சித்தார்த் "தெலுங்கில்" கொஞ்சமாவது யதார்த்தமாக கதையுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தப் பின் தெலுங்கிலும் இது மாதிரி படம் வரும் போல என்று கொஞ்சம் கொஞ்சமாக நம்ப ஆரம்பித்திருந்தேன். உனக்கும் எனக்கும்(இந்த பெயரை தெலுங்கில் சொன்னால் கை சுளுக்கி விடுகிறது),பொம்மரில்லு என்று அடித்து ஆட ஆரம்பித்தவுடன் நல்லா இருந்தா நமக்குத்தான் பிடிக்காதே உடனே ஆட்டா என்று படத்தில் நடிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைக்க பார்த்தார்கள். சுதாரித்து கொண்டு நடித்த படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். இதை தமிழ் பேசும் நல்லுககிற்கு காணும் வாய்ப்பு ஜெயம் ரவி நடிக்காத காரணத்தால் கிடைக்காமல் போய் விட்டது. அடுத்து நடித்த ஓய் படமும் பப்படம் ஆனதால் இதிலும் ஜெயம் ரவி நடிக்கவில்லை.தப்பித்தோம்.
சித்தார்த் தமன்னாவை காதலிப்பார். அப்பா மேல் பாசமிருப்பதால் பெயர் சொல்லும் போது கூட அப்பா பெயரை சொல்லும் தமன்னாவிடம் கல்யாணத்திற்குப் பின் என் பெயரை தானே வரும் என்று சித்தார்த் கேட்க வரும் சண்டையில் இருவரும் பேச மாட்டார்கள். உடனே பிரகாஷ்ராஜூடன் தண்ணியடித்து கொண்டியிருக்கும் சித்தார்த் நடு ராத்திரியில் தமன்னாவை சமாதானப்படுத்த ஒரு அட்டையில் தமன்னாவின் அப்பா பெயருக்கு அடுத்து சித்தார்த் பெயர் வருமாறு எழுதி காட்டுவார்.இப்படி ஒரு யோசனை எப்படி கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தால் நிஜத்திலும் ஒரு பெயர் அப்படி இருக்கிறதே.அதிலிருந்து அடித்திருப்பார்களோ என்னவோ.ஐஸ்வர்யா ராய் பச்சண்.
சித்தார்த்தின் சின்ன வயதிலேயே மனைவியை விட்டு பிரியும் பிரகாஷ்ராஜ் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசியில் ரம்யா கிருஷ்ணனுடம் சேருவார். நிஜத்தில் அது நகைமுரணாக போய் விட்டது. பிரகாஷ்ராஜ் சொல்லாததும் உண்மை நல்ல வேளை இப்போது எழுதவில்லை.மீள் வாசிப்பு செய்தாலும் குப்பையில் தூக்கி எறிவேன் என்று தான் நினைக்கிறேன்.
ஒரு காட்சியில் தமன்னா ஒரு திண்டின் மீது ஏறிக் கொண்டு பின்னால் பார்க்காமல் சரிவார். சித்தார்த் வந்து பிடித்து கொள்வார். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கும் போது அதான் நீ இருக்கியே என்று சொல்வார். காதலிக்கும் போது பெண்களுக்கு என்ன நம்பிக்கை காதலன் மேல்.திரும்ப இந்த படத்தை பார்க்கும் போது நான் மகான் அல்ல காட்சியும்,ஒரு டிவிட்டரும் ஞாபகத்திற்கு வந்தது. நான் மகான் அல்ல படத்தில் காஜல் அகர்வால் ஜீவாவை(கார்த்தியை) தீவிரமாக காதலிக்கிறேன் என்று சொல்ல அதை இருபது வருடம் கழித்து வந்து சொல் என்று ஜெயபிரகாஷ் சொல்வார். இரண்டு வருஷம் என்று சொல்லியிருந்தாலும் பொருந்தியிருக்கும். அராத்து டிவீட்டரில் - பாய் ஃப்ரெண்டிடம் திறந்து காட்டுவது வேண்டுமானல் பெண்களின் உரிமையாயிருக்கலாம் ,செல் போனில் படமெடுக்க அனுமதிப்பது மடமையல்லவா? அவ்வளவு நம்பிக்கை.
தெலுங்கிலேயே இந்த படம் பாருங்கள்.இந்த படம் மட்டும் பாருங்கள். பொம்மரில்லு படம் பார்த்து விட வேண்டாம் பிறகு சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம் ரவி திட்டு வாங்குவார்.
Saturday, August 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அடுத்த படமாவது ஓடணும்.ரவி பாவம்.
ஹாஹா
good review,.இந்த படம் மட்டும் பொம்மரில்லு படம் பார்த்து விட வேண்டாம் .what mistake gramatically you done?in this line .pls verify and change it.
திருத்தி விட்டேன் தலைவரே.ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோடு த் என்று போடுவதற்கு ந் என்று போட்டால் அது வாக்குமூலமாகி விடும் போலிருக்குறது.
must read http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72473
lo
இந்த படம் மட்டும் தெலுங்கில் பாருங்கள், பொம்மரில்லு வேண்டாம். சந்தோஷ் சுபரமணியம் ரவி அநியாயத்துக்கு திட்டு வாங்குவார். நான், பொம்மரில்லு பாட்டுக்கள் மட்டும்தான் தெலுங்கு சேன்லகளில் பார்த்திருக்கிறேன்.அதற்கே நானை ஜெயம் ரவி என்னிடம் திட்டு வாங்கினார்
Post a Comment