழித்து விட முடியாது. அழகர்சாமியின் குதிரை படத்தில் நாயகன் அப்புக்குட்டியா.
நிச்சயம் சொல்வது யார் என்பதை பொறுத்து தான் விமர்சனமே. இந்த படத்தை எல்லாம் உலக சினிமா பார்வையாளர்கள் கண்டுக்கொள்ள போவதில்லை. எனக்கு எல்லா சினிவாவும் ஒன்று தான்.கௌதம் மேனன் மேல் ஆயிரம் விமர்சனமிருந்தாலும் சில ஈர்ப்பு உண்டு.இந்த படத்தைத் தயாரிப்பதின் மூலம் இன்னும் அதிகமாகித் தொலைக்கிறது.ஷங்கர் எந்த மாதிரி படம் இயக்கினாலும் ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வரும் போது தான் நான் பார்க்கப் போகிறேன்.என்ன ஒன்று அவர் தயாரிக்கும் படம் அந்த ஐம்பது ரூபாயில் சீக்கிரம் பார்த்து விட முடிகிறது.
பட ஸ்டில்ஸை பார்த்தே படம் பற்றி ஜட்ஜ் பண்ணும் சினிமா ஞானம் உங்களுக்கு இருக்கு.
செந்தில்குமார் ஏன் ஏன் ஏன் இப்படி
இப்படித்தான் ஒருமுறை டிரைலர் ஜோசியம் சொல்லி உடம்பை புண்ணாக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் பிரம் யோகி புகழ் அமீர் ரசிகர்களிடமிருந்து
\\இனி தமிழ் படம் பார்க்கும் போது மட்டும் சப்டைட்டிலோடு பார்க்கப் போகிறேன். இங்கு தெரியும் உணர்ச்சிகளிருந்து தப்பிக்க சப் டைட்டில் உதவுகிறது.\\
அதுக்குப் படமே பாக்காம இருக்கலாமே
அன்புடன்
ஆர் கோபி
//நான் ரசித்தவர்களை எப்படி போனால் என்ன பிடித்தம் சற்றும் குறையாமல் தானிருக்கிறது//
EXEMPLARY!!!!
//கொரியா,ஜப்பானிய,மலையாள,மராத்திய படங்கள்//
இந்த லிஸ்டை மெயில்ல தாட்டி வுட்டா தன்யனாவேன் அரிமா அரவிந்த் :)
\\மூன்று மாதம் எழுதாமலிருக்கும் போது நிறைய இந்தி படங்களும்,ஆங்கில படங்களும், தெலுங்கு,கொரியா,ஜப்பானிய,மலையாள,மராத்திய படங்கள் என்று மொழி பேதமில்லாமல் பார்த்து தொலைந்தே போனேன்.சப் டைட்டில் இல்லாமலே பார்த்தது தான் இயல்பாக இருந்தது. கண் அளக்காமல் போனதையா கை அளந்து விடப் போகிறது என்று ஒரு பழமொழி உண்டு.\\
பார்த்ததில் அளந்ததை பகிருங்களேன்... 'எப்படி அளப்பது" யென்று கற்க விருப்பம்.
Post a Comment